தமிழகத்தின் பழம்பெரும் விழாக்களில் ஒன்று நாளை திருவாரூரில் நடைபெறவுள்ள ஆழித்தேர்த்திருவிழா. அப்பர் பெருமான் இத்திருவிழாவை
ஊழித்தீயன்னானை ஓங்கொலி மாப்பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான் கண்டதாரூரே
என்று குறிப்பிடுகிறார்.இப்படி பொயு 7ம் நூற்றாண்டிலிருந்தே ஆவணப்படுத்தப்படும்
இத்திருவிழா பங்குனி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பூச நட்சத்திரமான இன்று தியாகராஜர் தேருக்கு எழுந்தருளி, ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் கண்டருளும் திருவிழாவாக உள்ளது. இந்தத் திருவிழாவை அப்பர் பெருமானே முன்னின்று நடத்துவதாக மரபு.
மற்ற திருவிழாக்களில் உற்சவம் நடத்துபவர்கள் அழைப்பிதழ் அளிப்பார்கள். ஆனால் இந்தத் திருவிழாவிற்கு இறைவனே அழைப்பதாக ஐதீகம். தியாகப் பெருமானுடைய ஶ்ரீமுகம் இவ்வாறு அமைந்திருக்கும்
யக்ஞகத்ரய நிர்மான த்ரான நிர்வான காரணம்
ததிதம் சாசனம் சம்போக பூர்வாரூர் வாசினஹ
நம்மனுக்கு வன் தொண்டரான ஆலால சுந்தரர்க்கும்
நமக்கும் ஶ்ரீ சார்வரி நாம சம்வத்சரம் பங்குனி மாதம்..
நெடிய திருவீதியில் திரு ஆழித்தேரில் திரு உலாச் செய்து அருளுகிற படியால்
ஸ்தானம் மகேஸ்வர பரிச்சின்னங்களைக் கூட்டிக்கொண்டு வரவும் தாமும் வரவும்
என்று இந்த அழைப்பிதழ் அமைந்திருக்கும்
இது சுற்றியுள்ள ஆலயங்களுக்கு எடுத்துச் சென்று படிக்கப்படும்.இதில் உள்ள யக்ஞகத்ரய என்ற ஸ்லோகம் மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்றிலும் அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் தனித்தன்மை கொண்ட தேரான இது மேலிருந்து பார்த்தால் எண்கோண வடிவில் காணப்படும். நான்கு அடுக்குகளைக் கொண்டது இத் தேர்
ஒவ்வொரு மூலைக்கும் 9 கால்கள் வீதம் 36 கால்களைக் கொண்ட பெரிய தேர் இது. இரும்புச் சக்கரங்கள் கொண்ட இந்தத் தேரின் எடை சுமார் 350 டன்களாகும். ஒரு காலத்தில் இந்தத் தேரை இழுக்க 12000 ஆட்கள் தேவைப்பட்டனராம். தற்போது இயந்திரங்களின் உதவியாலும் இந்தத் தேர் செலுத்தப்படுகிறது.
தேரைக் கட்டுப்படுத்த ஹைட்ராலிக் ப்ரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அழகான பல சிற்பங்கள் நிறைந்த இந்தத் தேரில் ஆரூரன் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி. பல அரசியல் குழப்பங்களால் பங்குனியில் நடைபெறாதிருந்த இந்த ரத உற்சவம் மீண்டும் பங்குனியில் நடைபெறுவது தனிச்சிறப்பு.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பொயு 1323. இன்றைய நாள் போலவே ஶ்ரீரங்கம் கோவிலில் 8ம் திருநாள் உற்சவம். அழகிய மணவாளப்பெருமாள், பன்றியாழ்வான் கோவிலில் எழுந்தருளியிருந்தார். பின்னாளில் முகமது பின் துக்ளக் என்று அழைக்கப்பட்ட உலூக்கான் தன் படையோடு காவிரிக்கரையை நெருங்குவதாகச் சேதி கிட்டியது. பட்டர்கள் பதைபதைத்தனர்
சுவாமியை எடுத்துச் சென்றால் அங்கே கூடியிருப்போர் ‘ஓலக்கமாக அவன் பின்னேயே செல்லக் கிளம்பிவிடுவார்கள்’ என்பதால் திருவாராதானம் நடப்பதுபோல திரையிட்டு, “அழகியமணவாளனையும் உபயநாச்சிமார்களையும் ஒரு பல்லக்கில் வைத்து பிள்ளைலோகாசார்யாரையும் ஒரு அர்ச்சகரையும் சில சிஷ்யர்களோடு
தெற்கு திசை நோக்கி பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்தார்கள்”. படைகளோடு அங்கே வந்த உலூக்கான், பெருமாள் விக்ரகம் அங்கே காணாததால் கடும் கோபம் கொண்டு பன்றியாழ்வான் கோவிலைச் சேதப்படுத்தி அங்கே கூடியிருந்த 12000 பேரைக் கொன்று குவித்தான்.
