ஒரு ஊரில் குரு இருந்தார். அவர் வில் வித்தையில் கைதேர்ந்தவர். அவருடைய குருகுலத்தில் பல மாணவர்கள் தங்கி வில்வித்தை பயின்று வந்தார்கள். அதில் ஒரு மாணவன் மிகச்சிறப்பாக சகல வித்தைகளையும் கற்றுத்தேர்ந்தான். குருவுக்குப் பிறகு அவன்தான் அடுத்த குரு என்று குருகுலத்தில் பேசிக்கொண்டனர்.
இதையெல்லாம் கேட்கக் கேட்க, அவனையறியாமலே அவனுக்குள் ஆணவம் வளர்ந்தது.அது கற்றுக்கொடுத்த குருவையே, அலட்சியமாக நினைக்க வைத்தது. அவனுக்குள் ஒரு தீய எண்ணம் வேர்விட்டது.
"இனியும் நான் ஏன் பொறுத்திருக்க வேண்டும்? குருவுக்குத் தெரிந்த சகலமும் இப்போது எனக்கும் தெரியுமே.இன்னும் கூட அதிகமாக கற்றுக் கொள்ள எனக்கு இளமையும்,வயதும் இருக்கிறது.இனி நான்தான் குரு.பழைய குருவை விரட்டுவேன்.நானே குரு ஆவேன்" என்று எண்ணி ஒரு ஆலோசனை செய்தான்.
மறுநாள் அவனுக்கு வேண்டிய சில பெரிய மனிதர்களை அழைத்துக் கொண்டு, குருவின் குடிலுக்குச்சென்று வாசலில் நின்று சத்தமிட்டான். "குருவே வெளியே வாரும். இனி நான்தான் குரு, நீரல்ல. உம்மோடு போட்டியிட்டு ஜெயிக்க வந்திருக்கிறேன். தைரியம் இருந்தால் மோதிப்பாரும். இல்லை என்றால் இப்போதே தோல்வியை,
ஒப்புக் கொண்டு ஆசிரமத்தை என்னிடம் ஒப்புவியும்"என்றான்.
குரு இதைச்சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கொஞ்சம் நிலை குலைந்துப்போனார். ஆனாலும் உறுதியான குரலில் சொன்னார் "போட்டி துவங்கலாம்". துவங்கியது போட்டி.
முதலில் குரு அம்பை எடுத்து தூரத்திலிருந்த ஒரு மரத்தை நோக்கி எய்தார்.
அது சரியாய் ஒரு காயை வீழ்த்தியது. சிஷ்யனும் அதேபோல் ஒரு அம்பை எய்ய, அது இரண்டுக் காய்களை வீழ்த்தியது. சிஷ்யனின் ஆதரவாளர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். அடுத்து குரு இரண்டு அம்புகளை ஒன்றாக விடுத்தார். அதில் சரியாக ஒரு இலையும்,ஒரு காயும் விழுந்தன. சீடன் அலட்சியமாக மூன்று அம்புகளை,
ஒன்றாய் எய்ய, அது ஒரு இலையையும் ஒரு காயையும் ஒரு பூவையும் கூட அழகாய் வீழ்த்தியது. சீடனின் கூட்டம் இன்னும் சத்தமிட்டது. குரு இப்போது தரையைப் பார்த்து தலைகுனிந்தபடி,வானத்தை நோக்கி அம்புவிட்டார். அது குறிபார்த்து எய்ததுபோல் விண்ணில் பறந்துக்கொண்டிருந்த,ஒரு பறவையின் மார்பில் தைத்து
அதைக் கீழே விழவைத்தது. சிஷ்யனின் கூட்டம் சற்றே மிரண்டது. சிஷ்யனோ சற்றும் மிரளவில்லை. புன்னகைத்தபடியே அவனும் தலையைக் குனிந்தவாறே ஒரு அம்பை எய்தான். அவனது அம்போ இரண்டுப் பறவைகளை ஒன்றாக வீழ்த்தியது. சிஷ்யனின் கூட்டம் கூத்தாடியது.
