*மகா சிவராத்திரி நாளில் ஏன் அன்னதானம் செய்யக் கூடாது?*
மகா சிவராத்திரி நாளன்று, ஒரு பக்கம் கோவிலுக்குள்ளே சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே, மறுபக்கம் கோவிலுக்கு வெளியேயும், கோவிலின் மண்டபத்திற்குள்ளும்,
பக்தர்களுக்கு அன்னதானத்தை பிரசாதமாக கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் இப்படி அன்னதானம் கொடுப்பதால், நாள் முழுக்க விரதமிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் சிவராத்திரி விரதத்தின் நோக்கமே கெட்டுவிடும் என்பதை முதலில் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
உண்மையில் சிவராத்திரி விரதம், நமக்கு முக்கியமான இரண்டு விஷயங்களை எடுத்துக் கூறுகின்றன.
நம்முடைய அன்றாட தேவையாக நினைப்பது உணவு மற்றும் தூக்கம் என இரண்டையும் தான். இவை இரண்டுக்காகவும் தான், அல்லும் பகலும் உழைத்து சம்பாதிக்கிறோம்.
ஆனால், அந்த சிவராத்திரி தினத்தில் மட்டுமாவது, உணவு, தூக்கம் இரண்டையும் மறந்து, எம்பெருமான் இறையனாருக்காக நாள் முழுக்க கண்விழித்து விரதம் இருப்பது தான் இந்த நாளின் உண்மையான நோக்கமாகும்.
மகா சிவராத்திரி விரதம் தொடங்கிய நாள் முதல் காலையிலிருந்து இரவு முழுவதும் கண்விழித்திருந்து சிவபெருமானை நினைத்து, அவரின் திருநாமங்களையும், அவரது பஞ்சாட்ஷர மந்திரங்களையும் உச்சரித்துக்கொண்டும், அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று, அங்கு நான்கு ஜாம பூஜைகளிலும் கலந்து கொண்டு,
சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைக் கண்குளிரத் தரிசித்து வணங்க வேண்டும்.
மகா சிவாராத்திரிக்கு மறுநாள் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து முடித்து, கோவிலில் சிவபெருமானுக்கு நடைபெறும் தீபாராதனையை கண்டு தரிசித்து முடித்து, அதன் பிறகே விரதத்தை முடிக்க வேண்டும்.
அப்போது தான் சிவராத்திரி விரதம் இருப்பதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும். இதைத்தான் நம்முடைய முன்னோர்களும் செய்து வந்தனர்.
சிவராத்திரி நாளன்று அனைத்து சிவன் கோவில்களிலும், அன்னதானம் கொடுக்கிறேன் என்று அநேகம் பேர், கேசரி,சாம்பார் சாதம், காய்கறி சாதம், தயிர் சாதம் என வரிசை கட்டி நின்று கொடை வள்ளலாக மாறி வாரி வழங்கி வருகின்றனர். அன்னதானம் தான் இருப்பதிலேயே மிக உயரிய தானம் என்பதை மறுக்கவில்லை.
ஆனால் அதை எதற்கு எப்போது கொடுப்பது என்ற ஒரு நியதி உண்டு. அப்படி செய்தால் தான், அன்னதானம் கொடுப்பவருக்கும், அதைப் பெறு பவருக்கும் உரிய பலனைக் கொடுக்கும்.
நம்முடைய ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவது உணவும் உறக்கமும் தான். இந்த இரண்டையும் கட்டுப்படுத்தினாலே, ஐம்புலன்களும் தானாகவே கட்டுக்குள் வந்து விடும். அப்படி கட்டுப்படும் போது, நம் மனதிற்குள் இறையுணர்வு தானாகவே வந்து விடும். அப்போது நாம் நினைத்த காரியம் இனிதே நிறைவேறும்.
இதைத் தான் சிவராத்திரி விரதம் நமக்கு எடுத்துரைக்கின்றது.
