பாஜக ஆட்சியிலும், முந்தைய UPA ஆட்சியிலும் ஆதார விலை எவ்வளவு உயர்த்தப்பட்டது என்ற ஒப்பீடு (Based on Govt data)

நெல் விலை - UPA அரசு 10 ஆண்டுகளில் 138% உயர்த்தியது. சராசரியாக 13.8%

ஆனால் பாஜக அரசு, 6 ஆண்டுகளில் 38.5% மட்டுமே உயர்த்தியது. சராசரியாக 6.4%

rbidocs.rbi.org.in/rdocs/Publicat…
கோதுமையின் குறைந்த பட்ச ஆதார விலை (MSP)

UPA அரசு 10 ஆண்டுகளில் 122% உயர்த்தியது. சராசரியாக 12.2%

ஆனால் பாஜக அரசு, 5 ஆண்டுகளில் 31.4% மட்டுமே உயர்த்தியது. சராசரியாக 6.2%
துவரம் பருப்பின் குறைந்த பட்ச ஆதார விலை (MSP)

UPA அரசு 10 ஆண்டுகளில் 216% உயர்த்தியது. சராசரியாக 21.6%

ஆனால் பாஜக அரசு, 6 ஆண்டுகளில் 34.8% மட்டுமே உயர்த்தியது. சராசரியாக 5.8%
மீதம் இருக்கிற விளைபொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தாலும் இதே கதைதான்.

விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக்குவோம் என்று வெறும் வாயை மெல்லும் பாஜக அரசு செயலில் காட்டுவது இதைத்தான்!
நெல் விலை குறித்த பதிவில் Rs. 505/- என்று டைப் செய்வதற்கு பதிலாக Rs. 550/- என்று டைப் செய்து விட்டேன். சராசரி குறித்த கணக்கீடுகளில் எந்த மாற்றமும் இல்லை.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பூதம்

பூதம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @angry_birdu

8 Dec
தமிழை பயிற்று மொழியாக தேர்ந்தெடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து, 2010ஆம் ஆண்டு, கலைஞர் தலைமையிலான திமுக அரசு பிறப்பித்த அரசாணை

Page 233 and 234 of
stationeryprinting.tn.gov.in/extraordinary/… Image
+2 வரைக்கும் ஆங்கில வழியில் படித்து விட்டு, பட்டப்படிப்பை மட்டும் ஒரு சிலர் தமிழ் வழியில் படித்து அந்த 20% இட ஒதுக்கீட்டை பெற்றார்கள் என்று கூறி, இந்த சட்ட திருத்தத்தை அதிமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. எத்தனை பேர் அப்படி செய்தார்கள் என்ற புள்ளி விவரம் எதுவும் கொடுத்தார்களா?
இருந்தாலும் இந்த சட்ட திருத்தம் வரவேற்கப்பட வேண்டிய திருத்தம்தான். நாங்கள்தான் இதை கொண்டு வந்தோம் என்று அடிமைகள் இன்னும் சில நாளில் பொய் பிரச்சாரத்தை துவங்குவார்கள். அப்போது திருப்பி அடிக்க மேலே குறிப்பிட்ட தகவல் பயன்படும்.
Read 4 tweets
7 Dec
விவசாயிகளின் கோரிக்கைகளில் முதன்மையானது - குறைந்தபட்ச ஆதார விலை

இதுநாள் வரையில் அரசு மண்டிகளின் மூலம் ஏலம் விடப்படும் விளைபொருட்களுக்கு இந்த பாதுகாப்பு இருந்தது. ஆனால் புதிய வேளாண் சட்டங்களில் Minimum Support Price (MSP) என்கிற வரியே இல்லை!

prsindia.org/sites/default/…
APMC எனப்படும் அரசு மண்டிகளில் எத்தனையோ குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அனைத்து விவசாயிகளும் APMC மூலம் விற்பனை செய்வது இல்லைதான்.

ஆனாலும், அந்த குறைபாடுகளை சரி செய்து, அனைத்து விவசாயிகளும் APMC மூலம் விற்பனை செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை
APMC அமைப்பை மொத்தமாக அகற்றி அந்த இடத்தில் தனியாரை அமர்த்த வேண்டும் என்று எந்த விவசாயியும் கேட்கவில்லை.

