மனித ஸ்வபாவத்தில் பொறாமை முக்கிய பங்குக்கொண்டது. பிறரது அழகு,சந்தோஷம்,செல்வம்,அந்தஸ்து,தாராள குணம், சாமர்த்தியம்,எதைக்கண்டாலும் நம்மிடம் அது இல்லையே என்ற எண்ணம் பொறாமைத்தீயாக வளர்கிறது.நெருப்பு எப்போதுமே அருகிலே உள்ளதைத்தான் முதலில் அழிக்கும்,எரித்து சாம்பலாக்கும்.
இந்த பொறாமைத்தீ அப்படியல்ல.அதைவிடக் கொடியது.
பொறாமைப்படுபவனை அப்பளம் மாதிரி வாட்டிவதைக்கும், துன்புறுத்தும்,நிம்மதியில்லாமல் கோபப்பெருமூச்சு விடவைக்கும்.
மஹாராஷ்டிராவில் தேஹு கிராமத்தில்,நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. அங்கேதான் துக்காராம் என்ற பாண்டுரங்க பக்தன் வசித்துவந்தார்.அவரது பக்தியைக்கண்டு வியந்து,துக்காராமின் அபங்க பஜனையில் தங்களை மறந்து ஆனந்தக்கண்ணீர் பெருகி,பக்தியில் மூழ்காதவர்களே கிடையாது.
எங்கிருந்து எல்லாமோ,அவரைப்பற்றி கேள்விப்பட்டு,சாதுக்களும் பாகவதர்களும் கூட,அவரிடமிருந்து அபங்கம் பாட கற்றுக்கொள்ள பெருகிவிட்டனர்.ஆனால் அதே தேஹு கிராமத்தில் வாழ்ந்த ராமேஸ்வர பட் என்பவருக்கு, இந்த துக்காராம் விஷயங்கள் கொஞ்சமும் பிடிக்கவில்லை. பட் நன்றாக ஸமஸ்க்ரிதம் அறிந்தவர்.
பிரசங்கங்கள் பண்ணுவார்.ஆனால் அவருடைய பிரசங்கங்களுக்கு உள்ளூர் ஆட்கள் கூட வருவதில்லை.துக்காராமின் பஜனைக்கு மட்டும் நிறையபேர் வருவது 'பட்' டுக்கு பொறுக்கவில்லை.
துக்காராம் படிக்காதவர், ஸம்ஸ்க்ரிதமே தெரியாதவர், மராத்தியில் தானாகவே இட்டுகட்டி பாண்டுரங்கனைப் பற்றி பாடுபவர்,
தன்னுடைய அபங்கத்தால் இந்த ஊரையே, உலகத்தையே கெடுக்கிறாரே! என்று பட் புலம்பினார். இது பரவலாக துக்காராமின் காதிலும் விழ,அவர் ஓடிச்சென்று ராமேஸ்வர் பட் காலில் விழுந்து வணங்கினார்."நான் ஏதாவது தப்பு செய்துவிட்டேனா சுவாமி?”
“என்னய்யா சொல்கிறீர்?தப்பைத்தவிர வேறொன்றுமே செய்யவில்லையே
ஐயா நீர். உனக்கு கொஞ்சமாவது சாஸ்திரம் தெரியுமா? புராணம் தெரியுமா? சொந்தமாக ஏதாவது மனதில் தோன்றியபடி, கற்பனையாக மற்றவர்க்கு பிரசங்கம் செய்வது பெரும் பாபம். இதை கேட்பவர்க்கும் அந்தப்பாபம் போய் சேருகிறதே? இதை கொஞ்சமாவது உணர்ந்தாயா?” கத்தினார் பட்.
“அப்படியா?இது எனக்கு தெரியவில்லையே சுவாமி.நான் அறிவிலி, படிக்காத முட்டாள்.நீங்கள் நன்றாக படித்த மகான்.தயவுசெய்து என் தவறுகளை மன்னித்து,நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்” என்று கண்ணீர் மல்க கேட்டார் துக்காராம்" "இனிமேல் நீ ஒரு அபங்கமும் எழுதவோ பாடவோ கூடாது.
இதுவரை எழுதியதை எல்லாம் தூக்கி நீரில் எறிந்துவிடு.பாபத்தை குறைத்துக்கொள்". துக்காராம் சரியென்று தலையாட்டி வணங்கிவிட்டு,நேராக பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் முன்சென்று கைகட்டி நின்றார். கண்ணீர் மல்க: "விட்டலா,பாண்டுரங்கா,நான் அறியாமல்செய்த பிழையை பொறுத்துக்கொண்டு,
என்னை மன்னிப்பாயாக.இனி நான் நன்றாக கற்ற ராமேஸ்வர் பட் சொன்னது போலவே நடக்கிறேன்.எனக்கு உன் நாமத்தைத்தவிர வேறு எதுவும் தெரியாதே.அதைத்தானே எனக்கு தெரிந்த மராத்தியில், மனம்போன போக்கில் இத்தனை நாட்களாக பாடிக்கொண்டு எனை மறந்திருந்தேன்.