நம்மைப் படைத்த பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்களும் முனிவர்களும், அட அன்னை பராசக்தி யே உண்ணாமல் சிவராத்திரி விரதமிருந்து இறைவனை வழிபடும் போது, நாம் ஒரு நாள் உணவைத் தியாகம் செய்வதால் ஒன்றும் கெட்டுவிடாது.
அதோடு, சிவபெருமான் சதாசர்வ காலமும் தியான நிலையிலேயே அமர்ந்திருப்பவர். ஆரவாரத்தை அறவே வெறுப்பவர். அவருக்குப் பிடித்தது ஏகாந்தமான அமைதி தான்.
அதனால் தான் கோவிலுக்குள் நுழைந்து இறைவனைத் தரிசிக்கச் செல்லும்போது, அமைதியாக வந்து தரிசித்து அமைதியாக வெளியேற வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
எனவே, இனியாவது சிவராத்திரி தினத்தில் அன்னதானம் கொடுப்பதைத் தவிர்த்து விரதமிருப்பவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரின் கடமையாகும்.
'தமிழகத்தில், பா.ஜ., நுழைந்து விடக் கூடாது என்பதால், எவ்வளவு குறைவான தொகுதிகள் ஒதுக்கினாலும், அதைக் ஏற்றுக் கொள்கிறோம்' என, தி.மு.க.,
கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., --- கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் அனைத்தும் கூறுகின்றன. தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் இதைச் சொல்லி தான், அக்கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை கொடுத்து, தன் காலுக்கு கீழே வைத்திருக்கிறார்.
இந்த அவமானத்தை மறைத்தபடி, வெளியே வந்து, 'பா.ஜ., வரக் கூடாது என்பதால் தான்...' என, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், 'பிலிம்' காட்டுகின்றனர்.
அது சரி, தமிழகத்தில் பா.ஜ., ஏன் வரக் கூடாது? நம் நாட்டில், அதிக மாநிலங்களில், பா.ஜ., தான் ஆட்சியில் இருக்கிறது.
*திருநெல்வேலி நகரில் ஶ்ரீ பிரகலாத வரதன் திருக்கோயில்*
மிகவும் பழமை வாய்ந்த கோயில் *எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.*
🇮🇳🙏1
நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப் பட்டதாக தகவல் உள்ளது.
இந்தசன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன.
🇮🇳🙏2
இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது.
ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
பின்னாளில் வைணவ பக்தரான கூரத்தாழ்வார் கோன் என்பவர் இதை மீண்டும் கண்டுபிடித்தார்.
ஐந்தே வருடங்களில் முடிக்க வேண்டியதை பத்து வருடங்களில் முடிப்பாராம்!
திமுக ஆர்மி ஜெனரல் தான் பொருளாதார புலியென நினைத்து கொண்டு சீனாவில் மாவோ 1960களில் செய்த “The Great Leap Forward “எனும் “பெரும் பாய்ச்சலை நோக்கி” என அறிவித்தது போல் ஒரு அறிவிப்பினை செய்துவிட்டார்.
அது அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை GSDP இலக்கினை 35லட்சம் கோடி பொருளாதாரமாக மாற்றுவோம் என்பதுGSDP என்பது மாநில உற்பத்தி அடைவுநிலையினை குறிக்கும் அளவுஇது கடினமான இலக்கு என்றாலும் இதுவரை எந்த மாநிலமும் எட்டியதில்லை.
அ.ப.பெருமாள், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வுடன் போராடி, கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படியோ மிகக்குறைந்த தொகுதிகளை பெற்று, ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டு விட்டன.
இரு கம்யூ., கட்சிகளுக்கும், தலா, ஆறு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கம்யூ., கட்சிகள், எதற்காக இவ்வளவு குறைந்த தொகுதியுடன் களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா...
அதற்கு காரணம், தொகுதி எண்ணிக்கை எவ்வளவு குறைகிதோ, அதற்கு ஈடாக, தி.மு.க., தரும் தேர்தல் நிதி அதிகமாகும். அந்த கணக்கு தான்! கோடிக்கணக்கான ரூபாய் பணம் வாங்கி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என, யாரும் கேள்வி கேட்கக் கூடாது.