விவசாயிகளின் கோரிக்கைகளில் முதன்மையானது - குறைந்தபட்ச ஆதார விலை
இதுநாள் வரையில் அரசு மண்டிகளின் மூலம் ஏலம் விடப்படும் விளைபொருட்களுக்கு இந்த பாதுகாப்பு இருந்தது. ஆனால் புதிய வேளாண் சட்டங்களில் Minimum Support Price (MSP) என்கிற வரியே இல்லை!
APMC எனப்படும் அரசு மண்டிகளில் எத்தனையோ குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அனைத்து விவசாயிகளும் APMC மூலம் விற்பனை செய்வது இல்லைதான்.
ஆனாலும், அந்த குறைபாடுகளை சரி செய்து, அனைத்து விவசாயிகளும் APMC மூலம் விற்பனை செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை
APMC அமைப்பை மொத்தமாக அகற்றி அந்த இடத்தில் தனியாரை அமர்த்த வேண்டும் என்று எந்த விவசாயியும் கேட்கவில்லை.
ஆனால் பாஜக அரசோ, தங்களது பொறுப்பை மொத்தமாக கை கழுவி விட்டு, தனியார் நிறுவனங்கள் ஒரு parallel APMC துவங்கலாம் என்று கூறுகிறது.
அரசு மண்டிகளில் இருக்கும் 2% வரி அங்கே இருக்காது.
இன்றைக்கு எப்படி ஜியோ நிறுவனம் முதலில் இலவசமாகவும் பின்னர் குறைந்த விலையிலும் தொலைபேசி சேவையை வழங்கி BSNL உட்பட அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூடும் நிலைக்கு கொண்டு வந்ததோ அதே நிலை அரசு மண்டிகளுக்கும் வரும்.
தனியார் மண்டிகள் மட்டுமே என்ற நிலை வந்தால், முதல் டுவீட்டில் சொன்னது போல, அங்கே MSP என்கிற பாதுகாப்பு இருக்காது. காரணம், புதிய வேளாண் சட்டத்தில் அது கூறப்படவே இல்லை. அதன் பிறகு அந்த தனியார் நிறுவனங்கள் வைத்ததுதான் விலை!
இதை எதிர்த்துதான் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தனியார் நடத்தும் மண்டிகளிலும் குறைந்த பட்ச ஆதார விலைக்கு கீழே விற்பனை செய்யக்கூடாது என்று ஒரு வரியை புதிய வேளாண் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று விவசாயிகள் எவ்வளவோ மன்றாடி கேட்டும், அதை பாஜக அரசு மறுப்பதிலேயே அதன் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.
பாஜகவின் திட்டம், விவசாயிகளுக்கு நடுவே விற்பனை போட்டியை உருவாக்கி, விளைபொருட்களின் விலையை அதல பாதாளத்துக்கு தள்ளுவது.
விவசாயிகள் அவர்களாகவே நிலத்தை பெரும் முதலாளிகளுக்கு விற்று வேறு தொழிலுக்கு செல்வார்கள்.
இதற்கு நடுவே, திமுக தனது 2016 தேர்தல் அறிக்கையில், அரசே விவசாயிகளோடு இணைந்து ஒரு பரிவர்த்தனை அமைப்பு துவங்கும் என்று கூறியதை திரித்து, திமுகவும் APMCக்களை தனியாருக்கு அளிப்போம் என்று சொன்னதாக பாஜக அவதூறு பரப்பி வருகிறது
தமிழை பயிற்று மொழியாக தேர்ந்தெடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து, 2010ஆம் ஆண்டு, கலைஞர் தலைமையிலான திமுக அரசு பிறப்பித்த அரசாணை
+2 வரைக்கும் ஆங்கில வழியில் படித்து விட்டு, பட்டப்படிப்பை மட்டும் ஒரு சிலர் தமிழ் வழியில் படித்து அந்த 20% இட ஒதுக்கீட்டை பெற்றார்கள் என்று கூறி, இந்த சட்ட திருத்தத்தை அதிமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. எத்தனை பேர் அப்படி செய்தார்கள் என்ற புள்ளி விவரம் எதுவும் கொடுத்தார்களா?
இருந்தாலும் இந்த சட்ட திருத்தம் வரவேற்கப்பட வேண்டிய திருத்தம்தான். நாங்கள்தான் இதை கொண்டு வந்தோம் என்று அடிமைகள் இன்னும் சில நாளில் பொய் பிரச்சாரத்தை துவங்குவார்கள். அப்போது திருப்பி அடிக்க மேலே குறிப்பிட்ட தகவல் பயன்படும்.
"உடம்புல ஏகப்பட்ட வியாதி இருக்குது. அதனால தண்டனை குடுக்கும் போது கொஞ்சம் பார்த்து குடுங்க"ன்னு நீதிபதி குன்கா கால்ல விழுந்து கதறி அழுத அந்த A1 யாருன்னு தெரியுமா அடிமைகளே!
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு MDM குட்கா நிறுவனம், மாதம் 14 இலட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர் மாதவ ராவ் வருமான வரித்துறைக்கு அளித்த ஒப்புதல் வாக்குமூலம்!!
2020ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்ததற்கும் காரணம் இருக்கிறது
2019ஆம் ஆண்டு பாஜக அரசு ஒரு circular அனுப்புகிறது. அதில் உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீட்டில் இருக்கும் வழக்குகளில் அபராத தொகை 1 கோடிக்கு கீழே உள்ள வழக்குகளை தொடர வேண்டாம் என்று அறிவிக்கிறது
அந்த சுற்றறிக்கையை காரணம் காட்டி, ரஜினி மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக நீதிமன்றத்தில் வருமான வரித்துறை கூறியதால், வழக்கு குழி தோண்டி புதைக்கப்படுகிறது.
6 ஆண்டுகளாக விசாரணைக்கு வராத வழக்கு, இப்போது விசாரணைக்கு வந்தது இதற்காகத்தான்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் ஏன் தமிழ் அலுவல் மொழியாக இல்லை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அறிமுகப்படுத்த, 2006ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சட்டசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்….
குற்றவியல் நீதிமன்றங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய 1969ஆம் ஆண்டு முதல், தமிழ் மொழியை பயன்படுத்தலாம் என்று அரசாணை எண்: 2807 மூலம் அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது.
தமிழக அரசின் அதிகார எல்லையில் இருப்பதால் குற்றவியல் நீதிமன்றங்களில் இதை ஒரு அரசாணை மூலம் எளிதாக செய்ய முடிந்தது.