7.5% for Aided schools : My opinion.
அரசு உதவி பெறும் பள்ளிகள் (Aided schools) எனப்படும் இவைகள் தனியார் கல்வி அறக்கட்டளைகள், வணிகர் சங்கங்கள், ஹிந்து அமைப்புகள், முஸ்லீம் ஜமாத்கள், கிருத்துவ மிஷினரிகள் போன்றவைகளால் துவக்கப்பட்டு நடத்தப்படுபவை. 1. இங்கு ஆசிரியர்கள் நியமனம்
அறக்கட்டளைகளால் நியமிக்கப்படுவர். சம்பளம் அரசு தரும். இந்த ஆசிரியர் நியமனங்கள்தான் அறக்கட்டளையின் ஜாக்பாட். ஒரு ஆசிரியர் பணி ஓய்வு பெற்ற பிறகுதான் காலி இடம் நிரப்பப்படும் என்பதால் பெரும் போட்டியே அதற்கு நடக்கும். எனக்குத் தெரிந்து ஓய்வு பெற இரண்டு ஆண்டுகள் மீதமிருந்த ஒருவருக்கு
இரண்டு ஆண்டு சம்பளத்தை முன்கூட்டியே தந்து விருப்ப ஓய்வில் அனுப்பிவிட்டு அந்த இடத்தை அறக்கட்டளை செகரட்டரி தனது மகளுக்கு தந்த கதையெல்லாம் உண்டு. பல லட்சங்கள் (30 லட்சம்) கொடுத்து பணிக்கு வந்த ஆசியரின் தரமும், நோக்கமும் எப்படி இருக்கும் என்பது உங்கள் யூகத்துக்கு., 2. மாணவர் சேர்க்கை
அரசுப் பள்ளிகள் இருக்கும் தெரு வழியே நடந்து சென்றாலே கூட உள்ளே அழைத்து அட்மிஷன் போடுவார்கள். ஆடு மேய்க்கும் தகப்பன் உடன் வந்தாலும் உட்கார வைத்து பிள்ளைக்கு அட்மிஷன் தந்து, கவலைப்படாதீங்க! நாங்க பார்த்துக்கிறோம் என சொல்லி அனுப்பும் தலைமை ஆசிரியர்க்ள் பல ஆயிரம் பேர் இங்குண்டு.
Aided பள்ளியில் அப்படி அல்ல! 100% ரிசல்ட் லட்சியம் என்பதால், நல்ல மார்க் உள்ளவர்களுக்குதான் கேட்கும் குரூப் தரப்படும். 450+ இருந்தால்தான் இங்கே முதல் குரூப். தவிர டியூஷன் கட்டாயம். ஞாயிறு கட்டாய வகுப்பு என மதிப்பெண்களுக்காக தனியார் பள்ளிகளுடன் போட்டிப்போடும் மனோபாவம் இங்குண்டு.
3. இது போக சிறப்புக் கட்டணங்கள், பில்டிங் டொனேசன், ஸ்போர்ட்ஸ் ஃபீஸ் என தனியாக பல ஃபீஸ்களை வாங்கி விடுவார்கள். சில Aided பள்ளிகள் மிக பிரம்மாண்டமாக, தனியார் பள்ளிகள் போலிருக்கும். அங்கே அரசுப் பள்ளிகளுக்கான கேரக்டர் ஏதும் இருக்காது. அவை சாமானியனுக்கானது அல்ல.இவைகளுக்கும் கூட
அரசு அனைத்து நிதி உதவிகளையும் செய்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள், லேப்டாப், புத்தகம், பை, காலணி அனைத்துமே Aided பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. 90 %மாணவர்கள் ஏழ்மை மற்றும் Lower middle class என்பதால் அவ்வுதவிகளுக்கு முற்றிலும் தகுதியனவர்கள்தான்.
