டெல்லில கெஜ்ரிவால் கட்சி ஆரம்பித்தபோது அப்ப எங்க போனீங்க,அத ஏன் கேக்கல,இத ஏன் கேக்கலனு கட்சி தொடங்கும் முன் நடந்த பிரச்சனைகள சொல்லி மக்கள் அவங்கள வெறுக்கல. இப்ப 2வது தடவ ஜெய்ச்சிருக்காங்க.கட்சி ஆரம்பித்த பின்தான் எல்லாம் பேச முடியும்.அதுவரை என்ன பேசனும் என்பதற்கு வரையறை கிடையாது.
பாஜகவை எதிர்க்கும் பாய்ண்ட் களை மட்டும் ரஜினியிடம் கேட்கும் ஊடகங்கள்,நபர்கள் 2017க்கு முன் நடந்த திமுக,அதிமுக ஆட்சி குறைகளை சொல்லி ஏன் கேள்வி கேக்கல? 2ஜி,மின்வெட்டு,நில அபகரிப்பு பத்திலாம் ரஜினிகிட்ட அப்போ ஏன் கேட்கல? தினகரன் பேப்பர்,தர்மபுரி மாணவிகள் எரிப்பு,பல கலவரங்கள்..
அதிமுக திமுக ஆட்சில நடந்த பல கலவரங்கள்,அடக்குமுறைகள், சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல்,இன்னும் பலவற்றை பற்றி ரஜினி அல்லது எந்த நடிகரிடம் கேள்வி கேட்டிருக்கு ஊடகங்கள்? 1999டூ2014/வரை திமுக கூட்டணி ம.அரசுல. 15 வருசமா நடந்த எதையாவது எந்த நடிகர்கள்ட்ட மைக்க நீட்டி கேட்ருக்கீங்க?
தான் ஆட்சில இல்ல,தன் பங்களிப்பு ம.அரசுலயும் இல்ல அதனால மத்திய மாநில அரசை திட்டுனாதான் ஓட்டு கிடைக்கும். தன்னை மாதிரி திட்டலன்னா அவன் ஆளுங்கட்சி ஆதரவாளர்னு பொய் பரப்புரதுனு தான் உபிஸ் இருக்காங்க. 99-2014 வரை எந்தெந்த விசயங்களில் திமுக ம.அரசை கண்டித்து பேசியிருக்கு?
கடைசி வரை இருந்துட்டு... வேற கூட்டணி கிடைத்தவுடன், கழட்டிவிட முடிவுசெய்தபின் விலகி என்னபயன்? நீட் GOவை ரத்து செய்ய நிர்பந்திக்காமல் கோர்ட்டுக்கு போய் ஜெய்ச்சது சாதனையா?கூட்டணி ஆட்சி நடத்திய காங் ஐயே எதுவும் கேட்கல. மெஜாரிட்டியோட இருக்கும் பாஜகவை அதிமுக கேக்கலனு சொல்ரீங்க உபிஸ்.
15 வருசம் கூட்டணில இருக்குறப்ப ம.அரசை கண்டிக்காமல், எதயும் தடுக்காமல், பல வரைவுகள், தனியார் மயமாக்கல், மானிய ரத்துநு எதிர்கால ரோட் மேப் களை போடவிட்டுட்டு... இப்ப வந்து ரஜினி குரல் கொடுக்கலநு சொல்ல வைக்கிற/சொல்ற உபிக்களே... உங்கள நீங்களே திருப்பி பாருங்க... மக்கள் மறக்க மாட்டாங்க.
99டூ 2014 வரை கூட்டணி அரசுல இருந்தும் திமுகவால் எதுவும் செய்ய முடியல/செய்யல பல விசயங்களில். இத்தனை வருசமா cm,mp,MLA, டாப் டூ பாட்டம் அரசாங்கம் திமுக,அதிமுகவும் கூட்டணி கட்சிகளுமே. ரஜினிக்கு கட்சி கிடையாது. அதுக்கெல்லாம் ரஜினி குரல் கொடுக்கலனு சொல்ரது மக்களை ஏமாற்றும் செயல்.
திமுக இருக்கும் ம.அரசு,இல்லாத ம.அரசு,திமுக இருக்கும்,இல்லாத மாநில அரசு,அதிமுக மாநில அரசு, தொடர்ந்து அதிமுக,திமுக மைனாரிட்டி,மெஜாரிட்டிநு எல்லாத்தையும் பாத்தாச்சு.... ஒருதடவை மாற்று அரசியலை முன்னெடுக்கும் ரஜினிக்கு வாய்ப்பளித்தால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்..
மீண்டும் இலவசத்தையும் கடன் தள்ளுபடியையும் சொல்லி ஏமாற்றும் கட்சிகளை ஒதுக்கி ரஜினி என்ன சொல்கிறார், செய்ய போகிறார் என பார்க்கலாம்... தமிழகம் கல்வியில் டாப். சாதி,மத சார்பற்ற மாநிலம் தான்.5 வருசத்துல இதவடக்க உள்ள மாதிரி மாத்திருவார் ரஜினினு சொல்ரது மக்களை கேவலமாக நினைக்கும் எண்ணம்.
