ஆறு நிறைய தண்ணீர் சென்றாலும் நாய் நக்கி நக்கி தான் குடிக்கும்... ஏனெனில் அதன் பழக்கத்தை யாராலும் மாற்ற முடியாது. அது மாதிரி கோடி கோடியாய் வருமானம் வந்தாலும்
அவர்களால் திருடாமல் இருக்க முடியாது.. ஏனெனில் அவர்களின் பிறப்பும் வளர்ப்பும் அப்படி.
தயாநிதி மாறன் "2004, மே மாதம் முதல் 2007, மே மாதம் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, எக்ஸ்சேஞ்சையே வைத்துள்ளார்...
...என்று தயாநிதி மாறன் குடும்ப சண்டையின் காரனமாக பதவி விலகிய பின் ராஜா தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக வந்த பிறகு காற்றில் கசிய ஆரம்பித்தது.
இதை கேள்விபட்ட நம்ம ஆடிட்டர் குருமூர்த்தி ஆரம்ப கட்ட விசாரணைகளை ரகசியமாக விசாரித்து இது உண்மை என்று
தெரிந்தவுடன் சிபிஐக்கு புகார் அனுப்புகிறார். அதற்கு பதில் இல்லாமல் போகவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்.
இதை விசாரித்த உச்ச நீதி மன்றம், குருமூர்த்தி மனுவுக்குப் பதில் அளிக்கும்படி சிபிஐ க்கும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், சட்டவிரோதமாக 323 இணைப்புகள் வைத்திருந்ததாக ஆரம்பநிலை விசாரணையில் உறுதி செய்து கொண்ட சிபிஐ...
...தயாநிதி மாறன், 2007-இல் சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த பிரம்மானந்தன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி ஆகியோர் மீது முறைப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.
இந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் இல்லாமல், பிஎஸ்என்எல் பொது மேலாளர் பெயரில் வைத்திருந்தார்
தயாநிதி மாறன். தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புக்காக இப்படி ஒரு குட்டி எக்ஸ்சேஞ்சையே தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார் தயாநிதி மாறன்.
இந்த இணைப்புகளை தயாநிதி மாறன் குடும்பத்தினர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ரகசிய இணைப்புக்காக 3.4 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதாவது மாறன் போட் கிளப் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு...
...ரகசியமாக கேபிள்களையும் மாநகராட்சி சாலையில் எந்தவித அனுமதியும் இன்றி .இரவோடுஇரவாக பதித்துள்ளனர்.
என்ன கொடுமை என்றால் தயாநிதி மாறனின் வீடு உள்ள போட் கிளப் பகுதியிலிருந்து, அண்ணா சாலை வழியாக, இந்த ரகசிய இணைப்ப கேபிள்கள் போய் முடிந்த இடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்.
அங்குதான் அப்போது சன் டிவியின் தலைமையகம் இருந்துள்ளது. எனவே பேரன்களின் திருட்டுத்தனம் தாத்தாவிற்க்கும் தெரிந்திருக்கும்..
இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் - 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை.
எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.
இவை அனைத்தும் சாதாரண தொலைபேசி இணைப்புகள் கிடையாது. ஐஎஸ்டிஎன் இணைப்புகளாகும். ISDN (Integrated Services Digital Network) இணைப்புகளில் இரண்டுவகை உள்ளது. ஓன்று ISDN-BRI(Basic Rate Interface) அடுத்தது ISDN-PRI(primary rate interface) இதில் ISDN-PRI தான் உயர்ந்த தொழில் நுட்பம் உடையது.
இது தான் தயாநிதிமாறன் வீட்டில் பயன்படுத்தப்பட்டது.
மேலோட்டமாக பார்த்தால் 24371500 என்ற ஒரு தொலைபேசி நம்பரை தானே அவர் வைத்துள்ளார் என்று நம் மனதினில் தோன்றுவது இயல்பு. ஆனால் இது ஒரு ISDN-PRI கனெக்சன். இதன் வழியே 100 லிருந்து 500 தனிப்பட்ட எண்களை உபயோகித்து கொள்ளலாம்.
சன் டிவி அலுவலகத்தில் இண்டர்காம் மற்றும் அலுவலக தொலைபேசி பயன்பாடுகளுக்கு இந்த எண்கள் தான் பயன்படுத்தப்பட்டது.
இது வழக்கமா பெரிய கார்பரேட் நிறுவனத்தின் பயன்பாட்டிற்கே பயன்படுத்தப்படும். ஆனால் தயாநிதிமாறன் என்ற தனி மனிதர்க்கு ISDN-PRI அவசியமே கிடையாது.
ISDN-PRI தொழில் நுட்பம் படு விரைவாக தகவல்களைக் கொண்டு செல்லக் கூடியவை. செயற்கைக் கோள்களை விட மின்னல் வேகத்தில் தகவல்களை செலுத்தக் கூடியவை. உலகின் எந்தப் பகுதிக்கும் தகவல்களை அனுப்பினாலும் அவை அதி வேகமாக போய்ச் சேரக் கூடிய வகையிலான அதி நவீன இணைப்புகள்.
டிஜிடல் தகவல்களைக் கொண்டுnபோய்ச் சேர்க்கவும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, வீடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள்.
சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவன சானல்கள் அனைத்தும் படு பளிச்செனவும், துல்லியமான சத்தத்துடனும் செயல்பட இந்த இணைப்புகள்தான் காரணம்.
இந்த 323 இணைப்புகளில், 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக் கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து கனிமொழியையும்.. ராசாவையும் காப்பாற்றுவதற்காக ஸ்டாலின் சொல்லி நாங்கள் தான் பெரம்பலூர் சாதிக் பாட்சா வை கொன்றோம். என்று சென்னை பிரபாகர் இன்று மீடியா முன்பாக வாக்குமூலம் அளித்தார்...🤔
இந்த வார போலி செய்திகள் 1) போதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம் இந்தியா ஆதரவு
Fact : மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் தேவைப்படும் கஞ்சாவை ஆபத்தான போதை பொருள் பட்டியலில் இருந்து நீக்க மட்டுமே இந்தியா ஆதரவு. எனவே கஞ்சாவிற்கு 100% தடை தொடரும்.
2) ஊட்டி ரயில் தனியாருக்கு விற்கப்பட்டது
Fact: தனியார் நிறுவனத்திற்கு வாடைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இது போல் நடிகர்கள் உதயநிதி, விஜய் திரைப்படங்களுக்கு மொத்த வாடகையில் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே தனியாருக்கு விற்று விட்டார்கள், விலையை ஏற்றி விட்டார்கள் என்பது போலி செய்தி.