#துரோகம் vs #நம்பிக்கை_துரோகம்



#Pierrette#Fleutiaux (பியரெத் ஃப்லுசியோ) எனும் ஒரு பிரான்ஸ் எழுத்தாளர் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கம் #சின்னச்_சின்ன_வாக்கியங்கள் என்ற புத்தகத்தில் #துரோகம்_நம்பிக்கை_துரோகம் என்பது பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

இதற்கு ஒரு
கதை சொல்லியிருப்பார். இதுவும் நாம் அனைவரும் கேட்ட கதை தான். #அம்புலிமாமா படித்தவர்களுக்கு ஞாபகம் வரும். சிறுவயதில் வீட்டில் தாத்தா-பாட்டி போன்ற பெரியவர்கள் சொன்ன கதைகளில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும்.

நாம் தான் அது வெறும் பொழுதுபோக்கிற்காக சொன்ன கதை என்று அப்போது கேட்டு
விட்டு மறந்து விட்டோம்.

ஆனால் அந்த கதையை ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் எழுதி அதை தமிழாக்கம் செய்து காசு பார்க்கிறார்கள்.

இந்த செயலை என்னவென்று சொல்வது?

சரி.... விடுங்க.... இப்போது இந்த #பெரிசு... கதை சொல்றேன். கேளுங்க.... இதை படித்து விட்டு உங்கள் வீட்டில் சிறுவர்களுக்கு
அவர்களுக்கு பிடித்த வகையில் சொல்லுங்கள்.

கடைசியில் moral of the storyம் சொல்லி கொடுங்கள்

ஒரு ஊர்ல.... இல்லையில்லை...

ஒரு காட்டில் வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் திடீரென ஒருநாள் காடு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினை உருவானது.

‘காலம் காலமாக மரங்களில் நாங்கள்
கூடுகட்டி வாழ்கிறோம். அதனால் காடு எங்களுடையது’ என்றன #பறவைகள் .

#விலங்குகளோ ‘இது நாங்கள் பிறந்த இடம். காட்டினை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஆகவே காடு எங்களுடையது!’ என்றன.

இதனால் சண்டை உருவானது. ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன.

#பறவைகள் தங்கள் பக்கம் சண்டையிட வருமாறு #வௌவாலை
அழைத்தன.

வௌவாலுக்கு அதில் விருப்பமில்லை. அது சுகமாக பழங்களைத் தின்றபடியே ‘எனக்கு கண் வலி. இல்லாவிட்டால் நிச்சயம் உங்களுக்காக சண்டைபோட வருவேன்’ என்றது.

‘நன்றி நண்பனே..!’ என #பறவைகள் விடைபெற்றன.

சண்டையில் #விலங்குகள் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது.

ஒருவேளை விலங்குகள்
ஜெயித்துவிட்டால் பறவைகளைக் காட்டைவிட்டு வெளியேற்றி விடுவார்கள்.

அதற்கு முன்பாக நாம் விலங்குகளுடன் சேர்ந்து கொண்டுவிட வேண்டும் என்று வௌவால் யோசித்தது.

உடனே விலங்குகளின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ளும்படி கேட்டது.

‘நீ ஒரு பறவை. உன்னை சேர்த்துக்கொள்ள
முடியாது!’ என்றன விலங்குகள்.

‘இல்லை! சிறகுகள் இருந்தாலும் நான் பறவை இனமில்லை. குட்டி போட்டு பால் தருவதால் நானும் விலங்கினமே..’ என்றது வௌவால்.

விலங்குகளும் வௌவாலை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டன.

உடனே வௌவால் சொன்னது: ‘பறவைகளின் பலவீனம் பசி. தானியத்தைக் காட்டி பறவைகளை
எளிதாகப் பிடித்துவிடலாம். பறவைகள் குடிக்கும் நீரில் விஷத்தைக் கலந்துவிட்டால் அவற்றை மொத்தமாகக் கொன்றுவிடலாம்!’

இதைக் கேட்ட விலங்குகள் ஆரவாரம் செய்தன. சண்டை தொடர்ந்தது.

திடீரென பறவைகள் பக்கம் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது. உடனே வௌவால் பறவைகளிடம் வந்து சேர்ந்தது.
‘சகோதரா! நான் குட்டிப் போட்டு பாலூட்டினாலும் நான் விலங்கினமில்லை. நான் உங்களைப் போல பறப்பவன். விலங்குகள் என்னை மிரட்டியதால் இதுவரையில் அவர்கள் பக்கம் இருந்தேன்!’ என்றது.

இப்போது வௌவாலைப் பறவைகள் தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டன.

‘விலங்குகள் நெருப்புக்கு பயந்தவை. காட்டுக்கு தீ
வைத்துவிட்டால் விலங்குகள் மொத்தமாக அழிந்துவிடும். மிருகங்களுக்கு அறிவு கிடையாது. பறவைகள்தான் புத்திசாலிகள்..’ என்றது வௌவால்.

அதைக் கேட்டு பறவைகள் மகிழ்ச்சியில் சிறகடித்தன. சண்டை தொடர்ந்தது.



