அனைவருக்கும் வணக்கம்! Antibiotic Resistance என்கிற தலைப்பில் எழுதிய இரண்டு பாகங்களின் இழையை படித்து பகிர்ந்தமைக்கு நன்றி. முதல் இரண்டு இழைகளில் பாக்டீரியாக்கள் மற்றும் பாக்டீரீயா எதிர்ப்பிகள் பற்றிய தகவல்களை பாரத்தோம். (1/n)
இந்த இழையில் பாக்டீரீயாக்கள் எப்படி பாக்டீரீயா எதிர்ப்பிகளை எதிர்க்கிற திறமையை (Resistance) உருவாக்கி கொண்டன/ கொண்டிருக்கின்றன என்பதை பற்றி பார்ப்போம்.
பாக்டீரீயாக்கள் இருகூற்றுப்பிளவு ( Binary Fission) முறையில் இனப்பெருக்கம் செய்பவை. (2/n)
ஒரு பாக்டீரியா இருகூற்றுப்பிளவு முறையில் இரண்டாக மாறுவதற்க்கு எடுத்துக்கொள்ளும் நேரம் Doubling Time (DT) எனப்படும். நம் உடலில் அங்கமாக இருக்கும் பல பாக்டீரீயாக்களுக்கு DT 20-60 நிமிடங்கள். ஆனால் சில பாக்டீரீயாக்களுக்கு DT 72 மணி நேரம் அல்லது அதற்க்கு மேலும் கூட ஆகும். (3/n)
எல்லா உயிரினங்களின் வளர்ச்சிக்கும், இனப்பெருக்கத்துக்கும் உகந்த நிலை (optimal conditions) என்பது அவசியம். பாக்டீரீயக்களும் இது பொருந்தும். காற்று உணவு, நீர் மற்றும் அமிலத்தண்மை ஆகியவை முதன்மையான வளர்ச்சி காரணிகளாக அறியப்பட்டிருக்கிறது. (4/n)
சில பாக்டீரீயாக்கள் ஆக்சிஜன் இருந்தால் மட்டுமே உயிர்வாழும் ஆனால் வெகு சில பாக்டீரீயாக்கள் ஆக்சிஜன் இருந்தால் உயிரை இழக்கும். சில வகை பாக்டீரியாக்கள் ஆக்சிஜன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உயிர் வாழும். உணவு பழக்கத்திலும் கூட பாக்டீரீயாக்களுக்கள் அதிக வேறுபாடு உண்டு. (5/n)
சைவம், அசைவம் மற்றும் சுத்த அசைவம் (pure non-veg*) என்று நாம் எப்படி வகை வகையாக உணவு உட்கொள்ளுகிறோமோ அது போலவே பாக்டீரீயாக்களும் தங்களுக்கு விருப்பபட்ட உணவை மட்டுமே உட்கொள்ளும். Their culinary choices are astonishing and astounding. (6/n)
பாக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்க்கும், தடுப்பதற்க்கும் ஒவ்வொரு பாக்டீரியா இனத்தின் வாழ்க்கை முறையை அறிவியல் பூர்வமாக அறிந்து வைத்திருப்பது அவசியமாகிறது. (7/n)
நாம் எப்படி நம்முடைய வீட்டை விட்டோ அல்லது நாட்டை விட்டோ பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயருகிறோமோ அதே போலத்தான் நம் உடம்பில் உள்ள பாக்டீரியாக்களும், தங்களின் இருப்பிடத்தை தொலைத்து காலங்காலமாக நம் உடலிலே வாழ்ந்து வருகின்றன.(8/n)
ஆம் அவைகள் வந்தேறிகள் (immigrant) தான். But it’s hard to predict when our body has opened its borders for them.
