ஒவ்வொரு ஜாதிக்கும் குறிப்பிட்ட ஓட்டு வங்கி உண்டு. அதனால், ஜாதி கட்சித் தலைவர்கள் தேர்தலில் முக்கியமானவர்கள்.
கடந்த, 2001 தேர்தலில், ஏழு ஜாதிக் கட்சிகளை, தி.மு.க, கூட்டணியில் இணைத்து, தேர்தலை சந்தித்தார் கருணாநிதி. 'வானவில் கூட்டணி' என்று பெயரிட்டார்.
ஒவ்வொரு ஜாதி கட்சிக்கும் ஏழு, எட்டு என, தொகுதிகளை வாரி வழங்கினார். வானவில் கூட்டணி ஜெயிக்கவில்லை.
ஆனால், ஜாதியின் பெயரால் கட்சி துவங்குவது லாபமான, 'பிசினஸ்' என்பது அதன் மூலம் அனைவருக்கும் தெரிந்து விட்டது.நிறைய பேர் அந்த தொழிலில் குதித்தனர்.
ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்து தெலுங்கு பேசும் மக்களை ஒன்றிணைத்து, ஆர்.எம்.ஆர்., பேரவை மூலம், தெலுங்கர் ஓட்டுகளை வாங்கி பதவிக்கு வரும் கனவோடு ராம் மோகன் ராவ் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியே முயற்சி செய்தார் என்றால்,
கருணாநிதி திட்டத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணரலாம்.
இந்த தடவை ராம் மோகனை காணோம். ஆனால், அவரைப் போலவே நிறைய பேர், ஜாதி கட்சிகளை துவங்கி நடத்தி வருகின்றனர்.
இவர்கள், ஜாதிக்கான பிரச்னைகளை வைத்து, அவ்வப்போது அரசுக்கு கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தியும் இருப்பை காட்டிக் கொள்கின்றனர்.
தமிழகத்தில் எப்படியாவது காலுான்றத் துடிக்கும், பா.ஜ.,வும் ஜாதிக் கட்சிகளை நம்பி அவர்கள் கேட்டதை செய்து கொடுத்து அரசியல் செய்வதை பார்க்கிறோம்.
தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரை, பட்டியல் இனத்தைச் சேர்ந்த, ஏழு ஜாதியினருக்கு வழங்கியது இந்த வியூகத்தின் ஒரு பகுதியே.இதேபோல முத்திரையர், நாடார், முதலியார், செட்டியார் என பல இனங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து பேசினர்.
அமித் ஷா இந்த விஷயத்தில் தீவிரமாக இருக்கிறார்.ஜாதிக் கட்சி பிரமுகர்களை டில்லிக்கு வரவழைத்து பேசுகிறார். பா.ஜ.,வை பொறுத்தவரை, இது ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் முயற்சி என கூறிக் கொள்கிறது.
இந்த விஷயங்களை, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் உணர்ந்து கொண்டதன் வெளிப்பாடு தான், சிறு சிறு ஜாதிய அமைப்புகளையும், ஜாதிய பின் புலத்தோடு செயல்படும் கட்சிகளையும் தங்கள் கூட்டணியில் சேர்த்து, அவர்களுக்கு தொகுதியும் வழங்கி போட்டியிட வைப்பது.
தி.மு.க., கூட்டணியில், மக்கள் விடுதலைக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவை, மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகளுக்கு ஒன்றில் இருந்து, மூன்று, 'சீட்'கள் வரை வழங்கி உள்ளனர்.
தேவேந்திரர், வன்னியர், அருந்ததியர், முக்குலத்தோர், சிறுபான்மையின முஸ்லிம் சமூகங்களை உள்ளடக்கி இந்தக் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மக்களின் ஓட்டுகளை பெறும் திட்டத்தோடு தான், இக்கட்சிகளுக்கு, 'சீட்' வழங்கி இருக்கிறது, தி.மு.க., இதில், மனித நேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தவிர மற்ற கட்சிகளெல்லாம் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட சம்மதித்துள்ளன.
இதன் மூலம், ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க முயற்சிக்கிறது தி.மு.க.,அதேபோல, அ.தி.மு.க., கூட்டணியில் புரட்சி பாரதம், பசும்பொன் தேசிய கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்,
பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு, 'சீட்' கிடைத்துள்ளது.
'ஜாதிக் கட்சிகளை எப்படி சாதுர்யமாக நம் கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டேன் பார்த்தீர்களா?' என, இ.பி.எஸ்.,சும், ஸ்டாலினும் தங்கள் நிர்வாகிகளிடம் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.
