ஆண்டிமுத்து ராசாவிற்கு இவ்வளவு சொத்துக்கள் வந்த மர்மம் என்ன?
திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அவரின் சொந்த மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படுகிறது.
இந்த மண்டலத்தில், ஜிவிகே பவர் மற்றும் இன்ப்ராஸ்டரக்சர் என்ற நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் பங்குதாரர்கள்.
இந்த மண்டலத்திற்காக 3000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்த நில கையகப்படுத்தலை எளிதாக முடித்துக் கொடுத்தார் என்பதற்காக ஆ.ராசாவுக்கு 199.6 ஏக்கர் நிலம், இந்த மண்டலத்திற்குள்ளாகவே வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலம் பதியப்போகும் நேரத்தில், தொழில் வளர்ச்சிக் கழகத்திடமிருந்து, தடையில்லா சான்று வேண்டும், அப்போதுதான் பத்திரத்தை பதிவு செய்ய முடியும் என்று சார்பதிவாளர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.
ஆனால், அவர் மிரட்டப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்தப் பத்திரப் பதிவு, தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தடையில்லா சான்று இல்லாமலேயே பதிவு செய்யப் பட்டது.
இது தவிரவும், ஊட்டியில் 300 ஏக்கர் டீ எஸ்டேட் ஆ.ராசா வாங்கியிருப்பதாக தெரிகிறது.
ஆ.ராசா சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி ஏற்ற நான்கு மாதங்கள் கழித்து தொடங்கப் பட்டதுதான் க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்.
இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் பினாமி ஏ.எம்.சாதிக் பாட்சா, சாதிக்கின் மனைவி ரேஹா பானு ஆகியோர்.
மே 2004ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட போது மொத்த முதலீடு ஒரு லட்சம். முதலீடு செய்யப்பட்ட முதல் ஆண்டிலேயே டர்ன் ஓவர் 755 கோடி ஆனது எப்படி? ஆண்டிமுத்து மவன் ராசா விளக்குவாரா?
இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கு தியாகராய நகர் கனரா வங்கியில் உள்ளது.
கனரா வங்கிக் கணக்கில் ஹாங்காங், சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்ற இடங்களிலெல்லாம் இருந்து பணம் போடப் பட்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை பார்த்தால், இந்தியாவிலேயே பெரிய தொழில் அதிபர் ஆ.ராசாதான் போலிருக்கிறது.
இந்த க்ரீன் ஹவுஸ் நிறுவனம், பெங்களுரில் டி.6, தேவதா ப்ளாஸா இரண்டாவது தளம், ரெசிடென்சி சாலை, பெங்களுரு என்ற இடத்தில் புதிய அலுவலகம் தொடங்கியது.
அடுத்ததாக சிங்கப்பூரில், எண் 04/28, செராங்கூன் ப்ளாசா, செராங்கூன் ரோடு, சிங்கப்பூர் என்ற முகவரியில் அடுத்த கிளை தொடங்கப் பட்டது.
க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனம் தொடங்கிய நான்கே மாதங்களில் ஈக்வாஸ் ரியல் எஸ்டேட்ஸ் என்ற அடுத்த நிறுவனத்தை ஆ.ராசா தனது உறவினர்கள் பெயரில் தொடங்குகிறார்.
சில நாட்கள் கழித்து, கோவை ஷெல்ட்டர்ஸ் என்ற பெயரில் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ராசாவின் உறவினர்களால் தொடங்கப் படுகிறது
இது மட்டுமல்லாமல் ஆண்டிமுத்து, சின்னப்பிள்ளை அறக்கட்டளை என்ற ஒன்று தொடங்கப்பட்டு, இன்று அந்த ட்ரஸ்டின் சொத்து 200 கோடி ரூபாய்.
பனிமலர் கல்வி அறக்கட்டளை என்ற ஒரு அறக்கட்டளை தொடங்கப் பட்டு, அதிலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
திருச்சி பெரம்பலூர் நெடுஞ்சாலையில் சாலையின் இரு மருங்கிலும் ஏறக்குறைய அனைத்து இடங்களையுமே ராசாவின் பினாமிகள் பெயரில் வளைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலத்தை வாங்கிப் போடுவதில், ராசாவுக்கு நெருக்கமான மறைந்த சாதிக் பாட்சா பெரும் பங்கு வகிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ராசாவின் சகோதரர் கலியபெருமாள் என்பவர், ஐடிசி நிறுவனத்தின் ஏஜென்சி எடுத்து நடத்திக் கொண்டிருப்பதாக தெரிகிறது. மேலும், ஹீரோ ஹோண்டா ஏஜென்சியும் எடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ராசா அவ்வளவு சம்பாதிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் திரித்துக் கூறுகின்றன என்பவர்கள், இந்தச் சொத்துக்களெல்லாம் எப்படி வந்தன என்று விளக்கினால் நல்லது.
ஆறு நிறைய தண்ணீர் சென்றாலும் நாய் நக்கி நக்கி தான் குடிக்கும்... ஏனெனில் அதன் பழக்கத்தை யாராலும் மாற்ற முடியாது. அது மாதிரி கோடி கோடியாய் வருமானம் வந்தாலும்
அவர்களால் திருடாமல் இருக்க முடியாது.. ஏனெனில் அவர்களின் பிறப்பும் வளர்ப்பும் அப்படி.
தயாநிதி மாறன் "2004, மே மாதம் முதல் 2007, மே மாதம் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, எக்ஸ்சேஞ்சையே வைத்துள்ளார்...
...என்று தயாநிதி மாறன் குடும்ப சண்டையின் காரனமாக பதவி விலகிய பின் ராஜா தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக வந்த பிறகு காற்றில் கசிய ஆரம்பித்தது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து கனிமொழியையும்.. ராசாவையும் காப்பாற்றுவதற்காக ஸ்டாலின் சொல்லி நாங்கள் தான் பெரம்பலூர் சாதிக் பாட்சா வை கொன்றோம். என்று சென்னை பிரபாகர் இன்று மீடியா முன்பாக வாக்குமூலம் அளித்தார்...🤔
இந்த வார போலி செய்திகள் 1) போதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம் இந்தியா ஆதரவு
Fact : மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் தேவைப்படும் கஞ்சாவை ஆபத்தான போதை பொருள் பட்டியலில் இருந்து நீக்க மட்டுமே இந்தியா ஆதரவு. எனவே கஞ்சாவிற்கு 100% தடை தொடரும்.
2) ஊட்டி ரயில் தனியாருக்கு விற்கப்பட்டது
Fact: தனியார் நிறுவனத்திற்கு வாடைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இது போல் நடிகர்கள் உதயநிதி, விஜய் திரைப்படங்களுக்கு மொத்த வாடகையில் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே தனியாருக்கு விற்று விட்டார்கள், விலையை ஏற்றி விட்டார்கள் என்பது போலி செய்தி.