மரியாதை இன்றி குருவின் அருகே வந்து அவரைச்சுற்றி நின்று ஏளனமிட்டது. மற்ற சீடர்களின் கண்களில் கண்ணீர். தங்கள் குரு அவமானப் படுத்தப்படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குரு வில்லையும் அம்பையும் கீழே போட்டுவிட்டு, தரையில் மண்டியிட்டு, கண்களை மூடிக்கொண்டார்.
குரு தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டாரோ? எல்லாரும் மௌனமாய் குருவின் முகத்தையே பார்த்தனர்.
திடீரென்று குரு தனது கண்களைத் திறந்து வானத்தை ஏறிட்டுப் பார்த்தார். அவர் பார்த்த மாத்திரத்திலேயே, வானத்தில் பறந்து சென்றுக் கொண்டிருந்த சில பறவைகள் பொத் பொத்தென்று கீழே விழுந்தன.
இப்போது சீடனின் முகம் இருண்டது."குருவிடம் இப்படி ஒரு வித்தையை நான் பார்த்ததே இல்லையே". மனதுக்குள் மிரண்டாலும், அவனும் அவரைப்போலவே மண்டியிட்டு, வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்த்தான். ஒன்று கூட விழவில்லை. பதற்றமாக மீண்டும் பார்த்தான். அப்போதும் எதுவும் விழவில்லை.
மீண்டும் ஒரு முறை பார்த்தான். அப்போதும் பயனில்லை. அவமானத்தில் குன்றிப் போனான். எழுந்து குருவின் பாதங்களில் விழுந்து அழுதான். "குருவே! எப்போதுமே நீங்கள் மட்டுமே பெரியவர். என்னை மன்னிப்பீர்களா?" என்றான். குரு அவனைக மன்னித்து, கட்டி தழுவிக்கொண்டார்.
"நீங்கள் பார்க்கும்போது விழுந்த பறவைகள், நான் பார்க்கும்போது விழவில்லையே.ஏன் குருவே?"
குரு சொன்னார்: "மனதில் தாழ்மை வந்தால்தான் மேன்மை வரும். அகந்தை வந்தால் அழிவுதான் வரும்".
ஆம் குருவே, நான் பாவி. ஒன்றும் அறியாத நிர்மூடன்" என்று அவரது பாதத்தைப் பிடித்து அழுதான்.
குரு சொன்னார், "இப்போது மேலே பார்". பார்த்தான். பறந்துக் கொண்டிருந்த ஐந்தாறு பறவைகள் பொத்தென்று கீழே விழுந்தன.
குருக்ஷேத்திர போர்க்களம்.உக்கிரமான மகாபாரதப்போர் நடைபெற்றது.சகோதரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டார்கள். மண்ணுரிமை சார்ந்தப்போர்.அன்று உக்கிரப்போர் புரிந்தவன் மாவீரன் கர்ணன். தன் நண்பன் துரியோதனனிடம் வாக்குக் கொடுத்து வந்திருந்தான்.
போர்க்களத்தில் பாண்டவரை வீழ்த்திக்காட்டுவேன் என்பது அவனது தீர்மானம்.அந்த எண்ணத்தால் உக்கிரப்போர் புரிந்தான்.முதலில் வந்தது பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர்.பாண்டவர் சேனைக்குத் தலைவர் என்பதால்,அவரை வீழ்த்துவதில் கவனம் செலுத்தினான் கர்ணன்.அவனது வில் திறமைக்கு முன்னால்,
தர்மரின் போர்த்திறம் பலம் குன்றியது.கர்ணனின் அம்பு மழையில் தர்மர் நினைவிழந்தார்.பதறியது கிருஷ்ணரின் உள்ளம். "பாண்டவர்கள் என் உயிர் போன்றவர்கள்,அவர்களின் உயிரைக் காப்பது என் விரதம்"என்று சொன்ன கண்ணனுக்கு,இப்போது தர்மரின் உயிரைக் காப்பாற்றியாக வேண்டும்.வேறு என்ன செய்வது?
