புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? - முதல் நிலை வாசிப்பாளர்களின் கவனத்திற்கு!-
மணிகண்டபிரபு

புத்தக தினத்தில் எல்லாரும் புத்தகங்களை சிலாகித்து பேச.. நாம் செய்வதறியாமல் நிற்போம். வாங்கி வைத்த தலையணை சைஸ் புத்தகங்கள் எல்லாம் நம்மைப்பார்த்து என்னைப் பார் தூக்கம் வரும் ரேஞ்சிலேயே
அலமாரியிலிருந்து அழைப்பு விடுக்கும். `நானும் படிக்க நினைக்கிறேன். ஆனால் முடியல’ என்பதே பலரின் ஒப்புதல் வாக்குமூலம்.

தேர்ந்தெடுப்பதில் கவனமின்மை

ஹாலோ மாப்பிளே! இங்க புக் ஃபேர் வந்தேன்..எதாச்சும் நல்ல புக் இருந்தா சொல்லு வாங்கறேன்.. என்ற குரல்கள் அடிக்கடி கேட்பதை
புத்தகக் கண்காட்சியில் நாம் பார்க்கலாம்.

உண்மையில் புத்தகம் படிப்பதை விட சவாலானது புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து வாங்குவது. நல்ல புத்தகத்தை வாங்க பிறர் உதவியை நாடுவது நல்லதெனினும் முழுதாய் அவரையே நம்பி வாங்குவது நல்லதல்ல. நாமே நம் ரசனைக்கு ஏற்றதை தேர்ந்தெடுக்கப் பழக வேண்டும்
ஒரு பிரபலம் பேட்டியில் சொன்னார் என்பதற்காக ஆரம்பத்திலேயே மேலை நாட்டு இலங்கியங்களை வாசிக்க நினைப்பது முதல் பாலிலேயே க்ளீன் போல்டான கதை.

அவர் ஒரு பிரபலம், அவர் ஒரு உயர் அதிகாரி அதனால வாங்கினேன் எனப் புத்தக அட்டையைப் பார்த்து வாங்காமல் இருப்பது பணத்திற்கு மனதிற்கு நல்லது.
சில புத்தகங்கள் வாங்கும்போது அருமையாய் இருக்கும். வீட்டிற்கு வந்து பிரித்துப் படித்தால் வறட்டு நடையில் இருக்கும். அப்படியே மூடி வைத்து விடுவோம். ஒரு புத்தகத்தை எடுத்தவுடன் இரண்டு, மூன்று பக்கம் படித்தவுடன் மனசுக்குள் மணியடிக்கும் அதனை வாங்கலாம்.
ஒரு சில பக்கங்கள் படித்தவுடன் நமக்கு தெரியாத தகவல்கள் செறிந்திருக்கும் அதனை வாசிக்கலாம். அழகிய மொழியியலில் வாழ்வியல் அனுபவத்தை ரசித்து சொல்வதைப் படித்தவுடன் அட ஆமாம்லனு தோன்றும் அது போன்ற புத்தகத்தை உடனே வாங்கிவிடலாம்.
புகழ் பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் வாழ்வை மாற்றியதாகக் குறிப்பிடும்போது நாமும் அதைப் படித்தால் இலக்கியவாதி ஆகிவிடலாம் என மெனக்கெட்டு அதனை தேடி வாசித்தால் சுத்தமாய் சுவாரஸ்யம் இருக்காது. நாம் அதனுடன் ஒன்ற முடியாமல் போகலாம்.
தவறே இல்லை அதனை அப்படியே வைத்துவிட்டு நம் மனதிற்கு ஏற்றதை மட்டும் வாசித்தாலே போதுமானது. அந்தப் புத்தகத்தை வாசித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. இந்தப் புத்தகத்தை நான் வாசித்தேன் என வெளியே சொன்னால் ஒரு மதிப்பு கிடைக்கும் என்ற எண்ணம் அறவே ஒழிக்க வேண்டிய ஒன்று.
முதல்நிலையில் வாசிக்க வேண்டியவை

