நீ ஜெயலலிதாவை 1996 களில் எதிர்த்தீர்னு பேசிக்கிறாங்க. நாம மக்கள் பிரச்சனைக்கா எதிர்த்தோம்?
சொல்லு தலைவா??
ஜெ.முதல்வராக இருந்த போது ,சாலையில் அந்தம்மா போற வரைக்கும் உங்க காரை நிறுத்தி வச்சுட்டாங்கனு கோவம்.
நீ துறை அதிகாரிகளிடம் போட்ட சத்தம் அந்தம்மா காதுக்கு போக காண்டான அந்தம்மா உங்க வீடு இருக்க போயஸ் தோட்டத்துக்குள்ளவே உன் காரை விடாம நடந்து போக வச்ச வரலாறு எவனுக்கு தெரிய போகுது!!
நீ வா தலைவா.!!
எம்.ஜி.ஆர் பட கதாநாயகி லதா கிட்ட லவ்ஸ் விட்டு ராமாவரம் தோட்டத்துல எம்.ஜி.ஆர் கிட்ட செமத்தியா உதை வாங்கி ஓடி வந்த வரலாறு எவனுக்கும் தெரியவாப்போவுது!!
நீ வா தலைவா.!!
நீ என்னமோ திமுகவுக்கு 1996 ல ஆதரவு கொடுத்ததால தான் அதிமுக தோத்ததா பேசிக்கிறாங்க!!
ஏற்கனவே அதிமுக ஆட்சில ஏற்பட்ட வெறுப்பு+திமுக +மூப்பனார் கூட்டணினு விழ இருந்த பனம் பழத்துல போய் உட்காந்துட்டு என்னால தான் ஜெ தோற்றார்னு அள்ளி விடுரோமே இது எவனுக்கும் தெரியவாப் போகுது.!!
நீ வா தலைவா.!!
ஜல்லிக்கட்டு ,ஹைட்ரோ கார்பன், காவிரி நீர் பிரச்சனை னு எதுக்குமே வாய் திறக்காம ஒன்னே காலணா க்கு பெறாத பண மதிப்பிழப்பு திட்டத்தை மோடி கொண்டு வந்த போது முதல் ஆளாய் “ஹேட்ஸ் ஆப் மோடிஜி “ னு வாழ்த்தி துண்டு போட்ட உன் லட்சணத்த எவன் கேள்வி கேட்க போறான்.??
நீ வா தலைவா.!!
எல்லா நடிகர்களுமே தங்களால் இயன்றதைச் செய்யும் போது ,சத்தியராஜ் நம்மை விட அதிக நலத்திட்ட உதவிகள் செய்து விட்டு அமைதியாக இருக்கும் போது, ஜெஞ்சிட்டேன் ஜெஞ்சிட்டேன்னு பீத்துரோமே.!!
நீ வா தலைவா.!!
46 வருடம் தமிழ்நாட்டுல இருந்ததால நான் பச்சை தமிழன்னு நீ சொல்லும்போது , அப்ப 50 வருசமா பாணி பூரி வித்துட்டு திரியுர இந்திக்காரன் என்ன கிளி பச்சை தமிழனானு கேட்டு எவனும் உன்னை செருப்புலயே அடிக்கலையே.!!
நீ வா தலைவா.!!
2004 எம்.பி தேர்தல்ல பா.ம.க போட்டியிட் ட 6 தொகுதியில் மட்டும் பாமகவை எதிர்த்து ரசிகர்களை வேலை செய்யச் சொன்னதும் அந்தத் தேர்தலில் 6 தொகுதியிலுமே பாமக அமோக வெற்றி பெற்றதும் இப்ப எவனுக்கும் தெரியவாப்போவுது.!!
நீ வா தலைவா.!!
60 வருசத்துக்கு மேல போராடுற ஐயா நல்லக்கண்ணுவை யார்னே தெரியாத இந்த கூட்டம் உன்னை வெறும் படத்துல நடிச்ச ஒரே காரணத்துக்கு தலைவன்னு சொல்லுதே இந்த மானங்க்கெட்ட தமிழர்களை ஆள.!!
நீ வா தலைவா.!!
மாவீரன் வீரப்பன் கொல்லப்பட்ட போது “அரக்கன் ஒழிந்தான்” னு திருவாய் மலர்ந்த உங்களை தமிழர்கள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துல வச்சுருக்காங்களே அந்த பாவத்துக்காகவாது.!!
நீ வா தலைவா.!!
நெய்வேலியில் காவிரிநீர் பிரச்சனைக்கு ஒட்டுமொத்த நடிகர்சங்கமே உண்ணாவிரதப்
போராட்டம் நடத்தியபோது
நீமட்டும் சென்னையில் உண்ணாநிலை
போராட்டம் நடத்தி
பச்சைத் தமிழனென்று நிரூபித்த வரலாறை ரசிக குஞ்சுகள் மறந்திருப்பார்கள்.!!
நீ வா தலைவா.!!
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களை ஒரு மாதம் கழித்து சென்று பார்க்கையில் ஒரு குண்டடிபட்ட போராளி உன்னைக் கேட்டானே "நீங்கள் யாரென்று" நீங்கள் இப்போது யார் என்று சொல்ல வைக்கும் காலம் வந்துவிட்டது.!!