அந்தப்பெரியவர் எப்போது நான் செய்வது பாபம் என்று உணர்த்தி விட்டாரோ,இனியும் அதை பண்ணமாட்டேன்.நான் செய்த தவறை மன்னித்துவிடு”. அழுது கொண்டே தன்னுடைய ஒரே செல்வமான, கண்ணின் மணியான, விட்டலன் அபங்கங்களை எல்லாம் எடுத்து மூட்டைக்கட்டி,இந்த்ராயணி ஆற்றில் எறிந்துவிட்டார்.
ஆற்றங்கரையில் சோகமாக அமர்ந்தார்."வெகு நேரமாக உங்களை காணோமே,இங்கே அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். வாருங்கள் வீட்டுக்கு” என்று மனைவி ஜீஜா,அவரைத் தேடிக்கொண்டு அங்கே வந்து அவரை வீட்டுக்கு அழைத்துப் போனாள்.சிறகொடிந்த பறவையாக வாய் மட்டும்,
“பாண்டுரங்கா,விட்டலா” என்று ஸ்மரணை செய்துகொண்டே தூங்கிப்போனார் துக்காராம்.இரவு கழிந்தது.பொழுது விடிந்தது. சில மணிநேரங்களில் யாரோ வந்து கதவை தட்டினார்கள்.
“துக்காராம்,துக்காராம்,இங்கே வாருங்கள்” என்று உணர்ச்சி வசத்தோடு பாண்டுரங்கன் ஆலய பிரதம அர்ச்சகர் வாசலில் நின்றார்.
அவரது கையில் துக்காராம் இந்த்ராயணி ஆற்றில் எறிந்த அபங்க சுவடிகளின் மூட்டை."இது என்ன சுவாமி? ஏன் நான் செய்த பாபங்களை ஆற்றிலிருந்து மீட்டு எடுத்து கொண்டுவந்தீர்கள்?"என்றுஅதிர்ச்சியோடு கேட்டார் துக்காராம்.
“துக்காராம்ஜி, நாங்கள் யாருமே எந்த ஆற்றிலிருந்தும் எதையும் எடுத்து வரவில்லை.பாண்டுரங்கன் தானே போய்,ஆற்றில் இறங்கி இந்த மூட்டையை எடுத்துவந்து,தன் தலையில் சுமந்து ஈரம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்தார். இன்று காலை வழக்கம்போல் கதவை திறந்து சுப்ரபாதம் சேவை செய்ய நுழைந்தபோது,
இதைப்பார்த்து திகைத்தேன். கர்ப்ப கிரஹத்தில் ஒரே ஜலம். எங்கிருந்து நீர் வழிகிறது?விக்ரஹத்தின் மேல் என்று தெரிந்தது. என்னது இந்த மூட்டை? எப்படி பாண்டுரங்கன் தலைமேல் வந்தது? கதவை பூட்டியதும் திறந்ததும் நான்தானே என்று அதை எடுத்து அவிழ்த்துப் பார்த்தபோது தான் தெரிந்தது.
அவைகள் நீங்கள் எழுதிய அபங்கங்கள் என்று. எங்கோ ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று எடுத்துக்கொண்டு ஓடோடி வந்தேன். நீங்கள் ஈடற்ற பாண்டுரங்க பக்தர் என்று எனக்கு தெரியுமே" என்றார் கோவில் அர்ச்சகர்.விட்டலா,எனை மன்னித்து விட்டாயா.உன் கருணையே கருணை.துக்காராம் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.
ஊர் முழுதும் இந்த அதிசயம் காட்டுத்தீ போல் பரவி,ராமேஸ்வர் பட் காதிலும் விழ,அடித்து பிடித்துக்கொண்டு அவர் துக்காராமிடம் வந்து கண்ணீர் பெருக காலில் விழுந்தார். “நீங்கள் எவ்வளவு பெரிய மகாத்மா,பாண்டுரங்கனின் அபிமானம் நிறைந்த பக்தர்.
பகவானே உங்கள் அபங்கங்களை ஆற்றிலிருந்து மீட்டு தன் தலையில் சுமந்துநின்றார் என்றபோது என் அறியாமையை உணர்ந்தேன்.நானே மகாபாபி.பொறாமைப்பிடித்தவன்.என்னை மன்னிக்கவேண்டும்”என்று கதறினார்."அபச்சாரம் சுவாமி.நீங்கள் சாஸ்த்ரங்கள் உணர்ந்த பண்டிதர்.நான் அறிவிலி.என் காலில் விழுவது அபசாரம்.
