இந்த வாரம் அரசாங்கத் தங்க திட்டத்தைப் பற்றிப் விரிவாகப் பார்க்கப் போகிறோம், தங்கம். ஆமாம் இந்திய அரசு தங்கத்தை விற்பனை செய்கிறது, ஆனால் பத்திரம் வடிவத்தில்.
தங்கப் பத்திரம் திட்டம் (Sovereign Gold Bond):
தங்கப் பத்திரம் திட்டம் மத்திய அரசால் 2015 நவம்பரில் தொடங்கப்பட்டது, தங்கத்தை வாங்க இது ஒரு மாற்று வழி.
நீங்கள் தங்கப் பத்திரம் 1 கிராம் (கிராம்) மடங்குகளில் வாங்கலாம். நீங்கள் அதிகபட்ச தங்கம் பத்திரங்கள் ஒரு நிதியாண்டுக்கு 4 கிலோ வாங்கலாம்.
இந்தியா குடியுரிமை பெற்ற நபர்கள், HUF கள், ஒரு அறக்கட்டளை போன்ற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள்
மற்றும் கிளப்புகள், கூட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அல்லது பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் இந்த தங்க பத்திரங்களை வாங்கலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், நியமிக்கப்பட்ட தபால் அலுவலகங்கள்,
ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SHCIL) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனைகள் நேரடியாகவோ அல்லது அவற்றின் முகவர்கள் மூலமாகவோ பத்திரங்கள் விற்கப்படுகின்றன.
இனிமேல் RBI ஒவ்வொரு மாதமும் தங்க பத்திரங்களை வெளியிட இருக்கிறார்களாம்.
தங்கப் பத்திரம் (SGB) அம்சங்கள்:
- இந்திய அரசு சார்பில் ரிசர்வ் வங்கி வழங்கியது.
- தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்க பத்திரத்தின் மதிப்பும் உயரும்.
- தங்கப் பத்திரம் (SGB) வாங்குவதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அளவு 1 கிராம் மற்றும் ஒரு நிதியாண்டுக்கு ஒரு நபருக்கு 4 கிலோ.
- SGB களை கூட்டுக் கணக்காகவும் (Joint Account) வாங்கலாம்.
- கூட்டு வைத்திருந்தால் (Joint Account), முதல் விண்ணப்பதாரருக்கு மட்டுமே 4 கி.கி முதலீட்டு வரம்பு பயன்படுத்தப்படும்.
- ஒவ்வொரு புதிய வெளியீட்டிற்கும் முன்னர், தங்கப் பத்திரம் (SGB) வெளியீட்டு விலையை RBI வெளியிடும்.
- பத்திரத்தின் வெளியீட்டு விலை சந்தா காலத்திற்கு முந்தைய வாரத்தின் கடைசி 3 வணிக நாட்களுக்கு தங்கத்தின் இறுதி விலையின் சராசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தங்கப் பத்திரங்களுக்கான கட்டணம் ரொக்கக் கட்டணம் (அதிகபட்சம் ரூ .20,000 / - வரை) அல்லது Demand Draft அல்லது காசோலை
அல்லது மின்னணு வங்கி மூலம் இருக்கும்.
- தங்கப் பத்திரம் (SGB) Demat வடிவமாகவும் மாற்ற தகுதியுடையவை.
- தங்கப் பத்திரங்களை வாங்கி எட்டு ஆண்டுகள் வைத்திருக்கலாம். எட்டு ஆண்டுகள் முடிந்த பின்னர் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை.
- அவசரத் தேவை ஏற்பட்டாலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பத்திரத்தை விற்று பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அச்சமயத்தில் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்.- நிலையான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2.50 சதவீதம் வாங்குபவரின் வங்கிக் கணக்கிற்கு அரை ஆண்டு செலுத்தப்படும்.
- பத்திரங்களை கடன்களுக்கான பிணையமாகப் பயன்படுத்தலாம்.
- பத்திரங்களை ஆன்லைனில் வாங்கப்பட்டால் கிராமுக்கு ரூ .50 தள்ளுபடி.
