தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும். பின் ஏன் தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க வேண்டும். அதற்கொரு விசேசமான காரணமிருக்கிறது.
அது தஸ்தாயெவ்ஸ்கியை படிக்கும் போது நமது அந்தரங்கம் மிக நெருக்கமாக அவர் எழுத்தின் வழியே அடையாளம் காட்டப்படுகிறது. நமது மனதை திறந்து அதன் உள்ளே ரகசியங்கள் அவமானங்கள் என்று நாம் மூடிமூடி வைத்துள்ள அத்தனையும் மறுபரிசீலனை செய்வதற்காகவே அவரை வாசிக்க வேண்டியிருக்கிறது.
வெண்ணிற இரவுகள் இரவின் ஊடாக அலைவுறும் மனித ஆசைகளையே வெளிப்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் வழியாக மனதின் இருண்ட கதவுகள் திறக்கபடுகின்றன. இரவினுள் அடங்க மறுக்கும் பகல் போல தான் காதலும் . அது மனிதர்களை நிம்மதியற்று செய்கிறது.
ஆனால் அந்த அலைக்கழிப்பும் வலியும் காதலுக்கு அவசியம் என்றே தோன்றுகிறது. வலியில் இருந்தே காதல் வளர்கிறது.பிரிவே காதலை உணர செய்கிறது.
அவ்வகையில் எப்போது வாசிக்கையிலும் வெண்ணிற இரவுகள் நிராசையின் முடிவில்லாத பாடலை எப்போதும் முணுமுணுத்துக் கொண்டேயிருக்கின்றன.
இந்த பெண் இப்படி உடை அணிய வேண்டும் அப்படி உடை அணிய வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாமே patriarchy ல இருந்து கிளை விடுவது தான். அதாவது பெண் என்பவள் உடமை. ஆணின் property. அதாவது தோட்டம், ஆடு, மாடு, வீடு, கார் மாதிரி பெண்ணும் ஆணின் உடமை.
திருமணத்திற்கு முன் அப்பாவின்/சகோதரனின் பொறுப்பு அதன்பின் கணவன்/பையனின் பொறுப்பு.
இந்த உடமை அப்படின்ற எண்ணம் இருப்பதால் தான் தங்கத்தை பெட்டிக்குள்ள வைக்கிறேன், இனிப்பை ஈ மொய்க்காம மூடி வைக்கிறேன், சேலையை முள்ளு படாம பாக்குறேன் என்று அஃறிணை கூட பெண்களை ஒப்பிடுற மனம் வருது.
எப்படி தோட்டத்தில் இருந்து வரும் காய்கள் அந்த தோட்டக்காரனுக்கு சொந்தமோ, மாடு கறக்கும் பால் பால்காரன் க்கு சொந்தமோ, அது மாதிரி பெண்கள் பெற்று எடுத்தும் தரும் பிள்ளைகள் அந்த ஆணுக்கு சொந்தமாகி விடுகிறது அப்பாவோட initial போட்டாச்சு.
புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? - முதல் நிலை வாசிப்பாளர்களின் கவனத்திற்கு!-
மணிகண்டபிரபு
புத்தக தினத்தில் எல்லாரும் புத்தகங்களை சிலாகித்து பேச.. நாம் செய்வதறியாமல் நிற்போம். வாங்கி வைத்த தலையணை சைஸ் புத்தகங்கள் எல்லாம் நம்மைப்பார்த்து என்னைப் பார் தூக்கம் வரும் ரேஞ்சிலேயே
அலமாரியிலிருந்து அழைப்பு விடுக்கும். `நானும் படிக்க நினைக்கிறேன். ஆனால் முடியல’ என்பதே பலரின் ஒப்புதல் வாக்குமூலம்.
தேர்ந்தெடுப்பதில் கவனமின்மை
ஹாலோ மாப்பிளே! இங்க புக் ஃபேர் வந்தேன்..எதாச்சும் நல்ல புக் இருந்தா சொல்லு வாங்கறேன்.. என்ற குரல்கள் அடிக்கடி கேட்பதை
புத்தகக் கண்காட்சியில் நாம் பார்க்கலாம்.