ஆனால் பாஜக அரசோ, தங்களது பொறுப்பை மொத்தமாக கை கழுவி விட்டு, தனியார் நிறுவனங்கள் ஒரு parallel APMC துவங்கலாம் என்று கூறுகிறது.
Read 8 tweets
6 Dec
"உடம்புல ஏகப்பட்ட வியாதி இருக்குது. அதனால தண்டனை குடுக்கும் போது கொஞ்சம் பார்த்து குடுங்க"ன்னு நீதிபதி குன்கா கால்ல விழுந்து கதறி அழுத அந்த A1 யாருன்னு தெரியுமா அடிமைகளே!

தெரியாட்டி இந்த தீர்ப்புல 897ஆம் பக்கத்துல பார்த்து தெரிஞ்சிக்கோங்க!! thehindu.com/multimedia/arc…
ஆட்சிக்கு வர்றப்ப மொத்த சொத்து மதிப்பு 2 கோடி. அஞ்சே வருசத்துல சொத்து மதிப்பு 53 கோடி!! உன்னையெல்லாம் சும்மா விடலாமான்னு ஜட்ஜையா கேட்டாராம்.
"வழக்கை 18 வருசமா இழுத்தடிச்சிட்டாங்க யுவர் ஆனர்"னு A1 சொன்னப்ப "கோர்ட்டுக்கு வராம இழுத்தடிச்சதே நீதான்"னு பக்கத்துல இருந்த பேப்பர் வெயிட்ட தூக்கி கடுப்புல மூஞ்சிலயே வீசிட்டாராம்!
Read 4 tweets
5 Dec
விஜயபாஸ்கரின் குட்கா ஊழல் பற்றிய விவரங்கள்

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு MDM குட்கா நிறுவனம், மாதம் 14 இலட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர் மாதவ ராவ் வருமான வரித்துறைக்கு அளித்த ஒப்புதல் வாக்குமூலம்!!

mhc.tn.gov.in/judis/index.ph…
காவல் துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் என்று பலருக்கும் MDM குட்கா நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவரம்
இது எங்கே துவங்கியது என்று முதலில் பார்த்து விடுவோம்.

8.7.2016 அன்று, MDM எனும் குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியது.

அதில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் பற்றிய குறிப்புகள் இருந்தன.
Read 8 tweets
4 Dec
ரஜினி போன்ற கருப்புப்பண முதலைகளுக்கு சட்டம் எப்படி வளைந்து கொடுக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு

2014ஆம் ஆண்டு அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, 6 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை!!

வழக்கு எண் TCA 256/2014 hcservices.ecourts.gov.in/hcservices/mai…
2020ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்ததற்கும் காரணம் இருக்கிறது

2019ஆம் ஆண்டு பாஜக அரசு ஒரு circular அனுப்புகிறது. அதில் உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீட்டில் இருக்கும் வழக்குகளில் அபராத தொகை 1 கோடிக்கு கீழே உள்ள வழக்குகளை தொடர வேண்டாம் என்று அறிவிக்கிறது

incometaxindia.gov.in/communications…
அந்த சுற்றறிக்கையை காரணம் காட்டி, ரஜினி மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக நீதிமன்றத்தில் வருமான வரித்துறை கூறியதால், வழக்கு குழி தோண்டி புதைக்கப்படுகிறது.

6 ஆண்டுகளாக விசாரணைக்கு வராத வழக்கு, இப்போது விசாரணைக்கு வந்தது இதற்காகத்தான்.

mhc.tn.gov.in/judis/index.ph…
Read 9 tweets
30 Nov
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் ஏன் தமிழ் அலுவல் மொழியாக இல்லை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அறிமுகப்படுத்த, 2006ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சட்டசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்….

cms.tn.gov.in/sites/default/…
அப்போதைய தலைமை நீதிபதி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்கவில்லை.

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டு, 2007ஆம் ஆண்டு கலைஞர் அனுப்பிய கடிதத்தில் இந்த தகவல் இருக்கிறது.

cms.tn.gov.in/sites/default/…
குற்றவியல் நீதிமன்றங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய 1969ஆம் ஆண்டு முதல், தமிழ் மொழியை பயன்படுத்தலாம் என்று அரசாணை எண்: 2807 மூலம் அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசின் அதிகார எல்லையில் இருப்பதால் குற்றவியல் நீதிமன்றங்களில் இதை ஒரு அரசாணை மூலம் எளிதாக செய்ய முடிந்தது.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!