1 பிரம்மதேவன் ஸ்ரீ மகா விஷ்ணு தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியின் நிர்மலமாக பிரகாசத்துடன் கூடியதாகவும் சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை பிறப்பினால்
ஏற்படும் துக்கத்தை போக்குகின்ற லிங்க மூர்த்தியை மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏
2 தேவர்களாலும் முனிவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும் மன்மதனை பஸ்பமாக செய்தவரும் கருணையை செய்யும் லிங்க மூர்த்தியும் ராவணனுடைய கர்வத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏
3 எல்லா வித வாசனை திரவியங்களால் பூசப்பட்ட லிங்க மூர்த்தியை புத்தியை விருத்தி செய்வதற்கான காரணமான லிங்க மூர்த்தியும் சித்தர்கள் தேவர்கள் அசுரர்கள் முதலியவைகளால் பூஜிக்கப்பட்ட மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏
4 தங்கத்தாலும் சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை தக்ஷன யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகா லிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கின்றேன்🙏
5 குங்குமம் சந்தனம் இவைகளால் பூசப்பட்ட லிங்க மூர்த்தியும் தாமரைபுஷ்பங்களால் மாலைகளாலும் விளங்குகின்ற லிங்க மூர்த்தியை குவிக்கப்பட்ட பாவங்களை நாசம் செய்யும் லிங்க மூர்த்தியும் எப்பொழுது மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏
6 தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டதும் சேவிக்கக்கப்பட்டதுமான மகாலிங்க மூர்த்தியும் நல்ல எண்ணங்களாலும் பக்தியாலும் சேவிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏
7 8 தளங்கள் உள்ள ஆசனத்தில் அமர்ந்த லிங்க மூர்த்தியும் எல்லா வஸ்துக்களையும் உற்பத்திக்கும் காரணமான லிங்க மூர்த்தியும் எட்டுவித தரித்திரத்தை நாசம் செய்யும் லிங்க மூர்த்தியும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏
8 பிரகஸ்பதியாலும் இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும் இந்திரனுடைய தோட்டத்தில் இருந்து கொண்டுவந்த புஷ்பத்தினால் எப்போதும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும் பிரம்மாதி தேவர்களுக்கு
எல்லாம் மேற்பட்ட பரமானந்த ஸ்வரூபியான லிங்க மூர்த்தியும் எப்பொழுதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன் 🙏
இந்த புண்ணியமான மகாலிங்கத்தை பற்றிய ஸ்லோகங்களை கொண்ட ஸ்லோகத்தை பரமசிவன் முன்னிலையில் எவர் படிப்பார்களோ அவர்கள் சிவலோகம் சென்று சிவனுடன் ஆனந்தத்தை அனுபவிப்பார்கள்.
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அடுத்து தி.மு.க., ஆட்சி தான் என ஸ்டாலின் தன்னை தானே ஏமாற்றி வருகிறார்
தமிழக, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர் முன்னாள் எம்.பி., - இல.கணேசன். தி.மு.க.,
மற்றும் அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்த காலங்களில், இரு கட்சிகளின் தலைவர்
களுடன் பேச்சு நடத்தியவர்.
தற்போதைய சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து, தேர்தல்
களத்திற்காக அளித்த பேட்டி:
'ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறு
கிறாரே?
செயல் தான் முக்கியம்; வார்த்தை முக்கியம் அல்ல. தேர்தல் என்பதால், சங்கரா சங்கரா என, போலியாக கூறினால், மக்கள் நம்ப மாட்டார்கள். இந்தாண்டு ஹிந்துகளுக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு, பின்னணியில் இருந்தது தி.மு.க., தான். அதிலிருந்து, தி.மு.க., தப்ப முடியாது.
