அரசியல் கட்சிகளின் வரையறை

வளர்ந்த நாடுகளில் இரு கட்சி ஆட்சி முறையே உள்ளது.

இரு கட்சி முறையில் ஒரு கட்சியானது ஆளும்கட்சியாக இருக்கும். மற்றொன்று எதிர்கட்சியாக காணப்படும்.
1/19
இம்முறையில் ஆளும் கட்சியாக உள்ள கட்சி அரசாங்கத்தினை நடத்துகிறது.

ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் குறைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி எதிர் கட்சி அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.
2/19
இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றில் இரு கட்சி முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
3/19
பிரிட்டனில் தொழிலாளர்கள் கட்சி மற்றும் பழமைவாத கட்சி ( Conservative Party) என இரு கட்சிகள் இயங்கி வருகின்றன.
4/19
இரு கட்சி முறையின் சிறப்புகள்

1இரு கட்சி முறையில் இரண்டு கட்சிகள் மட்டும் இருப்பதால் மக்கள் குழப்பமின்றி ஆளும் கட்சியை முறையாகத் தேர்ந்தெடுப்பது என்பத எளிதாக உள்ளது.

2எதிர் கட்சி எப்போதும் விழிப்புடன் செயல்பட்டு ஆளும் கட்சியினை வழிநடத்துகிறது.
5/19
இரு கட்சி முறையின் குறைபாடுகள்

1இரு கட்சி முறையில் காணப்படும் இரண்டு கட்சிகளின் செயற்பாடுகளும் மோசமாக இருக்குமேயானால், மூன்றாவது கட்சியைத் தேர்வு செய்வதற்கு வாய்ப்பில்லை.
6/19
2இவ்விரண்டு கட்சிகளும் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட தவறான உடன்படிக்கைகளினால் மக்கள் முட்டாளாக்கப்படும் அவல நிலைக்கு ஆட்படுவர்.

அதன்மூலம் இரு கட்சிகளின் மீதான தவறுகள் மற்றும் ஊழல்கள் ஆகியவற்றை மூடிமறைக்க வழிகள் மிகுதியாக உள்ளன.
7/19
பல கட்சி முறை

இரண்டிற்கு மேற்பட்ட கட்சிகள் கொண்ட ஆட்சிமுறைக்குப் பல கட்சி முறை எனப்படும்.

பல கட்சி முறையானது இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
8/19
பல கட்சி முறையின் நிறைகள்

1பல கட்சி முறையில் பல கட்சிகள் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றி அரசாங்கத்தை நிர்மாணிக்க முனையும்.

அதற்காக, பல்வேறு நல்ல திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்திடும் தேர்தல் பரப்புரை அறிக்கைகளை மக்கள் மத்தியில் முன்வைக்கும்.
9/19
2பல கட்சி முறையில் புதிய கருத்துகளையும் புதிய நோக்கில் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்கொண்ட புதிய தலைவர்களையும் தேர்வு செய்ய மக்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
10/19
பல கட்சி முறையின் குறைகள்

1பல கட்சி முறையில் ஊழல் மிகுந்து காணப்படும்.
2மாநில, மாகாண உணர்வுகள் செல்வாக்குப் பெறும்.
3ஒரு சார்புடைமை சிந்தனைகள் மிகும்.
11/19
4பல கட்சி முறையில் ஆளும் கட்சி மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், தம் ஆட்சியாளர்களின் நன்மைகளைப் பெரிதென கருத வாய்ப்புண்டு.

5பெரும்பான்மை பலமிழந்து காணப்படும் ஆளும் கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டு, பிற கட்சி உறுப்பினர்களைக் கவர்ந்து அரசியல் அநாகரிகம் மேலோங்கும்.
12/19
6கட்சித் தாவல் நடவடிக்கைகளால் பல கட்சி முறையில் அரசாங்கம் நிலைத்தன்மை அற்றதாக உருமாறி பல்வேறு ஊறுகள் உண்டாகும்.
13/19
அரசியல் கட்சியின் அடிப்படைகள்

ஒவ்வொரு அரசியல் கட்சியும் கட்டுக்கோப்பையும் தனித்துவத்தையும் பெற்றிருத்தல் இன்றியமையாதது ஆகும். அதுபோல், பின்வரும் அடிப்படைகள் அரசியல் கட்சிகளுக்குத் தேவையான ஒன்றாகும். அவையாவன:
14/19
1ஓர் அரசியல் கட்சிக்கு, ஒரு தலைமை என்பது அவசியம். கட்சியை வழிநடத்தும் பொறுப்பு தலைவரையே சாரும்.

2அரசியல் கட்சியின் கட்டமைப்பு பின் வருவனவற்றை உள்ளடக்கியது.
15/19
1கட்சிக்கென கொள்கையும், கோட்பாடுகளும் வரையறை செய்திருத்தல்.

2கட்சிக்கான வேலைத் திட்டங்கள் அல்லது செயல்முறைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டிருத்தல்.
16/19
3அத்திட்டங்களில் நீண்ட கால மற்றும் குறுகிய காலத்திட்டங்கள் அமைக்கப்பட்டிருத்தல் அவசியம். திட்டங்களைச் செவ்வனே நடைமுறைப்படுத்திட சில உத்திகள் மற்றும் அணுகுமுறைகள் தேவை.
17/19
1ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு நிறுவன அமைப்பைத் தோற்றுவிப்பதும் வளர்ப்பதும் இன்றியமையாதவையாகும்.

2அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வாயிலாகவும், சொற்பொழிவுகள், உரைகள், வெளியீடுகள் மூலமாகவும் கட்சி மற்றும் அதன் கொள்கைகள் பரப்புரை செய்யப்படுதல் அவசியம்.
18/19
3சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் தத்தம் கட்சி உறுப்பினர்களைப் பிரிதிநிதித்துவப்படுத்துதல் அரசியல் கட்சியின் முக்கியப் பணியாகும்.
19/19

நன்றி: விக்கிபீடியா தமிழ்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சோமா Soma

சோமா Soma Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Soma70317358

17 Dec
Why English as the Universal Language of Science Is a Problem for Research

Where do most of the researchers and inventors around the world appear today? What is their mother tongue?
1/8
The obstacle to many researches in our country is that many of the documents and research articles that they need to do research are available in English only 80-90%.

Can't anyone read and understand research articles so easily? Why is that?
2/8
Today most scientific papers are published in English. What is lost when other languages ​​leave?

Plagiarism in research articles Should not be. What is Plagiarism?
3/8
Read 9 tweets
3 Dec
தமிழ் மொழிக்கு கிரந்த எழுத்துக்களான, ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஶ்ரீ தேவையற்றது, எப்படி, ஏன்?

தமிழில் ba, bha,ga, gha,dha போன்ற ஒலி உடைய கிரந்த எழுத்துக்கள் போன்று தமிழில் இல்லை, அவற்றை ஏற்றுக் கொள்வதால் தமிழ் மேலும் வளரும் என்கிறார்கள்.
1/12
ஒரு மொழி சிதைந்து காணாமல் போவதற்கு அவை பிறமொழி சொற்களை ஏற்றுக் கொள்வது காரணியாக அமைவதில்லை. எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதாலேயே அவ்வாறு அமைந்துவிடுகிறது.
2/12
கிரந்த எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதால் புதிய சொற்களையோ, அல்லது பழைய சொற்களையோ புதுப்பித்து பயன்படுத்த முடியாமல் பிறமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்தும் நிலை வந்துவிடும்.
3/12
Read 13 tweets
29 Nov
நமது இந்திய தண்டனை சட்டங்கள் காலத்துக்கு ஒவ்வாதவை. இப் பொழுதுள்ள குற்ற நடைமுறைகளால் எல்லா குற்றவாளிகளையும், குறிப் பாக பணபலமும், அரசியல் பின்புலமும் உடைய குற்றவாளிகளை தண்டிக்கவே முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இதைவிட கேவலம் சட்டம் ஒழுங்கையும் காக்க வேண்டிய அமைப்புகள் காவல்துறையும், நீதித்துறையுமே அதை காலில் போட்டு மிதிப்பது அன்றாட நிகழ்ச்சி.
மக்கள் நீதிமன்றங்களின் மேல் உள்ள நம்பிக்கையை இழந்த கேவலமான, பலவீனமான, வலுவிழந்த நமது இந்திய குற்றவியல் சட்டங்களை அதை வலுப்படுத்த வேண்டிய, ( நீர்த்துப் போக அல்ல) சட்டத் திருத்தம் செய்வது மிகவும் அவசியம்.
Read 18 tweets
14 Nov
அன்புத் தமிழர்களே! நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:

நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...

இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்
ஏனெனில், (கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்து

*இணைய ஞாலத்தினுள், தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *

புழங்கப்படுகிறதோ அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து,
அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..

காரணம், இன்று அனைத்து முடிவுகளும் "#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்.
Read 7 tweets
2 Nov
👀மருத்துவமனைகளின் மறுபக்கம்👀

இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்

தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில்,
1/22
இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.

ஆம். *மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள்* பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் _இரண்டு மருத்துவர்கள்_ மூலம்.
2/22
மருத்துவர்கள் *அருண் காத்ரே* மற்றும் *அபய் சுக்லே*, “ _*Dissenting Diagonisis*_" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள்.

மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
3 /22
Read 23 tweets
25 Oct
சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவிற்கு உண்மை? இந்தப் புரளி எப்படித் தொடங்கியது?

1985இல் வெளியான AI Magazine எனும் செயற்கை நுண்ணறிவு குறித்த சஞ்சிகையில், அமெரிக்காவில் உள்ள ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஃபார் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்
1/15
Research Institute for Advanced Computer Science எனும் நிறுவனத்தைச் சேர்ந்த ரிக் ப்ரிக்ஸ், 'சமஸ்கிருதம் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அறிவை வெளிப்படுத்துதல்' (Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence) எனும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.
2 /15
மனிதர்கள் பயன்படுத்தும் வாக்கியக் கட்டமைப்புகளை உள்ளீடுகளாக கணினியில் செலுத்தினால் அதை அவ்வாறாகவே புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற மொழி குறித்து அந்தக் கட்டுரையில் அவர் விவரித்துள்ளார்.
3 /15
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!