நாரதர் ஒரு சமயம் "கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்மஞானி தேவரிஷியாகிய நானும் மாயையால் பாதிக்கப்படுவேனா?"என்று கேட்டார்.கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,
சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தை சுட்டிக்காட்டி,"நாரதரே!அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்"என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே,நாரதர் தன் கையில் இருந்த மகதி என்ற வீணையை,குளக்கரையில் வைத்துவிட்டு,குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.மூழ்கி எழுந்தாரோ இல்லையோ,
அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்!தான் நாரதர் என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று.குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.இப்போது நாரதப் பெண்,குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள்.அந்த வழியாக அந்த நாட்டு அரசன்,
குதிரையில் வேகமாக வந்தான்.அவன் இளைஞன்,அழகானவன். நாரதப் பெண்ணை அவன் பார்த்தான்.அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான்.நான் இந்த நாட்டின் அரசன்.உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்,உனக்குச் சம்மதமா? என்று கேட்டான்.நாரதப் பெண் மவுனமாகத் தலையசைத்து,
தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.அரசன் அவளைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச்சென்றான்.இருவருக்கும் முறைப்படி திருமணம் விமரிசையாக நடந்தது.இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.ஒரு சமயம் பக்கத்து நாட்டு அரசன்,
இந்த நாட்டு அரசன் மீது போர் தொடுத்தான்.இருதரப்புக்கும் கடுமையாகப் போர் நடந்தது.போர்க்களத்தில் நாரதப் பெண்ணின் கணவன் கொல்லப்பட்டான்.அதைத் தொடர்ந்து,நாரதப் பெண் இருந்த நாட்டின் தலைநகரை,கைப்பற்றுவதற்கு பகைவர்கள் விரைந்து வந்தார்கள்.அப்போது வீரர்கள் சிலர்,
போர்க்களத்தில் இருந்து தப்பி அரண்மனைக்கு வந்து நாரதப் பெண்ணிடம்,"அரசியாரே!போரில் நமது அரசர் கொல்லப்பட்டார்! பகைவர்கள் அரண்மனையை கைப்பற்ற நெருங்கி வந்துக் கொண்டிருக்கிறார்கள்! உங்களையும்,நமது அரச குமாரர்களையும், பகைவர்கள் சிறை பிடிப்பதற்குள் இங்கிருந்து நீங்கள் தப்பிச்
சென்றுவிடுங்கள்"என்று கூறினர்.நாரதப் பெண்ணும், தன் குழந்தைகளுடன் அரண்மனையிலிருந்து தப்பி ஓடினாள்.ஆனாலும், பகைவர்கள் இதை அறிந்துவிட்டனர்.அவளை தேடிச்சென்றனர். அவர்கள் தன்னைத் துரத்திவரும் சப்தம் அவளுக்குக் கேட்டது.அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வேகவேகமாக அருகிலிருந்த காட்டிற்குள்
ஓடினாள்.விரைந்து ஓடியபோது,அவள் தன் மூத்தமகனின் கையைத் தவறவிட்டாள்.இப்போது அவள் தன் ஒரு குழந்தையை மார்போடு அணைத்தபடியே ஓடிக்கொண்டிருந்தாள்.இதற்குள் பகைவர்கள் அவளை மிகவும் நெருங்கிவிட்ட ஆரவாரம் கேட்டது.இதனால் பயந்து வேகத்தை அதிகரித்தபோது,அவள்கையில் இருந்த குழந்தையும் தவறி கீழே
விழுந்தது.குழந்தையை எடுக்க முடியவில்லை.பகைவர்களிடம் சிக்காமல் தப்ப கல்லிலும் முள்ளிலும் விழுந்தாள்.அதனால் உடலில் பலமான காயங்கள் ஏற்பட்டன.நீண்ட தூரம் ஓடிய பிறகு, பகைவர்கள் துரத்தி வந்த சப்தம் கேட்கவில்லை.எதிரிகளிடம் தப்பியதை அவள் உணர்ந்தாள்.