நீ வா தலைவா.!!
2015 சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5கோடி, 10கோடி, 25 கோடி என்று வடநாட்டு ஷாருக்கான்கள் கொடுத்தபோது இங்குள்ள அஜீத், விஜய், சூர்யா போன்றவர்கள் 50லட்சம் ஒருகோடி கொடுத்தபோதும் நீ வெறும் 10லட்சம் கொடுத்து விட்டு ஃபாரின் போய்விட்டாயே.!!
நீ வா தலைவா.!!
கொரானாவுக்கு ராகவேந்திரா மண்டபத்தை கேட்டு விடுவார்களோ என்று பராமரிப்பு பணி மூன்று மாதங்கள் அறிவித்து விட்டு அதனை இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு காட்ட வேண்டும் அல்லவா.!!
நீ வா தலைவா.!!
கொரானா பாதிப்பால் ஆறு மாதங்கள் தொழில் இல்லை என்று வாடகையைத் தள்ளுபடி செய்ய நீதிமன்றத்தையும் நாடினோமே நாம் யாரென்று இந்த தமிழக மக்களுக்கு காட்ட வேண்டாமா.??
நீ வா தலைவா.!!
தன்னுடைய முதலீடுகளை எல்லாம் மராட்டியத்திலும் கன்னடத்திலும் நிர்மானித்துவிட்டு தமிழக மக்களுக்கு பெப்பே காட்டினோமே இதனை தமிழக மக்கள் கொடுத்த அறிய வேண்டாமா.??
நீ வா தலைவா.!!
எழுவர் விடுதலை பற்றி உன்னிடம் நிருபர்கள் கேள்வி கேட்ட போது எந்த ஏழு பேர் என்று கேட்டது தமிழக மக்கள் உணர வேண்டாமா.??
டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது!!
கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது.
மோடியோ,அமித்சாவோ Popular Politicions அல்ல!!வெறும் ஊடக பிம்பங்களே!!
மோடியாலோ,அமித்சாவாலோ மக்களிடம் செல்வாக்கு செலுத்த இயலாத நிலையில், போலீஸ் லத்தி மூலம் மக்களை அடக்கி விடலாம் என கார்ப்பரேட்டுகள் நினைப்பது வெறும் பகல் கனவே!!
போலீஸ் லத்தி மூலம் இந்தியர்களை அடக்கி விடலாம் என்றால் வெள்ளையன் அதைச் செய்திருப்பானே??வெளியேறி இருக்க மாட்டானே??
லத்தி மூலம் அடக்க முடியாத வெறியில்தான் வெள்ளையரால் 1943ல் வங்காள பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டது!!
ஹிட்லர் உலகப் போரில் 60 லட்சம் பேரைக் கொலை செய்தான்!!
ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் செயற்கைப் பஞ்சத்தை இந்தியாவில் 1943 ல் உருவாக்கி கிட்டத்தட்ட 70லட்சம் பேரைக் கொலை செய்தான்!!
கொண்டாரெட்டி, மலையாளி, மலையக்கண்டி, ஊராளி, காட்டு நாயக்கர், கம்மாரா, கொரகா, மலை அரையர், குடியா, கண்யான், இது போல இந்த பட்டியலில் உள்ள 36 சாதிகளில் 20 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள் உள்ளனர்.
SC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 76.
ஆதி ஆந்திரர், ஆதி கர்நாடகர், அஜிலா, பைரா, ராணேயர், பஞ்சமா, நாயாடி, டோம், ஜக்கலி, பகூடா இது போல இந்த பட்டியலில் உள்ள 76 சாதிகளில் 40 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.
BC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 138.
பில்லவா, செளத்திரி, கெளடா, ஜெட்டி, கன்னடிய நாயுடு, கேரள முதலி, மராட்டியர், ஒதியா, ரெட்டி, சாலிவாகனா, லம்பாடி, இது போல இந்த பட்டியலில் உள்ள 138 சாதிகளில் 65 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.
உலகில் எந்த இராணுவத்தில் உண்டு இத்தகைய சிறப்புகள்??
1- தமிழீழ காவல்துறை
2-குற்றத் தடுப்புக் காவல்துறை 3- குற்றப் புலனாய்வுப் பிரிவு. 4- தமிழீழ வைப்பகம். 5- தமிழர் புனர்வாழ்வுக் கழகம். 6- தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம். 7- சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
8- கிராமிய அபிவிருத்தி வங்கி. 9- அனைத்துலகச் செயலகம். 10- நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்) 11- சுங்க வரித்துறை. 12- தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம். 13- அரசறிவியற் கல்லூரி. 14- வன வளத்துறை. 15- தமிழீழ நிதித்துறை.
16- தமிழீழ நீதித்துறை, நீதிமன்றங்கள். 17- கலை பண்பாட்டுக்கழகம்.
18 மருத்துவப் பிரிவு. 19- திலீபன் சிறப்பு மருத்துவமனை. 20- பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை. 21- மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு. 22- சுகாதாரப் பிரிவு.
23-ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.