ஸ்டாலினின் புது அவதாரம் – மக்களை முட்டாளாக்கும் முயற்சி
கடந்த ஜனவரி மாதம் 29ந் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற ஒரு புதிய பிரச்சாரத்தை திருவண்ணாமலையில் துவக்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசிய பேச்சு மிகப் பெரிய விமர்சனத்தை சந்திக்கிறது. தலைவர் தான் சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் என்று சொன்னார்.
அவரது வழியில் இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான். செய்வதைத்தான் சொல்வான் என்ற உறுதிமொழியை நான் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் இருந்து எடுத்துக் கொண்டேன்.
ஸ்டாலின் சொல்வது போல் தி.மு.க. தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு சொல்வது ஒன்றும், ஆட்சிக்கு வந்த பினனர், தனது பேச்சு திறமையால் அதற்கு விளக்கம் கொடுப்பது வாடிக்கையான ஒன்று என ஸ்டாலினுக்கு தெரியாது.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன் சொல்வது ஒன்று , வந்த பின்னர் அதை கைவிடுவது மற்றொன்று. இவர்களின் உறுதி மொழி எவ்வாறு அமைந்தது என்பதை தி.மு.க.வை துவக்கிய அண்ணாதுரை முதல் இன்றைய ஸ்டாலின் வரை பல சம்பவங்களை சுட்டிக் காட்டலாம்.
1949-ல் துவக்கிய போது திராவிட நாடு முதன்மையான கொள்கையாக பறைசாற்றப்பட்டது. இவர்களின் அடைமொழியில் கூறுவதென்றால், அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என முழக்கமிட்டவர்கள். திராவிட நாடு அடைந்தார்களா என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும்.
1962-ல் மத்திய உள்துறை அமைச்சர் திரு. ஒய்.பி.சவான், பிரிவினை தடை மசோதாவை தாக்கல் செய்தவுடன், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று சமாளித்தார்.
இன்று வரை திராவிட நாடு கோரிக்கை என்னவாயிற்று என்பது ஸ்டாலினுக்கே தெரியாது. இதுவே முதல் சறுக்கலாகும். முதல் சறுக்கல் முற்றிலும் சறுக்கல் என்பது போல் தொடர்ந்து பல வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன.
1967-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு 3 படி அரிசி லட்சியம், ஒரு படி நிச்சயம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆட்சியில் அமர்ந்தவுடன் சென்னை மற்றும் கோவையில் மட்டும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கப்பட்டது, அதுவும் சில மாதங்களிலேயே, நிதி பற்றாக்குறையின் காரணமாக கைவிடப்பட்டது.
67-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு , தி.மு.க. தலைவர் அண்ணாதுரை கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆட்டுக்கு தாடியும், ஆட்சிக்கு ஆளுநர் பதவியும் தேவையா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆளுநர் பதவியை நீக்குவோம்.
ஆனால் இன்று வரை ஆளுநர் பதவியை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முயலவில்லை. பாராளுமன்றத்தில் இது பற்றிய தனி நபர் தீர்மானம் கொண்டு வரவில்லை.
மிகவும் முக்கியமான வாக்குறுதி, நேர்மையான தேர்தல் நடக்க, நாங்கள் ஆட்சியிலிருந்தால், தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்பே மந்திரிசபையை களைத்து விட்டு, சுதந்திரமாக தேர்தலை சந்திப்போம் என சூளுரைத்த தி.மு.க. தலைவர் ஆட்சிக்கு வந்து தேர்தலை சந்திக்கும் போது,
மற்ற கட்சிகளும் ஏற்றுக் கொண்டால் நிறைவேற்றலாம் என பிடரியில் பின்னங்கால் படும் படி ஓடியவர்கள் தான், சொன்னதை செய்தார்கள் என்றும் சொல்வதை தான் செய்தார்கள் என்றும் கூறுகிறார்கள்.