அதே நேரத்தில், ஜாதிக்கட்சி தலைவர்களும் தமது நிர்வாகிகளிடம், 'எப்படி சாதுர்யமாக பேசி அந்த கூட்டணியில் இடம் பிடித்து விட்டேன், பார்த்தீர்களா?' என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
ஜாதி அரசியல் நடந்த பிஹாரையும், உத்தர பிரதேசத்தையும் நாமெல்லாம் கிண்டல் செய்த காலம் மனதில் நிழலாடுகிறது.ஜாதி ஒழிப்பில், ஒரு காலத்தில் தீவிரமாக இருந்த திராவிடக் கட்சிகள் இந்த, 'லெவலுக்கு' வந்திருப்பது சமூக முன்னேற்றமா, காலத்தின் கட்டாயமா என்று தெரியவில்லை.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
'தமிழகத்தில், பா.ஜ., நுழைந்து விடக் கூடாது என்பதால், எவ்வளவு குறைவான தொகுதிகள் ஒதுக்கினாலும், அதைக் ஏற்றுக் கொள்கிறோம்' என, தி.மு.க.,
கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., --- கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் அனைத்தும் கூறுகின்றன. தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் இதைச் சொல்லி தான், அக்கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை கொடுத்து, தன் காலுக்கு கீழே வைத்திருக்கிறார்.
இந்த அவமானத்தை மறைத்தபடி, வெளியே வந்து, 'பா.ஜ., வரக் கூடாது என்பதால் தான்...' என, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், 'பிலிம்' காட்டுகின்றனர்.
அது சரி, தமிழகத்தில் பா.ஜ., ஏன் வரக் கூடாது? நம் நாட்டில், அதிக மாநிலங்களில், பா.ஜ., தான் ஆட்சியில் இருக்கிறது.
*திருநெல்வேலி நகரில் ஶ்ரீ பிரகலாத வரதன் திருக்கோயில்*
மிகவும் பழமை வாய்ந்த கோயில் *எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.*
🇮🇳🙏1
நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப் பட்டதாக தகவல் உள்ளது.
இந்தசன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன.
🇮🇳🙏2
இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது.
ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
பின்னாளில் வைணவ பக்தரான கூரத்தாழ்வார் கோன் என்பவர் இதை மீண்டும் கண்டுபிடித்தார்.
ஐந்தே வருடங்களில் முடிக்க வேண்டியதை பத்து வருடங்களில் முடிப்பாராம்!
திமுக ஆர்மி ஜெனரல் தான் பொருளாதார புலியென நினைத்து கொண்டு சீனாவில் மாவோ 1960களில் செய்த “The Great Leap Forward “எனும் “பெரும் பாய்ச்சலை நோக்கி” என அறிவித்தது போல் ஒரு அறிவிப்பினை செய்துவிட்டார்.
அது அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை GSDP இலக்கினை 35லட்சம் கோடி பொருளாதாரமாக மாற்றுவோம் என்பதுGSDP என்பது மாநில உற்பத்தி அடைவுநிலையினை குறிக்கும் அளவுஇது கடினமான இலக்கு என்றாலும் இதுவரை எந்த மாநிலமும் எட்டியதில்லை.
அ.ப.பெருமாள், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வுடன் போராடி, கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படியோ மிகக்குறைந்த தொகுதிகளை பெற்று, ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டு விட்டன.
இரு கம்யூ., கட்சிகளுக்கும், தலா, ஆறு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கம்யூ., கட்சிகள், எதற்காக இவ்வளவு குறைந்த தொகுதியுடன் களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா...
அதற்கு காரணம், தொகுதி எண்ணிக்கை எவ்வளவு குறைகிதோ, அதற்கு ஈடாக, தி.மு.க., தரும் தேர்தல் நிதி அதிகமாகும். அந்த கணக்கு தான்! கோடிக்கணக்கான ரூபாய் பணம் வாங்கி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என, யாரும் கேள்வி கேட்கக் கூடாது.
திமுகவுக்கு ஆலோசகராக பணியாற்றும் "ஐ பேக்" கெஜ்ரிவாலா, ஜெகன்மோகன் மற்றும் தற்ப்போது " திருட்டு குடியேறிகளின் அத்தை" மம்தாவுக்கு ஆலோசனை கூறுகிறது.முந்தய நிகழ்வுகள்,தற்ப்போதய "ஐ பேக்" நிகழ்வுகள்! பார்ப்போம்!
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, தேர்தல் நேரத்தில் மட்டும் அல்லாமல், பல்வேறு சந்தர்ப்பங்களில், முட்டை வீச்சு, மை தெளிப்பு, செருப்பு வீசுவது, கன்னத்தில், 'பளார்' விடுவது போன்ற பல்வேறு தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன.
இவற்றில், பெரும்பாலான சம்பவங்கள், தேர்தல் நேரத்து, 'ஸ்டன்ட்' எனவிமர்சிக்கப்பட்டது.அதைப்போலவே, 2018 ஆந்திர சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஒய்.எஸ்.ஆர்., - காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, விமான நிலையத்தில் தாக்கப்பட்டார்.