சரி! 7.5% ஒதுக்கீட்டுக்கு வருவோம். இது போராடி பெற்ற சிறப்பு ஒதுக்கீடு. 7.5% என்பது அநேகமாக 300 மருத்துவக் கல்வி இடங்கள் வரும். இந்த இடங்களுக்கு aided பள்ளி மாணவர்களையும் அனுமதித்தால், 280 இடங்களை அவர்களுக்கு சென்று விடக்கூடும். காரணம் 1 : பத்தாம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண்
பெறுபவர்கள்தான் இங்கே தேர்வு செய்யப்படுகின்றனர். 2. தனியார் மேனெஜ்மெண்ட் தங்களுக்கு பெயர் கிடைக்க வேண்டி செலவு செய்து கோச்சிங் வகுப்புகள் நடத்துகின்றனர். 3. அந்தப் பள்ளி மாணவர்களுக்கு நீட் இடம் கிடைத்தால் அதை பெரிதாக விளம்பரப்படுத்தி வேற பல பயன்களை அடைவார்கள். 4. Aided பள்ளி
மாணவர்களும் பெரிய வசதி படைத்தவகள் இல்லை என்றாலும், அவர்கள் 12ம் வகுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் செலக்ஷன் சிஸ்டம் அவர்களுக்கு ஒரு advantage தருகிறது.
இவை எதுவுமே இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முதல் preference தரப்பட வேண்டும் என நினைக்கிறேன். ஒரு ஐடியல் கிராமப்புற
மாணவன் / மாணவி 9ம் வகுப்பு வரை விளையாட்டாக இருந்து 10ம் வகுப்பில் சுமார் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றி மேல்நிலைப் பள்ளிக்கு சென்று, அங்குள்ள ஆசிரியர்களால் திறமையை அடையாளம் காணப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு இறுதியில் +2 வில் உயர் மதிப்பெண் எடுப்பார்கள். இதில் இன்னொரு catch உண்டு.
10 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறுபவர்களை தனியார் பள்ளிகள் அணுகி முழு ஸ்காலர்ஷிப் உடன் தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துக் கொள்வார்கள். அங்கே சென்று இவர்கள் பெரும் ரேங்க்குகளை தங்கள் வெற்றி பேனரில் போட்டுக் கொள்வதற்காக! அரியலூர் அனிதாவுக்கு நேர்ந்தது போல! இந்த 7.5% ஒதுக்கீடு இவைகளை
தடுக்கும். 10ம் வகுப்பு வரை படிக்க வைத்து சிறப்பான மதிப்பெண் பெற வைத்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 12ம் வகுப்பில் அதை செய்யத் தெரியாதா என்ன?
எனவே, இந்த 300 இடங்கள் முதலில் முழுமையான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சேர வேண்டும். அடுத்த compartment தான் அரசு உதவி பெறும் பள்ளி
மாணவர்களுக்கு தரப்பட வேண்டும். இருக்கும் 300 இடங்களை அவர்களுடன் பகிர்ந்தால், தனியார் மேனேஜ்மெண்ட் பள்ளி மாணவர்கள் பெரும்பகுதியை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க இயலாது. அது சாதி, வர்க்கப் படிநிலையில் அடிமட்டத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கான நியாயம் ஆகாது என்பது என் கருத்து.
எதிர்காலத்தில் தமிழக மருத்துவக் கல்வி இடங்களை 15% மத்திய தொகுப்புக்குத் தந்தது போக, மீதமுள்ளவற்றில் 50% அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தர வேண்டும். அப்போது உள் ஒதுக்கீடாக இந்த Aided பள்ளி மாணவர்களுக்கும் தரலாம். NEET விலக்கு வாங்கினாலும், அரசுப்பள்ளி சிறப்பு ஒதுக்கீடு தேவை. நன்றி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#thread
ஆளுநர் என்பருக்கான உரிமை என்ன? தேவை என்ன?
அரசியலமைப்புச் சட்டத்தின் படி மாநில அரசின் தலைமை ஆளுநரும், மத்திய அரசின் தலைமை குடியரசுத் தலைவரும் ஆவார்கள். இது பிரிட்டிஷ் அரசின் கவர்னர் ஜெனரல், அவர் பிரதிநிதியான மாகாண மாகாண ஆளுநர் எனும் முறையின் நீட்சி. இந்தியா குடியரசாக ஆன
பிறகு இந்தப் பதவிகள் ஜனாதிபதி, ஆளுநர் என அலங்காரப் பதவியாக ஆகிவிட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகளுக்கான அரசாணையை, சட்டத்தை அங்கீகரிக்கும் வேலை இவர்களுடையது. இது போக பெரும்பான்மையை முடிவு செய்வது, ஆட்சியமைக்க அழைப்பது போன்ற தேர்தல் முடிவுகளும் இவர்களிடம்
உண்டு. அரசால் வெளியிடப்படும் எந்தவொரு ஆணையும், சட்டமும், ஏன் டெண்டரும் கூட "ஆளுநரின் பேரில்" என்றே வெளிவரும். அதுவும் ஒரு சம்பிரதாயம்தான். சரி! இப்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5%
வரி விதிப்பின் அடிப்படை குறித்த ஒரு திரி இது.,
வரிகளின் (Taxation) வகைகள்.,
சொத்து வரி : இது உள்ளாட்சிக்கு சொத்து வைத்திருப்பவர்கள் செலுத்த வேண்டிய வரி.
