கடந்த இரண்டு நாட்களாக கீழே இருக்குற மாதிரி தான் வீட்டுக்கு போற வழி எல்லாம் இருந்தது.பெரிய மன உளைச்சல் உண்டானது.
தினமும் காலை ஆபீஸ்க்கு போகும் பொழுதும் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரம்பொழுதும் இதில் நடந்து தான் வீட்டுக்கு போய் வந்தேன்.
1/n
நான் வளர்ந்த விதத்தில் இப்படி சாக்கடையில் நடை பழகியதில்லை. ஒரு இரண்டு நாட்கள் இப்படி இருக்கவே கடுமையான மன உளைச்சல்.இரவில் தூங்கும்பொழுது கூட இதே சாக்டையில் நடப்பது போல உணர்வு.....

இதே வேளையில் தான் மலம் அள்ளும் தொழிலாளர்களை நினைத்து பார்க்கிறேன்
.நண்பர்கள் யாரும் திவ்ய பாரதி எடுத்த "கக்கூஸ்" ஆவணப்படத்தை பார்த்தது இல்லை என்றால் நிச்சயம் பாருங்கள்..அந்த வலியில் 1 சதவீதம் தான் இது என்றாலும் அந்த வலியே போதுமானதாக இருந்தது ஒரு சமூக பிரச்சனையை உணர.....
இது ஏதோ கிராமம் எல்லாம் இல்லை,நம்ம வேளச்சேரி தான்.
Physical Pain விட Mental Agony-தான் வலிமைய வாய்ந்தது என உணர வைத்தது இந்த தருணம்.ஆனால் இன்னும் தெரிந்தே நாம் மலம் அள்ள மனிதர்களை பயன்படுத்தி கொண்டு இருக்கிறோமே? என்னைக்கு வலிக்கும்?
என்னைக்கு இதை உணர்வோம்? எல்லாருக்கம் இது போல நிலமை வந்தால் தானா? 2020'ல் மோடி சொன்னார்."India is open defecation-free"
2020'ன் ஆக்ச்சிறந்த நகைச்சுவை அது தான்.

அது போல தான் இன்னும் மனிதர்கள் மலம் அள்ளுகிறார்களா? சாக்கடையில் இறங்குகிறார்களா?
என நாமே ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டு ஒரு கேள்வி கேட்பது.மனிதர்களே மனித கழிவுகளை அள்ளும் "செய்தி" தெரிந்து இருந்தாலும் அதன் வலியை உணர்ந்தது இல்லை.அதை உணர இந்த சம்பவம் தேவைப்பட்டு இருக்கிறது.....நான் ஏன் அதை "செய்தி என சொன்னேன்
என யோசிக்கலாம்.மற்றவர்களுக்கு நடப்பது எல்லாம் நமக்கு செய்தி தானே? "பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால்" நாம் அனைவரும் தலைவன் இல்லை மனிதனாக இருந்து இருப்போமே? நான் இதுவரை எழுதியது கூட வாசிக்கும்,உங்களுக்கும் இது ஒரு செய்தி தான்.இது தான் எதார்த்தம் கூட.....
எல்லாரும் அனுபவித்த பின்னாடி தான் பாடம் கத்துக்க முடியும் என்றால் மனித குலம் முன்னேற பல யுகங்கள் ஆகலாம்.....

இதை விடவும் இன்னொரு பார்வை ரொம்ப முக்கியமானது.ஏன் அவர்கள் இத்தனை ஆண்டுகள் கழித்தும் கழிவுகள் அள்ளும் வேலையிலே இருக்கிறார்கள்? அவர்கள் முன்னேற நினைக்கவில்லையா?
இல்லை அவர்கள் அப்படி இருக்கவே இன்னமும் யாரோ நினைக்கிறார்கள் அது தான் உண்மை.

Artificial Intelligence பத்தி உலகமே பேசுறோமே? சாக்கடையில் இறங்கி வேலை பார்ப்பவர்கள் பற்றி நாம் யோசிக்காமல் Bill Gates யோசிப்பாரா? இல்லை அவர் தடுப்பு ஊசிக்கு நிதி கொடுப்பது போல நிதி கொடுப்பாரா?
நான் இதை எழுதுவது முக்கிய காரணம் நான் இந்த விவகாரத்தில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதே காரணம்......இரண்டு நாட்களுக்கே எனக்கு இப்படி!

அதுவும் காலையில் எழுந்த உடனே இதில் கால் வச்சி தான் ஆபீஸ் போகனுமா என்ற பொழுதே அந்த நாள் கணக்கு அன்றே முடிந்துவிட்டது....
வீடு திரும்பும்பொழுது மீண்டும் இதில் தான் கால் வைக்க வேண்டுமா என நினைக்கும்பொழுதே வீட்டுக்கு போகும் எண்ணம் அவுட்.

இப்படி இருக்க இதில் தினமும்,விழுந்து அடைப்பு எடுப்பவர்கள்,கையில் மலம் அள்ளுபவர்கள் நிலைமை?
அவர்கள் மூன்று வேளை சாப்பிடமாட்டார்களா? இல்லை அவர்களுக்கு குடும்பம் தான் இல்லையா?