காட்டிலிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து தன் நிலையை நினைத்து அவள்,ஐயோ!என் நிலை இப்படி ஆகிவிட்டதே! நான் என் கணவரை இழந்துவிட்டேன்!குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டேன். நாட்டையும் பகைவர்கள் பிடித்து விட்டார்கள்.ஆதரவற்ற அநாதையாக நான் இப்போது இருக்கிறேன்.இனிமேல் நான் யாருக்காக,
உயிர் வாழ வேண்டும்?கல்லிலும் முள்ளிலும் அடிபட்டு உடல் முழுவதும் ஏற்பட்ட இந்தக் காயங்களின் வலியை என்னால் பொறுக்க முடியவில்லை.பசியும் தாகமும் என்னை வருத்துகின்றன! என்று பலவாறுக் கூறி கதறி அழுதாள்.
அப்போது கிருஷ்ணர் ஒரு முதியவர் வடிவத்தில் அங்கு வந்து,"அம்மா! நீ யார்? ஏன் இப்படி இந்தக் காட்டில் தனிமையில் அழுதுகொண்டி ருக்கிறாய்?"என்று கேட்டார்.நாரதப் பெண்,தன்னுடைய அவல நிலையை அவரிடம் கூறி அழுதாள்.முதியவர் அவளிடம்,"அம்மா! அதோ தெரியும் அந்தக்குளத்தில் நீராடி விட்டு வா!
அதனால் உனக்கு நன்மை ஏற்படும்"என்று தெரிவித்தார்.முதியவர் கூறியபடியே நாரதப் பெண் குளத்தில் மூழ்கி எழுந்தாள்.உடனே நாரதப் பெண் உருவம் மாறி,பழைய நாரதர் வடிவம் கொண்டார். அவருக்கு நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தன.குளத்தின் படிகளில் ஏறி வந்த நாரதர்,குளக்கரையில் தான் வைத்துச்சென்ற,
வீணையை எடுத்துக் கொண்டார்.சற்று தூரத்தில் கிருஷ்ணர் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தார்.நடந்ததையெல்லாம் நாரதர் நினைத்துப் பார்த்தபடியே கிருஷ்ணரிடம் சென்று,"பகவானே! நான் கர்வம் கொண்டதற்கு என்னை மன்னியுங்கள். உங்கள் மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்பது உண்மை தான்.
மாயைக்கு நான் ஒருபோதும் வசப்படாமல் இருக்க வேண்டும் என்று என்னை ஆசீர்வதியுங்கள்"என்று வணங்கிக் கேட்டுக்கொண்டார். கிருஷ்ணரும் நாரதரின் பிரார்த்தனையை ஏற்று ஆசீர்வதித்தார்.
வாழ்க்கை என்று ஒன்று இருக்கும் வரை, மாயை இருக்கும்.இதில் இருந்து விடுபட ஒரே வழி இறைவனைச் சரணடைவதுதான்.
முக்குணங்களால் ஆகிய என்னுடைய இந்த மாயை தெய்வீகமானது, யாராலும் கடப்பதற்கு அரிதானது.ஆனால் யார் என்னையே எப்பொழுதும் சரணடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடந்து விடுகிறார்கள்.
மனித ஸ்வபாவத்தில் பொறாமை முக்கிய பங்குக்கொண்டது. பிறரது அழகு,சந்தோஷம்,செல்வம்,அந்தஸ்து,தாராள குணம், சாமர்த்தியம்,எதைக்கண்டாலும் நம்மிடம் அது இல்லையே என்ற எண்ணம் பொறாமைத்தீயாக வளர்கிறது.நெருப்பு எப்போதுமே அருகிலே உள்ளதைத்தான் முதலில் அழிக்கும்,எரித்து சாம்பலாக்கும்.
இந்த பொறாமைத்தீ அப்படியல்ல.அதைவிடக் கொடியது.
பொறாமைப்படுபவனை அப்பளம் மாதிரி வாட்டிவதைக்கும், துன்புறுத்தும்,நிம்மதியில்லாமல் கோபப்பெருமூச்சு விடவைக்கும்.
மஹாராஷ்டிராவில் தேஹு கிராமத்தில்,நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. அங்கேதான் துக்காராம் என்ற பாண்டுரங்க பக்தன் வசித்துவந்தார்.அவரது பக்தியைக்கண்டு வியந்து,துக்காராமின் அபங்க பஜனையில் தங்களை மறந்து ஆனந்தக்கண்ணீர் பெருகி,பக்தியில் மூழ்காதவர்களே கிடையாது.
"கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்" எம்ஜிஆர் போட்ட கட்டளை. நடுங்கியது படக்குழு. மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும்,கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது.இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாகச் சொன்னார்.
“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுதவேண்டும்.அவரால் மட்டுமே நான் நினைப்பதை,வரிகளாகக் கொண்டு வர முடியும்.”எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள்."சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்.அதை,மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு,எழுதச்சொன்னால் எப்படி? சரி எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்.வேறு வழி இல்லை. படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள்.சிரித்தார் கண்ணதாசன்.
பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்! அந்தகால வழக்கப்படி,போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை-மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும்.போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும்.தேரோட்டிகள் கீழே இறங்கி,மண்டியிட்டு நிற்பார்கள்.மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும்,
தேர்ப்பாகன் மன்னனை வணங்கி,மாலையிட்டு,வெற்றிக்கோஷம் முழங்குவான்.அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு,மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள்.குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின்,வெற்றிகண்ட பாண்டவ சகோதரர்களுக்காக,
இந்த விழா ஏற்பாடாகி இருந்தது.தர்மன்,பீமன்,அர்ஜுனன்,நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன. மரியாதை விழாச்சடங்குகள் ஆரம்பமாயின.தர்மரின் தேரின் முறை முடிந்தபின்,பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான்.பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான்
மரணத்துக்குப் பின்,தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,"தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்கு,செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் அவன்பக்கம் போர்ப்புரிந்தேன்.ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான், "இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்துவிட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட, உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
"க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால்தான் சொல்கிறோம்.
அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும், முரண்பாடு வருகையில், விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும்.
நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு,
புத்த குருமார்களை வாதத்தில் வென்று சைவத்தை நிலைநாட்டி, தில்லையிலேயே சிவதொண்டு புரிந்து சிவனையே நினைந்துருகி வாழ்ந்து வந்தார் திருவாதவூரார் எனும் மாணிக்கவாசகர். வழக்கம்போல் தில்லைநாதனை ஆலயத்தினுள் வேண்டிவிட்டு, திருக்கோவிலின் மண்டபத்தில் அமர்ந்திருந்தார்.
அப்பொழுது முப்புரிநூல் தரித்த உடல்,முகம் முழுக்க பிரகாசமளிக்கும் திருநீறு என வேதியர் வடிவில் அந்தணர் ஒருவர்,
மாணிக்கவாசகரிடம் தன் வணக்கத்தைச் செலுத்தி, "ஐயா!நான் இந்த ஊரைச் சார்ந்த அந்தணன்.தங்களின் பாடலைப் பலமுறை கேட்டுள்ளேன்.அதை நானும் பாராயணம் செய்ய விரும்புகிறேன்.
அதற்காக உங்களின் பாடலைக் குறிப்பாய்,எழுதிக்கொள்ள விருப்பம் கொண்டு இங்கு வந்துள்ளேன்.தாங்கள் எழுதிய 'திருவாசகத்தை',நீங்களே ஒருமுறை சொன்னால்,அப்படியே ஓலைச்சுவடிகளில் நான் எழுதிக் கொள்கிறேன்"என்று அந்தணர் அன்புடன் கேட்டார்.
ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்குத் தமிழில் அர்த்தம் சொல்வதென்றால்,"ஒரு மனிதரைப் பற்றியோ,ஒரு பொருளைப் பற்றியோ,ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம் அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், "கருத்து" எனலாம்.
அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியாகத்தான் இருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமில்லை.கண்ணால் காண்பதும் பொய்.காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதும்கூட 100% மெய் என்று சொல்வதற்கில்லை,அதற்குரிய தெளிவான அறிவு இல்லையென்றால். ஸ்டீவன் கோவி என்பவர் எழுதிய நூலில்,
ஒரு சம்பவத்தை உதாரணமாகக் காட்டி இதை விளக்குகிறார்.
ஒரு ஞாயிறு காலை வேளையில் அவர் நியூயார்க் நகர சுரங்க ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.பயணிகளில் சிலர் செய்தித்தாள்களை புரட்டிக்கொண்டிருந்தனர்.சிலர் ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தனர்.சிலர் கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுத்தனர்.