அடுத்து தி.மு.க., ஆட்சி தான் என ஸ்டாலின் தன்னை தானே ஏமாற்றி வருகிறார்
தமிழக, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர் முன்னாள் எம்.பி., - இல.கணேசன். தி.மு.க.,
மற்றும் அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்த காலங்களில், இரு கட்சிகளின் தலைவர்
களுடன் பேச்சு நடத்தியவர்.
தற்போதைய சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து, தேர்தல்
களத்திற்காக அளித்த பேட்டி:
'ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறு
கிறாரே?
செயல் தான் முக்கியம்; வார்த்தை முக்கியம் அல்ல. தேர்தல் என்பதால், சங்கரா சங்கரா என, போலியாக கூறினால், மக்கள் நம்ப மாட்டார்கள். இந்தாண்டு ஹிந்துகளுக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு, பின்னணியில் இருந்தது தி.மு.க., தான். அதிலிருந்து, தி.மு.க., தப்ப முடியாது.
கந்தசஷ்டியை இழிவுபடுத்தியதன் பின்னணியில், கறுப்பர் கூட்டம் அல்லவா இருந்தது?
அந்த தரப்பை சேர்ந்தவர்களுக்கு, தி.மு.க., முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஆசிரியர் போராட்டங்களை நடத்தியவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
யார் எல்லாம், தமிழக சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க, தி.மு.க.,வின் திட்டப்படி முயற்சி செய்தார்களோ, அவர்களுக்கு பரிசாக ஆளுக்கொரு தொகுதியை ஒதுக்கியுள்ளது.
அடுத்த சில நாட்களில், தி.மு.க., ஆட்சி தான் என, ஸ்டாலின் பேசி வருகிறாரே?
பாவம். ஸ்டாலின் தன்னை தானே ஏமாற்றி கொண்டுள்ளார். ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால், அது உண்மையாகி விடும் என, சொல்வ துண்டு. அதில், அவருக்கு நம்பிக்கை இருக்கும் போல.
ஒரு மயக்கம் தான் அவருக்கு. ரொம்ப எதிர்பார்ப்புடன் இருந்தால், ஏமாற்றமும் அதிகம் இருக்கும் என்பதை, ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி - தி.மு.க., - காங்., கூட்டணி ஒப்பிடுங்களேன்?
அழிந்து போன தேசிய கட்சிக்கு, கை கொடுத்து துாக்கி நிறுத்தும் முயற்சியை செய்கிறது, தி.மு.க., ஆனால், வளர்ந்து வரும் தேசிய கட்சியை உறுதுணையாக சேர்த்துக் கொண்டுள்ளது, அ.தி.மு.க.,
அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் திருப்தியா?
கூட்டணி வைக்க முடிவான பின், எதிர்பார்ப்புகள் ஆயிரம் இருக்கலாம். பேச்சு சுமூகமாக முடிய வேண்டும். தற்போது, எங்களது நோக்கம் ஒன்றே. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
அதற்காக எவ்வளவையும் விட்டு கொடுக்கலாம். 234 தொகுதிகளிலும் நிற்பது,
கூட்டணி வேட்பாளர்களே.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக திரும்புமா?
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. இதுகுறித்து மத்திய நிதியமைச்சரே கவலை தெரிவித்துள்ளார். விரைவில், இப்பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு காணும்.
காலையில் கட்சியில் இணைந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ., சரவணனுக்கு, மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட, மாலையில், 'சீட்' வழங்கப்பட்டுள்ளதே?
மாநில பொதுச் செயலர் ஸ்ரீநிவாசனை பாராட்டுகிறேன்.
உண்மையான பா.ஜ., தொண்டருக்கு இருக்கும் உணர்வுடன், அந்த தொகுதியை விட்டு கொடுத்து புதிய வேட்பாளரை, அவரே
வரவேற்று பிரசாரமும் செய்ய துவங்கி விட்டார். வெற்றி வாய்ப்பு என்ற கணக்கில் பார்க்கிற போது, இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம்.
தொடர்ந்து எம்.எல்.ஏ.,க்களை மிரட்டி, பா.ஜ.,வில் இணைப்பதாகவும், அ.தி.மு.க.,வையும் மிரட்டி அடிமை அரசாக, பா.ஜ., வைத்திருப்பதாகவும் தி.மு.க., குற்றம் சாட்டுகிறதே?
அப்படி ஒன்றும் இல்லை. யார் வெற்றி பெறுவார் என்பதற்கு, இது அடையாளம்.
யாருக்கு எதிர்காலம் இருக்கு என்பதற்கு, இதெல்லாம் வெளிப்பாடுகள். பா.ஜ.,வில், மூத்த அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள் சேருவது, தங்களுக்கு எதிர்காலம் எதில் இருக்கிறது என்பது தெரிந்து தான்.
உங்களை போன்ற சீனியர் தலைவர்களுக்கு, 'சீட்' வழங்கப்படாததை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்?
வேட்பாளராக யாரும் பிறப்பதில்லை. இருக்கிற ஆட்களில் ஒருவர் வேட்பாளர். பல பேரை ஆய்வு செய்து, பல கோணங்களில் விசாரித்து தகுதி, திறமை அடிப்படையில் வேட்பாளராக அறிவிக்கிறோம்.
அதில், சீனியர் தலைவர் குப்புராம் போன்றவர்களும், நீண்டகாலமாக கட்சியில் இருக்கிறார்கள்.
கட்சியில் சேர்ந்த மூன்று மணி நேரத்தில், வாய்ப்பு வழங்கப்பட்ட மதுரை சரவணன் போன்றவர்களும் இருக்கிறார்கள். சீனியர், ஜூனியர், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லை.
