ரஜினி ரசிகர்களைக் கேவலப்படுத்தி துக்ளக் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அவர்கள் அரசியல் நமக்குத் தெரிந்த ஒன்றுதான். என்றாலும் துக்ளக் விழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளும் ரஜினிக்கு அவர்களைப் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.
எடுத்தவுடனே "நேர்மையாக வரி செலுத்தும்" என டாப் கியர்
போட்டுத் துவங்குவதிலேயே இதன் அபத்தத்தை ரஜினி உணர்ந்து கொண்டிருப்பார். ரஜினி மீதும், அவர் குடும்பத்தின் மீது பல்வேறு வரி ஏய்ப்பு வழக்குகள் நடந்து முடிந்ததையும், நடந்து கொண்டு வருவதையும் ரஜினி அறியமாட்டாரா என்ன? (வாடகை பாக்கி, வரி பாக்கி வழக்குகள் தனி. அவரே ட்வீட் போட்டிருக்காரே).
ஆனால், நான் அறிந்து ரஜினி ரசிகர்கள் மீது இதைப் போல எந்த வரி ஏய்ப்பு வழக்குகளும் இல்லை. அண்மைக் காலங்களில் பாஜகவில் இணைபவர்கள் போல ஆள் கடத்தல், கூலிப்படை கொலைகள், போதை மருந்து கடத்தல் வழக்குகள் எல்லாம் அவர்கள் மீது இல்லை.
எனக்குத் தெரிந்த ரஜினி ரசிகர்கள் முரட்டுக்காளை, போக்கிரி
ராஜா காலத்திய மனிதர்கள். அவர்கள் ஒவ்வொரு திரைப்பட வெளியீடுகளுக்கும் கொண்டாடிய கொண்டாட்டங்கள், செய்த செலவுகளை நான் அறிவேன். எங்க ஊர் ரஜினி மன்றத் தலைவர் டி.எம் சுப்ரமணியம் பூக்கடை நடத்தி வந்தார். ஒவ்வொரு பட ரிலீசுக்கும் தியேட்டரே பூக்களால் தோரணம் கட்டப்பட்டிருக்கும். ரஜினியின்
பிறந்த நாள் அன்று பேப்பர் விளம்பரங்கள், அன்னதானங்கள் என ஒவ்வொரு ஆண்டும் சக்திக்கு மீறி செலவிட்டதை ஊரே பார்த்தது. அவர் குடும்பத்திலேயே பலர் கேலி கூட செய்திருப்பார்கள். வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர் ரவி என்றொரு ரஜினி ரசிகர் மன்றத் தலைவர். நான் அவரைப் பார்த்ததில்லை. ஆனால் அவரோட
பெயர் அத்தனை பரிச்சயம். டிசம்பர் 10 அன்று அவர் ஏற்பாடு செய்யும் ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டங்களை வட மாவட்டங்கள் முழுவதும் அறியும். 90 களிலேயே லட்சங்களில் செலவு செய்த ரவி, பஸ் ஸ்டாண்டில் சின்ன வியாபாரம் செய்பவர் என கேள்விப்பட்டிருந்தேன். இதெல்லாம் ஒரு சில உதாரணங்கள்தான். தமிழகம்
முழுவதுமான ரஜினி மன்றத் தலைவர்களின் பின்னணி, உழைப்பு, ஈடுபாடு, செய்த செலவுகளை என்னை விட ரஜினி அதிகம் அறிவார். இவர்கள் யாரும் பின்னாளில் ரஜினி கட்சித் தொடங்குவார்! அதை வைத்து நாம் அமைச்சர்கள் ஆகலாம் என வந்தவர்கள் அல்ல! பின்னாளில் வந்து ஒட்டிக் கொண்ட துக்ளக் குரூப்களுக்கு
வேண்டுமானால் அதிகாரக் கனவு இருந்திருக்கலாம்! அவர்கள் அப்பாவிகள். அவர்கள் உழைப்பின் விளைவுதான் ரஜினிக்கு வந்து சேர்ந்த சூப்பர் ஸ்டார் பட்டம். அவர்களுக்கு அரசியல் ஆசையைத் தூண்டி விட்டது ரஜினியும், இந்த மேல்தட்டு ஊடக மாஃபியாக்களும்தான். இதையும் ரஜினியின் மனசாட்சி அறியும். எனவேதான்
தனது ரசிகர்கள் அவரவர் விருப்பம் போல எந்தக் கட்சிகளிலும் சேர்ந்து கொள்ளலாம் என அறிக்கையும் வெளியிட்டார். அதன் பிறகும், துக்ளக் மாமாக்களுக்கு வயிறு எரிச்சல் தாள முடியவில்லை என்றால், அவர்களை ரஜினியும், அவர் ரசிகர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இதே அந்த ரசிகர்கள் பாஜகவில் சென்று
சேர்ந்திருந்தால் இந்தக் கதறல் வந்திருக்குமா? அவர்கள் திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளுக்கு செல்வதில்தான் இத்தனை எரிச்சல் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு மனிதன் தான் ஈட்டிய பொருளை, நேரத்தை, உழைப்பை ஒரு நடிகனுக்காக செலவிட்டப் பின்னரும், தன் விருப்பப்படி தான் எடுக்கும் .
முடிவுக்கு வேறொருவன் கதறி சாபம் விடுகிறான் என்றால், அந்த ரசிகன் நிலை பரிதாபம்தான். தனது ரசிகர்களை இழிவுபடுத்தி தனது நண்பர் குருமூர்த்தி ஆசிரியராக இருக்கும் துக்ளக் பத்திரிக்கையின் இந்த இழிச் செயலை ரஜினி கண்டிக்க வேண்டும். கண்டிப்பார் என எதிர்பார்க்கிறேன். மனசாட்சி இருந்தால்...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SKP KARUNA

