இன்று பை (Pi/π) தினம். Pi ஐ கூட யாரவது தமிழ்ப்படுத்தி இருக்கக்கூடும். சிறு வயதில்
Pi(π) = 22/7 என்றும், கொஞ்சம் விளக்கமாக ஒரு வட்டத்தின் பரிதிக்கும் விட்டத்துக்கும் இடைப்படட விகிதம் என்றும் கேள்விப்பட்டிருப்போம்.
தெரிந்தோ தெரியாமலோ இந்த pi(π) நமக்கு கடைசி வரை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து இருக்கும். ஆனால் இந்த Pi(π) கணிதத்தின் ஒரு அழகான காதலி. pi(π) இன்றி அமையாது பாதிக்கணிதம்.
கி.மு. 250ல் இருந்தே இந்த விகிதம் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது. ஆனாலும் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் ஆக்கிமிடிஸினால் தெளிவாக வரையறுக்கப்பட்டது. இதனால் ஆக்கிமிடிஸின் மாறிலி என Piக்கு பெயர் வந்தது. ஆக்கிமிடிஸ் முதல் ஆரியப்பட்டா வரை Pi இன் பெறுமானத்தை வரையறுத்துக்கொண்டே வந்துள்ளனர்.
Pi(π) ஐ தசமாதானத்தில் எழுதினால் 3.1415926535..... என்றவாறு செல்லும். இதில் முதல் மூன்று எடுத்தால் 3.14 அதாவது 3/14 (March 14th ) இதுதான் இன்று Pi (π) தினம் கொண்டாடப்படுவதன் காரணம். என்ன தான் Pi(π) இற்கு 22/7 என பெறுமானம் கொண்டாலும் அது மிகச்சிறந்த அண்ணளவுப்பெறுமானமே.
Pi(π) இன் மிகச்சரியான பெறுமதி என்ன என்று கேட்டால், அதற்கான பின்னம் இன்னும் அறியப்படவில்லை என்றுதான் சொல்லலாம். அறியப்படட மிகச்சிறந்த Pi(π) இன் பெறுமதியானது 22/7 இலும் பார்க்க 1/791 குறைவானது.
அதாவது,
Pi(π) = (22/7 - 1/791) = 355/113
Taylor series, Wallis Rational expression, Gauss continuous fraction, Langes sequence என்று நிறைய வழிகள் இருக்கிறது இதை அறிய.
துரதிஷ்டவசமாக இந்த 355/113 கூட மிகச்சரியான Pi இன் பெறுமதியை விட 1/3748629 குறைவாம். அதாவது,
Pi(π) = (355/113 - 1/3748629)
இதை விடவும் துல்லியமான பெறுமானங்களை கணிக்கலாம். ஆனால் கணித்தும் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.
Pi(π) கணிதத்தின் காதலி அல்லவா அதனாலோ என்னமோ கணித்தால் Pi(π) இன் பெறுமதியை துல்லியமாக கண்டறிந்து Pi(π) இனை திருப்திப்படுத்த முடியவில்லை.
Pi(π) இனை இதுவரை 12 trillion digit வரை துல்லியமாக கணித்துள்ளார்கள். நாங்கள் பாவிக்கும் சாதாரண லேப்டாப் கொண்டே 4.2 மில்லியன் digit வரை கணிக்கலாம். ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் எங்கள் எல்லோருடைய பிறந்த நாளும் Pi இன் விரிவான பெருமானத்தில் எங்கோயோ தொடர்ச்சியாக இருக்கிறது.
உதாரணமாக உங்கள் பிறந்த நாள் March 22 , 1990 எனின் 32290 என்ற இந்த digit, 8317 ஆவது digit இற்கு அடுத்ததாக தொடர்ந்து இப்படி வருகிறது. உங்கள் பிறந்த நாள் Pi(π) இன் எந்த digit கு பிறகு வருகிறது என்பதை நீங்களே கண்டறியலாம். pbs.org/newshour/scien…
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#குட்டிக்கதை
நண்பர்களிடையே கல்யாணம் பற்றிய விவாதங்கள் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று ஒருத்தன்
"பிள்ளையாரை விட முருகன் பெரிய ஆளுடா, எப்பிடி ரெண்டு பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கார் பார்த்தியா?" என்றான்.
இவன் ஒருத்தன் நிதர்சனம் புரியாமல் பேசிட்டு இருக்கான். அடேய் பிள்ளையாருக்கு மாம்பழம் வேணும்னு, அம்மா அப்பாதான் உலகம்னு சுத்தி வந்த அம்மா அப்பா கோண்டுடா. ஆனா முருகன் உலகத்தையே சுத்தி வந்த traveller.
மாம்பழம் கிடைக்கல என்றதும் கோவிச்சுக்கிட்டு பழனில தனிக்குடித்தனம் போயிட்டார்.
பிள்ளையாரிட்ட வீடு இருக்கா?
ஆனா முருகனிட்ட "திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர்,பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை"னு ஆறுபடை வீடு இருக்கு. பிள்ளையாரிட்ட இருக்கிற வாகனம் எலிதான். ஆனா முருகனிட்ட இருக்கிறது மயில். நல்ல மயில்age(mileage) கொடுக்கும்.
