இந்த பெண் இப்படி உடை அணிய வேண்டும் அப்படி உடை அணிய வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாமே patriarchy ல இருந்து கிளை விடுவது தான். அதாவது பெண் என்பவள் உடமை. ஆணின் property. அதாவது தோட்டம், ஆடு, மாடு, வீடு, கார் மாதிரி பெண்ணும் ஆணின் உடமை.
திருமணத்திற்கு முன் அப்பாவின்/சகோதரனின் பொறுப்பு அதன்பின் கணவன்/பையனின் பொறுப்பு.
இந்த உடமை அப்படின்ற எண்ணம் இருப்பதால் தான் தங்கத்தை பெட்டிக்குள்ள வைக்கிறேன், இனிப்பை ஈ மொய்க்காம மூடி வைக்கிறேன், சேலையை முள்ளு படாம பாக்குறேன் என்று அஃறிணை கூட பெண்களை ஒப்பிடுற மனம் வருது.
எப்படி தோட்டத்தில் இருந்து வரும் காய்கள் அந்த தோட்டக்காரனுக்கு சொந்தமோ, மாடு கறக்கும் பால் பால்காரன் க்கு சொந்தமோ, அது மாதிரி பெண்கள் பெற்று எடுத்தும் தரும் பிள்ளைகள் அந்த ஆணுக்கு சொந்தமாகி விடுகிறது அப்பாவோட initial போட்டாச்சு.
இப்போ எப்படி வெளி போட்டு, தண்ணி பாய்ச்சி, உரம் போட்டு, தோட்டத்தை பராமரித்து அதனால் வரும் வருமானத்தை அனுபவிக்கிறானோ அதே போல பெண்களை நிமிர்ந்து பாக்காதே, ஒழுங்கா டிரஸ் பண்ணு, அங்க போகாதே இங்க போகாதே என்று பராமரித்து அவளால் சந்ததியை பெருக்கி கொள்கிறார்கள்.
தோட்டத்தில் இன்னார் தோட்டம் அப்படினு வெளி போட்டு போர்டு வைக்குற மாதிரி, பெண்ணுக்கு கழுத்துல தாலியை (தாலி பெண்ணுக்கு வேலி ) கட்டி Mrs. ன்னு போட்டு இன்னார் மனைவி ன்னு வச்சிட வேண்டியது.
அதுல பாருங்க இந்த தோட்டம் ஒரு அஃறிணை பேசாது நீ தண்ணி ஊத்தாட்டி ஏன் ன்னு கேக்காது நான் நல்லா பராமரிக்கற ஆள் கிட்ட போறேன்னு சொல்லாது நீ என்ன என்னை பாக்கிறது நானே என்னை பாத்துக்கிறேன் ன்னு சொல்லாது. ஆனா பெண் அப்படி இல்லை.
ஆணுக்கு இருப்பது போலவே அவளுக்கும் மூளையும், அதில் எண்ணங்களும், மனசும் அதில் ஆசைகளும் இருக்கும் இல்லையா... எங்கே அவள் சிந்தித்து புத்திசாலித்தனமா வேலியை உடைச்சுட்டு போய்டுவாளோ என்று நினைத்து உருவாக்கி வைத்துதான் இந்த
நல்ல குடும்பத்து பொண்ணுங்க, அடக்கமான பொண்ணுங்க இப்படி பண்ண மாட்டங்க அப்படின்ற லேபிள்.
பிறன்மனை நோக்கா பேராண்மை என்ற திருக்குறள் ஒரு patriarchal statement தான். பெண்ணை ஒரு உடமையாக தான் பார்க்கிறது. அடுத்தவன் பொருளை எடுக்க கூடாது.
அடுத்தவன் மாடு புல் போட்டால் இழுத்து கொண்டு போய்விடலாம் என்பதை போல, சும்மா பார்த்தா அடுத்தவன் பொண்டாட்டி வந்துருவா அதுனால நீ பண்ணாத என்பதாக இருக்கிறது.மாடு அவன் property அவன் காசு குடுத்து வாங்கி இருக்கிறான் அதுனால நீ திருடாதே என்பது போல
அடுத்தவன் பொண்டாட்டி அவன் property அதை பார்க்காதே. அந்த பெண்ணுக்கு என்று சுயபுத்தி இருக்கும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்பதெல்லாம் கணக்கில் வரவில்லை. விருப்பம் இல்லாத பெண்ணை பார்க்காதே என்றல்லவா இருக்க வேண்டும்.
மாடு தெய்வம் என்று சொல்லும் நாம் அதை வீட்டின் பூஜை அறையில் வைப்பது இல்லை கொல்லையில் தான் கட்டி வைத்து இருக்கிறோம். மாடு பால் தரும் என்று நாமாகவே சொல்லி கொள்கிறோம். மாடு என்ன நம்மளை வா வா என்று அழைத்தா தருகிறது. அப்படி பார்த்தால் மனிதன் ரத்தம் தருவான் என்று கொசு சொல்லிக்கொள்ளலாமா
நமது ஆழ்மனதிற்கு தெரியும் நாம் பசுவை exploit செய்கிறோம் என்று அதனால் வரும் குற்ற உணர்வை மறைக்கவே பசு தெய்வம், அது பால் தரும் என்ற பிதற்றல்கள் எல்லாம் அதன் நீட்சியே பெண் என்பவள் தெய்வம், தங்கம் போன்ற பிதற்றல்களும் பெண்ணை exploit செய்வதை மறைக்கவே.
பெண் என்பவள் காலம் காலமாக ஒரு உடமையாகவே கருதப்படுகிறாள். ஆடு, மாடு, கோழி, பைக், டிவி இதை போல ஆணுக்கு பெண் என்பவள் ஒரு உடமை. பாதுகாக்க வேண்டிய பொருள் என்பதாக patriarchy சமுதாயம் கற்பிக்கின்றது.
உடமையாளர் இல்லாத பொருளை யார் வேண்டுமானாலும் எடுத்து விடலாம் என்ற எண்ணத்துலயே
உடன்கட்டை ஏறும் வழக்கம். விதவை பெண்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல பலதார திருமணங்களில் எத்தனை விதவை பெண்களை வேண்டுமானால் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற வழக்கம். குழந்தை இல்லாமல் கணவன் இறந்துவிட்டால் அந்த சொத்துக்களை மனைவியால் அனுபவிக்க முடியாது.
அதற்காக கணவனது சகோதரனை மணந்து அவன் மூலம் கிடைக்கும் ஆண் வாரிசால் மட்டுமே அந்த சொத்தை அனுபவிக்க முடியும். (levirate marriage).
இப்படி பெண்களை வெறும் பொருளாக மட்டுமே கருதும்போது வரக்கூடிய எண்ணங்கள் தான் தாலி ஏன் போடல? ஏன் விளக்கேத்தலை? ஏன் புடவை கட்டலை? ஏன் துப்பட்டா போடல? என்ற கேள்விகள் எல்லாம்...
காந்தி சொல்கிறார் என்று ஒரு பெண் நடுராத்திரி நிறைய நகைகளை அணிந்து கொண்டு தனியாக செல்கிறாளோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று சொல்லுவேன் என்று. இதில் பெண்ணின் உடலுக்கும், நகைக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
என்று ஒரு பெண் தனது வாழ்க்கையை அவளே தேர்ந்து எடுக்கிறாளோ அப்படி தேர்ந்து எடுக்கும் அளவிற்கு அவளுக்கு கல்வியும் மனப்பக்குவமும் முதிர்ச்சியையும் தரும் அளவிற்கு இந்த சமுதாயம் முன்னேறி இருக்கிறதோ அன்று தான் உண்மையான சுதந்திரம் கிடைத்து இருக்கிறது என்று பொருள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

