தென்தமிழகத்தில் 1650 - 1720 காலகட்டத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளலாக அறியப்படும் சீதக்காதியின் இயற்பெயர் ஷெய்க் அப்துல் காதர். நாளடைவில் இப்பெயர் செய்தக்காதிர், செய்தக்காதி, சீதக்காதி என மருவியிருக்கிறது. இவர் பிறந்த ஊர் கீழக்கரை, காயல்பட்டினம் இன்னும் சில
1/n
ஊர்கள் சொல்லப்படுகிறது. இஸ்லாமியர்களின் பரம்பரை தொழிலான வணிகத்தையே தொழிலாக கொண்டவர். மிளகு ஏற்றுமதியில் பெரும் செல்வம் சேர்த்தவர். இஸ்லாத்தின் மீதும் தமிழின் மீதும் தீராக்காதல் கொண்டவர். அதனாலேயே இந்து - முஸ்லீம் வேற்றுமை பாராது அனைத்து புலவர்களையும் ஆதரித்தார். மக்களுக்கு
2/n
வாரி வழங்கினார். 16ம் நூற்றாண்டின் இறுதியில். இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் விஜய ரகுநாத சேதுபதி, மதுரையில் உள்ள பாண்டியருக்கு கப்பம் கட்டி அடிமையாக இருப்பதை விட, தனித்தே ஆட்சி செய்வது எனத் தீர்மானித்தார். எதிரிகளின் தாக்குதல்களை சமாளிக்கவும், அரண்மனையின் பாதுகாப்புக்காகவும்,
3/n
கோட்டை வாயில்களை பலப்படுத்தத் தீர்மானித்த போது, அந்த செலவுகளை தாமே மனமுவந்து ஏற்று, பொன்னும் பொருளும் அளித்தவர், சீதக்காதி. சேதுபதிக்கு நண்பராக மட்டுமல்லாது போர்களில் ஆலோசகராகவும் இருந்த, சீதக்காதியை உரிமை பாராட்டி அவருக்கு 'விசயரகுநாதப் பெரியதம்பி' எனத் தன் பெயரைச் சூட்டி
4/n
மகிழ்ந்தார் சேதுபதி. 17-ஆம் நூற்றாண்டில் தமிழ் புலவர்களை ஆதரிப்பவர்கள் குறைந்து, ஆங்கில, டச்சு, போர்ச்சுக்கல் மொழிகள் வலம் வர தொடங்கிய நேரத்தில் இவர் மட்டும் தமிழ் புலவர்களுக்கு நிதி அளித்திருக்கிறார். தலைமாலை கண்டத்தேவர், அழகிய சிற்றம்பலக் கவிராயர், படிக்காசுத் தம்பிரான்,
5/n
நமச்சிவாயப் புலவர், கந்தசாமிப் புலவர், எட்டயபுரம் உமறுப் புலவர் ஆகிய தமிழ்ப் புலவர்களின் கவிதைப் படைப்புகளும், சீதக்காதி திருமண வாழ்த்துப் பாடல்கள், நொண்டி நாடகம் போன்ற தமிழ் இலக்கிய படைப்புகளெல்லாம் சீதக்காதியின் வள்ளல் தன்மையையும் , சமய நல்லிணக்கத்தையும் பறைசாற்றுகின்றன.
6/n
பல இலக்கிய படைப்புகளுக்கு வள்ளல் சீதக்காதி கொடைநாயகராகவும், பாட்டுடைத் தலைவராகவும், பல படைப்புகள் வளர வாய்ப்பாகவும் வாழ்ந்தார். அன்றைய காலத்தின் இஸ்லாமிய பேரறிஞராக விளங்கிய சதக்கத்துல்லாஹ் வலி அவர்களை நண்பராகவும், ஆசானாகவும் ஏற்றிருந்தார். ஒருமுறை சதக்கத்துல்லாஹ் வலி
7/n
அவர்களின் புகழை அறிந்த முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் டெல்லிக்கு வரும்படியும் தென்னிந்தியாவிற்கு கலீபாவாக (பொறுப்பாளர்) இருக்கும்படியும் அவரிடம் ஒப்புதல் கேட்டு மடல் எழுதினார். ஆனால் வலி அவர்கள் அதனை ஏற்கவில்லை; மாறாக, அவுரங்கசீப்புக்கு எழுதிய பதில் மடலில் சீதக்காதி பற்றிக்
8/n
குறிப்பிட்டு அவரின் சிறப்புக்களை எடுத்துக் கூறியிருந்தார். பேரரசர் ஔரங்கசீப் மகிழ்ந்து சீதக்காதியை வங்காளத்தின் கலீபாவாக (பொறுப்பாளர்) நியமித்தார். சீதக்காதியும் அப்பதவியை ஏற்று சிறிது காலத்திற்குப்பின் தாய்நாடு திரும்பினார். பின் பேரரசருக்கு முத்துமாலை (தஸ்பீஹ்மணி)
9/n
ஒன்றை அனுப்பினார். தொழுகையில் பெரும் ஆர்வம்மிக்க ஔரங்கசீப் அதனை மனமகிழ்ந்து ஏற்றுக்கொண்டார். அவர் வாழ்ந்த காலத்தில் கொடிய பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. அதனால், பலர் இறந்தனர். சிலர் மதுரைக்கும், தஞ்சைக்கும் மற்றும் பல ஊர்களுக்கும் ஓடினர். பசியாலும், நோயாலும் பலர் பாதிக்கப்பட்டனர்.
