தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் : 1. 50 ஆண்டுகால பொது வாழ்வு. 2. 6 முறை சட்டமன்ற உறுப்பினர், 2 முறை சென்னைக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் என இத்தனை அதிகாரப் பதவிகளில் இருந்தும் எதிர்கட்சியினரும் குறை சொல்ல முடியாத அரசியல் வாழ்வு.
3. எதிரியே ஆனாலும், உடல்நலிவுற்றிருந்தாலோ, மரணம் அடைந்தாலோ நேரில் சென்று உதவும், ஆறுதல் சொல்லும் மனிதநேயம். 4. தலைவர் கலைஞர் மறைவுக்குப் பிறகு, சனாதன சக்திகளை எதிர்க்கும் பழைய வேகம் திமுகவுக்கு இருக்காது என்றொரு பொதுக் கருத்தை உடைத்து, திமுகவை முன்னிலும் வீரியமான சக்தியாக
உயர்த்திக் காட்டிய அந்தச் துணிச்சல். 4. காஷ்மீரில் நடக்கும் அநீதியாக இருந்தாலும், முதல் கண்டனக்குரல் தமிழ்க் குரல்தான் என மதச்சார்பற்ற சக்திகளுக்கு உயிரூட்டிய அந்த கொள்கைப்பிடிப்பு. 5. பேரிடர் காலத்தில் வாய்ச்சொல் வீரர்கள் எல்லாம் ஒளிந்து கொண்டபோது, துணிந்து தானும் களம் இறங்கி
தனது தொண்டர்களையும் களம் இறக்கி நாடே கண்டறியாத அளவுக்கு ஒவ்வொரு ஏழை எளிய மக்கள் இல்லங்களுக்கும் உணவும், மருந்தும், உதவிகளையும் கொண்டு சேர்த்து அரசுக்கே முன்னுதாரமான இருந்த அந்தக் கடமை உணர்வு.
6.கட்சித் தலைமை ஏற்ற பிறகு அனைவரையும் அரவணைத்துச் சென்று நாடாளுமன்றத் தேர்தலில் 39/40,
இடைத்தேர்தல்களில் 65% வெற்றி, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 70% வெற்றி என வியூகம் அமைத்து வெற்றியைப் பெற்றுத் தந்த தலைமைப் பண்பு, 7. தந்தையைப் போலவே வெற்றி கண்டு ஆடாத பணிவு,
தோல்விக்குக் கலங்காத துணிவு. 8. இனம், மொழி, மாநில உரிமை என இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை மனதில் நிறுத்தி
செயல்படும் உறுதி.
இவை எல்லாமே கலைஞர் மறைவுக்குப் பிறகு அவருடைய செயல்பாடுகளில் இருந்து உருவான பொதுமக்களின் கருத்து.
பெரும்பாலான நடுநிலையாளர்களின் தேர்வு இப்போது தலைவர் ஸ்டாலின் தான். எதிர்கட்சியினர் கூட இந்தமுறை ஸ்டாலினுக்கு ஒரு வாய்ப்புத் தரணும் என சொல்லக் கூடிய அளவில்
அவருடைய உழைப்பும், செயல்பாடுகளும் அமைந்துள்ளன. கடந்த மூன்று மாதங்களாக தமிழகம் முழுவதும் நான் சுற்றி பொதுமக்களின் கருத்துக்களை நேரடியாக கேட்டு அறிந்ததின் தொகுப்பு இது. தேர்தல் கணிப்பு வாக்கெடுப்புகளில் கூட எந்தக் கட்சி வெல்லும் எனும் கேள்விக்கு திமுகவுக்கு 16% முன்னணி எனில்
யார் அடுத்த முதல்வர் எனும் கேள்விக்கு 30% முன்னணி தலைவர் தளபதிக்குக் கிடைப்பதை அரசியல் அறிந்த அனைவரும் வியந்து பார்க்கின்றனர்.
நான் சொன்ன அனைத்தையும் உண்மை என காலம் endorse செய்ய இன்னும் 60 நாட்கள் காத்திருந்தால் போதும்.
