ஒரு ஊரில் பெரிய பஞ்சம்.மழையே இல்லை.பூமி வறண்டு,மக்கள் தவித்துப் போனார்கள்.அந்த ஊருக்கு ஒரு துறவி வந்து சேர்ந்தார். அவரிடம் மக்கள் இப்படி மழையே இல்லை என்ன செய்வது என்று முறையிட்டார்கள்.அதற்கு அவர் "ஒரு யாகம் செய்தால் மழை வரும்"
என்று கூறி,அதற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்துவிட்டார்.
ஒரு வாரம் யாகம் நடந்தது.கடைசி நாள் யாகம் முடிந்தவுடன்,மழை "சோ" என்று பெய்தது.மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள்.
அந்தத் துறவிக்கு நிறைய பொருள் கொடுத்தார்கள்,அவரைப் புகழ்ந்து பேசினார்கள்.
அப்போது அவர் சொன்னார்,"இந்த மழை என்னாலோ,இந்த யாகத்தாலோ,உங்களாலோ வரவில்லை.அதோ அந்த மூலையில் குடையோடு நிற்கிறானே,அந்தச்சிறுவனின் நம்பிக்கைக்காக பெய்தது"என்றார்.அப்போதுதான் எல்லோரும் கவனித்தார்கள். ஒருவர் கூட குடைக் கொண்டு வரவில்லை,துறவியும் சேர்த்து.
அவ்வளவு நம்பிக்கை!!
கடவுளை நம்பும் எவ்வளவு பேர், தாங்கள் சுவர்க்கம் போவோம் என்று உறுதியாக நம்புகிறார்கள்? ஸ்வர்கமோ, இறைவன் திருவடியோ ஏதோ ஒன்று. அங்கே செல்வதாக எத்தனை பேருக்கு நம்பிக்கை இருக்கிறது?
நம்மாழ்வார் சொல்கிறார்- இனிமேல் நரகம் என்பதே இருக்காது. யார் நரகத்துக்கு போவார்கள்.
திருமாலே இந்த பூமியில் வந்து பிறந்து நமக்கு அருள் செய்தபின், யார் நரகம் போகப் போகிறார்கள்?எமனுக்கு என்ன வேலை? கலி புருஷனும் வேலை இல்லாமல் திண்டாடப் போகிறான்" என்கிறார்.
அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.இனிமேல் மரணம் இல்லை,நரகம் இல்லை,கலியால் துன்பம் இல்லை என்று.
எத்தனை பேர் இதை நம்புகிறார்கள் ? கடவுளிடம் ஒருதரம் சொன்னால் போதாதா? எனக்கு சுவர்க்கம் குடு, துன்பம் தராதே, இன்பம் தா, என்னை நல்வழியில் நடத்து என்று.தினம் தினம் போய் சொல்ல வேண்டுமா?ஒரு தரம் கூட எதற்குச் சொல்லவேண்டும். அவருக்குத்தெரியாதா?
கடல் போன்ற வண்ணத்தை உடையவன்,உயிர்கள் வாழும் இந்த மண்மேல்,அவனே வந்து புகுந்து இசைப்பாடி ஆடி நடமாடக் கண்டோம். போயிற்று, நீங்கிற்று இந்த உயிர்களைப்பிடித்த சாபம்.
நரகம் நலிந்து போகும்.
யாரும் இல்லாவிட்டால், நரகத்தை இழுத்து மூட வேண்டியது தானே.சோர்ந்து போன நமனுக்கு இங்கு ஒரு வேலையும் இல்லை, கலிபுருஷனும் கெடுவான் கண்டு கொள்ளுங்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
குருக்ஷேத்திர போர்க்களம்.உக்கிரமான மகாபாரதப்போர் நடைபெற்றது.சகோதரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டார்கள். மண்ணுரிமை சார்ந்தப்போர்.அன்று உக்கிரப்போர் புரிந்தவன் மாவீரன் கர்ணன். தன் நண்பன் துரியோதனனிடம் வாக்குக் கொடுத்து வந்திருந்தான்.
போர்க்களத்தில் பாண்டவரை வீழ்த்திக்காட்டுவேன் என்பது அவனது தீர்மானம்.அந்த எண்ணத்தால் உக்கிரப்போர் புரிந்தான்.முதலில் வந்தது பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர்.பாண்டவர் சேனைக்குத் தலைவர் என்பதால்,அவரை வீழ்த்துவதில் கவனம் செலுத்தினான் கர்ணன்.அவனது வில் திறமைக்கு முன்னால்,
தர்மரின் போர்த்திறம் பலம் குன்றியது.கர்ணனின் அம்பு மழையில் தர்மர் நினைவிழந்தார்.பதறியது கிருஷ்ணரின் உள்ளம். "பாண்டவர்கள் என் உயிர் போன்றவர்கள்,அவர்களின் உயிரைக் காப்பது என் விரதம்"என்று சொன்ன கண்ணனுக்கு,இப்போது தர்மரின் உயிரைக் காப்பாற்றியாக வேண்டும்.வேறு என்ன செய்வது?