எளிய நடையில் நம் கை பிடித்து அழைத்துச் செல்லும் புத்தகங்களாக தெரிபவை முதல் முறை வாசிக்கும் போது கொஞ்சம் கதை, பொது அறிவு மற்றும் இன்ஃபர்மேட்டிவாய் இருந்தால் வாசிப்பில் ஆர்வம் வரும் பிறகு கடினமான பெரிய புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க வடிகாலாய் அமையும்.
*சிறுது வெளிச்சம்-எஸ்.ரா
*துணை எழுத்து-எஸ்.ரா
*கதாவிலாசம்-எஸ்.ரா
*வாடிவாசல்
*ஏழாம் அறிவு-இறையன்பு
*ஒன்றே சொல் நன்றே சொல்-சுப.வீரபாண்டியன்
*பாக்யராஜ் பதில்கள்
*அகம் புறம்-வண்ணதாசன்
*டாப் 200வரலாற்று மனிதர்கள்-பூ.கோ.சரவணன்
*புதுமைப்பித்தன் சிறுகதை தொகுப்பு
*கள்ளிக்காட்டு இதிகாசம்
*விண்வெளி- என்.ராமதுரை
*சுஜாதாட்ஸ்-சுஜாதா
*கற்றதும் பெற்றதும்-சுஜாதா
*பாலகுமாரன் புத்தகம்
*பொன்னியின் செல்வன்-கல்கி
*மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
*வனவாசம் *மனவாசம்
*கி.ராஜநாராயணன் கதைகள்
*கழினியூரன் நாட்டுப்புற கதைகள்
*ஆழத்தை அறியும் பயணம்-பாவண்ணன்
*அரசியல் எனக்கு பிடிக்கும்-ச.தமிழ்ச்செல்வன்

*தமிழக அரசியல் வரலாறு 1&2-

ஆர் முத்துக்குமார்

*அப்துற்-றஹீம் எழுதிய சுயமுன்னேற்ற நூல்கள்

*வந்தார்கள் வென்றார்கள்-மதன்

*மைக்ரோ பதிவுகள்-ராஜாசந்திரசேகர்

*பண்பாட்டு அசைவுகள்.தொ.ப

*நா.முத்துக்குமார் கவிதைகள்

*அகி-முகுந்த் நாகராஜன்
#அடுத்த நிலை

அடிப்படையான புத்தகங்களைப் படித்த பின் அடுத்த நிலைக்குச் செல்ல மனம் ஏங்கும். எல்லோரும் அடிக்கடி முணுமுணுப்பது சிறுகதைகளைத்தான்.

இம்முறை முழுத் தொகுப்பையும் வாசிக்க ஆரம்பிக்கலாம்.
*அறம்

*ஜெயமோகனின் கதை தொகுப்பு,

*ஜெயகாந்தன் சிறுகதை தொகுப்பு

*இன்றைய காந்தி
*ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
*பெரியோர்களே தாய்மார்களே
*ஓஷோ புத்தகங்கள்
*சிவந்த மண்-கே.என் சிவராமன்
*வால்காவிலிருந்து கங்கைவரை
*பிரபஞ்சன் கட்டுரைகள்
*நீர் எழுத்து-நக்கீரன்
*யாருடைய எலிகள் நாம்-சமஸ்
*ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
*லட்சுமி சரவணகுமார் கதைகள்
*காந்திக்குப் பிறகு இந்தியா-குஹா

*அண்ணா குறித்த மாபெரும் தமிழ்க்கனவு

*அ.முத்துலிங்கம் கதைகள்,கட்டுரைகள்

*யுகபாரதி, நா.மு,கல்யாண்ஜி கவிதை தொகுப்புகள்

*வண்ணநிலவன் கதைகள்

*கு.அழகிரிசாமியின் கதைகள

*சிலுவைராஜ் சரித்திரம்-ராஜ் கெளதமன்
*சோளகர் தொட்டி
இவை தவிர சுந்தரராமசாமி, கந்தர்வன் அசோகமித்ரன், இமையம், மேலாண்மை பொன்னுசாமி, மருதன்,ச.தமிழ்ச்செல்வன், கலாப்ரியா எனப் பல எழுத்தாளுமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு பின் ரஷ்ய இலக்கியங்கள், பிரபலங்களின் பரிந்துரைகள் என வாசிக்கலாம்.
மனதிற்குப் பிடித்ததை வாசிக்க வாசிக்க அடுத்து என்ன வாசிக்கலாம் என்ற சுய அறிவை புத்தகம் கொடுக்கும். அப்போது பரந்துபட்ட குவியலில் ஓரிரு புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கும் உக்தியும் நுட்பமும் நமக்கு வரும்.
#பரந்து பட்ட வாசிப்பில் கவனம் செலுத்த வேண்டும்

