ஒரு ஊரில், ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும்,ஒரு செல்வந்தரும் இருந்தனர்.செருப்புத் தொழிலாளி தினமும்,தன் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து,அதை வணங்கி வந்தார்.செல்வம் இல்லாவிட்டாலும்,சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.
செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார்.ஆனாலும்,பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து,"அந்தச் செல்வந்தர்
மிகுந்த பக்திமானாக இருக்கிறார்.தினமும் உங்களுக்கு, பல மணி
நேரம் பூஜை எல்லாம் செய்கிறார்.அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?”என்றார்.விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு, நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார்.
போகும்போது நாரதரைப் பார்த்து,"நீங்கள் கீழேச்சென்று,"நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்"என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.அவர்"தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?"என்று கேட்பார்.அதற்கு நீங்கள் "நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக,யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்"
என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார். "அப்படியே அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியையும்,போய் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்”என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.
நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்குக் சென்றார்.
பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர்,நாரதரிடம், “நீங்கள் யார்?”என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகக் கூறினார்.அதற்கு அந்தச் செல்வந்தர்,"தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?”என்று கேட்டார்.
நாரதரும், நாராயணன்,ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொன்னார்.அதற்கு அந்த செல்வந்தர், "அது எப்படி முடியும்?இது என்ன நடக்கிற காரியமா?”என்று கேட்டார்.நாரதர் அடுத்தது அந்த செருப்புத் தொழிலாளியை பார்க்கச் சென்றார்.அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது.
ஆனால் கடைசி பதிலுக்கு அந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி, "இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை, சின்ன விதையில் அடக்கியவர். பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர். அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.
அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர்.
"கடவுள் பக்தி என்பது பூஜை,புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை.இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று பற்றுவதே ”உண்மையான பக்தி”. இப்பொழுது தெரிகிறதா?ஏழையின் நிம்மதிக்குக் காரணம் என்றார் நாராயணன்.
காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, நதியானது, மகா சமுத்திரத்தில் எப்படி கலந்து விடுகிறதோ, அது போலதான், கடவுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும்.
நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்மாவினிடத்தில், நம்மை அறியாமல் போய் நிற்க வேண்டும்.அதற்குக் காரணமே இருக்கக் கூடாது.
காரணம் என்று வந்தால் அது வியாபாரமாகிவிடும். ஏதோ ஒன்றுக்கொன்று கொடுப்பது போல,செல்வத்தைக் கொடு,
பக்தி செய்கிறேன் என்று இறைவனிடம் பரிமாறிக் கொண்டால் அது
வியாபாரம். அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, கிருஷ்ணனிடம் போய் சேருவது ஒன்றையே நினைப்பது தான் பக்தி.
க்ருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர். குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று, தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப்படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்துவிட்டது.
தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் தென்பட்டனர். சிட்டுக்குருவி பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது. “கிருஷ்ணா! நாளைப்போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்துவிடும்.நீதான் காப்பாற்ற வேண்டும்”
நரசிங்கத்தின் உருத்திர உருவத்தைக் கண்டு சேனைகள் சிதறி ஓடின.இரணியனின் சேனைப்பெரியது.ஆயிரக்கணக்கான வீரர்கள்.
இங்கே கம்பனின் கற்பனை எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறது.
ஓடும் ஒவ்வொரு வீரர் முன்னாலும் ஒரு நரசிங்கம் நின்றதாம்.எப்படி?
அவ்வளவு வேகமாக அது வீரர்களிடையே புகுந்து புறப்பட்டது. ஒவ்வொரு வீரரும் அந்த நரசிங்கம் தன் முன்னால் நிற்பது மாதிரி தெரிந்து அலறுகிறார்கள்.சிங்கமுகம் எப்படி இருக்கும்?கோரைப்பற்களுடன், பிடரிமயிர் சிலிர்க்க பயங்கரமாக இருக்கும்.
கம்பன் சொல்கிறான், திருமுகம் என்று.
அவனுக்கு அந்த ஆக்ரோஷமான முகம் கூட அருள் வழியும் முகமாக தெரிகிறது.நரசிங்கத்தின் தோள்கள் பொன்னைப் போல ஒளி வீசுகின்றன.கண்கள் தீயைப் போல சிவந்து,ஜ்வாலை விடுகின்றன.
தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிங்கம் வளர்ந்து.மிகப் பெரிய உருவம் கொள்கிறது.பெரியது என்றால் இப்படி அப்படி அல்ல.கம்பன் வருணிக்கிறான்.மிக பிரமாண்டமான வடிவம்.கற்பனைக்கு எட்டாத வடிவம்.
பாடல்
'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்துஅறையகிற்பார் ?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.
பொருள்:
பிளந்தது தூணும் = தூண் பிளந்தது
ஆங்கே பிறந்தது, சீயம் = அதிலிருந்து பிறந்தது சிங்கம்
பின்னை வளர்ந்தது = பின் அது வளர்ந்தது
திசைகள் எட்டும் = எட்டு திசையும் வளர்ந்தது
பகிரண்டம் முதல மற்றும் அளந்தது = எல்லா அண்டங்களையும் அளந்தது
சூதாட்டத்தில் தோற்றப் பாண்டவர்கள்,தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன்,"கர்ணா!இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம்.அக்னி பகவானின் பரிசாக,அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்"என்றான்.
ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்.
"நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை"என்று சொன்னான் கர்ணன்."ஆஹா!நீ அல்லவோ சுத்தவீரன்?அர்ஜுனன் வில்லை நம்புகிறான்.
நீ உன் திறமையை நம்புகிறாய்"என்று கர்ணனை துரியோதனன் பாராட்டினான்.அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்த சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான்.இதைக் கேட்டுச்சிரித்த வியாசர்,"கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது!அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை"என்றார்.
ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றித் திரிந்தான். அங்குள்ள குளக்கரையில் இருந்த கிருஷ்ணன் கோயிலில், திருவிழா நடந்துக்கொண்டிருந்தது. பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க கிருஷ்ண நாமத்தை ஜபம் செய்தார்கள். வேலையில்லாத இளைஞனுக்கு அந்த நாமத்தைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
"கிருஷ்ணா"என்ற இந்த வார்த்தையில் என்னதான் இருக்கிறது என்று அவன் சிந்தித்தான். விடை தெரியவில்லை. அங்கிருந்த பெரியவரிடம்,"கிருஷ்ணா!கிருஷ்ணா!”என்று கூச்சல் போடுகிறீர்களே.அதனால் என்ன கிடைத்து விடும்?எனக்குப் பசிக்கிறது?உங்களுடைய கிருஷ்ணனால் எனக்கு சோறு போட முடியுமா?” என்று கத்தினான்
பெரியவர் அந்த இளைஞனிடம்,"கிருஷ்ண நாமத்தைச் சொன்னால் சோறு மட்டுமல்ல, நீ எதை வேண்டுகிறாயோ அது கிடைக்கும்" என்றார்.இளைஞனுக்கு கிருஷ்ண மந்திரத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்றாலும்,அந்தப் பெரியவர் சொல்கிறாரே என்பதற்காக கிருஷ்ண நாமத்தைச் சொல்ல முடிவெடுத்தான்.
இப்படியும் கூட ஒருவனால் பாடல் எழுத முடியுமா என்று எண்ணி எண்ணி வியக்கவைக்கும் பாடல்களைக் கொண்டது, இரணியன் வத படலத்தில் உள்ள பாடல்கள். இரணியன் கேட்கிறான் அவன் மகன் பிரகலாதனிடம், "நீ சொன்ன அந்த நாராயணன் இந்த தூணில் இருக்கிறானா" என்று.
கம்பன் ஏதோ அருள்வந்தவன் போல ஆக்ரோஷமாக எழுதுகிறான். "தூண் என்னடா தூண், நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான் அவன்" என்று பிரகலாதன் வாயிலாகச் சொல்கிறான்.
பிரகலாதன்-ஒரு சாண் அளவிலும் இருக்கிறான்.அணுவை நூறாகப் பிளந்தால்,அந்தத் தூளிலும் அவன் குணம் இருக்கும்.மேரு மலையிலும் அவன் இருக்கிறான்.
இந்தத் தூணிலும் இருக்கிறான்.நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான்.நீ இதை விரைவில் காண்பாய்.