#குட்டிக்கதை
ஒரு தடவை காட்டுல வாக்கிங் போயிட்டு இருந்தேன். யாரோ ஒரு பொண்ணும், அவ புருசனும் காட்டுக்குள்ள இருந்தாங்க. வெள்ளை வெளேர்னு இருந்தாங்க. ஆரிய வந்தேறியாத்தான் இருக்கணும். டக்குன்னு பார்த்ததுமே புரிஞ்சிடிச்சு. என்ன கண்டதும் அந்த பொண்ணு புருசன் கிட்ட 'see மான்'னு சொல்லிச்சு.
உடனே துரத்த தொடங்கிட்டான். கையில AK 74ம் இல்லை. ஒரு பையில ஆமை கறி இருதிச்சு. முப்பாட்டன் முருகனை நினைச்சுட்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம். இங்கதான் நீங்க ஒன்னை புரிஞ்சுகிடனும். புறமுதுகு காட்டி ஓடினான் சீமான்னு யாரும் சொல்ல கூடாதுன்னு reverseலயே ஓடினேன்.
அந்த புருசனுக்கு பொண்டாட்டியும் யாருன்னு தம்பிங்க கிட்ட கேட்டப்போ ராமனும் சீதையும்னு சொன்னாங்க. உடனே ஸ்ரீலங்கால இருக்கிற எங்க பாட்டன் இராவணனுக்கு போனை போட்டேன். அவர் வச்சிருந்த விமானத்துல வந்தாரு. தமிழன் புத்திசாலித்தனத்தை பாருங்க.
1)அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார் 2) மகாபாரதம் – கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள் 3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு 4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் 5) கம்பராமாயணம்– மர்ரே ராஜம் பதிப்பு 6) திருக்குறள் – மூலமும் உரையும்
7) திருஅருட்பா – மூலமும் உரையும் 8) சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு 9) மணிமேகலை – மூலமும் உரையும் 10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள் 11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள் 12) தமிழக வரலாறு – தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்
1) விஷ்ணுபுரம் – ஜெயமோகன் 2) பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன். 3) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம். 4) ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி 5) மோகமுள் – தி.ஜானகிராமன். 6) பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்.
7) ஜெ.ஜெ. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி 8) தலைமுறைகள் – நீல பத்மநாபன் 9) கிருஷ்ணப் பருந்து – ஆ.மாதவன் 10) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
சிறந்த தமிழ் நாவல்கள்
1.) பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2.) கமலாம்பாள் சரித்திரம் — ராஜம் அய்யர்.
Genre : Sci-fi, Suspence Thriller
IMDb Rating : 7.2/10
Episodes : 8
Available in : Netflix
ஜப்பானிய மொழியில் வெளியான Alice in Borderland என்ற Manga comics பின்னர் Anime series ஆகவும் வெளிவந்தது. அதையே இப்பொழுது TV series ஆக வெளியிட்டுள்ளார்கள்.
கொரியன், மலையாளம் படங்கள் உயிரோட்டமா இருக்கிறதுக்கு காரணம் கதையோடு பின்னி பிணைந்திருக்கும் emotionsதான்.
ரத்தம் தெறிக்கிற action காட்சிகள் உள்ள கொரியன் படம் எல்லாம் பார்த்தீங்கன்னா அதன் பின்னணியில் நெஞ்சை உருக்கும் emotions காட்சிகள் இருக்கும்.
இதுவும் அதே மாதிரியான கதைதான்.
The Hunger Games triology, Maze Runner Triology போன்ற படங்கள் பார்த்திருக்குறீர்களா? அவற்றை போன்ற ஒரு survival விளையாட்டுத்தான் இந்த series.
ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. இரண்டாம் பாகத்துக்கு தரமான lead உடன் முடிவடைகிறது.
Part 3
வருண் எலும்புகளை மாத்தி வைக்க இன்னொரு பையனோட எலும்புகள் தேவை. அதுக்காக இன்னொரு கொலை செய்திருக்கார் ஜோர்ஜ் குட்டி. அந்த கொலைய பார்த்த ஒரு சாட்சியிடம் இருந்து கதை ஆரம்பிக்குது. தன்னோட குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கு போவார் ஜோ.குட்டினு போலீசே பதறுது. #SuspectX
Part 4
பதினான்கு வருடங்களுக்கு பிறகு முதலாவது பொண்ணோட வாழ்க்கைல நடந்த மாதிரியே சம்பவங்கள் இரண்டாவது பொண்ணு அனு வாழ்க்கைலேயும் நடக்குது. ஜோர்ஜ் குட்டிக்கு அது Groundhog dayயா மாறிடுது. இப்போ இரண்டு பையன்களின் குடும்பமும் ஜோர்ஜ் குட்டி குடும்பத்தை பழிவாங்க நினைக்கிறாங்க.
Part 5
ராகவா கேரளாக்கு பிக்னிக் போய் வருண் எலும்பை புதைச்ச இடத்துல சுச்சூ போறான். வருண் ஆவி ராகவா உடம்புல புகுந்திடுது. அப்புறம் வருண் சொன்ன கதையை வச்சு ஜோர்ஜ் குட்டியை பழிவாங்க போய் , அங்க அவர் பொண்ணு அனு மேல காதலாகி, ராகவா எப்டி ஜோ. குட்டி குடும்பத்தை காப்பாத்தினார். #Muni10