”அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்களில் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்”
- என்று கவியரசர் கண்ணதாசன் எப்போதும் சிலாகித்துச் சொன்ன, கண்ணன் எனும் மன்னன்,ஒருநாள் தர்மரை அழைத்துச் சொன்னார்.
"தர்மா! தீயவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப்பிடித்து, இங்கே அழைத்துக்கொண்டு வா!”
அதை உடனேச் செய்து, கண்ணனை மகிழ்விக்க அவர் விரைந்தார்.
அதே போல துரியோதனனையும் அழைத்த கண்ணன் சொன்னார்.
"துரியோதனா! நல்லவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத்
தேடிப்பிடித்து, இங்கே அழைத்துக்கொண்டு வா!”
துரியோதனனும் அவ்வாறே செய்வதற்கு விரைந்தான். பரந்தாமன் சொன்னது காலை நேரத்தில். அன்று மாலை, விளக்கு வைக்கும் நேரத்திற்குத் திரும்பி வந்த தர்மர் சொன்னார், "க்ருஷ்ணா எனக்குத்தெரிந்த அத்தனைப் பேர்களையும் நினைத்துப் பார்த்துவிட்டேன்.
அதோடு வெளியில் தேடியும் பார்த்துவிட்டேன். ஒரு தீயவன் கூட என் கண்ணில் படவில்லை.நெஞ்சில் நினைவிற்கும் வரவில்லை”.
புன்னகைத்த கண்ணன்,அவரைப் பிறகு வரச்சொல்லி அனுப்பி விட்டார். சற்று நேரத்தில் அங்கே வந்த துரியோதனனும், அதையே சொன்னான்.
எனக்குத்தெரிந்த அத்தனைப் பேர்களையும் நினைத்துப் பார்த்துவிட்டேன். அதோடு வெளியில் தேடியும் பார்த்துவிட்டேன். ஒரு நல்லவன் கூட என் கண்ணில் படவில்லை. நெஞ்சில் நினைவிற்கும் வரவில்லை”. புன்னகைத்த கண்ணன் மெல்லிய குரலில் சொன்னார்,
"துரியோதனா, உன் தாய்மாமன் சகுனி, உனக்கு எவ்வளவு நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். அவர்கூட உனக்கு நல்லவராகத் தெரியவில்லையா?”. துரியோதனன் வெட்கித் தலைகுனிந்தான்.
அடுத்து தர்மரை அழைத்த பரந்தாமன் சொன்னார்,"உங்களுக்குப் பல தீங்குகளைச் செய்த துரியோதனன்,உனக்குத் தீயவனாகத் தெரியவில்லையா?உங்கள் அன்பிற்குப் பாத்திரமான பாஞ்சாலியின் துகிலை உரிய முற்பட்ட துச்சாதனன் உனக்குத் தீயவனாகத் தெரியவில்லையா?”. தர்மர் ஒன்றும் சொல்லாமல் திகைத்துப்போய் நின்றார்.
நடந்ததை முழுவதுமாக தர்மரிடம் சொன்ன பரந்தாமன், முத்தாய்ப்பாக இப்படிச் சொன்னார்.
“நல்லவர்களுக்கு எல்லாமுமே நல்லதாகத்தான் தெரியும். தீயவர்களுக்கு எல்லாமுமே தீயதாகத்தான் தெரியும்"
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நாரதர் ஒரு சமயம் "கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்மஞானி தேவரிஷியாகிய நானும் மாயையால் பாதிக்கப்படுவேனா?"என்று கேட்டார்.கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,
சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தை சுட்டிக்காட்டி,"நாரதரே!அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்"என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே,நாரதர் தன் கையில் இருந்த மகதி என்ற வீணையை,குளக்கரையில் வைத்துவிட்டு,குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.மூழ்கி எழுந்தாரோ இல்லையோ,
அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்!தான் நாரதர் என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று.குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.இப்போது நாரதப் பெண்,குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள்.அந்த வழியாக அந்த நாட்டு அரசன்,
மனித ஸ்வபாவத்தில் பொறாமை முக்கிய பங்குக்கொண்டது. பிறரது அழகு,சந்தோஷம்,செல்வம்,அந்தஸ்து,தாராள குணம், சாமர்த்தியம்,எதைக்கண்டாலும் நம்மிடம் அது இல்லையே என்ற எண்ணம் பொறாமைத்தீயாக வளர்கிறது.நெருப்பு எப்போதுமே அருகிலே உள்ளதைத்தான் முதலில் அழிக்கும்,எரித்து சாம்பலாக்கும்.
