75வது சுதந்திர தின கொண்டாட்டம் ; நாளை துவக்குகிறார் பிரதமர் மோடி
புதுடில்லி :'நாட்டின், 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை, குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
அனைத்து, எம்.பி.,க்களும், இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்துள்ளார்' என, மத்திய அரசின் பார்லி., விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
பா.ஜ.,வின் பார்லிமென்ட் குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் நட்டா உள்ளிட்டோர் பேசினர்.
நடை பயண இயக்கம்
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து, பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:நாட்டின், 75வது சுதந்திர தினம், 2022ல் கொண்டாடப்பட உள்ளது. அந்தக் கொண்டாட்டத்தின் துவக்க விழா, குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் நாளை துவங்குகிறது.
நாட்டின், 75 இடங்களில், 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன. அதைத் தவிர, சபர்மதி ஆசிரமத்தில் இருந்து, தண்டிக்கு, 21 நாட்கள் நடை பயண இயக்கத்தையும், மோடி துவக்கி வைக்கிறார்.
இந்தக் கொண்டாட்டங்களில், எம்.பி.,க்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
அறிக்கை
சுதந்திர தினத்தின், 75வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் குறித்து, பார்லி.,யில் அறிக்கை தாக்கல் செய்ய, மோடி தயாராக இருந்தார்.
அதற்கு, சபாநாயகர் ஓம் பிர்லாவும் அனுமதி அளித்தார். ஆனால், தொடர் அமளியால், அறிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை. பார்லி.,யில் அலுவல் நடக்கும்போது, கொண்டாட்டங்கள் குறித்து, மோடி தெரிவிப்பார். இவ்வாறு, அவர் கூறினார்
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*மகா சிவராத்திரி நாளில் ஏன் அன்னதானம் செய்யக் கூடாது?*
மகா சிவராத்திரி நாளன்று, ஒரு பக்கம் கோவிலுக்குள்ளே சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே, மறுபக்கம் கோவிலுக்கு வெளியேயும், கோவிலின் மண்டபத்திற்குள்ளும்,
பக்தர்களுக்கு அன்னதானத்தை பிரசாதமாக கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் இப்படி அன்னதானம் கொடுப்பதால், நாள் முழுக்க விரதமிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் சிவராத்திரி விரதத்தின் நோக்கமே கெட்டுவிடும் என்பதை முதலில் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
உண்மையில் சிவராத்திரி விரதம், நமக்கு முக்கியமான இரண்டு விஷயங்களை எடுத்துக் கூறுகின்றன.
நம்முடைய அன்றாட தேவையாக நினைப்பது உணவு மற்றும் தூக்கம் என இரண்டையும் தான். இவை இரண்டுக்காகவும் தான், அல்லும் பகலும் உழைத்து சம்பாதிக்கிறோம்.
மும்பை : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த சம்பவத்திற்கு, ஜெய்ஷ் - உல் - ஹிந்த் என்ற, பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.தலைநகர் மும்பையில், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் வீடு அமைந்துள்ளது.
இவரது வீட்டருகே, சமீபத்தில், 'ஜெலட்டின்' குச்சிகளால் நிரப்பப்பட்ட கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், அந்த காரை பறிமுதல் செய்த போலீசார், விசாரணையை துவங்கினர்.
*மகா சிவராத்திரி அன்று மட்டும் திறந்திருக்கும் சிவாலயம். இங்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சிவனை தரிசிக்க முடியும்.*
இந்த ஆண்டின் மகா சிவராத்திரி விழா இன்று இரவு கொண்டாடப் பட உள்ளது. இன்றைய தினம் இரவு கண் விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம்.
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.
பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கமுள்ளவராக இருப்பர்: பிரதமர் மோடி புகழாரம்
பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இயற்கையாகவே இரக்கமுள்ளவர்களாக இருப்பர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
சுவாமி சித்பவானந்தரின் பகவத் கீதை பதிப்பு 5 லட்சத்துக்கும் மேல் விற்று சாதனை படைத்ததை அடுத்து, அதன் மின்னூல் பதிப்பு இன்று வெளியிடப்பட்டது. அப்பதிப்பைப் பிரதமர் மோடி காணொலி மூலம் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, ''பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இயற்கையாகவே இரக்கமுள்ளவர்களாகவும் ஜனநாயக மனோபாவத்துடனும் இருப்பர். கீதை சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
என்னங்க.... அக்கம் பக்கம் வீடுகளில் கரண்ட் இருக்கு, நம்ம வீட்ல மட்டும் நேத்து நைட்டு, நீங்க போனதில இருந்து கரண்ட் இல்லீங்க,
நைட்டெல்லாம் தூக்கமே இல்லை, புள்ளைக எல்லாம் புழுக்கத்துல தூங்காம அழுதுட்டே இருந்துதுங்க...
லைன் மேனுக்கு
போன போட்டு வரச்சொல்லி பாக்க சொல்லுங்க...
வீரன்னா யார் தெரியுமா?… நெஞ்சுரம்னா என்னன்னு தெரியுமா?
அஷ்வின் ஜி. சஞ்சிகை பகிர்வு
29 ஆண்டுகளுக்கு முன்பு….
ஜனவரி மாதத்தில் ஒரு நாள் (26 -1-1992)
தீவிரவாதிகள் சவால் விட்டிருந்தார்கள். ஸ்ரீநகரின் லால் சவுக்கில் குடியரசு தினத்தன்று இந்திய தேசீயக் கொடியை ஏற்ற வரும் இந்தியர்களை நாயை சுடுவது போல சுட்டுத் தள்ளுவோம். லால் சவுக்கில் நுழைபவர் எவரும் இந்தியாவுக்குள் உயிருடன் திரும்ப முடியாது என்று கொக்கரித்துக் கொண்டிருந்தார்கள்.
காஷ்மீர் பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கைகோர்த்து நின்று கொண்டிருந்த நேரம் அது..
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்தச் சவாலை இந்தியாவில் இருந்து இருவர் ஏற்றுக் கொண்டார்கள்.