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலைமை மாற எல்லாம் அரசுக்கு பெரிய பெரிய பணம் எல்லாம் தேவை இல்லை ராக்கெட் செலவை பார்க்கும் பொழுது.ஏன்னா நாம் தான் விண்வெளியில் தண்ணீர் இருக்கிறதா
என அங்கே ராக்கெட் அனுப்பி தேடுகிறோமே.....அப்படி இருக்க இதுவெல்லாம் ஒரு விஷயமா?

நிறைய காரியங்களுக்கு "பணம்" தேவைப்படுவதில்லை
"மனம்" தான் தேவைப்படுகிறது. :)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avudaiappan

Avudaiappan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ImAvudaiappan

5 Jan
சமீபத்தில் என் மகளுக்கான பிறந்தநாள் விழாவை கொண்டாடினோம்.டெக்கரேஷன் எல்லாம் சிறப்பாகவே செய்து முடித்தோம். சின்னதாக பலூன் ஆரச் ஒன்று ரெடி செய்ய சொல்லி இருந்தேன் அதுவும் குறை ஏதும் இல்லை.,நல்லாவே வந்து இருந்ததது!
எடுத்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது, 1/n Image
இன்னும் பெரிதாக பலூன் ஆர்ச் பண்ணி இருந்து இருக்கலாம்,கூட ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி இருந்து இருக்கலாம் என யோசிச்சிசேன்.இன்னும் கூட Grand ஆக இருந்து இருக்கும் என நினைச்சிகிட்டே....

அடுத்த நாள் அந்த டெக்கரேஷனுக்கான கணக்கை அந்த மண்டபத்தில் வைத்து முடித்து கொண்டு இருந்தேன்.
அப்போ அதை வடிவமைத்தவர் "சார் இந்த பலூனை விழாவுக்கு வந்த குழந்தைகளுக்கே கொடுத்து இருக்கலாமே?" என சொன்ன படியே அவரோட இருந்த பசங்களிடம் அதை தூக்கி மண்டபத்துக்கு வெளியே போட சொன்னார்....

வெளியேவும் போட்டனர்... கொஞ்ச நேரம் கழிச்சி வெளியே போய் பார்த்தேன்....
Read 9 tweets
26 Nov 20
நேத்து பெய்த கனமழை காரணமாகவும் பாதாள சாக்கடை சரியா Maintain-பண்ணாத காரணத்தினாலும்,ஏரி இருக்கும் இடமாக பார்த்து வீடு கட்டியதாலும் வீட்டிற்க்கு உள்ளே தண்ணீர் வந்துவிட்டது. இதை பற்றி மீடியாவிடம் மக்கள் சொன்னால் அல்லது பதிவு செய்தால் கிட்ட தட்ட Zombies போல பாய்ந்து வந்து 1/n
#Thread
"உன்னை யாரு ஏரிக்கு உள் வீடு கட்ட சொன்னது?" என பெரிய இயற்கை ஆர்வலர் போல காட்டிக்க முயற்சி பண்றாங்க சிலர்.உண்மையிலே ஏரியில் பேராசை கொண்டு வீடு கட்டியவர்களா அவர்கள்?

நிச்சயம் அதிகப்படியான மக்கள் குறைந்த வாடகையில் ஒரு வீடு! குழந்தைகளுக்கு பக்கத்தில் ஸ்கூல் இதெல்லாம் கணக்கு
பண்ணி போற வீடு தான் அது! அது அவங்களோட சொந்த வீடு இல்லை.ஆனா இவங்க ஏதோ அந்த ஏரியை அவங்க 2-Years ah ப்ளான் பண்ணி பித்தாலாட்டம் பண்ணி CMDA Approval வாங்கியவர்கள் போல பூமிக்கும் வானுக்கும் குதிக்கிறார்கள்!

சென்னையில் பாதி பேருக்கு இருக்கும் ஒரு கனவு "சொந்த வீடு".
Read 16 tweets
14 Oct 20
Must Read :

ஹத்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் இறந்த பெண்ணின் பிறப்புறுப்பில் விந்து மாதிரிகள் கிடைக்கவில்லை என உபி போலீஸ் கூறியது,அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லையாம்.

சரி.அந்த பரிசோதனை எப்பொழுது எடுக்கப்பட்டது? என கேட்டா வன்கொடுமை நடந்து 11 நாள் கழித்து எடுக்கப்பட்டதாம்!🤦‍♂️
நேற்று நீதிமன்றத்தில் பல வழக்கில்,விந்து
மாதிரிகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தை சொல்லி அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என முடிவுக்கு வர முடியாது என்ற விதி இருப்பது தெரியுமா என மாவட்ட நீதிபதிக்கு கேட்க நல்லா தெரியும் என சொல்லி இருக்கிறார்.அப்படி இருக்க இது பாலியல் வன்கொடுமை இல்லை
என எந்த முகத்தை வைத்து சொன்னார் மாவட்ட நீதிபதி? இன்னும் சம்மந்தப்பட்ட போலீஸ் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.அந்த மாவட்ட நீதிபதி இன்னும் பணி இடை நீக்கம் செய்யப்படவில்லை என்பதை நீதிமன்றம் நேற்று குறிப்பிட்டு இருக்கிறது.

