#திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை வரலாறு

முன்பொரு காலத்தில் சோழ நாட்டில் உள்ள வெட்டாற்றின் தென் கரையில் நிருத்துவர் என்ற முனிவர், தனது மனைவி வேதிகை என்பவருடன் இல்லறம் நடத்தி வந்தார். இந்த நிலையில் வேதிகை கருவுற்றாள். 🇮🇳🙏1
ஒரு நாள் மனைவியை ஆசிரமத்திலேயே விட்டு விட்டு, நிருத்துவ முனிவர் மட்டும் வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து ஊர்த்துவ பாதர் என்னும் முனிவர், அந்த ஆசிரமத்திற்கு வந்து உணவு கேட்டார்.கருவுற்றிருந்த வேதிகை உடல் சோர்வு காரணமாக எழுந்து வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. 🇮🇳🙏2
இதை அறியாத ஊர்த்துவ பாதர், வீட்டில் இருந்த பெண் தன்னை அலட்சியப்படுத்தியதாக எண்ணி, சாபமிட்டு விட்டுச் சென்று விட்டார். முனிவரின் சாபம் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதிகை செய்வதறியாது திகைத்தாள். 🇮🇳🙏3
பின்னர் தான் நித்தம் வணங்கும் அம்பிகையிடம் தனது நிலை குறித்து வேண்டி முறையிட்டாள்.அன்னையும் காக்கும் கடவுளாக எழுந்தருளி, வேதிகையின் உடலில் இருந்த அகன்ற கருவை, ஒரு குடத்துக்குள் வைத்து ஆவாகனம் செய்து, முழுக் குழந்தையாக உருவாகும் நாள்வரை காத்தாள். 🇮🇳🙏4
முழுக் குழந்தையாக ஜனித்ததும், அந்தக் குழந்தைக்கு ‘நைதுருவன்’ எனப் பெயரிட்டு, பெற்றோரிடம் சேர்த்தாள் அம்பிகை.🇮🇳🙏5
இவ்வாறு பூவுலகத்தில் முதல் ‘கருமாற்றம்’ செய்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள், திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன்.இந்த ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி ராஜகோபுரமும், தெற்கில் நுழைவு வாசலும் உள்ளன. 🇮🇳🙏6
உள்ளே நுழைந்ததும் தென்புறமும், பின்புறமும் நந்தவனங்களும், வடக்கே வசந்த மண்டபமும் காணப்படுகின்றன. சுவாமி கோவிலுக்கு முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி இருக்கின்றன.🇮🇳🙏7
முல்லை வன நாதர் :முல்லைக் காடாக இருந்த இந்தத் திருத்தலத்தில், சுயம்புவாக உருவான இறைவன் வீற்றிருந்து அருள்பாலிக் கிறார். இத்தல இறைவன் வடமொழியில் மாதவிவேனேஸ்வரர் என்றும், தமிழில் முல்லை வன நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். 🇮🇳🙏8
இங்குள்ள மூலவருடையது, புற்று மண்ணால் ஆன சிவலிங்கத் திருமேனியாகும். சிவலிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன. புற்றுமண்ணால் ஆனவர் என்பதால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. 🇮🇳🙏9
அவரது சன்னிதிக்கு வலதுபுறம் உளிபடாத சுயம்புவாக, கற்பக விநாயகர் காட்சி தருகிறார்.சுவாமி சன்னிதிக்கு இடது புறத்தில் கருக்காத்த நாயகி அம்மன் தனிக் கோவிலில் எழுந்தருளியிருக்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலைப் போலவே, இந்த ஆலயத்திலும் அம்மனே பிரதானமாக உள்ளார். 🇮🇳🙏10
அம்மன் நின்ற கோலத்தில் கருணையை கண்களில் தாங்கியபடி அருள்பாலிக்கிறார். அம்மன் கோவிலுக்கு தனியாக ஒரு திருச்சுற்றும், எதிரே பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.சோமாஸ்கந்தர் : இறைவன் – இறைவி கோவில்களுக்கு இடையில், முருகப்பெருமான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். 🇮🇳🙏11
வள்ளி– தெய்வானை இருபுறம் நிற்க, ஆறுமுகனாக, முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையில் முருகப்பெருமான் சன்னிதி அமைந்துள்ளதால், இந்த ஆலயம் சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது.🇮🇳🙏12
திருக்கோவிலின் தல விருட்சமான முல்லைக்கொடி, சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு அருகில் மட்டுமின்றி, திருக்கோவிலின் வெளிச் சுற்றுப் பகுதியிலும், நந்தவனங்களிலும் இருப்பதைப் பார்க்கும்போது, இந்தத் தலம் முற்காலத்தில் முல்லை வனமாக இருந்திருப்பதை உறுதி செய்கிறது.🇮🇳🙏13
கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள திருக்குளம், ‘ஷீரகுண்டம்’ (பாற்குளம்) என்று பெயர் பெற்று திகழ்கிறது. இதற்கு தெய்வப் பசுவான காமதேனுவின் பால் கலந்த குளம் என்பது பொருள் ஆகும்.🇮🇳🙏14
தேவாரத் தலம் :சைவ சமயக் குரவர்களான திருஞான சம்பந்தர், தனது 11 பதிகங்களிலும், திருநாவுக்கரசர் ‘திருத்தாண்டக’ப் பாடல்களிலும், சுந்தரர், ‘ஊர்த் தொகை’யிலும் இந்தத் திருத்தலத்தைப் பற்றி பாடியுள்ளனர்.🇮🇳🙏15
‘வெந்தநீறு மெய்பூசிய வேதியன்சிந்தைநின்ற வருள் நல்கிய செல்வந்தன்கந்தமெளவல் கமழும் கருகாவூர் எம்எந்தை வண்ணம் எரியும் எரிவண்ணமே’.என்பது சம்பந்தரின் தேவார வெள்ளத்தில் ஒரு தேன் துளியாகும். 🇮🇳🙏16
சிவனை செந்தீ வண்ணத்தானாகவே, சம்பந்தர் காணும்போது, அப்பர் மட்டும் சும்மா இருப்பாரா? ‘குருகு, வைரம், அமிர்தம், பாலின் நெய் பழச்சுவை, பரஞ்சோதி’ என அவர் பங்குக்கு இத்தல இறைவனை புகழ்கின்றார்.🇮🇳🙏17
குழந்தைச் செல்வம் :உலக மக்களுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும், மழலைச் செல்வம் இல்லை என்றால் அது வெற்று வாழ்க்கை ஆகிவிடும். ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் அந்தக் குடும்பத்துக்கு குழந்தைப் பேறுதான் முதன்மையானதாக கருதப்படுகிறது. 🇮🇳🙏18
திருமணமாகி பல ஆண்டு களாகியும் கருத்தரிக்காதவர்கள், கருத்தரித்தாலும் உடனுக்குடன் அது தங்காமல் சிதைந்து போவது, தாய்க்கும், குழந்தைக்கும் பிரச்சினை ஏற்படுவது.. இப்படி எத்தனையோ உள்ளன.மருத்துவ உலகம் இதில் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 🇮🇳🙏19
இருப்பினும் அத்தகைய மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களே, சில நேரங்களில் மனித சக்தி, மருத்துவ சக்தியை விட தெய்வ சக்தி ஒன்றுள்ளது என்று நம்புகிறார்கள். தம்மை நம்பி வந்தவர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள். 🇮🇳🙏20
அப்படி தெய்வ சக்தியை நம்பும் மக்களுக்கு, பலனளிக்க எத்தனையோ ஆலயங்கள் இருப்பினும், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.இந்தத் திருக்கோவில் அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள்.🇮🇳🙏21
குழந்தைப் பேறு வேண்டியும், சுகப்பிரசவம் நடைபெற வேண்டியும் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து போகிறார்கள்.🇮🇳🙏22
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு. 🇮🇳🙏23
அதே போல கருவுற்ற பெண்கள் சுகப் பிரசவம் அடைய, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெயை, அடிவயிற்றில் தடவிக்கொள்வது உரிய பலனைத் தரும் என்பது நம்பிக்கை.🇮🇳🙏24
திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் இந்தத் திருக்கோவிலுக்கு நேரில் வந்து, அம்பாள் சன்னிதியில் உள்ள வாசல்படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். 🇮🇳🙏25
நேரில் வர இயலாதவர்களுக்கு, தபால் மூலம் பிரசாதம் அனுப்பும் திட்டமும் கோவில் நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது.நன்றிக் கடன் :பக்தர்களின் பிரார்த்தனை பலித்ததும், தம்பதி சமேதராகவும், தாய் தனது குழந்தையை ஏந்திக் கொண்டும் ஆலயத்திற்கு வருகிறார்கள். 🇮🇳🙏26
பின்னர் அம்பாளின் சன்னிதிக்கு வந்து தங்களின் சக்திக்கேற்ப கற்கண்டு, வாழைப்பழம், பணம், சர்க்கரை போன்றவற்றை எடைக்கு எடை துலா பாரம் தருகிறார்கள். மேலும் அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை செய்வதும், புடவை சாத்துவதும் திருக்கோவிலில் நாளும் காணக்கூடிய அற்புதமான காட்சிகளாகும். 🇮🇳🙏27
அம்பிகை சன்னிதியிலேயே ஒரு துலாக் கோல் இருக்கிறது.சுயம்புவான முல்லைவன நாதருக்கு, புனுகு சட்டம் சாத்தி வழிபட்டால், தோஷம் நிவர்த்தியாகும். குறிப்பாக தோல் நோய் நீங்கும் என்பதும் அனுபவப்பட்டவர்களின் வாக்கு.