நாங்களோ, 'மு.க.ஸ்டாலின் எனும் நான்' என எனது தலைவர்
உறுதி ஏற்கப்போகும் அந்த நாளுக்காக பல ஆண்டுகள் காத்திருந்தோம். அந்தக் காலம் கனியப் போகும் நேரம் இது. பதறாமல், சிதறாமல் வாக்குகளை சேகரிக்கத் தயாராகிறோம். எங்களை இதே உத்வேகத்துடன் வழி நடத்திச் செல்லுங்கள் தலைவா! வெற்றி நமதே.
வாழ்க நீவிர் நூறாண்டு.
அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். 💐
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரஜினி ரசிகர்களைக் கேவலப்படுத்தி துக்ளக் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அவர்கள் அரசியல் நமக்குத் தெரிந்த ஒன்றுதான். என்றாலும் துக்ளக் விழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளும் ரஜினிக்கு அவர்களைப் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.
எடுத்தவுடனே "நேர்மையாக வரி செலுத்தும்" என டாப் கியர்
போட்டுத் துவங்குவதிலேயே இதன் அபத்தத்தை ரஜினி உணர்ந்து கொண்டிருப்பார். ரஜினி மீதும், அவர் குடும்பத்தின் மீது பல்வேறு வரி ஏய்ப்பு வழக்குகள் நடந்து முடிந்ததையும், நடந்து கொண்டு வருவதையும் ரஜினி அறியமாட்டாரா என்ன? (வாடகை பாக்கி, வரி பாக்கி வழக்குகள் தனி. அவரே ட்வீட் போட்டிருக்காரே).
ஆனால், நான் அறிந்து ரஜினி ரசிகர்கள் மீது இதைப் போல எந்த வரி ஏய்ப்பு வழக்குகளும் இல்லை. அண்மைக் காலங்களில் பாஜகவில் இணைபவர்கள் போல ஆள் கடத்தல், கூலிப்படை கொலைகள், போதை மருந்து கடத்தல் வழக்குகள் எல்லாம் அவர்கள் மீது இல்லை.
எனக்குத் தெரிந்த ரஜினி ரசிகர்கள் முரட்டுக்காளை, போக்கிரி
பல ஆண்டுகளாக பகிரணும் என நினைத்திருந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்றேன். இதுவும் நண்பர் சொன்னதுதான்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மும்பை ரயில் பயணிகளின் கூட்டத்தைச் சமாளிக்க ஒரு பிரம்மாண்டமான ரயில் நிலையத்தைக் கட்ட முடிவு செய்தனர். அதன் திட்ட அறிக்கை லண்டனில் ஒரு ஆர்க்கிடெக்ட்
அலுவலகத்தில் தயாரானது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகருக்கும் ரயில் நிலைய வடிவமைப்பு அதே அலுவலகத்தில் நடந்தது. இறுதியாக இவை இரண்டு திட்ட அறிக்கையும் நிறைவடைந்த பிறகு வரைபடங்கள் வரிசைப்படி பெரிய தோல் பெட்டிகளில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. கப்பலில் ஏற்றும் முன்பு விலாசம்
ஒட்டும் போது, ஒரு கிளார்க் விலாசத்தைப் பெட்டிகளை மாற்றி ஒட்டி விட்டிருக்கிறார். அப்படியாக ஆஸி செல்ல வேண்டிய பெட்டி மும்பை வந்து சேர, மும்பைக்கான பெட்டி மெல்பர்ன் சென்று அடைந்தது. பொறியாளர்கள் பெட்டியைப் பிரித்தனர். விறுவிறுவென அதன்படி கட்டி முடித்தனர். அப்படி உருவானதுதான் மும்பை
7.5% for Aided schools : My opinion.
