@SeyalveerarDMK ஆவோம்.
நண்பர்களே! தேர்தல் களமிறங்குவோமா?
இது சாதாரணத் தேர்தல் அல்ல! தமிழர் உரிமை மீட்புப் போர். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையெத்தனை போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது! எத்தனை உயிர்களை பலி தர வேண்டியிருந்தது? எத்தனைப் பெண்களின் கதறல்களைக் கேட்க வேண்டியிருந்தது.
எத்தனை இளைஞர்களின் வேலைகள் வடநாட்டவரிடம் பறி போனது! எத்தனை மிரட்டல்கள், திடீர் தமிழ்ப் பற்றுகள், வேல்யாத்திரை திசைத் திருப்பல்கள், சாதி, மத வெறுப்பு விதைகள், திராவிடப் பெருந்தலைவர்களுக்கு சாதிமுத்திரை இடல், புது கட்சி, நடுநிலை கோஷங்கள்! அத்தனைக்கும் கணக்குத் தீர்க்கும் நேரமிது.
இன்னும் மிகச் சரியாக 30 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது. சமூகவலைதளங்கள் மூலமாகவே நம்மால் பெரிதாக சாதிக்க முடியும்.
உடனடியாக நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் இடுகிறேன். நான் தவறவிட்டதை நீங்கள் இணைத்து விடுங்கள். 1. விலகியிருந்த வாட்ஸ்சப் குழுமங்களில் இருந்து (தற்காலிகமாக)
உடனடியாக இணைந்து கொள்ளுங்கள். முக்கியமாக குடும்ப, பள்ளி, கல்லூரி நண்பர்கள் குழுமங்களில். 2. மீண்டும் அடிமை அதிமுக ஆட்சி வந்தால் ஏற்படக் கூடிய அபாயங்களை அவர்களிடம் கொண்டு செல்லுங்கள். 3. இங்கே டிவிட்டரில் நீங்கள் கண்ட சிறப்பான தகவல்கள், நினைவுகள், பதிவுகளை மீண்டும் தேடி எடுங்க.
4. @Raittuvidu , @angry_birdu , @IlovemyNOAH2019 இன்னும் பலரின் தகவல் தொகுப்புகளை மீள் பதிவிடுங்கள். 6. வாட்ஸ்சப் குழுமங்களுக்கு பகிர வேண்டிய ஏராளமான ஆவணங்கள், பொய்ப் பழிகளுக்கான ஆதாரப்பூர்வமான மறுப்புகள் எதையும் விடாமல் மீண்டும் பதிவிடுங்கள். 7. ஒரு நாளைக்கு 20 பதிவுகள் இட
பத்து நிமிடங்கள்தான் செலவாகும். அந்த முயற்சியும் நேரமும் தரும் பலம் மிக அதிகம். 8. மிக முக்கியமான வேண்டுகோள்., தேவையற்ற, அனாவசிய விஷயங்களுக்கு நேரத்தை செலவிடாதீர்கள். தேர்தலை நோக்கி மட்டுமே நமது இலக்கு இருந்தாக வேண்டும். 9. உங்களுக்கு உதவும் விதமாக, நாம் மக்களிடம் பேச வேண்டிய
விஷயங்களின் முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை இங்கே தருகிறேன். உங்கள் விருப்புக்கேற்ப அதை நீங்கள் வரிசை மாற்றிக் கொள்ளுங்கள். தயவு செய்து எதையும் தவற விட வேண்டாம்.
எனது பட்டியல் 1. மாநில உரிமைப் பறிப்பு 2. ஹிந்தித் திணிப்பு, 3. ஹிந்துத்துவா அஜெண்டா. 4. உதய் மின் திட்டம் முதல்
ஒரே நாடு! ஒரே ரேஷன் வரை கொண்டு வந்த மாநில உரிமை இழப்பு 5. எங்கெங்கும் ஊழல்., பல ஆயிரம் கோடிகளில் கொள்ளை 6. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 7. பொள்ளாச்சி வன்கொடுமை 8. முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரையில் பேசிய ஆணவப் பேச்சுகள்.. 9. தமிழர்களின் வேலைகளை வடநாட்டவருக்கு தாரை வார்த்தது
இப்படி நீண்டு கொண்டே போகும் இந்தப் பட்டியலில் உங்களுக்குத் தேவையான எந்தப் பொருளில் எந்த தகவல் தேவை எனினும், நீங்கள் @SeyalveerarDMK டி.எம் அனுப்புங்க. உடனடியாக உங்களுக்குத் தேவையான ஆதாரங்களை, மீம்ஸ் முதல் வீடியோ வரையில் தேடி எடுத்து நாங்கள் பதிவிடுகிறோம். அதை அந்தச் செயலியில்
இருந்து நீங்கள் உங்கள் சோஷியல் மீடியா கணக்குகள் வழி அனுப்பலாம். இந்த ஆட்சியில் நடந்த உங்களுக்கு நினைவுக்கு வரும் எந்த அக்கிரமங்களையும் தவறவிடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். தேர்தல் அறிக்கை வேற வரப்போகுது.