உண்மையில் புத்தகம் படிப்பதை விட சவாலானது புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து வாங்குவது. நல்ல புத்தகத்தை வாங்க பிறர் உதவியை நாடுவது நல்லதெனினும் முழுதாய் அவரையே நம்பி வாங்குவது நல்லதல்ல. நாமே நம் ரசனைக்கு ஏற்றதை தேர்ந்தெடுக்கப் பழக வேண்டும்
ஒரு பெண், தான் திருமணமானவளா? ஆகா தவளா? என்பதை அறிவிக்கும் ஓர் அறிவிப்புப் பலகையாக தாலி இருக்குமேயானால், ஏன் ஆண்களுக்கு அப்படி ஒரு சின்னம் இல்லை? தாலி ஆண்களுக்கன்றி பெண்களுக்கு மட்டுமே இருப்பதால் ஆண்களின் சொத்தாக, உடைமைப் பொருளாக பாவிக்கப்படுகிறாள் என்பதைத்தான் அது காட்டுகிறது.
சங்க இலக்கியங்களில் களவு மணம், காதல் மணம், உடன்போக்கு போன்றவை களே காணப்படுகின்றன. எனவே தமிழர் பண்பாட்டில், தாலி என்று ஒன்று இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பினால் நமக் குக் கிடைத்த அவலச் சின்னங்களில் ஒன்று தான் தாலியும்
பெண்கள் மீதான பல அடக்கு முறைகளுக்கு இச்சமூகம் கூறும் அபத்த மான காரணம் கலாச்சாரம் மகாராட்டிரத்தில் புலேயின் துணைவியார் சாவித்ரி பெண் கல்வியை ஆதரித்த போதும், ராஜாராம் மோகன் ராய் உடன்கட்டை ஏறுதலுக்கெதிராகக் குரல் கொடுத்த போதும்,
தமிழ்த்தாத்தா உ.வே.சா.அவர்களின் 167-வது பிறந்த தினம் இன்று!
அவர் எழுதிய,'என் சரித்திரம்',என்கிற நூலை படித்தால் தமிழ் பொக்கிஷங்களை காப்பாற்றுவதற்காக அவர் பட்ட கடும் சிரமங்களை அறிந்து பிரமிப்புணர்வு ஏற்படும்.
ஒரே ஒரு தமிழ் ஓலைச்சுவடிக்காக 50கி.மீ.வரை நடந்தே சென்றும் கூட சேகரித்திருக்கிறார்.இப்படி அவர் சேர்த்த ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கை மட்டும் 3,000.
கனமான இந்தப் புத்தகத்தைப் படிக்க முதலில் தயங்கினேன்.தமிழ்ப்பண்டிதரான இவருடைய எழுத்து மிக கடினமாகயிருக்கும் என எண்ணியிருந்தேன்.
ஆனால்,எடுத்து படிக்க ஆரம்பித்தவுடன், கீழே வைப்பதற்கே மனம் வரவில்லை.அந்த அளவிற்கு எளிய தமிழ்நடை.சிறு சிறு வாக்கியங்களில் எழுதி நமை மெய்சிலிர்க்க வைக்கிறார்.
இவருடைய தாத்தாவுக்கும், இவருக்குமான உரையாடலை படிக்க படிக்க இன்பம்தான்.
சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மையமா? இந்த மாதிரியான கோவில்களை இப்போது உள்ள அறிவியலால் கட்ட
முடியுமா என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக்
மற்றும் வாட்ஸ் ஆப்பில் மத அடிப்படைவாதிகள், இந்தியாவின்
புராதனச் சின்னங்களான கோபுரங்களின்
மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் 'மகா சக்தி' பெற்று சுற்றி உள்ள ஊர்களில்
'இடி விழாமல்' தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் 'இடி தாங்கியாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த 'அறிவியல்
பூர்வமான' அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும்
சொல்லி இருக்கக்கூடும்.
இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர் வீச்சுக் காரணமாகத்தான் 'சிட்டுக் குருவி' இனம் அழிந்து போவதாகவும்,
சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளதாகவும்,
Men ask why women are so pissed off, even guys with wives and daughters. Jackson Katz, a prominent social researcher, illustrates why. He's done it with hundreds of audiences:
"I draw a line down the middle of a chalkboard, sketching a male symbol on one side and a female symbol on the other.
Then I ask just the men: What steps do you guys take, on a daily basis, to prevent yourselves from being sexually assaulted?
At first there is a kind of awkward silence as the men try to figure out if they've been asked a trick question. The silence gives way to a smattering of nervous laughter. Occasionally, a young a guy will raise his hand and say, 'I stay out of prison.'