sivagsk Profile picture
21 Nov, 11 tweets, 2 min read
//பத்து ஆண்டுகள் மத்தியில் அங்கம் வகித்த திமுக, தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?? அமித்ஷா கேள்வி../)

திமுக அங்கம்வகித்த முந்தைய UPA ஆட்சியில், தமிழகத்தில் துவக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் & நிறுவனங்களின் பட்டியல் :- (2004 - 14)
* சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (National Marnie University)
* திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)
* கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்.
* திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM)
* ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்க் கான தேசிய நிறுவனம்.
* சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.)
* திருச்சியில் தேசிய சட்ட கல்லூரி (National Law School)
* தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.
* ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்.

மேலும்,

* கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள்,
நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின...

* சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.
* 120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை """"சூப்பர் ஸ்பெஷாலிட்டி"" மருத்துவமனையாக மேம்பாடு.
* கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா.
* 1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.
* 2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.
* 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.
* தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.
* 1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.
* மெட்ரோ இரயில் திட்டம்.
* ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
* சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.
* 1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.
* கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ் சாலைகளில், 3,276 கிலோ மீட்டர் சாலைகள், நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு.

* நெசவாளர் சமுதாயத்தினர் பெரும்பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.
* இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி.
* இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..
எனவே, திமுகவால் மட்டும் தான் தமிழ்நாட்டில் வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும் என்பது மறுக்கமுடியாத நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஓன்னும் அவசரம் இல்ல நாளைக்கு சாயந்திரம் வரை நேரம் இருக்கு நீங்க ஆறு வருசம் என்ன கிழிச்சிங்க தமிழ்நாட்டுக்குன்னு சொல்லிட்டு போங்க சார்....
#GobackAmithshah

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with sivagsk

sivagsk Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @realtechsiva

21 Jul
தற்போது IAS, IPS, IFS, IRS
போன்ற
அரசின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட
உயர் படிப்புகளை படித்து முடிக்கும் மாணவ மாணவியரின் வயது சராசரியாக 28 ஆக உள்ளது.
செழிப்பான குடும்ப பொருளாதார பின்புலத்துடன் படிக்கும் உயர் வகுப்பினர் பிள்ளைகளின் வயது சராசரியாக 24 ஆகவும்
நம்மைப்போன்ற பின்தங்கிய இன வகுப்பு பிள்ளைகளின் வயது சராசரியாக 30 ஆகவும் உள்ளது.

மத்திய அரசு உருவாக்கிய # நிதிஆயோக் குழு IAS, IPS ,IRS, IFSபோன்ற தேர்வுகளை எழுதும் மாணவ மாணவியரின் வயதை அதிகபட்சம் 27 ஆக குறைக்க பரிந்துரை செய்துள்ளது.
ஆப்பு எந்த இடத்துல சொருகுறாங்கனு புரியாம நம்ம புள்ளங்க கலெக்டர் ஆயிருவாங்கனு தப்பு கணக்கு போடுறோம்.

நம் நலம் நாடிய ஆட்சியாளர்கள் நமக்காக உருவாக்கி தந்த நல்ல திட்டங்கள் எல்லாம் நம்மிடமிருந்து களவாடப்படும்போது,
Read 4 tweets
25 Jun
"இந்தியாவின் திராவிட முகம் - வி.பி.சிங்"

மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து காலமெல்லாம் சமூகத்தின் அடிதட்டு மக்களுக்காக சிந்தித்தும், செயலாற்றியும் வந்த மனிதர்கள் வரலாற்றில் அரிதாகவே தோன்றுகிறார்கள், புத்தர், சாகுமகாராசர், பூலே, பெரியார் என
இந்திய துணை கண்டத்தில் குறிப்பிடதகுந்த அந்த பட்டியலில் தனக்கென தனி இடத்தை பிடித்த இந்தியாவின் முன்னால் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் பிறந்த நாள் 25.06.1931ல் வளமான வடஇந்திய ராஜவம்சத்தில் தயாவின் மிகப்பெரிய ஜமிந்தார் குடும்பத்தில் பிறந்து, மண்டா ராஜவம்சத்தில்..
வளர்ந்த பெரும் செல்வந்தராக இருந்தபோதும், 1950களில் தெலுங்கானாவின் சிறிய கிராமம் ஒன்றில் தொடங்கி இந்தியா முழுவதும் பெரும் இயக்கமாக வளர்ந்த வினோபாவின் பூமிதான இயக்கத்தில் தன் சொத்துக்களை எல்லாம் மக்களுக்கு அள்ளி வழங்கி வாழும் வரை எளிமையான மனிதராக இருந்து மறைந்தவர் வி.பி.சிங்
Read 58 tweets
18 Jun
இந்திய சீன இராணுவத்தினரிடையே கடந்த திங்கட்கிழமை லடாக் எல்லையில் நடந்த மோதல் இரு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதே போன்றதொரு மோதல் சம்பவம் 1967 ல் நிகழ்ந்தது.