இன்னும் 30 நாட்கள்தான்.
தமிழகம் மீட்போம். தனிச் சிறப்பைக் காப்போம். 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"மோடியா? இந்த லேடியா?" அறைகூவல் நினைவிருக்கா?
மத்தியில் பாஜக ஆட்சி வரவேண்டும், மோடி பிரதமராக வேண்டும் என விருப்பம் கொண்டவர்கள், அதிலும் குறிப்பாக பிராமணர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் தெரியுமா?
அதிமுகவுக்கு. பாஜகவுக்கு அல்ல! ஏனெனில், தாங்கள் பாஜகவுக்கு போடும் வாக்குகள்
அந்தக் கட்சியை ஜெயிக்க வைக்கப் போதாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதிமுகவுக்கு வாக்களித்தால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும் எனும் அரசியல் தெளிவு அவர்களுக்குண்டு.
அதேபோல அதிமுக - பாஜக அணியை தோற்கடிக்க விரும்புபவர்கள் நேரடியாக திமுக கூட்டணிக்கு வாக்களிப்பது மட்டும்தான்
அறிவார்ந்த செயலாக இருக்கும். அப்போதுதான் உங்கள் வாக்கு உங்களது நோக்கத்தை நிறைவேற்றும். நம்முடைய தேர்தல் முறையில் மூன்றாவது, நான்காவது வருபவர்கள் பெறும் வாக்குகளுக்கு "எண்ணிக்கை மதிப்பு" கிடையாது. தங்களது ஆதர்ச நாயகனான மோடியே வந்து ஓட்டு கேட்டும் கூட தாமரைக்குப் போடாமல்
தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் : 1. 50 ஆண்டுகால பொது வாழ்வு. 2. 6 முறை சட்டமன்ற உறுப்பினர், 2 முறை சென்னைக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் என இத்தனை அதிகாரப் பதவிகளில் இருந்தும் எதிர்கட்சியினரும் குறை சொல்ல முடியாத அரசியல் வாழ்வு.
3. எதிரியே ஆனாலும், உடல்நலிவுற்றிருந்தாலோ, மரணம் அடைந்தாலோ நேரில் சென்று உதவும், ஆறுதல் சொல்லும் மனிதநேயம். 4. தலைவர் கலைஞர் மறைவுக்குப் பிறகு, சனாதன சக்திகளை எதிர்க்கும் பழைய வேகம் திமுகவுக்கு இருக்காது என்றொரு பொதுக் கருத்தை உடைத்து, திமுகவை முன்னிலும் வீரியமான சக்தியாக
உயர்த்திக் காட்டிய அந்தச் துணிச்சல். 4. காஷ்மீரில் நடக்கும் அநீதியாக இருந்தாலும், முதல் கண்டனக்குரல் தமிழ்க் குரல்தான் என மதச்சார்பற்ற சக்திகளுக்கு உயிரூட்டிய அந்த கொள்கைப்பிடிப்பு. 5. பேரிடர் காலத்தில் வாய்ச்சொல் வீரர்கள் எல்லாம் ஒளிந்து கொண்டபோது, துணிந்து தானும் களம் இறங்கி
ரஜினி ரசிகர்களைக் கேவலப்படுத்தி துக்ளக் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அவர்கள் அரசியல் நமக்குத் தெரிந்த ஒன்றுதான். என்றாலும் துக்ளக் விழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளும் ரஜினிக்கு அவர்களைப் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.