ஒரு ஊரில் பெரிய பஞ்சம்.மழையே இல்லை.பூமி வறண்டு,மக்கள் தவித்துப் போனார்கள்.அந்த ஊருக்கு ஒரு துறவி வந்து சேர்ந்தார். அவரிடம் மக்கள் இப்படி மழையே இல்லை என்ன செய்வது என்று முறையிட்டார்கள்.அதற்கு அவர் "ஒரு யாகம் செய்தால் மழை வரும்"
என்று கூறி,அதற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்துவிட்டார்.
ஒரு வாரம் யாகம் நடந்தது.கடைசி நாள் யாகம் முடிந்தவுடன்,மழை "சோ" என்று பெய்தது.மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள்.
அந்தத் துறவிக்கு நிறைய பொருள் கொடுத்தார்கள்,அவரைப் புகழ்ந்து பேசினார்கள்.
அப்போது அவர் சொன்னார்,"இந்த மழை என்னாலோ,இந்த யாகத்தாலோ,உங்களாலோ வரவில்லை.அதோ அந்த மூலையில் குடையோடு நிற்கிறானே,அந்தச்சிறுவனின் நம்பிக்கைக்காக பெய்தது"என்றார்.அப்போதுதான் எல்லோரும் கவனித்தார்கள். ஒருவர் கூட குடைக் கொண்டு வரவில்லை,துறவியும் சேர்த்து.
வீட்டில் காவலுக்கு நாய் வைத்து இருப்பவர்கள் "நாய் ஜாக்கிரதை" என்று போர்டு மாட்டி இருப்பார்கள்."இங்கு காவலுக்கு நாய் இருக்கிறது.பார்த்து வாருங்கள்.ஜாக்கிரதையாய் இருங்கள்" என்று வருபவர்களை எச்சரிக்கை விடுவார்கள்.
பேருந் மற்றும் புகைவண்டி நிலையம் போன்றப் பொது இடங்களில் "பிக் பாக்கெட் ஜாக்கிரதை" என்று எழுதி வைத்து இருப்பார்கள்.
நம்மாழ்வார் அது மாதிரி "பெருமாள் ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை விடுகிறார்.இந்த பெருமாள் இருக்கிறாரே அவரிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்.
உங்கள் மனதையும் உயிரையும் நீங்கள் அறியாமலே அவன் எடுத்துக்கொள்வான்,சரியான கள்வன்.மனதைத்திருடுவது மட்டும் அல்ல,திருடியபின்,அந்த இடத்தில் தன்னை இட்டு நிரப்பிவிடுவான்.
உங்களை நீங்கள் இழந்தது கூட,உங்களுக்குத் தெரியாது.எனவே அவனிடம் ஜாக்கிரதையாய் இருங்கள் என்று அன்பாக எச்சரிக்கிறார்.
குருஷேத்திரப்போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துக் கொண்டிருந்தது. அப்போது திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம், "கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.
அப்படியிருக்க,ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?"என வருத்தமுடன் கேட்டார்.அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், "உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன்.அதன்பின் ஒரு கேள்வி கேட்கிறேன்.நீ அதற்கு பதில் சொன்னால்,நான் உனக்கு பதில் தருகிறேன்"என்ற பகவான்,
கதையைக் கூறினார்.
அந்த அரசன்,மிக நல்லவன். நீதி-நெறி பிறழாமல் ஆட்சி புரிந்து வந்தான்.சைவ நெறிப்படி வாழ்ந்தவன்.ஆனால்,அரண்மனையில் உணவு தயாரிக்கும் சமையற்காரனோ அசைவப் பிரியன்.அசைவம் தயாரிப்பதில் கைதேர்ந்தவன்.அவன் சமைக்கும் உணவைச் சாப்பிட்டுப் பார்க்கும் ஒருவருக்கு அது சைவமா,அசைவமா
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர். குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று, தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப்படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்துவிட்டது.
தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் தென்பட்டனர். சிட்டுக்குருவி பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது. “கிருஷ்ணா! நாளைப்போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்துவிடும்.நீதான் காப்பாற்ற வேண்டும்”