வாகன வரி : வாகனங்கள் சாலையைப் பயன்படுத்த செலுத்த வேண்டிய வரி.
எக்சைஸ் வரி : ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் செலுத்தும் வரி.
வருமான வரி : தனிநபர், நிறுவனங்களின் ஆண்டு வருமானத்துக்கான வரி.,
கலால் வரி : மதுபான உற்பத்தி, வியாபாரத்துக்கான வரி.
ஜி.எஸ்.டி : இது பொருட்களின் உற்பத்தி, விற்பனை, சர்வீஸ்களுக்கான வரி.,
இவை போக professional tax, capital gain tax, gift tax, entertainment tax, library tax, நில வரி,
ஆயத்தீர்வை வரி, என நம்மைச் சுற்றி வரிக் குதிரைகள் போல வரிகள் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. (பிச்சைக்காரர்கள் மட்டும்தான் இதுவரை எஸ்கேப் ஆனவர்கள். விரைவில் அவர்களையும் நிர்மலா மேடம் வரி வலைக்குள் கொண்டு வருவார் என நம்புவோம்.)
சரி! இன்றைக்கு சூப்பர் ஸ்டார் விலக்கு கேட்ட
#SPbalasubramanyam
அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகிறார்! ஒபாமா என நினைவு. குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து. அதற்கு அழைக்கப்பட்ட எஸ்பிபியை நமது குடியரசுத்தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்துகிறார்..
“இவர் எஸ்பிபி., எங்க நாட்டின் புகழ் வாய்ந்த பாடகர்.,
35000 பாடல்கள் பாடியிருக்கார்”
அமெரிக்க பிரசிடெண்ட் தலையாட்டி கை குலுக்கிட்டு நகர்ந்து விடுகிறார். பிறகு நடந்தது எஸ்பிபி இப்படி சொன்னார்..,
“அந்த அறிமுகத்தின் பிறகு, பிரசிடெண்ட் யாரையோ தேடிக் கொண்டே இருந்ததைப் பார்த்தேன்., என் பக்கம் வரும்போதெல்லாம் நான் விலகிக் கொண்டே இருந்தேன்.
இறுதியாக என்னை அவர் தோள் பிடித்து நிறுத்திவிட்டார். என்னைத்தான் தேடினார் என்பதையே அப்போதுதான் நான் உணர்ந்தேன். என் கையில் இருந்த காலிக் கோப்பையை எங்கே வைப்பது என தடுமாறிய அந்தக் கணத்தில் அவரே அதை வாங்கி, அருகிருந்த ஒரு டிரேயில் வைத்து விட்டு, Mister Singer! Is that true?
Post Covid Care : thread.,
உயர் பொறுப்பில் உள்ள ஓர் அரசு மருத்துவரிடம் நேற்று பேசினேன். நுரையீரல் துறை நிபுணர் அவர். அவர் சொன்ன சில எச்சரிக்கைகளை இங்கே பகிர்கிறேன். 1. முதலில் நமது சுகாதாரத் துறைச் செயலாளர் பெண்மணி குறிப்பிட்டதைப் போல கோவிட் வைரஸ் ஒரு எளிய ஃப்ளூ ஜுரம் அல்ல.