நம் உடலில் வாழும் பாக்டீரீயாக்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் எப்போதுமே ஒரு விதமான தொல்லைதான். நாம் உடலில் பாக்டீரீயாக்களின் எண்ணிக்கை எப்போதுமே கட்டுக்குள் இருக்கும். (9/n)
சில சமயங்களில் அதன் எண்ணிக்கை அதிகமாகும் பொழுதே அவை நோயுண்டாக்கும் திறனை பெறுகின்றன (Endogenous Infection). சில நேரங்களில் பாக்டீரியாக்கள் வெளியிலிருந்து வந்திருக்கும் (Exogenous Infection).அந்த சமயங்களில் மட்டுமே ஆண்டிபயாட்டுகள் பரிந்துரைக்கப்படும். (10/n)
நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி, நோய்த்தொற்றை உண்டாக்கும் கிருமியை சரியாக அடையாளம் கண்ட பின்பே மருந்துகள் கொடுக்கப்படும். கீழ கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் Antibiotic க்குகளின் வகைகள் மற்றும் அவை எந்த வழிகளில் எல்லாம் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கின்றது என்பதை காட்டுகின்றது (11/n)
பல சமயங்களில் மக்கள் மருந்தகங்களுக்கு சென்று சளி பிடிச்சிருக்கு, 2 அமாக்சலின் மாத்திரை கொடுங்க என்று கேட்டு வாங்கிச் செல்வதை கண்டிருக்கிறேன். மருந்தாளுனர்களும் கொடுத்து பழகி விட்டனர். விளைவு, ஆண்டிபயாட்டிக்குகளை துச்சமென மதிக்கும் பாக்டீரியாக்களை உருவாக்கியதுதான். (12/n)
அதிர்ச்சியான உன்மை என்னவென்றால் most of the antibiotic resistant bacteria are normal flora of the human body. அவைகள் எப்படி இந்த Antibiotic Resistant சக்தியை உருவாக்கி கொண்டன என்பதை பார்ப்போம். அதற்க்கு முன், Resistance என்கிற வார்த்தைக்கு ஒர் எளிய உதாரணம் (13/n)
நீங்கள் புதியதாக ஒர் இடத்திற்க்கு படிக்கவோ, வேலைக்கோ அல்லது திருமணமாகி செல்லுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கே வசிக்கும் நண்பரின்/துணைவரின் அறையை நீங்கள் பகிர்ந்து கொள்ளுகிறீர்கள். உங்களுடைய நண்பர்/துணைவர் இரவில் உறங்கும்போது நன்கு குறட்டை விடுபவர் என்றால் (14/n)
ஆரம்ப நாட்களில் அவரின் குறட்டை சத்தத்தால் உங்கள் தூக்கம் கெடும், நீங்களும் அந்த சத்ததிலிருந்து தப்பிக்க பல வழிமுறைகளை கையாள்வீர்கள், இருந்தபோதிலும் தொல்லையாகவே இருக்கும். ஆனால் காலப்போக்கில் பழகி விடும். இதற்க்கு பெயர்தான் Resistance. (15/n)
எந்த குறட்டை சத்தத்தினால் பல நாட்கள் உங்கள் தூக்கம் கெட்டதோ, அந்த குறட்டை சத்தத்தை கேட்காமல் உங்களின் தூக்கம் கெடும் நாட்கள் வரும்போது நீங்கள் முழுமையான Resistance ஐ பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். (16/n)
When you get to successfully defend/adjust to live in an environment that forces you to exit but you are determined not to; means you have gained an awesome level of resistance. நம் உடலில் வாழுகின்ற பாக்டீரீயாக்களுக்கு Antibiotic க்குகள் குறட்டை போன்றுதான். (17/n)
எல்லா மனிதர்களாலும் எப்படி எதிர்க்கும் திறனை உருவாக்கிக் கொள்ள முடியாதோ அது போல தான், எல்லா பாக்டீரியாக்களாலும் Antibiotics ஐ எதிர்க்கும்
திறனை பெற இயலாது. போர்க்குணம் கொண்ட பாக்டீரியாக்களால் மட்டுமே அது முடியும்.(18/n)
இணைப்பு படம்: பாக்டீரீயாக்கள் எந்த வழிகளிலெல்லாம் Antibiotics ஐ எதிர்க்கிறது என்பதை காட்டுகிறது.