🇮🇳🙏28
#அமைவிடம் : தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது 🇮🇳🙏29
திருக்கருகாவூர் திருத்தலம். பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதன் முதலில் தரிசிக்க வேண்டிய தலமாகவும், சனத்குமார முனிவரால், நாரதருக்கு ற் எடுத்துச் சொல்லப்பட்ட பெருமைக் குரியத் தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது......

வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

5 Dec
ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்: செல்வாக்கை அதிகரித்தது பா.ஜ.,

ஐதராபாத்: தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., தன்னுடைய செல்வாக்கை அதிகரித்து கொண்டது. காங். ,படுதோல்வியடைந்ததையடுத்து அம்மாநில காங். தலைவர் ராஜினாமா செய்தார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகாரட்சி 150 வார்டுகளை கொண்டது. இம்மாநகராட்சிக்கு டிச.,1ல் தேர்தல் நடந்தது. மாநிலத்தை ஆளும் டிஆர்எஸ், பாஜ, காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. டிஆர்எஸ் - பாஜ இடையே நேரடி போட்டி என்றாலும்,
ஓவைசியில் ஏஐஎம்ஐஎம். கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது.
பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
Read 7 tweets
5 Dec
பூமி உள்ளவரை... மக்களின் மனங்களில்...: இன்று ஜெயலலிதா நினைவு தினம்

சினிமா, அரசியலில் உச்சம் தொட்டவர் ஜெயலலிதா. இவரது நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
கர்நாடாகாவின் மைசூருவில் 1948 பிப்., 24ல் பிறந்தார். நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர்.

சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார். குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது. 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார்.
1972ல் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருதை வென்றது. எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
Read 9 tweets
5 Dec
‘ஹோலி கான்சர்’- என் வாழ்க்கையை காப்பாற்றிய பசு