அதை ஏற்று தான் ஆக வேண்டும். தலைமை எடுத்த முடிவை ஏற்பது தான் மரபு.
அ.தி.மு.க., - தி.மு.க., தேர்தல் அறிக்கையில், இலவசங்களை வாரி வழங்கியுள்ளனரே?
வெற்றி பெற்ற பின் பார்த்து கொள்ளலாம் என, நினைத்திருப்பார்கள் போல.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்கள் மத்திய அரசு செய்து கொண்டுள்ளவை. மத்திய
கூட்டணி ஆட்சியில் இருந்த போது, தி.மு.க., செய்ய தவறிய எத்தனையோ விஷயங்கள்
அதிகம் உள்ளன.
பா.ஜ., தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும்?
மக்கள் விருப்பப்படி, ஓரிரு நாட்களில் வெளியாகும். இவ்வாறு இல.கணேசன் பேட்டியளித்தார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழகத்தில் சிதம்பரம் அருகே இருக்கும் புவனகிரி என்னும் சிற்றூரில், மிருகசீரிஷ நக்ஷத்திர, சுக்ல ஸப்தமி கூடிய பங்குனி மாத வியாழக்கிழமை நன்னாளில் 1595-ம் ஆண்டில், திம்மண்ண தத்தா, கோபிகாம்பா 🙏🇮🇳1
என்னும் பெற்றோருக்குப் புதல்வனாக வெங்கண்ண பட்டர் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்தார். திம்மண்ண பட்டர் என்பவர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் அரசவையில் மிகச் சிறந்த வீணை வித்வானாக விளங்கிய ஸ்ரீ கிருஷ்ண பட்டர் என்பவரின் பேரனாகவும், 🙏🇮🇳2
கனகாசல பட்டர் என்பவரின் மகனாகவும் பிறந்தவர். ஸ்ரீ திம்மண்ண பட்டருக்கும், கோபிகாம்பாவுக்கும் ஏற்கெனவே குருராஜாசார்யா என்னும் மகனும், வெங்கடாம்பா என்னும் மகளும் இருந்தனர்.🙏🇮🇳3
கன்னட சிற்பி விஸ்வேரய்யரும் தமிழ்நாட்டு ஈரோட்டு ராம்சாமியும் சமகாலத்தவர்கள்
இதில் கன்னட விஸ்வரர் ஒரு அய்யர், அக்காலத்திலே கட்டட பொறியியல் படித்து மைசூர் சமஸ்தானத்துக்கு திவானாக வந்தவர்
மிக சிறந்த அறிவாளியும் தீர்க்கமான சிந்தனையும் மிக நீண்ட தொலைநோக்கும் கொண்டவர், அவரின் ஆற்றலும் அறிவும் அவரை திவான் எனும் நிலைக்கு உயர்த்தின
அன்றைய மைசூர் சமஸ்தானம் பின் தங்கித்தான் இருந்தது, காவேரியின் பிறப்பிடம் என்றாலும் சொல்லிகொள்ளும் அணை அவர்களுக்கு இல்லை
இது போக தஞ்சாவூர் பக்கம் காவேரி வெள்ளம் வந்தால் அதற்கு மைசூர் மகாராஜா நஷ்ட ஈடு கொடுக்கும் வினோத தண்டனை எல்லாம் இருந்தது, மன்னரும் தலையில் அடித்து கட்டி கொண்டிருந்தார்
காங்., - -தி.மு.க., கூட்டணி ஆட்சியில், நுாற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வாடினர். ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி பதவி ஏற்ற பின், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அனேகமாக தடுக்கப்பட்டு விட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சர்கள், இலங்கைக்கு அடிக்கடி சென்று, மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் பாதுகாத்து வருகின்றனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.
திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. 1
கட்சி பாகுபாடு இல்லாமல் பளிச்சென்று உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். இந்த தேர்தல் பற்றிய கணிப்பை சொல்லுமாறு கேட்டோம். நாளைக்கு வாங்க என்று சொன்னார்.
2
அவர் சொன்னபடி அடுத்த நாள் சரியாக ஆஜரானோம். தெளிவாக எழுதப் பட்டிருந்த தன் ரிப்போர்ட்டைத் தந்தார்.
இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இறைவனின் திருவிளையாடல்கள் ஏராளம். தன் பக்தர்களைக் காக்க அவர் எடுத்த உருவங்களும் எண்ணில் அடங்காதவை. 🇮🇳🙏1
சிவபெருமானும், பார்வதியும் மான் உருவெடுத்து தாயின்றி தவித்த மான் குட்டிகளுக்கு பாலூட்டிய வரலாறும் ஒரு திருவிளையாடல்தான்.
இந்த திருவிளையாடல் அரங்கேறிய தலம் திருமாந்துறை. தற்போது மாந்துறை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆலயம் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில். 🇮🇳🙏2
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஆம்பரவனேஸ்வரர். இவருக்கு ஆதிரத்னேஸ்வரர், சுந்தரத்னேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் போன்ற பெயர்களும் உள்ளன. இறைவியின் பெயர் வாலாம்பிகை. அன்னையின் மற்றொரு திருநாமம் அழகம்மை என்பதாகும்.
1 பிரம்மதேவன் ஸ்ரீ மகா விஷ்ணு தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியின் நிர்மலமாக பிரகாசத்துடன் கூடியதாகவும் சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை பிறப்பினால்
ஏற்படும் துக்கத்தை போக்குகின்ற லிங்க மூர்த்தியை மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