மூன்றே பாகங்களில் எழுதி முடித்து விட வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. கடைசி பாகத்தையும் உடனே பகிர்கிறேன். (19/19)
பல நேரங்களில்; நம் வீடுகளிலோ அல்லது நண்பர்களின் வீடுகளிலோ வீட்டின் பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட நபரை சுட்டிக்காட்டி , இந்த பிள்ளையை மாதிரி எங்க பரம்பரையிலே யாரும் இல்லைங்க, தப்பி இங்க வந்து பிறந்திடுச்சி எப்படி சமாளிக்கறதுனே தெரியல என்று சொல்ல கேட்டு இருப்பீர்கள்.(2/n)
அப்படி பாக்டீரீயா குடும்பத்தில் தப்பி பிறந்த குழந்தைகளை Strain என்று குறிப்பிடுவோம். Strains are most often virulent. They are the rebels. They are unique and they carry an extraordinary level of determination (3/n)
முதல் இழையில் பாக்டீரீயாக்களை பற்றி எழுதியிருந்தேன். அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். படிக்க இயலாமல் போயிருந்தால் அவசியம் படிக்கவும். இணைப்பு கீழே👇🏽 (1/n)
இந்த இழையில் நோய்த்தொற்றுகளின் வகைப்பாடு மற்றும் பாக்டீரீயா எதிர்ப்பிகளின் (Antibiotic) கண்டுபிடிப்பை பற்றி தெரிந்து கொள்வோம். முதலாவது வகைப்பாடு நோயுண்டாக்கும் கிருமிகளின் மூலத்தை (Source) அடிப்படையாக கொண்டது. (2/n)
1. Exogenous (exo-வெளி) Infections - இந்த வகையான நோய்த்தொற்றிக்கு காரணமான நுண்ணுயிரிகள் (வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுனிகள்) தண்ணீர், காற்று, உணவு, பகிர்ந்து உடுத்தும் உடைகள் மூலமாக தொற்றும்.எ.கா, சளி, காசநோய், மூளைக்காய்ச்சல், மலேரியா (3/n)
Antibiotic Resistance- Thread - Part-1
கொரோனா வைரஸின் முதலாமாண்டு பிறந்தநாளை நாம் சிறப்பாய் கொண்டாடி முடித்திருக்கின்ற இந்த வேளையிலே, இதை விட மிகச்சவாலான நோய் தொற்றுக்களை வருங்காலங்களில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை கூறவே இந்த பதிவு (1/n)
எளிய நடையில் எழுத முயற்ச்சித்திருக்கிறேன். சில இடங்களில் தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலமும்/தமிழும் கலந்து எழுதியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம். படித்தவர்கள் தங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். (2/n)
நுண்ணுயிரிகளின் உலகம் வியப்பானது, விசித்திரமானது, ஆபத்து மிக நிறைந்தது. நுண்ணுயிரிகளை வகைப்படுத்தி ஆராய்வது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் எளிய முறையில் வகைப்படுத்தயிருக்கிறேன். (3/n)
2017-11-04 அன்று என் சொந்த பணி நிமித்தமாக சீனாவிலிருந்து தமிழகத்திற்க்கு பயணித்தேன். மலின்டடோ ஏர்லைன்ஸ் விமானம் பயண வழி குவாங்சோ-கோலாலம்பூர்-திருச்சி. Check in முடித்து, காத்திருந்தேன். (1/n)
அப்போது தமிழகத்திலிருந்து சீனாவிற்க்கு Business Expo காண வந்த மூன்று நபர்கள் அறிமுகமானார்கள். அவர்களுக்கு அதுதான் முதல் சீன பயணம். சீனாவில் அவர்கள் செலவிட்ட நாட்களை பற்றி நிறைய பேசினார்கள். திருப்த்திகரமான பயணம் என்று சொன்னார்கள்.(2/n)
அதில் ஒருவர், மதிமுகவின் மாநில இளைஞர் அணி செயலாளர் திரு. வே. ஈஸ்வரன் அவர்கள். கோயம்புத்தூரை சேர்ந்தவர். விமானம் கிளம்பி அதன் Cruising Altitude ஐ அடைந்ததும், எனக்கு அடுத்த இருக்கையிலே வந்து அமர்ந்தார். நிறைய விஷயங்கள் பேசினோம். அவற்றில் ஒன்று...(3/n)
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்கள் எங்கள் பல்கலையில் 2014 ஆம் ஆண்டு முதல் மருத்துவம் பயில்கிறார்கள். அதில் 70% சதவிகிதம் பேர் குஜராத்திகள். சேர்ந்த புதிதில் எல்லா மாணவர்களையும் போல பயபக்தியுடன் (1/n)
நடந்துகொண்டனர். நாட்கள் செல்ல செல்ல அவர்களின் நடவடிக்கைகள் வேறு மாதிரி செல்ல ஆரம்பித்தது. பொதுவா எல்லா மாணவர்களிடமும் தெரிவதுதான் ஆனாலும் இவர்களின் ஆணவ போக்கை காண முடிந்தது. என்னை பொறுத்தளவில் வகுப்பு அறையில் யார் தொந்தரவு செய்தாலும் வெளியே அனுப்பிவிடுவேன்(2/n)
எந்த நாட்டவராக இருந்தாலும் சரி. எந்த பாலினத்தவராக இருந்தாலும் சரி. ஆதலால் பொதுவாக என்னுடைய வகுப்பில் எல்லோரும் சற்று கவனமாகவே இருப்பார்கள். ஆனால் சில குறிப்பிட்ட வகுப்புகளில் இந்த மாணவர்களின் சேட்டைகள் அளவுக்கதிகமாக இருந்த வந்தது. (3/n)