10/n
அத்தகைய பஞ்ச காலத்தில் எளியோருக்கு எவவிதத் தடையும் இல்லாமல் உணவு வழங்கினார் சீதக்காதி. இதனை,
என்ற படிக்காசுப்புலவரின் பாடல் நமக்குப் உணர்த்தக்கூடியதாக இருக்கிறது
வள்ளல் சீதக்காதிக்கு இறுதி நாள் நெருங்கிற்று. அவர் தாம் இறப்பது உறுதி என உணர்ந்தார் உடனே சுற்றத்தாரை வரவழைத்தார் அவர்களிடம், "நான் இறந்தவுடன் ஒரு புலவர் வருவார் அவரிடம் இந்த மோதிரத்தை கொடுத்து விடுங்கள்!
12/n
என்று வேண்டிக் கொண்டார் சில நாளில் அவர் உயிர் உடலிலிருந்து பிரிந்தது. தமிழ் புலவர்கள் நண்பர்கள், வள்ளல் சீதக்காதியிடம் கொடை பெற்று வறுமை நீங்கி வாழும் பலரும் நெஞ்சில் வேதனை படர இனி யார் இருக்கிறார்கள் எமக்கு, என்று மனம் கலங்கி வாடி நின்றார்கள். வள்ளல் சீதக்காதியின் இறுதிச்
13/n
சடங்கு, இஸ்லாமிய முறைப்படி, நடத்தி, நல்லடக்கம் செய்யப்பட்டது. இது நிகழ்ந்து சில நாட்கள் கழித்து, படிக்காசு தம்பிரான், வள்ளலைக் காண வர, காலமான செய்தி அறிந்து, அழுகையும் ஆத்திரமும் மேலிட, அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட சமாதியை நோக்கி ஓடுகிறார்.
14/n
"வள்ளலே! நீ புகழ்க் கம்பம் நாட்டி வைத்தாய்! சவக்குழியில் நுழைந்தாய்! என்ன செய்வோம்! கொடை மிகுந்த கோமானாகிய நீ இறந்த போது புலமையும் செத்து விட்டதன்றோ? வள்ளலாகிய நீ திரும்பி வந்து மீண்டும் இந்த உலகில் பிறந்தாலன்றி புலவர்களுக்கு பிழைக்க வழியே இல்லை. என்ன செய்வோம்?" என்று மனம்
15/n
கலங்கி நிற்க, அந்த நேரத்தில் வள்ளல் சீதக்காதி குடும்பத்தார் அந்த மோதிரத்தை படிக்காசு புலவரிடம் ஒப்படைத்தனர். அதனையே புலவர் தனக்குரிய பாணியில், சமாதி இரண்டாகப் பிளந்து, அதிலிருந்து ஒரு கை வெளியே நீட்டியதாகவும், கையின் விரலில் இருந்த மோதிரத்தை இவர் எடுத்துக்கொண்டதும்,
16/n
கை உள்ளே சென்றுவிட்டதாகவும் கூறியிருக்கிறார். அதை வைத்துதான் "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" எனும் பழமொழி இன்றும் வழக்கில் இருக்கிறது. நாம் பகுத்தறிவு சிந்தனைகளில் சென்று விளக்கம் தேடுவதை விட, சீதக்காதி அவர்களின் வள்ளல் தன்மையை வெளி உலகிற்கு தெரிவிக்கும்
17/n
ஒரு உயர்வு நவிற்சி அணியாக, படிக்காசுப்புலவர் இதை சொல்லியிருப்பதாக கொள்ளலாம். சமாதி பிளக்காவிட்டாலும் இறந்தும் மோதிரத்தை புலவருக்கு கொடுக்கசொல்லி குடும்பத்தாரிடம் கொடுத்த வள்ளல் சீதக்காதி, "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்ற பழமொழிக்கு பொருத்தமானவரே.
--முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
குழப்பத்துல/கோவத்துல எழுதுனா தப்பாகிரும்ன்னு நைட் வரை வெய்ட் பண்ணேன். காலைல எனக்கும் ஒவைசி பிஜேபி டீம்ன்னுதான் தோனுச்சு. நாம தமிழ்நாடு என்கிற சேஃப் ஜோன்ல இருக்கோம். அதனால அங்குட்டு படிக்காத ஏழை முஸ்லீம் சமூகம் பட்ற பாட்டை நேரடியா ரியலைஸ் பண்ண முடியலன்னு நெனைக்கிறேன்.
1/9
வரப்போற காலங்கள்ல ஆயிரம் லெட்டர்பேட் கட்சிகள் இருந்தாலும் முஸ்லீம்களுக்கு ஒற்றை தேசியத்தலைமை அவசியம்ன்னு நினைக்கிறேன். அது இன்னைக்கு டெம்ப்ரவரியா ஜெயிக்கறதை விட ரொம்ப அவசியம். ஏன்னா பாஜக 2039 வரை பிரதமர் வேட்பாளர்களை முடிவு செய்து வைத்திருக்கிறது...
2/9
ஒவைசிக்கு தன் கட்சியை 20 கோடி முஸ்லீம்களின் தேசிய பிரதிநிதியாக மாற்றும் எண்ணமிருக்கிறது. அதனால்தான் எப்போதும் தனியாக நின்று செயல்பட விரும்புகிறார். தனிப்பெரும் கட்சியாக விரும்பும் எந்த ஒரு கட்சியும் யாருடனும் கூட்டு சேராது. இது வழக்கமான நடைமுறைதான்..
3/9
நிர்பயா ஞாபகம் இருக்கிறதா? அதுவும் கேங் ரேப் டு மரணம்தான்.
சப்தர்ஜங் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். ஆளும் கூட்டணியின் தலைவி போய் பார்த்தார். உறவினர்களுக்கு உறுதி அளித்தார்.
ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அவர்களையும் சந்தித்தார். போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸ் தடை போடவில்லை.
1/4
அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை மீது சிலர் சந்தேகம் கிளப்பினர். அரசு அவர்களை மிரட்டவில்லை. நிர்பயாவை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. என்றாலும் பலன் இல்லை.
சடலம் கொண்டுவரப்பட்டது. பிரதமரும் கூட்டணி தலைவியும் ஏர்போர்ட்டில் காத்திருந்து பெற்று, குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.
உற்றார் உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்ய முடிந்தது. டெல்லி முதல்வர் சுடுகாட்டுக்கு வந்து மரியாதை செலுத்தினார். மத்திய உள்துறை இணை அமைச்சரும் அங்கு இருந்தார். மாநில பிஜேபி தலைவர்கூட வந்திருந்தார்.
நேற்றிரவு Apple, Elon Musk, Bill Gates, Warren Buffett, Jeff Bezos, Mike Bloomberg, Barack Obama, Joe Biden, Kanye West, Kardashian, Benjamin Netanyahu ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டன.
Thread
அதன் மூலம் ஒரே ஒரு ட்வீட் போடப்பட்டிருக்கிறது. நீங்கள் இந்த பிட்காயின் கணக்கில் $1000 போட்டால் நான் $2000 திரும்பத்தருவேன் எனபதே அந்த ட்வீட்.
சில நிமிடங்களில் இந்த ஹேக்கை ட்விட்டர் கண்டுபிடித்திருந்தாலும் அதற்குள்ளாக ஒரு லட்சம் டாலர்கள் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டு விட்டன.
மக்களையும் குறை சொல்ல முடியாது. அதிகாரப்பூர்வ கணக்கில் வந்த ட்வீட் என்பதால் நம்பி விட்டனர். ட்விட்டர் தளம் இந்த ஹேக்கை சரி செய்து கொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.
இணைய பயன்பாட்டாளர்கள் அதிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.