- தங்க பத்திரம் ஒதுக்கீடு ஆன பின் வங்கிகளில் இருந்து Physical / E Certificate பெற்றுக் கொள்ளலாம்.
- தனி நபர்கள் தங்களின் குழந்தைகள் பெயரிலும் வாங்கலாம்.
- தனி நபர்கள் கணவன் மனைவியாகச் சேர்ந்தும் (Joint Holder) வாங்கலாம்.
- குறிப்பாக மைனர்கள் பெயரில் கார்டியன்களும் வாங்கலாம்.
- நியமன (Nomination) வசதி உள்ளது.
தங்கப் பத்திரம் (SGB) - நன்மைகள் மற்றும் குறைபாடுகள்:
நன்மைகள்:
- பாதுகாப்பானத்து. தங்க நகைகளைப் போல திருடு போகும் என்கிற பயம் தேவை இல்லை.
- ஜிஎஸ்டி, செய் கூலி, சேதாரம் இல்லை
- தங்கத்தை சேமிக்க லாக்கர் செலவு இல்லை
- பத்திரங்களை கடன்களுக்கான பிணையமாகப் பயன்படுத்தலாம்.
- ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானம் கிடைக்கும்.
- தங்கத்தின் சுத்தம் தூய்மைக்கு இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கிறது.
- தங்க விலை நிலவரங்களைக் கண்காணித்தால் தங்கப் பத்திரங்களை விரைவாக வாங்கவோ அல்லது விற்கவோ முடியும்.
குறைபாடுகள்:
- நீண்ட கால முதலீடு (8 ஆண்டுகள்).
- தங்க சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருக்கின்றன.
தங்கப் பத்திரம் (SGB) யார் முதலீடு செய்ய வேண்டும்:
தங்க முதலீடுகள் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
குறைந்த ஆபத்துள்ள முதலீட்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள்
இது ஆண்டுதோறும் ஒரு நிலையான வருமானத்தையும் உங்களுக்கு வழங்குகிறது.
தங்கத்துடன் ஒப்பிடுகையில் தங்கப் பத்திரம் வாங்க அல்லது விற்பனை செய்வதற்கான செலவும் மிகவும் குறைவு தான்.
தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதில் விரும்பாதவர்களு தங்கப் பத்திரம் வாங்கலாம்.
நீண்ட கால முதலீடுகள் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
சிஷ்ய இந்த வாரமும் டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி விரிவா பார்த்துவிடுவோம்.
டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும் முன் சிறு குறிப்புகள்: தொடர்கிறது!
i. நீங்கள் புகை / மதுப் பழக்கம் இருந்தால் மறைக்காமல் சொல்லுங்கள், மறைத்தாலும் மருத்துவம் சோதனை ல கண்டுபிடுச்சுருவாங்க. அதையும் மீறி சில சமயம் claim பண்ணும்போது உங்கள் claim rejection ஆகா வாய்ப்பு இருக்கு. முக்கியமா
சிஷ்ய இந்த வாரம் நாம டெர்ம் இன்சூரன்ஸ் பத்தி விரிவா பார்க்கப்போறோம்,
சரி குரு fulla படிச்சுருவோம்.
காப்பீடு (INSURANCE) என்பது தனிநபர் (Insurer) மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு (Insurance Company) இடையே உள்ள சட்டபூர்வமான ஒப்பந்தமாகும்.
வாழ்க்கையில், எதிர்பாராத செலவுகள் எப்படி வேண்டுமாலும் வரலாம். நீங்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து இருந்தாலும், இந்த திடீர்
மன்னா
ஏன்னா மங்குனி அமைச்சரே?
இந்த EPF என்று சொல்கிறார்களே, அப்படி என்றல் என்ன மன்னா?
மங்குனி அமைச்சரே, தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் போல கஷ்டமான விடுகதை இல்லை.
EPF பற்றி இந்த வாரம் பார்த்துருவோம் வாங்க.,
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employee Provident Fund Organization) என்பது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசு அமைப்பாகும், இது வேலை செய்யும் நபர்களுக்கான EPF சேவையை நிர்வகித்து நடத்துகிறது.
இந்த திட்டத்தின் கீழ், பணியாளர் தனது