நவராத்திரி உற்சவம் ஊரெங்கும் திருவிழாக் கோலம். உறவினர்கள் நண்பர்கள் நம் வீட்டுக்கு வருவதும் நாம் அவர் வீட்டுக்குச் சென்றும் சந்தோஷம் பரிமாறிக் கொள்ளும் நேரம். இப்படி நான் எனது தோழி வீட்டிற்குச் சென்றேன்.
நவராத்திரி கொலு ரசித்து பாட்டுப் பாடி, சுண்டல் சாப்பிட்டு வீட்டுக்குக் கிளம்பும் முன் தாம்பூலம் தந்தாள் என் தோழி அதிலிருந்த ரிட்டர்ன் கிப்ட் (return gift) புதியதாக இருந்தது அவளிடம் என்னவென்று கேட்டேன், அது பஞ்சகவ்ய விளக்கு என்றாள். மிகவு‌ம் விசேஷம் என்றும் கூறினாள்.
என்ன டா இது பஞ்சகவ்ய விளக்கு… பஞ்சகவ்வியம் என்றால் எ‌ன்ன என்று இன்டெர்நெட்டில் வலை வீசி தேடினேன். அ‌ந்த தேடலில் நான் பஞ்சகவ்வியத்தைப் ப‌ற்‌றியும் அதன் பயன்களைப் பற்றியும் அறிந்த ஒரு உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர்கிறேன்.
Read 18 tweets
5 Dec
அவ்வளவு பயங்கரமானதா லவ் ஜிகாத்?

லவ் ஜிகாத்- கடந்த 2009,2010ல் மெது மெதுவாக தலைதூக்கி இன்று தேசம் முழுவதும் பயங்கரமாக பரவிக்கிடக்கும் ஒரு விஷயம்:
சுருக்கமாகச்சொன்னால் இஸ்லாமிய வாலிபர்கள்காதல் என்ற பெயரில் பெண்களை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்துவது தான் லவ் ஜிகாத்.
தங்கள் எண்ணிக்கையை கூட்டுவதற்காகவும் பிற மதங்களை சின்னாபின்னப்படுத்தவும் திட்டமிட்டு இஸ்லாமியர் செயல்படுத்தும் சதி என்றால் மிகையில்லை.
ஆரம்ப காலத்தில் இது ஏதோ பிரமை, ஹிந்துக்களின் காழ்ப்புணர்ச்சியும் பயமுமே (Islamophobia) என்று ஊடகம், இடதுசாரிகள், லிபரல்கள் சித்தரித்தனர். ஆனால் லவ் ஜிகாதில் சிக்கியவர்கள் ஹிந்து பெண்கள் மட்டுமல்ல சீக்கிய, கிருஸ்துவப் பெண்களும் கூட உண்டு என்பதே நிஜம்.
Read 13 tweets
5 Dec
சகல பாவ சாப தோஷ
நிவர்த்தி ஸ்தலம்
அகோ பலம் அகோபிலம்:

🇮🇳🙏1 Image
ஆந்திர மாநிலத்தில் உள்ள இரண்டு திவ்ய தேசங்களுள் ஒன்று இந்த அஹோபிலம். மற்றொன்று கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் திருமலையாய் எழுந்தருளி சேவை சாதிக்கும் திருப்பதி . அகோபிலம் என்ற இந்த திவ்ய தேசம் ஆந்திரா மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 🇮🇳🙏2
"அஹோ' என்றால் "சிங்கம்'. "பிலம்' என்றால் "குகை'.

கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலையிலுள்ள அஹோபிலத்தில் ஒன்பது நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது நரசிம்ம மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார் பெருமாள்.

🇮🇳🙏3
Read 30 tweets
4 Dec
தண்டவாளத்தில் நடந்த தண்டபாணி
நன்றி மறவாமை மஹாபெரியவாளின் சிறப்பு

காசி யாத்திரை செல்ல வேண்டிய சம்பிரதாயங்களைச் செய்து முடித்துவிட்டு,1918 மார்ச் மாதம் ,முறையான யாத்திரையைத் தொடங்கினார்கள் பெரியவா. Image
இருப்பத்தோரு ஆண்டுகள் புனிதப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திவிட்டு 1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு திரும்பினார்கள் ஸ்வாமிகள்.
காசியிலிருந்து கொண்டுவந்த கங்கா தீர்த்தத்தால் ராமேஸ்வரம் ராம நாதஸ்வாமியை அபிஷேகம் செய்து வைத்தால்தான் அந்த யாத்திரை நிறைவேறும்.
மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் அடைய பாம்பன் கால்வாயை கடக்க வேண்டும். அப்போது பாம்பன் மேல் செல்ல பேருந்து பாலம்கிடையாது. ரயில்வே பாலம் வழியாக நடந்து செல்ல உரிய உயர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!