இரட்டை சொற்களுக்கான விளக்கம்.

#தமிழ்_அறிவோம்

#குண்டக்க_மண்டக்க

குண்டக்க : இடுப்புப்பகுதி
மண்டக்க : தலைப் பகுதி

சிறுவர்களை கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது,
வீட்டில் எந்தெந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்.
#அந்தி_சந்தி

அந்தி : மாலை நேரத்திற்கும் இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.
சந்தி : இரவு நேரத்திற்கும், காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.

#அக்குவேர்_ஆணிவேர்

அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்.
ஆணி வேர் : செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்.
#அரை_குறை

அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.
குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.

#அக்கம்_பக்கம்

அக்கம் : தன் வீடும், தான் இருக்கும் இடமும்.
பக்கம் : பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்.
#கார_சாரம்

காரம் : உறைப்பு சுவையுள்ளது.
சாரம் : காரம் சார்ந்த சுவையுள்ளது.

#இசகு_பிசகு

இசகு : தம்மியல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்.
பிசகு : தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்.

#இடக்கு_முடக்கு

இடக்கு : கேலியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்.
முடக்கு : கடுமையாக எதிர்த்து தடுத்துப் பேசுதல்.

#ஆட்டம்_பாட்டம்

ஆட்டம் : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது.
பாட்டம் : ஆட்டத்திற்கு பொருத்தமில்லாமல் பாடுவது.

#அலுப்பு_சலிப்பு

அலுப்பு : உடலில் உண்டாகும் வலி.
சலிப்பு : உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.
#தோப்பு_துரவு

தோப்பு : செடி, கொடி கீரை பயிரிடப்படும் இடம் (தோட்டம்). மரங்கள் கூட்டமாக இருக்கும் இடம்.
துரவு : கிணறு.

#காடு_கரை

காடு : மேட்டு நிலம் (முல்லை)
கரை : வயல் நிலம்.( மருதம், நன் செய், புன்செய்)

#காவும்_கழனியும்

கா : சோலை.
கழனி : வயல். (மருதம் )
#நத்தம்_புறம்போக்கு

நத்தம் : ஊருக்குப் பொதுவான மந்தை.
புறம்போக்கு : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.

#பழக்க_வழக்கம்

பழக்கம் : ஒருவர் ஒரே செயலை பல காலமாக செய்வது.
வழக்கம் : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்துச் செய்வது.
#சத்திரம்_சாவடி

சத்திரம் : இலவசமாக சோறு போடும் இடம் (விடுதி)
சாவடி : இலவசமாக தங்கும் இடம்.

#நொண்டி_நொடம்

நொண்டி : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்.

நொடம் : கை, கால் செயல் சுற்று இருப்பவர்.

#பற்று_பாசம்

பற்று :நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்.
பாசம் : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது.

#ஏட்டிக்கு_போட்டி

ஏட்டி : விரும்பும் பொருள் அல்லது செய்வது. (விருப்பம்)
போட்டி : விரும்பும் பொருள் செயலுக்கு எதிராக வருவது.

#கிண்டலும்_கேலியும்

கிண்டல் : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயிலேயே வாங்குவது.
கேலி: எள்ளி நகைப்பது.
#ஒட்டு_உறவு

ஒட்டு : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.
உறவு : கொடுக்கல் சம்மந்தமான வகையில், நெருக்கமானவர்கள்.

#பட்டி_தொட்டி

பட்டி : கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்)
தொட்டி : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்.

#கடை_கண்ணி

கடை : தனித்தனியாக உள்ள வியாபார நிலையம்.
கண்ணி : தொடர்ச்சியாக அமைந்த கடைகள், கடைவீதிகள்.

#பேரும்_புகழம்

பேர் : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை.
புகழ் : வாழ்விற்கு பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை.

#நேரம்_காலம்

நேரம் : செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.
காலம் : ஒரு செயலை செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.

#பழி_பாவம்

பழி : நமக்குத் தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச்சொல்.
பாவம் : தீயவை செய்து நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி.
#கூச்சல்_குழப்பம்

கூச்சல் : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம்.(கூவுதல்)
குழப்பம் : துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்.

#நகை_நட்டு

நகை : பெரிய அணிகலன்கள்.
நட்டு : சிறிய அணிகலன்கள்.
#பிள்ளை_குட்டி

பிள்ளை : பொதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்.
குட்டி : பொதுவாக பெண் குழந்தையை குறிக்கும்.

