நாம் தமிழரை ஆரம்பத்தில் திமுக புறக்கணிப்பது போல பாவனை காட்டியது, பிறகு நா.த.கவை எதிர்க்க
-திராவிட இயக்க முதியவர்களை இறக்கியது,
-பிறகு திராவிட சிறகு,இறகு, விறகுனு சிறு அமைப்புகளை இறக்கி பார்த்தது,
-பிறகு கூட்டணி கட்சிக்காரர்களை இறக்கியது,
-இப்ப நாடாளுமன்ற உறுப்பினர்களை இறக்குது.
ஸ்டாலின் அடிக்கடி ராஜீவ் காந்தியுடன் காட்சியளிக்கிறார், செந்தில்குமார் ராஜீவை மேய்த்து கொண்டிருக்கிறார். இதுவே அவரின் முழு நேர வேலையாக இருக்கிறது. வேறு எந்த கட்சிக்கும் இந்த கவனிப்பு இல்லை. திமுகவின் பதற்றம் வெளிப்படையாக தெரிகிறது.
கள நிலவரம் என்ன? இந்த பதற்றம் எதற்கு? இந்த கவனிப்பு எதை காட்டுகிறது? நாம் தமிழருக்காக திமுக இவ்வளவு நேரத்தையும் காலத்தையும் ஒதுக்குவது எதனால்? நாம் தமிழரின் வளர்ச்சி முதலில் பாதிப்பது திமுகவை தானே. அதனால் திமுக பதற தானே செய்யும்?
ராஜீவ் காந்தியை ஊர் ஊராக கொண்டு சென்று, பாருங்கள், நாம் தமிழரின் முன்னாள் உறுப்பினர் எங்களுடன் நிற்கிறார் என்று முழக்கம் இடுகிறார்கள். நாம் தமிழரில் இவர் சேர்ந்து விட்டார், அவர் சேர்ந்துவிட்டார், என்று வந்தவன் போனவனை எல்லாம் படம் பிடித்து விளம்பரப்படுத்துகிறார்கள்.
அந்த கிரீஸ் டப்பாக்களுடன் நின்று புகைப்படங்களுக்கு ஸ்டாலின் pose கொடுக்கிறார். தற்போது நாம் தமிழரில் இருப்பவர்களின் சாதி சான்றிதழ்களை தேடி அலசுகிறார்கள்., நாம் தமிழர் அண்ணன்மாரின் பெயர்களை ஒரு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டு,
இவர்கள் எல்லாம் யார் தெரியுமா என்று கேட்கிறார், சீமானை மட்டும் எதிர்த்த காலம் போய், இன்று அவர் தம்பி தங்கைகளையும் எதிர்க்க வேண்டிய தேவை நிர்பந்தம் திமுகவுக்கு வந்துவிட்டது.
நாம் தமிழருக்கு எதிராக மதத்தை வைத்து விளையாடினார்கள்,
பணத்தை வைத்து விளையாடினார்கள்,
இப்போது சாதியை வைத்து விளையாடுகிறார்கள்.
ஆனால்
இனத்தை பற்றி பேச மட்டும் அவர்களால் முடியவில்லை. அது தான் ஏனோ தெரியவில்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திமுக, நாம் தமிழரை எதிர்க்க ஒரு தனி பிரிவையே களம் இறக்கியிருக்கு. நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேச்சாளர்கள், இதர கூட்டணி கட்சி பிரமுகர்கள் என்று ஒரு பெரும் படையே நாம் தமிழரை சமாளிக்க களம் இறக்கப்பட்டிருக்கு. mrpaluvets.com/2021/02/blog-p…
சாதி, மதம், பணம் மூன்றும் ஒரு சேர அணிவகுத்து திமுகவின் அரணாக நிற்கிறது. ஆதிக்கம் எனும் யானைகள் மீது பண்ணையார்களின் மக்கள் அமர்ந்திருக்கின்றனர். ஊடகம் எனும் புரவி மேலே பல சாதியவாதிகள் ஊடறுக்க காத்திருக்கின்றனர்.
மெலிந்த கூட்டணி இதர கட்சிகள், பாரமான கேடயங்களை ஏந்தியப்படி பண்ணையார்களின் யானைகளுக்கு காவலாக நிற்கின்றனர்.
டாஸ்மாக் மதுவின் நாற்றத்தையும், வன்முறை, கலவர புழுதியையும், சுவாசித்தப்படி ஒரு பெரும் 'இருநூறுவர்' கூட்டம் அணிவகுத்து நிற்கிறது.
A large section of the so called moderates in the Sinhala Nation/ the "Colombo based Sri Lankans", seriously believe that the Sinhala military "liberated" the Tamils in 2009. Their entire reconciliation narrative is built upon this delusion.