இந்த ஆண்டு முழுக்க நான் கவிதை புத்தகம் மட்டுமே வாங்குவேன் எனச் சிலர் வாங்குவது தவறான ஒன்று. அது திகட்டிவிடும். பரந்துபட்ட வாசிப்பிற்குப் பழக வேண்டும். கவிதை,கட்டுரை, சிறுகதை, அறிவியல்,பொது அறிவு, மருத்துவம் எனப்
பரவலாக வாங்கினால் வாசிப்பு எப்போதும் சுகப்பட்டு அறியாத பல விஷயங்களை அறிந்துகொள்ள ஏதுவாக அமையும். இந்த ஆண்டு வாங்கிய புத்தகங்களை ஒரு டைரியில் குறித்துக்கொண்டால் அடுத்த ஆண்டு அதே புத்தகத்தை வாங்குவதை தவிர்க்கலாம்.
முற்றும் அறிதல் என்பது என்றைக்கும் முடியாத ஒன்று! என்றாலும் கூடுதல் அறிவை நோக்கியே நாம் ஓடுகிறோம் என்பார் சுப.வீரபாண்டியன். படிக்காத புத்தகத்தில் தான் நமக்கான ஞானம் ஒளிந்துள்ளது.அந்த ஞானத்தை நோக்கி ஓடுவோம்.

-மணிகண்ட பிரபு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

3 Mar
இந்த பெண் இப்படி உடை அணிய வேண்டும் அப்படி உடை அணிய வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாமே patriarchy ல இருந்து கிளை விடுவது தான். அதாவது பெண் என்பவள் உடமை. ஆணின் property. அதாவது தோட்டம், ஆடு, மாடு, வீடு, கார் மாதிரி பெண்ணும் ஆணின் உடமை.
திருமணத்திற்கு முன் அப்பாவின்/சகோதரனின் பொறுப்பு அதன்பின் கணவன்/பையனின் பொறுப்பு.
இந்த உடமை அப்படின்ற எண்ணம் இருப்பதால் தான் தங்கத்தை பெட்டிக்குள்ள வைக்கிறேன், இனிப்பை ஈ மொய்க்காம மூடி வைக்கிறேன், சேலையை முள்ளு படாம பாக்குறேன் என்று அஃறிணை கூட பெண்களை ஒப்பிடுற மனம் வருது.
எப்படி தோட்டத்தில் இருந்து வரும் காய்கள் அந்த தோட்டக்காரனுக்கு சொந்தமோ, மாடு கறக்கும் பால் பால்காரன் க்கு சொந்தமோ, அது மாதிரி பெண்கள் பெற்று எடுத்தும் தரும் பிள்ளைகள் அந்த ஆணுக்கு சொந்தமாகி விடுகிறது அப்பாவோட initial போட்டாச்சு.
Read 18 tweets
3 Mar
ஒரு பெண், தான் திருமணமானவளா? ஆகா தவளா? என்பதை அறிவிக்கும் ஓர் அறிவிப்புப் பலகையாக தாலி இருக்குமேயானால், ஏன் ஆண்களுக்கு அப்படி ஒரு சின்னம் இல்லை? தாலி ஆண்களுக்கன்றி பெண்களுக்கு மட்டுமே இருப்பதால் ஆண்களின் சொத்தாக, உடைமைப் பொருளாக பாவிக்கப்படுகிறாள் என்பதைத்தான் அது காட்டுகிறது.
சங்க இலக்கியங்களில் களவு மணம், காதல் மணம், உடன்போக்கு போன்றவை களே காணப்படுகின்றன. எனவே தமிழர் பண்பாட்டில், தாலி என்று ஒன்று இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பினால் நமக் குக் கிடைத்த அவலச் சின்னங்களில் ஒன்று தான் தாலியும்
பெண்கள் மீதான பல அடக்கு முறைகளுக்கு இச்சமூகம் கூறும் அபத்த மான காரணம் கலாச்சாரம் மகாராட்டிரத்தில் புலேயின் துணைவியார் சாவித்ரி பெண் கல்வியை ஆதரித்த போதும், ராஜாராம் மோகன் ராய் உடன்கட்டை ஏறுதலுக்கெதிராகக் குரல் கொடுத்த போதும்,
Read 9 tweets
1 Mar
#freeEbooks

தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும். பின் ஏன் தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க வேண்டும். அதற்கொரு விசேசமான காரணமிருக்கிறது.
அது தஸ்தாயெவ்ஸ்கியை படிக்கும் போது நமது அந்தரங்கம் மிக நெருக்கமாக அவர் எழுத்தின் வழியே அடையாளம் காட்டப்படுகிறது. நமது மனதை திறந்து அதன் உள்ளே ரகசியங்கள் அவமானங்கள் என்று நாம் மூடிமூடி வைத்துள்ள அத்தனையும் மறுபரிசீலனை செய்வதற்காகவே அவரை வாசிக்க வேண்டியிருக்கிறது.
வெண்ணிற இரவுகள் இரவின் ஊடாக அலைவுறும் மனித ஆசைகளையே வெளிப்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் வழியாக மனதின் இருண்ட கதவுகள் திறக்கபடுகின்றன. இரவினுள் அடங்க மறுக்கும் பகல் போல தான் காதலும் . அது மனிதர்களை நிம்மதியற்று செய்கிறது.
Read 5 tweets
19 Feb
தமிழ்த்தாத்தா உ.வே.சா.அவர்களின் 167-வது பிறந்த தினம் இன்று!

அவர் எழுதிய,'என் சரித்திரம்',என்கிற நூலை படித்தால் தமிழ் பொக்கிஷங்களை காப்பாற்றுவதற்காக அவர் பட்ட கடும் சிரமங்களை அறிந்து பிரமிப்புணர்வு ஏற்படும்.
ஒரே ஒரு தமிழ் ஓலைச்சுவடிக்காக 50கி.மீ.வரை நடந்தே சென்றும் கூட சேகரித்திருக்கிறார்.இப்படி அவர் சேர்த்த ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கை மட்டும் 3,000.

கனமான இந்தப் புத்தகத்தைப் படிக்க முதலில் தயங்கினேன்.தமிழ்ப்பண்டிதரான இவருடைய எழுத்து மிக கடினமாகயிருக்கும் என எண்ணியிருந்தேன்.
ஆனால்,எடுத்து படிக்க ஆரம்பித்தவுடன், கீழே வைப்பதற்கே மனம் வரவில்லை.அந்த அளவிற்கு எளிய தமிழ்நடை.சிறு சிறு வாக்கியங்களில் எழுதி நமை மெய்சிலிர்க்க வைக்கிறார்.

இவருடைய தாத்தாவுக்கும், இவருக்குமான உரையாடலை படிக்க படிக்க இன்பம்தான்.
Read 5 tweets
19 Feb
போலி அறிவியலும் மூடநம்பிக்கை
விதைகளும்

சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மையமா? இந்த மாதிரியான கோவில்களை இப்போது உள்ள அறிவியலால் கட்ட
முடியுமா என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக்
மற்றும் வாட்ஸ் ஆப்பில் மத அடிப்படைவாதிகள், இந்தியாவின்
புராதனச் சின்னங்களான கோபுரங்களின்
மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் 'மகா சக்தி' பெற்று சுற்றி உள்ள ஊர்களில்
'இடி விழாமல்' தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் 'இடி தாங்கியாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த 'அறிவியல்
பூர்வமான' அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும்
சொல்லி இருக்கக்கூடும்.
இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர் வீச்சுக் காரணமாகத்தான் 'சிட்டுக் குருவி' இனம் அழிந்து போவதாகவும்,
சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளதாகவும்,
Read 18 tweets
16 Feb
Men ask why women are so pissed off, even guys with wives and daughters. Jackson Katz, a prominent social researcher, illustrates why. He's done it with hundreds of audiences:
"I draw a line down the middle of a chalkboard, sketching a male symbol on one side and a female symbol on the other.
Then I ask just the men: What steps do you guys take, on a daily basis, to prevent yourselves from being sexually assaulted?
At first there is a kind of awkward silence as the men try to figure out if they've been asked a trick question. The silence gives way to a smattering of nervous laughter. Occasionally, a young a guy will raise his hand and say, 'I stay out of prison.'
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!