மக்களுக்கு ஏதும் செய்தாரா... அந்த பிரச்சனைல, இந்த பிரச்சனைல குரல் கொடுத்தாரா.. அப்போ ஏன் பேசல,வரல...
இப்டியான கேள்விகள ரஜினியை நோக்கி கேட்பதே வெற்றிடம் இருப்பதற்கான உறுதியையும், அதைவிட ரஜினிக்கான தேவையையும் உறுதிப்படுத்துகிறார்கள்.
மக்களுக்கு நல்லது செய்ய எண்ணமிருந்தால் போதும்.
மக்களுக்கு நல்லது செய்ய எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம். கவுன்சிலர் முதல் MLA,MP வரை பெரும்பாலான வேட்பாளர்கள் அதுவரை கட்சில,தொகுதில, ஏரியால இல்லாம புதுசா நிறுத்துறாங்க.அவங்கள யாரும் இப்ப வரல,அப்ப பேசலனு கேக்குறது இல்ல. பலர் ஜெய்ச்சிருக்காங்க.
சென்னைல மட்டுமே இருக்குர நடிகர்கள்& பலரை திமுக,அதிமுக கட்சிகள் வேற தொகுதி வேட்பாளராக போடும்போது எவனும் ஏதும் பேசல.ரஜினி கட்சினு சொன்னதும் 6 மாசத்தில வந்தா முதல்வர் ஆக்கனுமானு கேக்குறானுக. இந்த கட்சிகள்எந்த அடிப்படைல திடீர் திடீர்னு நடிகர்க்கும்,வாரிசுகளுக்கும் சீட்,பதவி தந்தீங்க?
கட்சிகளின் தவறுக்காக திராவிட கட்சிகள் என சித்தாந்தத்தை குறைசொல்வது, சாடுவது தவிர்க்கப்பட வேண்டும்....
கட்சியை,கட்சி தலைமையை, தலைவர்களின் செயல்களை குறைகூறுங்கள்... கருத்தியல்,அரசியல் ரீதியாக...
மதம் வேறு... ஆன்மீகம் வேறு...
திராவிட கட்சிகள் வேறு..
திராவிடம் வேறு...
இந்த கட்சிகளின் நோக்கம் பெரியாரை,அம்பேத்கரை, திராவிடத்தை தங்கள் எதிர்க்கட்சியினர் திட்ட வேண்டும் என்பதே... அதற்காகவே அதை தூக்கிப்பிடிப்பார்கள், மதத்தை திட்டுவார்கள்.. தனிப்பட்டவகையில் திட்டுவார்கள். அதனால் வெறுப்பு அரசியலை கைவிட்டு எல்லாவற்றிலும் உள்ள நல்லதை மட்டுமே பேசுவோம்.
பெரியார்,அம்பேத்கர் பேசியதின் நோக்கத்தை திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களிடம் சரியாக எடுத்து சென்றிருந்தால் சாதி வேறுபாடுகள் ஒழிந்திருக்கும்.சாதி வேறுபாட்டை விட்டு,கடவுள் மறுப்பை பேசுனத மட்டும் மக்களிடம் பேசி பிராமண வெறுப்பை பிரதானமாக்கி அரசியல் செய்ததே வெறுப்புக்கு காரணம்.
ஒரு நோய் இருக்குன்னா அத சரிசெய்யும் வழிகள்:
1.சாப்பாடு மூலம்..
2.வீட்டு வைத்தியம்..
3.சித்தா,ஆயுர்வேதா..
4.அலோபதி-மருந்து,மாத்திரை,ஊசி..
5.இறுதியாக ஆப்பரேசன்.
ரஜினி சொல்லிருக்கிற மாற்று அரசியல் பாதை இதுதான்.. நோயை குணப்படுத்த முடிவெடுத்த ரஜினி ஆப்பரேசன் செய்யவும் தயங்கமாட்டார்.
ரஜினி எதார்த்தத்தை உணர்ந்து உண்மையாக மக்களை மாற்ற எண்ணி இத சொல்லியிருக்கிறார். அரசியல்வாதிகள் பாணி மாறனும்னா மக்கள் முதலில் மாறனும்.. கேரள மக்கள் அப்டி இருப்பதால்தான் அரசியல்வாதிகள் அப்டி இருக்காங்க... அதை நோக்கி மக்களை திருப்ப முயற்சிக்கிறார் ரஜினி.
சும்மா ... ஜெய்த்தோம்...
இலவசம் கொடுத்தோம்...கடன் தள்ளுபடி கொடுத்தோம்... பந்தாவா வலம் வந்தோம், தெரிஞ்சவனுக்கு வேலை, காண்ட்ராக்ட், கமிசன், வசைபாடுனோம்னு மக்களை ஒரேமாதிரி வைத்திருக்கும் அரசியல்வாதியா இருக்க ரஜினி விரும்பல... இதுதான் முக்கிய நோக்கம்...