பாண்டுரங்கா, விட்டலா” என்று கண்களில் நீர்பெருக அவனை நன்றியோடு வணங்கினார் துக்காராம். இப்படி பாண்டுரங்க விட்டலன் நிறைய பக்தர்களுடன் விளையாடுகிறான். விட்டலா! விட்டலா!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நாரதர் ஒரு சமயம் "கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்மஞானி தேவரிஷியாகிய நானும் மாயையால் பாதிக்கப்படுவேனா?"என்று கேட்டார்.கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,
சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தை சுட்டிக்காட்டி,"நாரதரே!அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்"என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே,நாரதர் தன் கையில் இருந்த மகதி என்ற வீணையை,குளக்கரையில் வைத்துவிட்டு,குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.மூழ்கி எழுந்தாரோ இல்லையோ,
அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்!தான் நாரதர் என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று.குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.இப்போது நாரதப் பெண்,குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள்.அந்த வழியாக அந்த நாட்டு அரசன்,
"கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்" எம்ஜிஆர் போட்ட கட்டளை. நடுங்கியது படக்குழு. மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும்,கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது.இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாகச் சொன்னார்.
“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுதவேண்டும்.அவரால் மட்டுமே நான் நினைப்பதை,வரிகளாகக் கொண்டு வர முடியும்.”எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள்."சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்.அதை,மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு,எழுதச்சொன்னால் எப்படி? சரி எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்.வேறு வழி இல்லை. படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள்.சிரித்தார் கண்ணதாசன்.
பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்! அந்தகால வழக்கப்படி,போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை-மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும்.போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும்.தேரோட்டிகள் கீழே இறங்கி,மண்டியிட்டு நிற்பார்கள்.மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும்,
தேர்ப்பாகன் மன்னனை வணங்கி,மாலையிட்டு,வெற்றிக்கோஷம் முழங்குவான்.அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு,மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள்.குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின்,வெற்றிகண்ட பாண்டவ சகோதரர்களுக்காக,
இந்த விழா ஏற்பாடாகி இருந்தது.தர்மன்,பீமன்,அர்ஜுனன்,நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன. மரியாதை விழாச்சடங்குகள் ஆரம்பமாயின.தர்மரின் தேரின் முறை முடிந்தபின்,பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான்.பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான்
மரணத்துக்குப் பின்,தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,"தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்கு,செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் அவன்பக்கம் போர்ப்புரிந்தேன்.ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான், "இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்துவிட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட, உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
"க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால்தான் சொல்கிறோம்.
அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும், முரண்பாடு வருகையில், விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும்.
நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு,
புத்த குருமார்களை வாதத்தில் வென்று சைவத்தை நிலைநாட்டி, தில்லையிலேயே சிவதொண்டு புரிந்து சிவனையே நினைந்துருகி வாழ்ந்து வந்தார் திருவாதவூரார் எனும் மாணிக்கவாசகர். வழக்கம்போல் தில்லைநாதனை ஆலயத்தினுள் வேண்டிவிட்டு, திருக்கோவிலின் மண்டபத்தில் அமர்ந்திருந்தார்.
அப்பொழுது முப்புரிநூல் தரித்த உடல்,முகம் முழுக்க பிரகாசமளிக்கும் திருநீறு என வேதியர் வடிவில் அந்தணர் ஒருவர்,
மாணிக்கவாசகரிடம் தன் வணக்கத்தைச் செலுத்தி, "ஐயா!நான் இந்த ஊரைச் சார்ந்த அந்தணன்.தங்களின் பாடலைப் பலமுறை கேட்டுள்ளேன்.அதை நானும் பாராயணம் செய்ய விரும்புகிறேன்.
அதற்காக உங்களின் பாடலைக் குறிப்பாய்,எழுதிக்கொள்ள விருப்பம் கொண்டு இங்கு வந்துள்ளேன்.தாங்கள் எழுதிய 'திருவாசகத்தை',நீங்களே ஒருமுறை சொன்னால்,அப்படியே ஓலைச்சுவடிகளில் நான் எழுதிக் கொள்கிறேன்"என்று அந்தணர் அன்புடன் கேட்டார்.
ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்குத் தமிழில் அர்த்தம் சொல்வதென்றால்,"ஒரு மனிதரைப் பற்றியோ,ஒரு பொருளைப் பற்றியோ,ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம் அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், "கருத்து" எனலாம்.
அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியாகத்தான் இருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமில்லை.கண்ணால் காண்பதும் பொய்.காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதும்கூட 100% மெய் என்று சொல்வதற்கில்லை,அதற்குரிய தெளிவான அறிவு இல்லையென்றால். ஸ்டீவன் கோவி என்பவர் எழுதிய நூலில்,
ஒரு சம்பவத்தை உதாரணமாகக் காட்டி இதை விளக்குகிறார்.
ஒரு ஞாயிறு காலை வேளையில் அவர் நியூயார்க் நகர சுரங்க ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.பயணிகளில் சிலர் செய்தித்தாள்களை புரட்டிக்கொண்டிருந்தனர்.சிலர் ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தனர்.சிலர் கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுத்தனர்.