முடிவில் கடவுள் தலையிடவே சமாதானம் ஏற்பட்டது.
‘காடு அனைவருக்கும் சொந்தமானது. மின்மினிப் பூச்சிகள் அழிந்துபோனால்கூட காடு அழியத் தொடங்கி விடும். காட்டில் எவரும் பெரியவரும் இல்லை; எவரும் சிறியவரும் இல்லை’ என கடவுள் அறிவித்தார்.

அதன்படி பறவைகளும் விலங்குகளும் இணைந்து வாழ்வதற்கு சம்மதித்தன.

பறவைகளும் விலங்குகளும் ஒன்றுகூடி
கடவுளிடம் தெரிவித்தன:

‘சுயநலத்தோடு இனத்தை காட்டிக் கொடுத்த வௌவாலுக்கு இனி காட்டில் இடம் தரமுடியாது; இடிந்த கட்டிடங்களில் இருட்டில் தலைகீழாகத் தொங்கி வாழட்டும்!’

அதைக் கேட்ட கடவுள் சொன்னார்:
#துரோகிக்கு_இதுதான்_சரியான_தண்டனை!’

விலங்குகளும் பறவைகளும் ஒன்றுசேர்ந்து வௌவாலைக்
காட்டை விட்டு வெளியே துரத்தின.

இனத்தைக் காட்டிக் கொடுத்து சுகமாக வாழ நினைத்தால், கடைசியில் நாமே விரட்டியடிக்கப்படுவோம் என்பதையே இக்கதை உணர்த்துகிறது.

துரோகத்தால் வெளியேற்றப்பட்ட வௌவால்கள் இடிந்த கோயில்களிலும் கட்டிடங்களிலும் வாழ்கின்றன.

ஆனால் நம் உலகிலோ இனம், மொழி,
நிலத்துக்குத் துரோகம் செய்பவர்கள் அதிகாரத்திலும் செல்வச் செழிப்பிலும் திளைக்கிறார்கள். அவர்களின் துரோகம் விருதுகளால் அங்கீகரிக்கப்படுகிறது. துரோகம் செய்வது தனித் திறமையாகக் கருதப்படுகிறது.

பாவம் எளிய மனிதர்கள்! எவரை நம்புவது? எதன் மீது நம்பிக்கை வைப்பது? ஏன் நம்பிக்கை துரோகம்
இழைக்கப்படுகிறது… என்பதெல்லாம் அறியாமல் தடுமாறுகிறார்கள்.

வரலாறு துரோகிகளை ஒருபோதும் மன்னிப்பதில்லை. அத்துடன் துரோகத்துக்குத் துணை போனவர்களையும் அடையாளம் காட்ட மறப்பதில்லை. வரலாறு கற்றுத் தரும் இப்பாடத்தை நாம் ஏன் எப்போதும் மறந்து போகிறோம்?

இந்த கதையில் வரும் வௌவாலைப் போன்ற சில மனிதர்களுக்கும் இயக்கங்களுக்கும் வௌவாலுக்கு கொடுத்த தண்டனை போல நாடு கடத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

@VasaviNarayanan @aarjeekaykannan @naturaize @par_the_nomad @raaga31280 @iamSri_Sri @rprabhu @Bhairavinachiya @CVeeraraghavan

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with srinivasan1904

srinivasan1904 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

12 Dec
பரம்பரை வெத்தக் குழம்பு
(மனிதனின் மனோநிலை)

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு..

ருக்கு (என் மனைவி) ... எனக்கு மிகவும் பிடித்த வெத்தக் குழம்பு செஞ்சுட்டு எனக்காக காத்துண்டு இருந்தாள். எனக்கு வெத்தக் குழம்பு ரொம்ப பிடிக்கும்னு பாப்பா (என் அம்மாவை அப்படித்தான் அழைப்போம்) சொன்னதால்
இன்னும் ருசியாக செய்வது எப்படினு அவளோட அப்பாட்ட (என் மாமனார் பிரசித்தி பெற்ற சமையல் வல்லுனர்) கேட்டு தெரிஞ்சுண்டு மிகவும் ருசியாக வெத்தக் குழம்பு செய்வதில் கைதேர்ந்தவள் ஆகிவிட்டாள்.

ஆனால் என்ன செய்வது... அவள் ஒவ்வொருவாட்டியும் வெத்தக் குழம்பு எவ்வளவு ருசியாக செஞ்சாலும்... எனக்கு
பாப்பா செஞ்ச வெத்தக் குழம்பு தான் ஞாபகம் வரும்.

அதனால் ருக்கு செய்த வெத்தக் குழம்பை பாராட்டினதே இல்லை. ஒரு 'கட்டு' கட்டினாலும் ஏதோ ஒண்ணு கொறையறது மாதிரியே இருக்கும். அதனால #பாராட்டினதே_இல்லை.

ஒரு நாள் நானும் ருக்குவும் திருவல்லிக்கேணிலேந்து சென்னை திருவொற்றியூர் தாண்டி பாப்பா
Read 15 tweets
9 Dec
This isn't written by me ,but it's a good read.
Liked it.Hence,sharing.