SKP KARUNA Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @skpkaruna

31 Jan
பல ஆண்டுகளாக பகிரணும் என நினைத்திருந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்றேன். இதுவும் நண்பர் சொன்னதுதான்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மும்பை ரயில் பயணிகளின் கூட்டத்தைச் சமாளிக்க ஒரு பிரம்மாண்டமான ரயில் நிலையத்தைக் கட்ட முடிவு செய்தனர். அதன் திட்ட அறிக்கை லண்டனில் ஒரு ஆர்க்கிடெக்ட்
அலுவலகத்தில் தயாரானது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகருக்கும் ரயில் நிலைய வடிவமைப்பு அதே அலுவலகத்தில் நடந்தது. இறுதியாக இவை இரண்டு திட்ட அறிக்கையும் நிறைவடைந்த பிறகு வரைபடங்கள் வரிசைப்படி பெரிய தோல் பெட்டிகளில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. கப்பலில் ஏற்றும் முன்பு விலாசம்
ஒட்டும் போது, ஒரு கிளார்க் விலாசத்தைப் பெட்டிகளை மாற்றி ஒட்டி விட்டிருக்கிறார். அப்படியாக ஆஸி செல்ல வேண்டிய பெட்டி மும்பை வந்து சேர, மும்பைக்கான பெட்டி மெல்பர்ன் சென்று அடைந்தது. பொறியாளர்கள் பெட்டியைப் பிரித்தனர். விறுவிறுவென அதன்படி கட்டி முடித்தனர். அப்படி உருவானதுதான் மும்பை
Read 5 tweets
4 Dec 20
இப்போதான் ரஜினியின் முழு ப்ரஸ்மீட் பார்த்தேன்!

1. நேற்று வரை பாஜகவில் இருந்த பொறுப்பாளரைக் காட்டி, இவர் எனக்குக் கிடைத்தது எனது பாக்கியம் என்கிறார் ரஜினி.

2. தங்கள் கட்சியை விட்டு வேறு கட்சிக்கு செல்லும் அறிவுசார் அணியின் பொறுப்பாளரை பாஜக மனமகிழ்வோடு வாழ்த்தி வழியனுப்புகிறது.
3. அதிமுகவுடன் தேர்தல் கூட்டணியை அறிவித்து விட்டு, ரஜினியின் அரசியல் அறிவிப்பை பாஜகவின் அத்தனைத் தலைவர்களும், “ஸ்வீட் எடு! கொண்டாடு!” என்கின்றனர்.

4. “ஆட்சி மாற்றம்” காலத்தின் கட்டாயம் என்ற ரஜினியை முழு மனதோட வாழ்த்துகிறேன் என்கிறார் ஆளும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.
5. அதிமுக, பாஜக ஆதரவு வேடம் அணிந்திருந்த ஊடக நடுநிலைகள்
ரஜினி டிபி மாத்திகிட்டாங்க.

6. அதிமுகவின் தலைவர்கள் தனக்கான சந்தர்ப்பம்
எதுவென தெரியும்வரை மயான அமைதி காக்கின்றனர்.