அப்போது நடந்தது என்ன?
1967 ல் இந்தியாவின் சிக்கிம் மற்றும் சீனாவின் திபெத் எல்லையில் உள்ள நாதுலா கணவாயில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 300 சீன ராணுவத்தினரும்,
65 இந்திய ராணுவத்தினரும் உயிரிழந்தனர்.
1962 போருக்குப் பின்னர் இந்தியாவும், சீனாவும் தங்களது தூதர்களைத் திரும்ப அழைத்துக்கொண்டன. இருப்பினும் சிறிய குழுக்கள் மட்டுமே இரு நாட்டுத் தூதரகங்களிலும் பணியாற்றின. இந்தநிலையில், இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய இந்தியர்கள் தங்கள் நாட்டை உளவு பார்ப்பதாகச் சீனா குற்றஞ்சாட்டியது.
Read 20 tweets
18 Jun
**** எல்லைக்கோடு *****

வணக்கம் ராஜ்நாத் சிங் ஜி ...
நேற்று உங்களோட அறிவிப்பை பார்த்தேன் அப்படியே அசந்துபோய்ட்டேன்..

உங்க கட்சி ஆட்சியிலதான்ஜி ஒரே கலக்கல் ஆச்சர்யம் எல்லாம் நடக்கும் ராணுவ மந்திரி கல்வி சம்மந்தப்பட்ட பேட்டி தருவார் ..
கல்வி மந்திரி விவசாயம் சம்மந்தப்பட்ட அறிவிப்பைத்தருவார் அந்த வகையில நேற்று உங்க போட்டோவோட ஒரு அறிவிப்பு வெளிவந்ததது நான்கூட நினைத்தேன் எல்லையில் போர் உச்ச கட்டத்தில் இருக்கும்போது ராணுவ அமைச்சர் அறிவிப்பை வெளியிடுகிறார் எண்ணவெண்று பார்ப்போம் என்று படித்தேன்....
ஆனால் நீங்க இனிமேல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியை நிறுத்துவோம் என்று வர்த்தக அமைச்சர் அல்லது பிரதமர் சொல்லவேண்டியதை சொல்லிக்கிட்டு இருக்கீங்க அப்ப நாங்க யாருகிட்டதான் எல்லையில் நடக்கும் போர் சம்மந்தப்பட்ட அறிவிப்பு வரும் என்று எதிர்பார்ப்பது எங்களை விடுங்க சார்...
Read 18 tweets
10 Jun
ப்ரோ, திமுக ஜெ.அன்பழகன் என்ன இப்படி கொரொனாவால செத்துட்டாரு..

என்ன செய்றது ப்ரோ, மோடி மாதிரி, மத்த, பிஜேபி தலைவர்கள் மாதிரி, அதிமுக, பாமக தலைவர்கள் போல, ரஜினி கமல் சீமான் மாதிரி வீட்டுக்குள்ளேயே உக்காந்துட்டு இருந்தா, இப்படி கொரோனாவால செத்து இருக்க மாட்டார் தான்..
ஆனா, வருமானம் இல்லாம, அத்தியாவசிய பொருட்கள் இல்லாம, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் லட்சக்கணக்கான குடும்பங்களை, பசியால் வாடும் குழந்தைகள, பார்த்துகிட்டு வீட்டில சும்மா உட்கார முடியாம, தங்களால் இயன்ற உதவிகள அந்த மக்களுக்கு..
வெளியே போய் செஞ்சதால தானே அவருக்கு இந்த தொற்று வந்துச்சு...

அவர் என்ன இந்த கொரோனா காலத்துல கூட விடாம தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிஜேபி அமித்ஷா போல செய்தாரா?? கட்சிக் கூட்டங்களை நடத்தினாரா?? தனக்கு ஏற்கனவே இருந்த சில வியாதிகள கூட கண்டுக்காம, தைரியமா மக்கள் பணி செய்தார்...
Read 5 tweets
7 Jun
அஸ்ஸாம்ல ராம்தேவ் கட்டிக்கிட்டு இருக்கிற ரூ. 1000 கோடி பதஞ்சலி ஹெர்பல் அன்ட் ஃபுட் பார்க்கில் நேற்று இரண்டு யானைகள் பத்தடி பள்ளத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்ததில் ஒரு பெண் யானை மீட்புப்பணிகள் தோல்வியடைந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
பள்ளத்தில் விழுந்த தனது குட்டியை காப்பாற்ற முயன்றதில் இந்த விபத்து நடந்துள்ளது.

அஸ்ஸாமில் யானைகளின் வழித்தடம் என்று தெரிந்தே அரசு பரிசளித்த 150 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி மிக பிரம்மாண்டமான ஹெர்பல் பார்க் ஒன்றை கட்டி வருகிறார் பதஞ்சலி ராம்தேவ்.
அங்கே தான் இந்த விபத்து நடந்து ஒரு யானை பரிதாபமாக இறந்ததுடன், இன்னொரு யானை காயமடைந்துள்ளது.

கேரளாவில் யானை இறந்ததற்கு மதச்சாயம் பூசி துள்ளிக்குதித்த கருணை உள்ளங்கள் இப்போது வாய் திறப்பார்களா....?
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!