My Mom did not sleep. She felt exhausted. She was irritable, grumpy, and bitter. She was always sick until one day, suddenly, she changed!

One day my dad said to her:

- I've been looking for a job for
three months and I haven't found anything, I'm going to have a few beers with friends.

My mom replied:
- It's okay.

My brother said to her:
- Mom, I'm doing poorly in all subjects at the University.

My mom replied:
- Okay, you will recover, and if you don't, well, you
repeat the semester, but you pay the tuition.

My sister said to her:
- Mom, I smashed the car.

My mom replied:
- Okay daughter, take it to the car shop & find how to pay and while they fix it, get around by bus or subway.

Her daughter-in-law said to her:
- Mother-in-law, I
Read 15 tweets
9 Dec
Forwarded as received in whatsapp:

"The Chinese Biology Laboratory in Wuhan is owned by Glaxo!

Which happens to be owned by Pfizer! (the one who makes the vaccine!)

Managed by Black Rock's finances.

Who accidentally manages finances of the Open Foundation (Soros Foundation!)
Which happens to serve the French AXA!

And they happen to own the German company Winterthur.

Which accidentally built a Chinese lab in Wuhan!

It was accidentally bought by the German Allianz, and Vanguard has it as a shareholder.
A Black Rock shareholder who controls central banks and manages approximately one-third of global investment capital.

Which is, by the way, the main shareholder of Microsoft, owned by Bill Gates who happens to be a shareholder of PFIZER (which sells the miracle vaccine) and is
Read 4 tweets
2 Dec
Train No.12027 - Shadabdhi Express

Train No.12027 - Shadabdhi Express from Chennai MGR Central to KSR Bangalore will shortly depart from Platform No.7.



I was sitting in the window seat allotted to me. The whole train looked almost half empty.
My seat was in the middle of the coach wherein a wooden table is fixed for the passengers' use. You'll not be able to fold the same as in other seats.

As the train was nearing Basin Bridge station, a man, aged about late 30s, walked in & occupied the aisle seat.
On the other side in the same row, 2 girls (youngsters) (probably IT employees working in Bangalore) were sitting.

Please don't mistake me. Nowadays, I observe people around me to know about people's characteristics.
Read 34 tweets
1 Dec
Extracted from FB:
சமஸ்கிருதத்தை கைவிட வேண்டும்....சரிங்க டாக்டர்....

உங்க பேரு ராம்தாஸ்.. சமஸ்கிருதம்....

உங்க மருமகள் பெயர் செளம்யா சமஸ்கிருதம்....

உங்க பேத்தி பெயர்கள் சம்யுக்தா.... சங்கமித்ரா... சஞ்சு நிதா... பூரா சமஸ்கிருதம்....

நீங்க பெயரைக் கூட தமிழ்ல வைக்கமாட்டீங்க
....உங்க பேத்திகள் படிச்சது டெல்லியில் உள்ள டூன் ஸ்கூல்....அதுல ஏறத்தாழ 10 மொழிக்கு மேல சொல்லித் தர்றாங்க.....அதுல எத்தனை மொழிய உங்க பேத்திக கற்று புலமை பெற்றுள்ளனர்?....

ஆனா அரசு பள்ளியில படிக்கற நாங்க எதுவும் புதுசா....கத்துக்கக் கூடாது....உங்க குடும்பம் கத்துக்கலாம்.....
ஆனா நாங்க சமஸ்கிருதத்தை படிக்க, கேட்க, எழுத,TVக்களில் கேட்கக்கூடாது....

மனசத் தொட்டு சொல்லுங்க டாக்டர். நீங்க பொதிகை TV பாக்கறீங்களா?....

கேபிளுக்கே வழியில்லாத ஏழைங்க தானே பாக்கறாங்க....

என்ன நியாயம் சார்?....

உங்களை நம்பி வந்த 100% தொண்டர்கள் ... நீங்கள் அடிக்கடி மாறும்
Read 4 tweets
28 Nov
#பருப்பு_சாதமும் #வெத்த_குழம்பும்

Odd-man out

This is only a small episode of a big story.

பயப்பட வேண்டாம். நான் எந்தவிதமான செய்முறை விளக்கமும் எழுத மாட்டேன்.

நான் ஒரு #சாப்பாட்டு_ராமனே தவிர #போஜன_நளமகராஜன் இல்லை

சமூகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்த கதை போல சொல்லப் போகிறேன்.
#யார்_மிகச்சிறந்த_பக்திமான் என்ற கதையில் நாரதரின் செருக்கை அழித்த திருமாலின் திருவிளையாடலை தற்போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் கொஞ்சம் மாற்றம் செய்து அதை I won't go to the temple என்ற தலைப்பில் Englishல் எழுதி இங்கே பதிவு செய்து இருந்தேன்.

ஒரே நாளில் இதைப்படித்து ரசித்தவர்கள்
300க்கும் மேற்பட்டோர். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் (Englishல் எழுதியதாலோ என்னவோ) தமிழர் அல்லாதவர்களும் படித்து நேர்மறை எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

சரி... அதற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்?
Read 30 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!