3 Mar
புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? - முதல் நிலை வாசிப்பாளர்களின் கவனத்திற்கு!-
மணிகண்டபிரபு

புத்தக தினத்தில் எல்லாரும் புத்தகங்களை சிலாகித்து பேச.. நாம் செய்வதறியாமல் நிற்போம். வாங்கி வைத்த தலையணை சைஸ் புத்தகங்கள் எல்லாம் நம்மைப்பார்த்து என்னைப் பார் தூக்கம் வரும் ரேஞ்சிலேயே
அலமாரியிலிருந்து அழைப்பு விடுக்கும். `நானும் படிக்க நினைக்கிறேன். ஆனால் முடியல’ என்பதே பலரின் ஒப்புதல் வாக்குமூலம்.

தேர்ந்தெடுப்பதில் கவனமின்மை

ஹாலோ மாப்பிளே! இங்க புக் ஃபேர் வந்தேன்..எதாச்சும் நல்ல புக் இருந்தா சொல்லு வாங்கறேன்.. என்ற குரல்கள் அடிக்கடி கேட்பதை
புத்தகக் கண்காட்சியில் நாம் பார்க்கலாம்.

உண்மையில் புத்தகம் படிப்பதை விட சவாலானது புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து வாங்குவது. நல்ல புத்தகத்தை வாங்க பிறர் உதவியை நாடுவது நல்லதெனினும் முழுதாய் அவரையே நம்பி வாங்குவது நல்லதல்ல. நாமே நம் ரசனைக்கு ஏற்றதை தேர்ந்தெடுக்கப் பழக வேண்டும்
Read 20 tweets
3 Mar
ஒரு பெண், தான் திருமணமானவளா? ஆகா தவளா? என்பதை அறிவிக்கும் ஓர் அறிவிப்புப் பலகையாக தாலி இருக்குமேயானால், ஏன் ஆண்களுக்கு அப்படி ஒரு சின்னம் இல்லை? தாலி ஆண்களுக்கன்றி பெண்களுக்கு மட்டுமே இருப்பதால் ஆண்களின் சொத்தாக, உடைமைப் பொருளாக பாவிக்கப்படுகிறாள் என்பதைத்தான் அது காட்டுகிறது.
சங்க இலக்கியங்களில் களவு மணம், காதல் மணம், உடன்போக்கு போன்றவை களே காணப்படுகின்றன. எனவே தமிழர் பண்பாட்டில், தாலி என்று ஒன்று இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பினால் நமக் குக் கிடைத்த அவலச் சின்னங்களில் ஒன்று தான் தாலியும்
பெண்கள் மீதான பல அடக்கு முறைகளுக்கு இச்சமூகம் கூறும் அபத்த மான காரணம் கலாச்சாரம் மகாராட்டிரத்தில் புலேயின் துணைவியார் சாவித்ரி பெண் கல்வியை ஆதரித்த போதும், ராஜாராம் மோகன் ராய் உடன்கட்டை ஏறுதலுக்கெதிராகக் குரல் கொடுத்த போதும்,
Read 9 tweets
1 Mar
#freeEbooks

தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும். பின் ஏன் தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க வேண்டும். அதற்கொரு விசேசமான காரணமிருக்கிறது.
அது தஸ்தாயெவ்ஸ்கியை படிக்கும் போது நமது அந்தரங்கம் மிக நெருக்கமாக அவர் எழுத்தின் வழியே அடையாளம் காட்டப்படுகிறது. நமது மனதை திறந்து அதன் உள்ளே ரகசியங்கள் அவமானங்கள் என்று நாம் மூடிமூடி வைத்துள்ள அத்தனையும் மறுபரிசீலனை செய்வதற்காகவே அவரை வாசிக்க வேண்டியிருக்கிறது.
வெண்ணிற இரவுகள் இரவின் ஊடாக அலைவுறும் மனித ஆசைகளையே வெளிப்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் வழியாக மனதின் இருண்ட கதவுகள் திறக்கபடுகின்றன. இரவினுள் அடங்க மறுக்கும் பகல் போல தான் காதலும் . அது மனிதர்களை நிம்மதியற்று செய்கிறது.
Read 5 tweets
19 Feb
தமிழ்த்தாத்தா உ.வே.சா.அவர்களின் 167-வது பிறந்த தினம் இன்று!

அவர் எழுதிய,'என் சரித்திரம்',என்கிற நூலை படித்தால் தமிழ் பொக்கிஷங்களை காப்பாற்றுவதற்காக அவர் பட்ட கடும் சிரமங்களை அறிந்து பிரமிப்புணர்வு ஏற்படும்.
ஒரே ஒரு தமிழ் ஓலைச்சுவடிக்காக 50கி.மீ.வரை நடந்தே சென்றும் கூட சேகரித்திருக்கிறார்.இப்படி அவர் சேர்த்த ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கை மட்டும் 3,000.

கனமான இந்தப் புத்தகத்தைப் படிக்க முதலில் தயங்கினேன்.தமிழ்ப்பண்டிதரான இவருடைய எழுத்து மிக கடினமாகயிருக்கும் என எண்ணியிருந்தேன்.
ஆனால்,எடுத்து படிக்க ஆரம்பித்தவுடன், கீழே வைப்பதற்கே மனம் வரவில்லை.அந்த அளவிற்கு எளிய தமிழ்நடை.சிறு சிறு வாக்கியங்களில் எழுதி நமை மெய்சிலிர்க்க வைக்கிறார்.

இவருடைய தாத்தாவுக்கும், இவருக்குமான உரையாடலை படிக்க படிக்க இன்பம்தான்.
Read 5 tweets
19 Feb
போலி அறிவியலும் மூடநம்பிக்கை
விதைகளும்

சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மையமா? இந்த மாதிரியான கோவில்களை இப்போது உள்ள அறிவியலால் கட்ட
முடியுமா என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக்
மற்றும் வாட்ஸ் ஆப்பில் மத அடிப்படைவாதிகள், இந்தியாவின்
புராதனச் சின்னங்களான கோபுரங்களின்
மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் 'மகா சக்தி' பெற்று சுற்றி உள்ள ஊர்களில்
'இடி விழாமல்' தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் 'இடி தாங்கியாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த 'அறிவியல்
பூர்வமான' அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும்
சொல்லி இருக்கக்கூடும்.
இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர் வீச்சுக் காரணமாகத்தான் 'சிட்டுக் குருவி' இனம் அழிந்து போவதாகவும்,
சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளதாகவும்,
Read 18 tweets
16 Feb
Men ask why women are so pissed off, even guys with wives and daughters. Jackson Katz, a prominent social researcher, illustrates why. He's done it with hundreds of audiences:
"I draw a line down the middle of a chalkboard, sketching a male symbol on one side and a female symbol on the other.
Then I ask just the men: What steps do you guys take, on a daily basis, to prevent yourselves from being sexually assaulted?
At first there is a kind of awkward silence as the men try to figure out if they've been asked a trick question. The silence gives way to a smattering of nervous laughter. Occasionally, a young a guy will raise his hand and say, 'I stay out of prison.'
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!