தமிழை பயிற்று மொழியாக தேர்ந்தெடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து, 2010ஆம் ஆண்டு, கலைஞர் தலைமையிலான திமுக அரசு பிறப்பித்த அரசாணை
+2 வரைக்கும் ஆங்கில வழியில் படித்து விட்டு, பட்டப்படிப்பை மட்டும் ஒரு சிலர் தமிழ் வழியில் படித்து அந்த 20% இட ஒதுக்கீட்டை பெற்றார்கள் என்று கூறி, இந்த சட்ட திருத்தத்தை அதிமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. எத்தனை பேர் அப்படி செய்தார்கள் என்ற புள்ளி விவரம் எதுவும் கொடுத்தார்களா?
இருந்தாலும் இந்த சட்ட திருத்தம் வரவேற்கப்பட வேண்டிய திருத்தம்தான். நாங்கள்தான் இதை கொண்டு வந்தோம் என்று அடிமைகள் இன்னும் சில நாளில் பொய் பிரச்சாரத்தை துவங்குவார்கள். அப்போது திருப்பி அடிக்க மேலே குறிப்பிட்ட தகவல் பயன்படும்.
முதல் டுவீட்டில் கொடுத்த லிங்க் ஓப்பன் ஆகாவிட்டால் இதை பயன் படுத்தவும்
விவசாயிகளின் கோரிக்கைகளில் முதன்மையானது - குறைந்தபட்ச ஆதார விலை
இதுநாள் வரையில் அரசு மண்டிகளின் மூலம் ஏலம் விடப்படும் விளைபொருட்களுக்கு இந்த பாதுகாப்பு இருந்தது. ஆனால் புதிய வேளாண் சட்டங்களில் Minimum Support Price (MSP) என்கிற வரியே இல்லை!
"உடம்புல ஏகப்பட்ட வியாதி இருக்குது. அதனால தண்டனை குடுக்கும் போது கொஞ்சம் பார்த்து குடுங்க"ன்னு நீதிபதி குன்கா கால்ல விழுந்து கதறி அழுத அந்த A1 யாருன்னு தெரியுமா அடிமைகளே!
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு MDM குட்கா நிறுவனம், மாதம் 14 இலட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர் மாதவ ராவ் வருமான வரித்துறைக்கு அளித்த ஒப்புதல் வாக்குமூலம்!!
2020ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்ததற்கும் காரணம் இருக்கிறது
2019ஆம் ஆண்டு பாஜக அரசு ஒரு circular அனுப்புகிறது. அதில் உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீட்டில் இருக்கும் வழக்குகளில் அபராத தொகை 1 கோடிக்கு கீழே உள்ள வழக்குகளை தொடர வேண்டாம் என்று அறிவிக்கிறது
அந்த சுற்றறிக்கையை காரணம் காட்டி, ரஜினி மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக நீதிமன்றத்தில் வருமான வரித்துறை கூறியதால், வழக்கு குழி தோண்டி புதைக்கப்படுகிறது.
6 ஆண்டுகளாக விசாரணைக்கு வராத வழக்கு, இப்போது விசாரணைக்கு வந்தது இதற்காகத்தான்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் ஏன் தமிழ் அலுவல் மொழியாக இல்லை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அறிமுகப்படுத்த, 2006ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சட்டசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்….
குற்றவியல் நீதிமன்றங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய 1969ஆம் ஆண்டு முதல், தமிழ் மொழியை பயன்படுத்தலாம் என்று அரசாணை எண்: 2807 மூலம் அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது.
தமிழக அரசின் அதிகார எல்லையில் இருப்பதால் குற்றவியல் நீதிமன்றங்களில் இதை ஒரு அரசாணை மூலம் எளிதாக செய்ய முடிந்தது.