The moderates in Colombo who don't have the courage to denounce the Sinhala Nationalist symbols that masquerade as symbols of some citizenry/civic nationalism, want us to be careful with our choice of symbols while resisting.
They have no problem, saluting their lion flag, they have no problem glorifying their military, but they do have a problem with us Tamils remembering our past, the dead, or collectively honouring the legacy of Tamil resistance.
▪️தமிழர்களின் பேரணி, திருமலைக்கு நகர்வு, முஸ்லிம்கள் நேற்று அமோக ஆதரவு
▪️சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலையில் பதாகை!
▪️புரட்சி எப்போதும் வெல்லும்! வரலாறு அதனை சொல்லும் நீதி பேரணிக்கு சீமான் ஆதரவு!
▪️தொடர்ச்சியான போராட்டமே தமிழர்கள் சர்வதேச நீதியை பெற ஒரே வழி.
A playlist of songs that celebrates and documents Tamil or Tamilness. (Links included)
ஆளப்போறான் தமிழன் is one of the most viewed/played Tamil songs in recent times. This song easily qualifies as a Tamil anthem.
Thamizh Anthem from LKG movie is another one of those underrated songs that celebrates the Tamil language. This song which was penned by Lyricist Pa.Vijay beautifully incorporates the Tamil Thaai Vaazhthu of Tamil Nadu in it too.
This song Aalankuruvigala from Bakrid documents the virtues & universality of Tamil morality.
நம்மோட முகத்து சாயலில
முன்னவங்க வாழ்ந்த தடம் இருக்கு...
...
அரும்பும் எறும்பும் நம் சொந்தம்
திரும்பும் திசை எல்லாம் ஆனந்தம்.
திராவிட தத்துவ அடிப்படைகளான சமூக நீதி, பெண்ணியம், இவற்றை விட்டு இன்றைய திராவிட இயக்கம், திராவிட கட்சிகள், கட்டமைப்புகள் விலகி விட்டது. தமிழ்த்தேசிய இனத்துக்கு துரோகம் இழைத்துவிட்டது என்பது தான் எனக்கு திராவிட அரசியல் மீதிருக்கும் விமர்சனம்.
திராவிட அடையாள அரசியல் இனி தமிழர் தேசத்துக்கு தேவையில்லை, தமிழர் தேசத்தின் அடையாளங்களாக தமிழும், தமிழ்த்தேசியம் தான் இருக்க வேண்டும் என்பதில் தெளிவான ஒரு புரிதல் இருக்கு. இது ஒரு பரிணாம வளர்ச்சியாகவே நான் பார்க்கிறேன். I don't see it as a conflict.
இனி திராவிட அடையாள அரசியலுக்குள் தமிழ்த்தேசியத்துக்கு இடமில்லை என்ற நிலையை தாண்டி, திராவிட அடையாள அரசியலுக்கு தமிழ்த்தேசியம் தீண்டத்தகாத ஒரு அடையாள அரசியலாக மாறியிருப்பதை நான் உணர்கிறேன். இதை பேராசிரியர் சிவத்தம்பி தத்துவ இடப்பெயர்வு என்று சித்தரிப்பார்.
சோழர்களுக்கு முன் பார்ப்பனியத்தை அதிகாரத்தில் அமர்த்தியது சேரர்கள் தான்!முதலாம் பராந்தகன் காலத்தில், சேர நாட்டில் அரசனை விட அதிக அதிகாரம் படைத்த ஆளுமைகளாக இருந்தது பார்ப்பனர்கள் தான். சேர நாட்டுடனான உறவின் வழியாக தான் பார்ப்பனியம் சோழ அதிகார வட்டத்துக்குள் நுழையுது.
செம்பியன் மாதேவியின் பங்கும் இதில் முக்கியமானது. ராஜ ராஜன் அதிகாரத்துக்கு வர முன்னமே பார்ப்பணியத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. ராஜ ராஜன், ராஜேந்திரனின் ஆட்சிக்குட்பட்ட நிலங்கள் அதிகரிக்க, அதிகரிக்க, பார்ப்பனியமும் பரவியது.
பார்ப்பனியத்தை ராஜ ராஜனும், சோழர்களும் தான் கண்டுபிடித்தார்கள் என்றார் போல் கதை விடுவது எல்லாம் வரலாற்று திரிப்புகள். பார்ப்பனியத்தை சோழர்கள் எதிர்க்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் சேரர்களிடம் செலுத்திய அதிகாரத்தை சோழர்களிடம் பார்ப்பனர்களால் செலுத்த முடியவில்லை.