001#நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே#
இளம் வயது பெண் ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார்.
✍002அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன.
அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார்.
003உடனே அந்த இளம் பெண்ணிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என ஆதங்கப்பட்டார்.
அப்பெண்ணோ புன்னகைத்தவாறு கூறினார்:
"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே,
✍004அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார்.
அப்பெண்ணின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை!
"அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது.
✍005நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே"
இங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின், வாய்ச்சண்டை போடுவது, வீண் வாதத்தில் ஈடுபடுவது, பிறரை மன்னிக்க மறுப்பது, எதிலுமே அதிருப்தியும் குற்றமும் காணும்
போக்கினைக் கொண்டிருப்பது
✍006நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் செயல் என்பது புரிந்திடும்.
ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டாரா? அமைதியாக இருங்கள், பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே
✍007எவரேனும் உங்களுக்குத் துரோகம் புரிந்தாரா, உங்களை ஆக்கிரம வதை செய்தாரா(bully) ஏமாற்றினாரா, அவமானப்படுத்தினாரா? அமைதியாக இருங்கள், பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே
ஒருவர் நமக்கு எப்பேற்பட்ட தொல்லைகளை ஏற்படுத்தினாலும், ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள்,
✍008பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே
இப்பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் இறங்க வேண்டிய இடம் எப்பொழுது என்பதும் ஒருவருக்கும் தெரியாது. பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே
✍009உறவையும் நட்பையும் போற்றுவோம். ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம், மன்னிப்போம் மறப்போம். நன்றி பாராட்டி மகிழ்ச்சியாக வாழும் வழியைப் பார்ப்போம்.
10✍#நான் எப்பொழுதாவது உங்களைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் எப்பொழுதாவது என்னைப் புண்படுத்தியிருந்தால், நானும் உங்களை மன்னித்துவிடுகிறேன்.
ஏனெனில்,
நாம் பயணிக்கப் போவது ஒரு குறுகியகாலமே!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு பெண் தினமும் கோவிலுக்குச் செல்வாள்! ஒரு நாள் அந்த பெண் பூசாரி கிட்ட சொன்னாள், இனி நான் கோவிலுக்கு வரமாட்டேன்!
002அர்ச்சகர் கேட்டார் -- ஏன்?
அப்போது அந்தப் பெண் சொன்னார் -- கோயில் வளாகத்தில் மக்கள் செல் போனில் எதைப்பற்றியோ பேசுவதை நான் பார்க்கிறேன்! கிசுகிசுக்கும் இடமாக கோயிலை சிலர் தேர்வு செய்துள்ளனர்! சிலர் பாசாங்குத்தனம் குறைவாக வழிபடுகிறார்கள், அதிகம் பாசாங்கு செய்கிறார்கள்!
003இதில் அர்ச்சகர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார், பிறகு சொன்னார் -- சரி! ஆனால் நீங்கள் உங்கள் இறுதி முடிவை எடுப்பதற்கு முன் நான் சொல்வதை செய்ய முடியுமா!
ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதைப் பழக்கமுள்ளவன் எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை நையப்புடைத்து - மிரட்டி - பணம் வாங்கிக் குடித்துக் கொண்டே இருப்பான்.
002பிறருக்குத் தொல்லைகொடுத்து இன்பம் பெறும் ஸாடிஸ்ட் அவன்.
மற்றவன் நல்லவனாக சமூகத்தில் மதிக்கப்படுபவனாக - நல்ல குடும்பத்தலைவனாக இருந்தான். அருமையாக குடும்பத்தைப் பராமரித்து வந்தான். ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு.
003"ஒரே தகப்பனுக்குப் பிறந்த ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர்போற்றும் நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்கக் காரணம் என்ன", என ஊரில் இருப்பவர்களுக்கு வியப்பு.
001இவர்களை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்! ஒரு அப்பா,மகள்!!
இவர்கள் வாழ்க்கையில் ஒரு கதை இருக்கிறது.
கதைக்குள் போவோமா?
சுமார் 22 வருடங்கள் பின்னோக்கி போக வேண்டும்.
002அஸ்ஸாம் மாநிலத்தில், கிராமம் என்றும் சொல்ல முடியாது. நகரம் என்றும் சொல்ல முடியாத ஒரு சிற்றூர். அங்கே சோபரன் என்ற பெயருடைய காய்கறி தள்ளு வண்டி வியாபாரி, தனிக்கட்டை.
அன்றன்றைக்கு கிடைப்பதை வைத்து அவருடைய வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.பெரிய கனவெல்லாம் கிடையாது.
003ஒரு நாள் அந்தி சாயும் நேரம், வியாபாரம் முடித்து தன் குடிசைக்கு வந்து கொண்டிருக்கிறார். பக்கத்து புதர் ஒன்றிலிருந்து ஏதோ சத்தம்,போய் பார்க்கிறார். புதரில் ஒரு அழகான பச்சிளம் பெண் குழந்தை. சுற்றும் முற்றும் பார்க்கிறார். ஆள் அரவமே இல்லை.