இந்த பொறாமைத்தீ அப்படியல்ல.அதைவிடக் கொடியது.
பொறாமைப்படுபவனை அப்பளம் மாதிரி வாட்டிவதைக்கும், துன்புறுத்தும்,நிம்மதியில்லாமல் கோபப்பெருமூச்சு விடவைக்கும்.
மஹாராஷ்டிராவில் தேஹு கிராமத்தில்,நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. அங்கேதான் துக்காராம் என்ற பாண்டுரங்க பக்தன் வசித்துவந்தார்.அவரது பக்தியைக்கண்டு வியந்து,துக்காராமின் அபங்க பஜனையில் தங்களை மறந்து ஆனந்தக்கண்ணீர் பெருகி,பக்தியில் மூழ்காதவர்களே கிடையாது.
"கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்" எம்ஜிஆர் போட்ட கட்டளை. நடுங்கியது படக்குழு. மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும்,கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது.இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாகச் சொன்னார்.
“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுதவேண்டும்.அவரால் மட்டுமே நான் நினைப்பதை,வரிகளாகக் கொண்டு வர முடியும்.”எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள்."சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்.அதை,மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு,எழுதச்சொன்னால் எப்படி? சரி எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்.வேறு வழி இல்லை. படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள்.சிரித்தார் கண்ணதாசன்.
பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்! அந்தகால வழக்கப்படி,போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை-மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும்.போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும்.தேரோட்டிகள் கீழே இறங்கி,மண்டியிட்டு நிற்பார்கள்.மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும்,
தேர்ப்பாகன் மன்னனை வணங்கி,மாலையிட்டு,வெற்றிக்கோஷம் முழங்குவான்.அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு,மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள்.குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின்,வெற்றிகண்ட பாண்டவ சகோதரர்களுக்காக,
இந்த விழா ஏற்பாடாகி இருந்தது.தர்மன்,பீமன்,அர்ஜுனன்,நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன. மரியாதை விழாச்சடங்குகள் ஆரம்பமாயின.தர்மரின் தேரின் முறை முடிந்தபின்,பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான்.பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான்
மரணத்துக்குப் பின்,தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,"தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்கு,செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் அவன்பக்கம் போர்ப்புரிந்தேன்.ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான், "இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்துவிட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட, உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
"க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால்தான் சொல்கிறோம்.
அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும், முரண்பாடு வருகையில், விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும்.
நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு,
புத்த குருமார்களை வாதத்தில் வென்று சைவத்தை நிலைநாட்டி, தில்லையிலேயே சிவதொண்டு புரிந்து சிவனையே நினைந்துருகி வாழ்ந்து வந்தார் திருவாதவூரார் எனும் மாணிக்கவாசகர். வழக்கம்போல் தில்லைநாதனை ஆலயத்தினுள் வேண்டிவிட்டு, திருக்கோவிலின் மண்டபத்தில் அமர்ந்திருந்தார்.
அப்பொழுது முப்புரிநூல் தரித்த உடல்,முகம் முழுக்க பிரகாசமளிக்கும் திருநீறு என வேதியர் வடிவில் அந்தணர் ஒருவர்,
மாணிக்கவாசகரிடம் தன் வணக்கத்தைச் செலுத்தி, "ஐயா!நான் இந்த ஊரைச் சார்ந்த அந்தணன்.தங்களின் பாடலைப் பலமுறை கேட்டுள்ளேன்.அதை நானும் பாராயணம் செய்ய விரும்புகிறேன்.
அதற்காக உங்களின் பாடலைக் குறிப்பாய்,எழுதிக்கொள்ள விருப்பம் கொண்டு இங்கு வந்துள்ளேன்.தாங்கள் எழுதிய 'திருவாசகத்தை',நீங்களே ஒருமுறை சொன்னால்,அப்படியே ஓலைச்சுவடிகளில் நான் எழுதிக் கொள்கிறேன்"என்று அந்தணர் அன்புடன் கேட்டார்.