அரசு உதவி பெறும் பள்ளிகள் (Aided schools) எனப்படும் இவைகள் தனியார் கல்வி அறக்கட்டளைகள், வணிகர் சங்கங்கள், ஹிந்து அமைப்புகள், முஸ்லீம் ஜமாத்கள், கிருத்துவ மிஷினரிகள் போன்றவைகளால் துவக்கப்பட்டு நடத்தப்படுபவை. 1. இங்கு ஆசிரியர்கள் நியமனம்
அறக்கட்டளைகளால் நியமிக்கப்படுவர். சம்பளம் அரசு தரும். இந்த ஆசிரியர் நியமனங்கள்தான் அறக்கட்டளையின் ஜாக்பாட். ஒரு ஆசிரியர் பணி ஓய்வு பெற்ற பிறகுதான் காலி இடம் நிரப்பப்படும் என்பதால் பெரும் போட்டியே அதற்கு நடக்கும். எனக்குத் தெரிந்து ஓய்வு பெற இரண்டு ஆண்டுகள் மீதமிருந்த ஒருவருக்கு
இரண்டு ஆண்டு சம்பளத்தை முன்கூட்டியே தந்து விருப்ப ஓய்வில் அனுப்பிவிட்டு அந்த இடத்தை அறக்கட்டளை செகரட்டரி தனது மகளுக்கு தந்த கதையெல்லாம் உண்டு. பல லட்சங்கள் (30 லட்சம்) கொடுத்து பணிக்கு வந்த ஆசியரின் தரமும், நோக்கமும் எப்படி இருக்கும் என்பது உங்கள் யூகத்துக்கு., 2. மாணவர் சேர்க்கை
#thread
ஆளுநர் என்பருக்கான உரிமை என்ன? தேவை என்ன?
அரசியலமைப்புச் சட்டத்தின் படி மாநில அரசின் தலைமை ஆளுநரும், மத்திய அரசின் தலைமை குடியரசுத் தலைவரும் ஆவார்கள். இது பிரிட்டிஷ் அரசின் கவர்னர் ஜெனரல், அவர் பிரதிநிதியான மாகாண மாகாண ஆளுநர் எனும் முறையின் நீட்சி. இந்தியா குடியரசாக ஆன
பிறகு இந்தப் பதவிகள் ஜனாதிபதி, ஆளுநர் என அலங்காரப் பதவியாக ஆகிவிட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகளுக்கான அரசாணையை, சட்டத்தை அங்கீகரிக்கும் வேலை இவர்களுடையது. இது போக பெரும்பான்மையை முடிவு செய்வது, ஆட்சியமைக்க அழைப்பது போன்ற தேர்தல் முடிவுகளும் இவர்களிடம்
உண்டு. அரசால் வெளியிடப்படும் எந்தவொரு ஆணையும், சட்டமும், ஏன் டெண்டரும் கூட "ஆளுநரின் பேரில்" என்றே வெளிவரும். அதுவும் ஒரு சம்பிரதாயம்தான். சரி! இப்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5%
வரி விதிப்பின் அடிப்படை குறித்த ஒரு திரி இது.,
வரிகளின் (Taxation) வகைகள்.,
சொத்து வரி : இது உள்ளாட்சிக்கு சொத்து வைத்திருப்பவர்கள் செலுத்த வேண்டிய வரி.
வாகன வரி : வாகனங்கள் சாலையைப் பயன்படுத்த செலுத்த வேண்டிய வரி.
எக்சைஸ் வரி : ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் செலுத்தும் வரி.
வருமான வரி : தனிநபர், நிறுவனங்களின் ஆண்டு வருமானத்துக்கான வரி.,
கலால் வரி : மதுபான உற்பத்தி, வியாபாரத்துக்கான வரி.
ஜி.எஸ்.டி : இது பொருட்களின் உற்பத்தி, விற்பனை, சர்வீஸ்களுக்கான வரி.,
இவை போக professional tax, capital gain tax, gift tax, entertainment tax, library tax, நில வரி,
ஆயத்தீர்வை வரி, என நம்மைச் சுற்றி வரிக் குதிரைகள் போல வரிகள் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. (பிச்சைக்காரர்கள் மட்டும்தான் இதுவரை எஸ்கேப் ஆனவர்கள். விரைவில் அவர்களையும் நிர்மலா மேடம் வரி வலைக்குள் கொண்டு வருவார் என நம்புவோம்.)
சரி! இன்றைக்கு சூப்பர் ஸ்டார் விலக்கு கேட்ட