#பங்கு_பாகம்

பங்கு : கையிருப்பு. பணம்,நகை, பாத்திரம்.( அசையும் சொத்து)
பாகம் : வீடு, நிலம்.அசையா சொத்து.

#வாட்டம்_சாட்டம்

வாட்டம் : வளமான தோற்றம், வாளிப்பான உடல்.
#சாட்டம் : வளமுள்ள கனம். தோற்றப் பொலிவு.

#காய்_கறி

காய் : காய்களின் வகைகள்.
கறி : சைவ உணவில் பயன்படுத்தப்படும் கிழங்கு வகைகள்.

#ஈவு_இரக்கம்

ஈவு : (ஈதல்) கொடை கொடுத்தல், வறியவருக்கு உதவுதல்.
இரக்கம் : பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுதல்.
#பொய்_புரட்டு

பொய் : உண்மையில்லாததைக் கூறுவது.
புரட்டு : ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி பொய்யை உண்மையென கூறி நடிப்பது.

#சூடு_சொரணை

சூடு : ஒருவர் தகாத செயல், சொல்லை செய்யும் போது உண்டாகும் மனக்கொதிப்பு.
சொரணை : நமக்கு ஏற்படும் மான உணர்வு.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Abdullah_

Abdullah_ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Abdullah_twitz

30 Nov
#மொசாட் - உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு.அதன் சிறப்பம்சங்களும் தோற்ற வரலாறும்.

மொசாட். கேட்ட உடனேயே லேசாக அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் பெயர்.
உலகின் அதிபயங்கர உளவு அமைப்பு.

இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர் வரை இருக்கலாம் என்பது உறுதிப்படுத்தப் படாத தகவல்.

அத்தனை பெரும் உளவாளிகள்.

ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள்
மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை.

உலகத்தில் இருக்கும் அத்தனை உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிடவும் பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம்.
Read 19 tweets
29 Nov
உலகில் எந்த இராணுவத்தில் உண்டு இத்தகைய சிறப்புகள்??

1- தமிழீழ காவல்துறை
2-குற்றத் தடுப்புக் காவல்துறை
3- குற்றப் புலனாய்வுப் பிரிவு.
4- தமிழீழ வைப்பகம்.
5- தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
6- தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
7- சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
8- கிராமிய அபிவிருத்தி வங்கி.
9- அனைத்துலகச் செயலகம்.
10- நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
11- சுங்க வரித்துறை.
12- தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
13- அரசறிவியற் கல்லூரி.
14- வன வளத்துறை.
15- தமிழீழ நிதித்துறை.
16- தமிழீழ நீதித்துறை, நீதிமன்றங்கள்.
17- கலை பண்பாட்டுக்கழகம்.
18 மருத்துவப் பிரிவு.
19- திலீபன் சிறப்பு மருத்துவமனை.
20- பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
21- மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
22- சுகாதாரப் பிரிவு.
23-ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
Read 22 tweets
27 Nov
தாயகக் கனவினில்
சாவினை தழுவிய
சந்தனப் பேழைகளே!!
வீரவணக்கம்!! வீரவணக்கம்!!

கிட்டு
நடுக்கடலிலிருந்து எழுப்புகிறான்.

அங்கயற்கண்ணி
ஆழ்கடலிலிருந்து எழுப்புகிறாள்.

திலீபன்
பட்டினி பந்தலிலிருந்து எழுப்புகிறான்.

மில்லர்
வெடி வாகனத்தோடு எழுப்புகிறான்.

#மாவீரர்நாள்2020
தமிழ்ச்செல்வன்
புன்னகையோடு எழுப்புகிறான்.

மாலதி
போர்க்களத்திலிருந்து எழுப்புகிறாள்.

நடேசன்
வெள்ளைக்கொடியோடு எழுப்புகிறார்.

ஒருலட்சம் உயிர்கள்
ஓலமிட்டபடி எழுப்புகிறது.

சலனமற்ற விழிகளால்
இதயத்தை எழுப்புகிறான்
பாலசந்திரன்.

எத்தனை உயிர்கள், துயர்கள், வலிகள்!!

#மாவீரர்நாள்2020
அழிந்துபோகுமோ அத்தனையும்
புதைந்துபோகுமோ மொத்தமும்
முடிந்துபோகுமோ
உறங்கா இரவுகள்??

ஒளிர்ந்து கருகியது
உரமாகத்தானே
தமிழீழ மண்ணில்
தலைமுறை விளையாடத்தானே!!