2. மிக வேகமாக தனது தன்மையை மாற்றிக் கொள்ளும் வகையாக உள்ளது. எனவே, தடுப்பூசி வந்தாலும் அதிலும் எல்லோருக்குமான நிரந்தர தீர்வாக அமையுமா என்பது ஐயமே! 3. ஒரு முறை கரோனா பாசிட்டிவ் வந்து குணமாகி கரோனா நெகட்டிவ் ஆனவுடன், அந்த நோய் 'முற்றிலுமாக' நீங்கி, இனி அபாயமில்லை என பொருள் அல்ல.
4. கரோனா வைரஸ் விலகும்போது சிலருக்கு அவரவர் உடல்தன்மையை வைத்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் செல்கின்றன. இதை கவனித்து முன்கூட்டியே கண்டுபிடிக்க நம்மிடம் வழிமுறையும் இல்லை. அதற்கான வசதிகளும் இல்லை. 5. கடந்த வாரத்தில் அவரிடம் வந்த நுரையீரல் தொற்று கேஸ்களில் 7ல் 5 கரோனா குணம்
ஆன்லைன் வகுப்பு : துவக்கத்தில் இது புதிய முறையாக இருந்ததால், ஆசிரியர்கள், மாணவர்கள் இருவருமே சுவாரஸ்யமாக பங்கெடுத்தனர். சில நாட்களிலேயே, லாக் இன் பண்ணிட்டு டிவிட்டர்லே குடும்பம் நடத்தும் டெக்னிக் போல சிலதை மாணவர்களுக்கும் கத்துகிட்டாங்க. அதை முறியடிக்கும் விதமாக ஆசிரியர்கள்
ஸ்பாட் கேள்விகள், உடனடி பதில்கள் என புதிய யுத்தியை கையாண்டனர். இப்படியான திருடன் - போலீஸ் விளையாட்டின் போதுதான், முதல்வரின் அந்த ‘ஆல் பாஸ்’ அறிவிப்பு வந்து மாணவர்கள் வாயில் ஐஸ்கிரீமாகவும், ஆசிரியர்கள் தலையில் கேஸ் சிலிண்டர் விலையாகவும் வந்து இறங்கியது. அந்தக் கணம் முதல் நாமும்
ஆல் பாஸ்தான் என்பதை பசங்க ஹெவியா நம்ப ஆரம்பிச்சுட்டாங்க. மனிதக் கடவுள் எடப்பாடியார் நம்மைக் கைவிட மாட்டார்னும், அப்படியே கைவிட்டாலும் ஸ்டாலின் அங்கிளுக்கு குரூப் மெஸேஜ் போட்டா போதும்னு வாட்ஸ்சப்லே பேசிகிட்டு உற்சாகமா இருந்தாங்க. இந்தக் கதையில் திடீர் திருப்பமா ஏ.ஐ.சி.டி மெயில்
#திரெட்
2025 ல் வாழ்க்கை எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.
யாருக்கும் சம்பளம் பணமா தர மாட்டாங்க. பதிலா மாசத்துக்கு ரெண்டு கார்டு தந்துடுவாங்க. ஒண்ணு அம்பானி கார்டு. அதை வச்சு ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்லே மளிகை, காய்கறி, பால், முட்டை, கறி எல்லாம் வாங்கிக்கலாம். ரேஷன் கடைகள் இருந்த
இடங்களில் எல்லாம் ரிலையன்ஸ் ஃப்ரஷ் இருக்கும். ஜியோ Jio Net லே WFH பண்ணிக்கலாம். பிள்ளைங்க Jio TV, Tab லே ஆன்லைன் க்ளாஸ் படிச்சுக்குவாங்க. Jio Tutorials மாலை நேரத்துலே ஹோம்வொர்க் சொல்லித் தருவாங்க. சமையல் ரொம்ப ஈஸி ஆகிடும். சமையலறையில் Jio TV இருக்கும். அதிலே என்ன தேவைன்னு சொன்னா
அமிதாப் பச்சன் குடும்பம் போல வி.ஐ.பிங்க சமைக்க சொல்லித் தரும் சானல் ஓடும். மேல்படிப்புக்கு Jio university இருக்கும். அதாவது இருக்கும்., ஆனா இருக்காது. பட் ஃபீஸ்லாம் அந்த அம்பானி படம் போட்ட கார்டுலே கட்டிக்கலாம். மருத்துவம் தேவைன்னா ரிலையன்ஸ் ஹாஸ்பிடல் இருக்கும். அங்கேயும் அம்பானி