7. ரஜினி அரசியல் பிரவேசம் செய்திகள் வரும் போதெல்லாம் துடித்துப் போய் கொதித்தெழும் சீமானைக் காணோம்!
Read 4 tweets
6 Nov 20
7.5% for Aided schools : My opinion.
அரசு உதவி பெறும் பள்ளிகள் (Aided schools) எனப்படும் இவைகள் தனியார் கல்வி அறக்கட்டளைகள், வணிகர் சங்கங்கள், ஹிந்து அமைப்புகள், முஸ்லீம் ஜமாத்கள், கிருத்துவ மிஷினரிகள் போன்றவைகளால் துவக்கப்பட்டு நடத்தப்படுபவை.
1. இங்கு ஆசிரியர்கள் நியமனம்
அறக்கட்டளைகளால் நியமிக்கப்படுவர். சம்பளம் அரசு தரும். இந்த ஆசிரியர் நியமனங்கள்தான் அறக்கட்டளையின் ஜாக்பாட். ஒரு ஆசிரியர் பணி ஓய்வு பெற்ற பிறகுதான் காலி இடம் நிரப்பப்படும் என்பதால் பெரும் போட்டியே அதற்கு நடக்கும். எனக்குத் தெரிந்து ஓய்வு பெற இரண்டு ஆண்டுகள் மீதமிருந்த ஒருவருக்கு
இரண்டு ஆண்டு சம்பளத்தை முன்கூட்டியே தந்து விருப்ப ஓய்வில் அனுப்பிவிட்டு அந்த இடத்தை அறக்கட்டளை செகரட்டரி தனது மகளுக்கு தந்த கதையெல்லாம் உண்டு. பல லட்சங்கள் (30 லட்சம்) கொடுத்து பணிக்கு வந்த ஆசியரின் தரமும், நோக்கமும் எப்படி இருக்கும் என்பது உங்கள் யூகத்துக்கு.,
2. மாணவர் சேர்க்கை
Read 15 tweets
23 Oct 20
#thread
ஆளுநர் என்பருக்கான உரிமை என்ன? தேவை என்ன?
அரசியலமைப்புச் சட்டத்தின் படி மாநில அரசின் தலைமை ஆளுநரும், மத்திய அரசின் தலைமை குடியரசுத் தலைவரும் ஆவார்கள். இது பிரிட்டிஷ் அரசின் கவர்னர் ஜெனரல், அவர் பிரதிநிதியான மாகாண மாகாண ஆளுநர் எனும் முறையின் நீட்சி. இந்தியா குடியரசாக ஆன
பிறகு இந்தப் பதவிகள் ஜனாதிபதி, ஆளுநர் என அலங்காரப் பதவியாக ஆகிவிட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகளுக்கான அரசாணையை, சட்டத்தை அங்கீகரிக்கும் வேலை இவர்களுடையது. இது போக பெரும்பான்மையை முடிவு செய்வது, ஆட்சியமைக்க அழைப்பது போன்ற தேர்தல் முடிவுகளும் இவர்களிடம்
உண்டு. அரசால் வெளியிடப்படும் எந்தவொரு ஆணையும், சட்டமும், ஏன் டெண்டரும் கூட "ஆளுநரின் பேரில்" என்றே வெளிவரும். அதுவும் ஒரு சம்பிரதாயம்தான். சரி! இப்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5%
Read 8 tweets
14 Oct 20
வரி விதிப்பின் அடிப்படை குறித்த ஒரு திரி இது.,
வரிகளின் (Taxation) வகைகள்.,
சொத்து வரி : இது உள்ளாட்சிக்கு சொத்து வைத்திருப்பவர்கள் செலுத்த வேண்டிய வரி.
வாகன வரி : வாகனங்கள் சாலையைப் பயன்படுத்த செலுத்த வேண்டிய வரி.
எக்சைஸ் வரி : ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் செலுத்தும் வரி.
வருமான வரி : தனிநபர், நிறுவனங்களின் ஆண்டு வருமானத்துக்கான வரி.,
கலால் வரி : மதுபான உற்பத்தி, வியாபாரத்துக்கான வரி.
ஜி.எஸ்.டி : இது பொருட்களின் உற்பத்தி, விற்பனை, சர்வீஸ்களுக்கான வரி.,
இவை போக professional tax, capital gain tax, gift tax, entertainment tax, library tax, நில வரி,
ஆயத்தீர்வை வரி, என நம்மைச் சுற்றி வரிக் குதிரைகள் போல வரிகள் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. (பிச்சைக்காரர்கள் மட்டும்தான் இதுவரை எஸ்கேப் ஆனவர்கள். விரைவில் அவர்களையும் நிர்மலா மேடம் வரி வலைக்குள் கொண்டு வருவார் என நம்புவோம்.)
சரி! இன்றைக்கு சூப்பர் ஸ்டார் விலக்கு கேட்ட
Read 9 tweets
25 Sep 20
#SPbalasubramanyam
அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகிறார்! ஒபாமா என நினைவு. குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து. அதற்கு அழைக்கப்பட்ட எஸ்பிபியை நமது குடியரசுத்தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்துகிறார்..
“இவர் எஸ்பிபி., எங்க நாட்டின் புகழ் வாய்ந்த பாடகர்.,
35000 பாடல்கள் பாடியிருக்கார்”
அமெரிக்க பிரசிடெண்ட் தலையாட்டி கை குலுக்கிட்டு நகர்ந்து விடுகிறார். பிறகு நடந்தது எஸ்பிபி இப்படி சொன்னார்..,
“அந்த அறிமுகத்தின் பிறகு, பிரசிடெண்ட் யாரையோ தேடிக் கொண்டே இருந்ததைப் பார்த்தேன்., என் பக்கம் வரும்போதெல்லாம் நான் விலகிக் கொண்டே இருந்தேன்.
இறுதியாக என்னை அவர் தோள் பிடித்து நிறுத்திவிட்டார். என்னைத்தான் தேடினார் என்பதையே அப்போதுதான் நான் உணர்ந்தேன். என் கையில் இருந்த காலிக் கோப்பையை எங்கே வைப்பது என தடுமாறிய அந்தக் கணத்தில் அவரே அதை வாங்கி, அருகிருந்த ஒரு டிரேயில் வைத்து விட்டு, Mister Singer! Is that true?
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!