ஏன் ஹத்ரா சம்பவத்தை அதிகமாக பேசுறீங்க என பலர்
Read 7 tweets
9 Oct 20
மீடியா TRP பசி :

இன்னைக்கு பலர் மீடியா TRP'க்காக தானே இதெல்லாம் பண்றீங்க? என சொல்றத பார்க்க முடியும்.அந்த TRPல் நடந்த பித்தலாட்டத்தை தான் பார்க்க போகிறோம்..

TRP என்றால் என்ன?

குறிப்பிட்ட அந்த டி.வி சேனலை எவ்வளவு மக்கள் பார்க்கிறார்கள் என்பதை வைத்து BARC ஒரு Rating கொடுக்கும்.
இந்த Rating,ஒவ்வரு வியாழக்கிழமையும் BARC வெளியிடும்.அன்னைக்கு தேதிக்கு எல்லா செய்தி ஆசிரியர்களும்,நம்ம சேனல் எந்த இடத்தில் இருக்க போகிறதோ! என டென்சனாக இருப்பாங்க.😐

இந்த TRP வச்சி என்ன பயன்?

TRP லிஸ்டில் எந்த சேனல் Top'ல இருக்கோ,அந்த சேனலுக்கு விளம்பரதாரர் விளம்பரம் கொடுக்க
லைன்ல நிற்பாங்க!அதுக்கு காரணம் TRP Direct /Indirect ஆக மக்கள் TRP லிஸ்ட்டில் முதலில் இருக்கும் சேனலை தான் அதிகம் பார்க்கிறார்கள் என சொல்கிறது.இப்போ புரிகிறதா?

இங்க விசயம் இருக்கு :

TRP என்பது மக்கள் அதிகம் பார்ப்பதை குறிக்கிறது.சரி அப்போ மீடியா பரப்பரப்பை கொடுக்கிறது என்றால்
Read 11 tweets
30 Sep 20
பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட செயல் இல்லை என்கிறது நீதிமன்றம்!

சாட்சியங்கள் சொல்வது என்ன?

பிரவீன் ஜெயின் என்ற Photo Journalist பல கலவரங்களை ஆவணப்படுத்தியவர். அவர் சொல்கிறார்,பாபர் மசூதி இடிக்கப்படும் முன் Rehersal பார்க்கப்பட்டது என்றும்,அதை தான் பார்த்தாகவும் சொல்கிறார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளுக்கு முன்,Press Meet நடத்திய Ashok Singhal (VHP) சதித்திட்ட ரீதியில் சிரிச்சிகிட்டே,"என்ன நடக்க போகிறது என பாருங்க"என சொன்னார்.
BL Sharma என்ற VHP Leader December 5 அன்று என்னை வர சொல்லி இருந்தார்! அன்னைக்கு எந்த பத்திர்க்கையாளரும் அனுமதிக்கப்படவில்லை
BL Sharma எனக்கு VHP ID Card வாங்கி கொடுத்தார்,அதை வச்சி தான் நான் உள்ளே போனேன்,கீழே இருக்கும் படம் பாபர் மசூதி இடிக்கப்படபோது எடுத்தது இல்லை, Rehersal'ன் போது எடுக்கப்பட்டது! திட்டமிட்டே டிசம்பர் -6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக சொல்கிறார் Photo Journalist Praveen.
Read 7 tweets
1 Sep 20
நான் இதுவரை,அரசியல் தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள் என பல பேட்டி,எடுத்திருந்தாலும் அதில் முக்கியமான பேட்டி,மறைந்த அனிதாவின் அண்ணன் மற்றும் அவரது அப்பாவின் பேட்டி!

நேரில்,இங்கு இருந்து அரியலூர் போய் தான் பேட்டி எடுத்தேன்,அனிதா மறைந்தது September -01,
பேட்டி ஒரு மாதம் கழித்து,October மாதத்தில் எடுத்தேன், அரியலூரில் அனிதா வீட்டுக்கு ஒரு ஆட்டோவில் தான் போனோம்,அது ஒரு கிராமம்,போகும் வழி முழுவதும் சாலையெல்லாம் கிடையாது,பல்லாங்குழி சாலை தான்,அங்க அங்க ஆள் நடமாட்டத்தை பார்த்தேன்,வழி எங்கும் அனிதா மறைந்த சோகத்தில் ஊரையே காலி பண்ணி
போய்டாங்களோ என நினைக்கவைச்சிது,அவ்வளவு.அமைதியான கிராமம்,முதல்ல அந்த கிராமத்துக்கு போறவங்க உணர்வு அப்படி இருக்கலாம்! அனிதா வீட்டை தான் முதலில் பார்த்தேன்,ரொம்ப சின்ன அளவில் இருந்தது,அங்கே தான் அனிதாவின் படத்துக்கு மாலை போட்டு தொங்கவிட்டு இருந்தாங்க!

அனிதா அண்ணன்-அவரது அப்பா-
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!