எடுத்தவுடனே "நேர்மையாக வரி செலுத்தும்" என டாப் கியர்
போட்டுத் துவங்குவதிலேயே இதன் அபத்தத்தை ரஜினி உணர்ந்து கொண்டிருப்பார். ரஜினி மீதும், அவர் குடும்பத்தின் மீது பல்வேறு வரி ஏய்ப்பு வழக்குகள் நடந்து முடிந்ததையும், நடந்து கொண்டு வருவதையும் ரஜினி அறியமாட்டாரா என்ன? (வாடகை பாக்கி, வரி பாக்கி வழக்குகள் தனி. அவரே ட்வீட் போட்டிருக்காரே).
ஆனால், நான் அறிந்து ரஜினி ரசிகர்கள் மீது இதைப் போல எந்த வரி ஏய்ப்பு வழக்குகளும் இல்லை. அண்மைக் காலங்களில் பாஜகவில் இணைபவர்கள் போல ஆள் கடத்தல், கூலிப்படை கொலைகள், போதை மருந்து கடத்தல் வழக்குகள் எல்லாம் அவர்கள் மீது இல்லை.
எனக்குத் தெரிந்த ரஜினி ரசிகர்கள் முரட்டுக்காளை, போக்கிரி
பல ஆண்டுகளாக பகிரணும் என நினைத்திருந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்றேன். இதுவும் நண்பர் சொன்னதுதான்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மும்பை ரயில் பயணிகளின் கூட்டத்தைச் சமாளிக்க ஒரு பிரம்மாண்டமான ரயில் நிலையத்தைக் கட்ட முடிவு செய்தனர். அதன் திட்ட அறிக்கை லண்டனில் ஒரு ஆர்க்கிடெக்ட்
அலுவலகத்தில் தயாரானது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகருக்கும் ரயில் நிலைய வடிவமைப்பு அதே அலுவலகத்தில் நடந்தது. இறுதியாக இவை இரண்டு திட்ட அறிக்கையும் நிறைவடைந்த பிறகு வரைபடங்கள் வரிசைப்படி பெரிய தோல் பெட்டிகளில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. கப்பலில் ஏற்றும் முன்பு விலாசம்
ஒட்டும் போது, ஒரு கிளார்க் விலாசத்தைப் பெட்டிகளை மாற்றி ஒட்டி விட்டிருக்கிறார். அப்படியாக ஆஸி செல்ல வேண்டிய பெட்டி மும்பை வந்து சேர, மும்பைக்கான பெட்டி மெல்பர்ன் சென்று அடைந்தது. பொறியாளர்கள் பெட்டியைப் பிரித்தனர். விறுவிறுவென அதன்படி கட்டி முடித்தனர். அப்படி உருவானதுதான் மும்பை
7.5% for Aided schools : My opinion.
அரசு உதவி பெறும் பள்ளிகள் (Aided schools) எனப்படும் இவைகள் தனியார் கல்வி அறக்கட்டளைகள், வணிகர் சங்கங்கள், ஹிந்து அமைப்புகள், முஸ்லீம் ஜமாத்கள், கிருத்துவ மிஷினரிகள் போன்றவைகளால் துவக்கப்பட்டு நடத்தப்படுபவை. 1. இங்கு ஆசிரியர்கள் நியமனம்
அறக்கட்டளைகளால் நியமிக்கப்படுவர். சம்பளம் அரசு தரும். இந்த ஆசிரியர் நியமனங்கள்தான் அறக்கட்டளையின் ஜாக்பாட். ஒரு ஆசிரியர் பணி ஓய்வு பெற்ற பிறகுதான் காலி இடம் நிரப்பப்படும் என்பதால் பெரும் போட்டியே அதற்கு நடக்கும். எனக்குத் தெரிந்து ஓய்வு பெற இரண்டு ஆண்டுகள் மீதமிருந்த ஒருவருக்கு
இரண்டு ஆண்டு சம்பளத்தை முன்கூட்டியே தந்து விருப்ப ஓய்வில் அனுப்பிவிட்டு அந்த இடத்தை அறக்கட்டளை செகரட்டரி தனது மகளுக்கு தந்த கதையெல்லாம் உண்டு. பல லட்சங்கள் (30 லட்சம்) கொடுத்து பணிக்கு வந்த ஆசியரின் தரமும், நோக்கமும் எப்படி இருக்கும் என்பது உங்கள் யூகத்துக்கு., 2. மாணவர் சேர்க்கை