சாவை அணைத்துக்கொண்டது
அறத்தால்தானே!!
யாரொருவரும் முன்நிற்க முடியா
மறத்தால் தானே!!

அலைஅலையாய்
மாவீரர்
தன்னை கொடுத்தார்.
Read 5 tweets
27 Nov
ஆஸ்திரேலியாவுக்கு
அருகே உள்ள குட்டி தீவு நாடு. #நவுரு.

ஜனத்தொகை 10,000 மட்டுமே.
தீவின் நீளம் ஐந்து கிமீ, அகலம்
மூன்று கிமீ.
30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு.

மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நாட்டுக்கு லாட்டரி அடித்தது!!
ஆம்.தீவில் லட்சகணக்கான ஆண்டுகளாக பறவைகள் எச்சமிட்டு அவை முழுக்க #பாஸ்பேட் எனும் தாதுவாக மாறியிருந்தன.

பாஸ்பேட் சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள்.

தீவில் கணக்கு,வழக்கற்ற எண்ணிக்கையில் பாஸ்பேட் இருந்தது.

அதன்பின் பன்னாட்டுக் கம்பனிகள்
வந்து இறங்கின.
பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன.
அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது.

ஒரு கட்டத்தில் 10,000பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170கோடி டாலர்கள் இருந்தன.

கணக்குபோட்டால் நபர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் டாலர்.

அதாவது நால்வர் அடங்கிய குடும்பத்துக்கு தலா 1கோடி ரூபாய்களை கொடுத்திருக்கமுடியும்.
Read 10 tweets
27 Nov
சகோதர இந்துக்களுக்காக!!

1.கோவிலுக்கே போகாத இந்துக்கள் உண்டு!!

2.கோவிலுக்குள் சென்று திருநீறு வாங்காத இந்து உண்டு!!

3.கோவிலுக்குள் சென்று அமர்ந்து மட்டும் வரும் இந்து உண்டு!!

4.போகிற வழியில் இருக்கும் கடவுளை வணங்கும் இந்து உண்டு!!

5.குலதெய்வமே தெய்வமென வாழும் இந்து உண்டு!!
6.நாள் கிழமை திதி பார்த்து மூச்சு விடும் இந்து உண்டு!!

7.என்ன நாள் என்ன திதி என்பதே தெரியாமல் வாழும் இந்து உண்டு!!

8.தெய்வம் என்னடா தெய்வம்??
வேலைய ஒழுங்க செஞ்சா போதுமென வாழும் இந்து உண்டு!!

9.நான் இந்துவே இல்லடா
தமிழன்டா!! என சொல்லும் இந்துவும் உண்டு!!
10.கடவுளே இல்லை எல்லாம் இவனுக பிழைக்க செய்யற வேலைனு சொல்லும் இந்துவும் உண்டு!!

11.கடவுளே இல்லை ஞானமே கடவுள் என சொல்லும் இந்துவும் உண்டு!!

இன்னும் இன்னும் பல
இந்துக்கள் உண்டு
அவர்கள் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!!

ஆனால்??

#மதவாத_பிழைப்பு_பாஜக_கூட்டம
Read 6 tweets
26 Nov
#கண்ணகி க்கு கோயில்கட்ட இமயத்தில் கல்லெடுக்க வடதிசை சென்ற சேர மாமன்னனை!!

கொங்கணரும், கலிங்கரும், கருநாடகரும், பங்களரும், கங்கரும், கட்டியரும், ஆரியருடன் 51 தேச அரசர்களுடன் கனகனும் விசயனும் இணைந்து எதிர்த்து நிற்க!!

#HBDமேதகுPRABHAKARAN
பேருவகை அடைந்து பெருமகிழ்வுடன் களமிறங்கி, யானை மீதமர்ந்து ஒரு பகற்பொழுதில் அவர்களை குயிலூலுவப் போரில் (கங்கை கரையில்) தோற்கடித்து!!

ஒரேநாளில் இவ்வளவு பேரை கொல்ல முடியுமா என எமனுக்கே பயம்கொள்ள செய்து!!

#HBDமேதகுPRABHAKARAN
கனக விசயன் தலைமீது பத்தினிக்கல் சுமந்து வரச்செய்து கண்ணகி கோயில் கட்டிய மாமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை நான் கண்டதில்லை.

#மௌரியமன்னன் அசோகனை சோழ எல்லையிலேயே நையப்புடைத்து துளுவ நாட்டைத்தாண்டி பாழிநாடுவரை துரத்தி சென்று பாழிக்கோட்டையை அழித்து

#HBDமேதகுPRABHAKARAN
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!