There is absolutely no doubt that Swastik is a scared symbol of Hinduism. One of the ancient engineering marvels in TN is a Swastik shaped Well near Thiruvellarai called as ‘Marpidgu Perunginaru’. Situated near Vishnu temple, the 9th century Well was constructed by Kamban Arayan
He was an official of Pallava Dantivarman. There are inscriptions confirming this in the well.
The arms of the Swastik are almost matching in terms of the measurements with the wear & tear eroding some parts. There are 52 steps on all the 4 sides to get into the well.
There is a 5 feet parapet wall on each side. Inside, there is enough privacy for bathing as each side is hidden in view from the other. While the top steps are in rectangular shape, the ones at the bottom are in half circle shape. The top 10 steps are numbered with Tamil numbers
A very confusing thread and not sure what is the conclusion (may be my bad) but lets clarify some of the factual errors
a) The oldest reference of Karikala is in Sangam texts and also in the epics Silappathikaram & Manimegalai. The Telugu Chola references came much much later.
Even in those, it was mentioned clearly as 'Kaveri Dheera Karikala Kula Ratna', now Kaveri is no where in Andhra per my limited geography knowledge
Coming to the copper plates, it is not necessary that all the copper plates mention the entire genealogy. There are examples like
this in Pandya & pallava copper plates. It was the Chinnamanur copper plates which cleared the entire medieval Pandya genealogy. Further the Velanchery copper plates didn't say Oriyuran is Vijayalayas father. It just mentioned him as one of the kings, so is Anbil plates which
ஒரு நிமிடத்தில் இத்தனை பொய்கள் சொல்வதில் இவர்களை மிஞ்ச முடியாது. முதலில் திருமுருகாற்றுப்படை 11வது திருமுறையில் 9வது என்கிறார். 11வது திருமுறையில் 16வது இடத்தில் இருப்பது திருமுருகாற்றுப்படை. சரி கணக்கில் வீக் என்று விட்டுவிட்டு மேலே கவனித்தால், உவேசா மீது சேற்றை வீசுகிறார்
அதாவது பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையை உவேசா சேர்த்துவிட்டாராம்.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நச்சினார்கினியர் முருகாற்றுப்படை உட்பட பத்துப்பாட்டுத் தொகைக்கு உரை எழுதியதும்,தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் போன்றோர் பத்துப்பாட்டு பாடல்களை மேற்கோள்காட்டியதும் இவருக்கு
தெரியாது போலும். நச்சினார்க்கினியர் உரை எழுதியவைகளைப் பட்டியலிடும் பாடல் பத்துப்பாட்டைக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்
மதுரை நாயக்க அரசரான சொக்கநாத நாயக்கருக்கு ‘முற்போக்கு சிக்குலர்’ வியாதி இருந்தது.தனது படைத்தலைவனாக ருஸ்தம்கான் என்பவனை நியமித்தார். அவன் சும்மா இருப்பானா.சமயம் பார்த்து சொக்கநாதரை சிறையில் தள்ளி மதுரையைக் கைப்பற்றிவிட்டான். நம்பிக்கைக்குரிய சிலர் மூலம் தன்னுடைய பரம எதிரியான
கிழவன் சேதுபதிக்குத் தூதனுப்பினார் நாயக்கர்.என்னதான் சண்டைக்காரராக இருந்தாலும் அவரும் மதுரையும் அந்நியனிடம் அடிமைப்பட்டு இருப்பதை விரும்பாத கிழவன் சேதுபதி ஒரு படையோடு மதுரை புறப்பட்டார்.மதுரை முற்றுகைக்கு உள்ளானது. கடும் நெருக்கடியில் ஆழ்ந்த ருஸ்தம்கான் சொக்கநாதரையும்
அவர் குடும்பத்தினரையும் கொல்லும்படி தன் ஆட்களிடம் சொன்னான். விஷயத்தைக் கேள்விப்பட்ட சேதுபதி உடனடியாக கோட்டையைக் கடுமையான தாக்கினார். அவரது வெடிமருந்துகள் இப்போரில் அதிகமாகப் பயன்பட்டன. தெற்கு வாயிலைக் கொளுத்தி அழித்துவிட்டு ராமநாதபுரம் படைகள் உள்ளே புகுந்தன.
மதுரைக்காரர்கள் பலருக்கே தெரியாது. மதுரைக் கல்லூரிக்கு அருகில் இப்போது ஒரு சாக்கடை போல ஓடுவது ஒரு காலத்தில் ஆறாக இருந்தது.அந்த நதியில் சத்தியவிரதனுக்கு ஒரு மீன் அகப்பட்டது. வரப்போகிற பெரு ஊழையைப் பற்றி எச்சரிக்கை செய்த அது ஒரு ஓடத்தைத் தயார் செய்து உயிரினங்களை சேகரிக்கச் சொன்னது
அதன்படி நடந்து ஊழிக்காலத்தில் உயிர்களைக் காப்பாற்றி வைத்திருந்தான் சத்தியவிரதன். ஊழி முடிந்து உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கியவுடன் அவனே மனுவாக நியமிக்கப்பட்டான். இந்த இடத்தில் ஊழிகளைப் பற்றிய தொன்மங்களை தமிழ் இலக்கியங்கள் அதிகம் பேசுகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்