தமிழகத்தில் சிதம்பரம் அருகே இருக்கும் புவனகிரி என்னும் சிற்றூரில், மிருகசீரிஷ நக்ஷத்திர, சுக்ல ஸப்தமி கூடிய பங்குனி மாத வியாழக்கிழமை நன்னாளில் 1595-ம் ஆண்டில், திம்மண்ண தத்தா, கோபிகாம்பா 🙏🇮🇳1
என்னும் பெற்றோருக்குப் புதல்வனாக வெங்கண்ண பட்டர் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்தார். திம்மண்ண பட்டர் என்பவர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் அரசவையில் மிகச் சிறந்த வீணை வித்வானாக விளங்கிய ஸ்ரீ கிருஷ்ண பட்டர் என்பவரின் பேரனாகவும், 🙏🇮🇳2
கனகாசல பட்டர் என்பவரின் மகனாகவும் பிறந்தவர். ஸ்ரீ திம்மண்ண பட்டருக்கும், கோபிகாம்பாவுக்கும் ஏற்கெனவே குருராஜாசார்யா என்னும் மகனும், வெங்கடாம்பா என்னும் மகளும் இருந்தனர்.🙏🇮🇳3
கன்னட சிற்பி விஸ்வேரய்யரும் தமிழ்நாட்டு ஈரோட்டு ராம்சாமியும் சமகாலத்தவர்கள்
இதில் கன்னட விஸ்வரர் ஒரு அய்யர், அக்காலத்திலே கட்டட பொறியியல் படித்து மைசூர் சமஸ்தானத்துக்கு திவானாக வந்தவர்
மிக சிறந்த அறிவாளியும் தீர்க்கமான சிந்தனையும் மிக நீண்ட தொலைநோக்கும் கொண்டவர், அவரின் ஆற்றலும் அறிவும் அவரை திவான் எனும் நிலைக்கு உயர்த்தின
அன்றைய மைசூர் சமஸ்தானம் பின் தங்கித்தான் இருந்தது, காவேரியின் பிறப்பிடம் என்றாலும் சொல்லிகொள்ளும் அணை அவர்களுக்கு இல்லை
இது போக தஞ்சாவூர் பக்கம் காவேரி வெள்ளம் வந்தால் அதற்கு மைசூர் மகாராஜா நஷ்ட ஈடு கொடுக்கும் வினோத தண்டனை எல்லாம் இருந்தது, மன்னரும் தலையில் அடித்து கட்டி கொண்டிருந்தார்
காங்., - -தி.மு.க., கூட்டணி ஆட்சியில், நுாற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வாடினர். ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி பதவி ஏற்ற பின், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அனேகமாக தடுக்கப்பட்டு விட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சர்கள், இலங்கைக்கு அடிக்கடி சென்று, மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் பாதுகாத்து வருகின்றனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.
திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. 1
கட்சி பாகுபாடு இல்லாமல் பளிச்சென்று உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். இந்த தேர்தல் பற்றிய கணிப்பை சொல்லுமாறு கேட்டோம். நாளைக்கு வாங்க என்று சொன்னார்.
2
அவர் சொன்னபடி அடுத்த நாள் சரியாக ஆஜரானோம். தெளிவாக எழுதப் பட்டிருந்த தன் ரிப்போர்ட்டைத் தந்தார்.
இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இறைவனின் திருவிளையாடல்கள் ஏராளம். தன் பக்தர்களைக் காக்க அவர் எடுத்த உருவங்களும் எண்ணில் அடங்காதவை. 🇮🇳🙏1
சிவபெருமானும், பார்வதியும் மான் உருவெடுத்து தாயின்றி தவித்த மான் குட்டிகளுக்கு பாலூட்டிய வரலாறும் ஒரு திருவிளையாடல்தான்.
இந்த திருவிளையாடல் அரங்கேறிய தலம் திருமாந்துறை. தற்போது மாந்துறை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆலயம் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில். 🇮🇳🙏2
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஆம்பரவனேஸ்வரர். இவருக்கு ஆதிரத்னேஸ்வரர், சுந்தரத்னேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் போன்ற பெயர்களும் உள்ளன. இறைவியின் பெயர் வாலாம்பிகை. அன்னையின் மற்றொரு திருநாமம் அழகம்மை என்பதாகும்.