ஒரு ஊரில் குரு இருந்தார். அவர் வில் வித்தையில் கைதேர்ந்தவர். அவருடைய குருகுலத்தில் பல மாணவர்கள் தங்கி வில்வித்தை பயின்று வந்தார்கள். அதில் ஒரு மாணவன் மிகச்சிறப்பாக சகல வித்தைகளையும் கற்றுத்தேர்ந்தான். குருவுக்குப் பிறகு அவன்தான் அடுத்த குரு என்று குருகுலத்தில் பேசிக்கொண்டனர்.
இதையெல்லாம் கேட்கக் கேட்க, அவனையறியாமலே அவனுக்குள் ஆணவம் வளர்ந்தது.அது கற்றுக்கொடுத்த குருவையே, அலட்சியமாக நினைக்க வைத்தது. அவனுக்குள் ஒரு தீய எண்ணம் வேர்விட்டது.
"இனியும் நான் ஏன் பொறுத்திருக்க வேண்டும்? குருவுக்குத் தெரிந்த சகலமும் இப்போது எனக்கும் தெரியுமே.இன்னும் கூட அதிகமாக கற்றுக் கொள்ள எனக்கு இளமையும்,வயதும் இருக்கிறது.இனி நான்தான் குரு.பழைய குருவை விரட்டுவேன்.நானே குரு ஆவேன்" என்று எண்ணி ஒரு ஆலோசனை செய்தான்.
வீட்டில் காவலுக்கு நாய் வைத்து இருப்பவர்கள் "நாய் ஜாக்கிரதை" என்று போர்டு மாட்டி இருப்பார்கள்."இங்கு காவலுக்கு நாய் இருக்கிறது.பார்த்து வாருங்கள்.ஜாக்கிரதையாய் இருங்கள்" என்று வருபவர்களை எச்சரிக்கை விடுவார்கள்.
பேருந் மற்றும் புகைவண்டி நிலையம் போன்றப் பொது இடங்களில் "பிக் பாக்கெட் ஜாக்கிரதை" என்று எழுதி வைத்து இருப்பார்கள்.
நம்மாழ்வார் அது மாதிரி "பெருமாள் ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை விடுகிறார்.இந்த பெருமாள் இருக்கிறாரே அவரிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்.
உங்கள் மனதையும் உயிரையும் நீங்கள் அறியாமலே அவன் எடுத்துக்கொள்வான்,சரியான கள்வன்.மனதைத்திருடுவது மட்டும் அல்ல,திருடியபின்,அந்த இடத்தில் தன்னை இட்டு நிரப்பிவிடுவான்.
உங்களை நீங்கள் இழந்தது கூட,உங்களுக்குத் தெரியாது.எனவே அவனிடம் ஜாக்கிரதையாய் இருங்கள் என்று அன்பாக எச்சரிக்கிறார்.
குருஷேத்திரப்போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துக் கொண்டிருந்தது. அப்போது திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம், "கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.
அப்படியிருக்க,ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?"என வருத்தமுடன் கேட்டார்.அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், "உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன்.அதன்பின் ஒரு கேள்வி கேட்கிறேன்.நீ அதற்கு பதில் சொன்னால்,நான் உனக்கு பதில் தருகிறேன்"என்ற பகவான்,
கதையைக் கூறினார்.
அந்த அரசன்,மிக நல்லவன். நீதி-நெறி பிறழாமல் ஆட்சி புரிந்து வந்தான்.சைவ நெறிப்படி வாழ்ந்தவன்.ஆனால்,அரண்மனையில் உணவு தயாரிக்கும் சமையற்காரனோ அசைவப் பிரியன்.அசைவம் தயாரிப்பதில் கைதேர்ந்தவன்.அவன் சமைக்கும் உணவைச் சாப்பிட்டுப் பார்க்கும் ஒருவருக்கு அது சைவமா,அசைவமா
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர். குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று, தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப்படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்துவிட்டது.
தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் தென்பட்டனர். சிட்டுக்குருவி பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது. “கிருஷ்ணா! நாளைப்போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்துவிடும்.நீதான் காப்பாற்ற வேண்டும்”