பார்ப்பனீயம் ஆபத்து-பிரசாந்த் கிஷோருடன் இணைவோம். திராவிடம் ஆபத்துனு சொல்ர பார்ப்பனீயம் திமுக ஜெய்க்க உதவும்.பெரியாரை எதிர்ப்பர், ராஜாஜியுடன் சேர்வர்,காமராஜரை எதிர்ப்பர், பாஜகவோடு சேருவர், சாதிகட்சிகளோடு கூட்டணி அமைக்கும்,ஆட்சிக்காக யாருடனும் சேரும்/விலகும். எல்லாம் ராஜதந்திரமாம்.
50 ஆண்டு கட்சி மொழி, சித்தாந்தத்துக்காக போராடிய கட்சி கார்ப்பரேட் கம்பெனியுடன் கைகோர்க்கிறது தேர்தல் வெற்றிக்காக. இதை எந்த மீடியாவும் பேசாது..ரஜினியை கேள்விகேட்கும் பலரும் கேட்க மாட்டார்கள்.ஏன்னா ஆல்ரெடி அவங்க ட்ரெயல் பாக்க தொடங்கியதன் சாம்பிள்தான் இவர்களின் ரஜினி எதிர்ப்பு.
திமுக & கட்சிகளின் நோக்கம் வெற்றி மட்டுமே. அதற்காக எந்த முடிவையும் எடுப்பர்.அதற்கேற்ப பேசுவர்.கொள்கைலாம் தூசு.
ஆனா ரஜினி ரசிகர்கள் கூட்டணி வைக்க தயங்கியும்,அவர் திட்னாரு அவரோடு எப்டி சேருவதுனு ஈகோ பார்த்தும் பேசிட்டு இருக்கோம்.அங்க ஒருத்தன் வெற்றிக்கு கார்ப்பரேட் கூட போறான்.
ஏன் @rajinikanth மீது கோபம்?
தன் அபிமான நடிகரை விட புகழ் பெற்றிருப்பதால்...
ரஜினி யார் வாய்ப்பையும் பறிக்கவில்லை. மக்களுக்கு பிடிச்சா படம் ஓடும் இல்லன்னா ஓடாது. ரஜினிக்கும் ஒரு சில தோல்வி படங்கள் உண்டு.1
தன் ஆதரவு கட்சியின் வெற்றியை தடுத்துடுவாரோ என்ற பயம்? ஒரு கட்சி வெற்றி/தோல்வி அடைய அந்த கட்சியின் கடந்த/நிகழ் கால செயல்பாடுகள்.. தொண்டர்களின் அத்துமீறல்,மக்கள் விரோத செயல்கள், அதை கண்டு கொள்ளாத தலைமை,etc இவைகள் தான் காரணம். இது எல்லா கட்சிக்கும் பொருந்தும்.2
பல புரட்சிகர,சமூக சீர்திருத்த மக்கள் நல திட்டங்களை தந்த திமுகவால் தொடர்ந்து வெற்றி பெற முடியல. மக்கள் ஏன் ஞாபகம் வைக்கல. பல இடங்களில் கட்சியினர் செய்த அத்துமீறல்களை, தலைமை கண்டு கொள்ளாததன் விளைவு இது. எங்க,எப்ப என்ன நடந்ததுநு கேப்பாங்க. ஒன்னும் தெரியாத மாதிரி. 3
எல்லா நடிகர்களும் ரஜினி மாதிரி ஆகனும்,ரஜினி மாதிரி மக்கள் செல்வாக்கு பெறனும்னு தான் விரும்புறாங்க... அதுக்கு தான் உழைக்கிறாங்க... எல்லா ரசிகர்களுமே தன் அபிமான நடிகர் ரஜினியை போல தனக்கு திருப்தியை தரனும்னு தான் விரும்புறாங்க.எல்லாத்துக்கும் பெஞ்ச் மார்க் ரஜினிதான்.1
ரஜினியை,ரஜினி பட வியாபாரத்தை பென்ச் மார்க்கா வச்சுட்டுதான் திரையுலகமே ஓடிட்டு இருக்கு. ஆனால் ரஜினி மற்றவர்கள் போல அல்ல... அவர் ஒரிஜினல்.அவர்கிட்ட இருக்கும் மேஜிக் வேற யார்கிட்டயும் இல்ல.
திகட்டாத நடிகர்.ஆயிரம் பேர் இருந்தாலும் தன்னை மட்டுமே பார்க்கவைக்கும் வசீகரம் உள்ளவர்.2
எல்லாரும் பஞ்ச்,பைட்,டான்ஸ், கோட்சூட்,வாக்,ஸ்டைல் எல்லாம் பன்றாங்க.அவர்களது ரசிகர்களும் கட் அவுட்,ப்ளக்ஸ், பா.அபிசேகம்,4 மணி ஷோ,ட்ரெண்டிங்,லைக்ஸ் எல்லாம் பன்றாங்க.ஆனா ரஜினி படத்துக்கு வரும் கூட்டம்,பேமிலி ஆடியன்ஸ் மிக அதிகம்.ஏன்னா அதான் ரஜினி மேஜிக்...3