சென்னை நகரை, குடிசைகள் அற்ற நகரமாக ஆக்க திட்டம் தீட்டினார். அது தான் குடிசை மாற்று வாரியம். 1971ல், இந்த வாரியம் உருவாக்கப்பட்டது.குடிசைகளுக்கு மாற்றாக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, அவற்றில் குடிசை வாழ் மக்களை குடியமர்த்துவது தான் திட்டத்தின் நோக்கம்.
இதற்காக சுதந்திரமடைந்து, 25 ஆண்டுகள் வரை, எந்த தீ விபத்திலும் சிக்காமலிருந்த சென்னை குடிசைப் பகுதிகள், தொடர்ந்து ஒவ்வொன்றாக எரிய ஆரம்பித்தன. அந்த தீ விபத்துகளுக்கு, ‘பாஸ்பரஸ்’ என்ற, தானாகவே சூரிய ஒளிபட்டு எரியும் பொருளே காரணம் என்று வதந்தி பரவியது.
கூடவே, ‘ஆட்சியை இழந்த காங்கிரஸ்காரர்கள் தான், ஆங்காங்கே குடிசைகளைக் கொளுத்திக் கொண்டிருக்கின்றனர்’ என்ற குற்றச்சாட்டும் திட்டமிட்டுப் தி.மு.க.வால் பரப்பப்பட்டது. அன்றைய காலக் கட்டத்தில் , சென்னையில் அதிக பட்சமாக, 15 – 20 ஆயிரம் குடிசைகள் இருந்திருக்கலாம்.
அந்த, 20 ஆயிரம் குடிசைகளுக்கு மாற்றாக, 20 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, அந்த குடிசை வாழ் மக்கள், அடுக்கு மாடிகளில் குடியமர்த்தப்பட்ட பிறகு, சென்னையில் ஒரு குடிசை கூட இருந்திருக்கக் கூடாதல்லவா? அப்படித் தான் இப்போது இருக்கிறதா;
இல்லையே!குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்களும் பெருகின. சென்னையில் புதுப்புது இடங்களில் குடிசைகளும் முளைத்துக் கொண்டே இருந்தன.
48 ஆண்டுகளாக கட்டுகின்றனர்; கட்டுகின்றனர்; கட்டிக் கொண்டே இருக்கின்றனர். சென்னையில் குடிசைகள் ஒழிந்தபாடில்லை. இதுதான் இவர்களின் சொல்வதை செய்த லட்சனமாகும்.
திரிணாமுல் தலைவரின் திமிர் பேச்சு : டிரெண்டிங்கில் விளாசல்
கோல்கட்டா : திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஷேக் ஆலம் என்பவர் பேசிய கருத்து, நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அவருக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
தமிழகம், புதுச்சேரி, கேரள, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அந்தந்த மாநில கட்சி தலைவர்களும், தேசிய தலைவர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷேக் ஆலம் என்பவர் கூட்டம் ஒன்றில் பேசும்போது, ‛‛நம் நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களில் 30 சதவீம் ஒன்று சேர்ந்தால் 4 பாகிஸ்தனை உருவாக்க முடியும். மீதமுள்ள 70 சதவீத மக்கள் எங்கு செல்வார்கள்.
இந்தியா- வங்கதேசம் வளர்ச்சி முக்கியம்: பிரதமர் மோடி
டாக்கா: இந்தியாவும் வங்கதேசமும் வளர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
வங்கதேசத்தின் சுதந்திர பொன் விழா இன்று தேசிய தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: முஜிபுர் ரஹ்மானுக்கு, காந்தி அமைதி விருது வழங்கி கவுரவிக்கும் வாய்ப்பு கிடைத்ததை இந்தியர்கள் பெருமையாக கருதுகின்றனர்.
வங்கதேச சகோதர சகோதரிகளுக்கு உறுதுணையாக நின்ற இந்திய ராணுவ வீரர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இன்றைய நிகழ்ச்சியில், வங்கதேச சுதந்திர போரில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு பில்லியனராக ஆக, டாட்டாவுக்கு 50 ஆண்டுகள் பிடித்த்து. ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேராவிற்கு பில்லியனராக மாற வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிடித்தன.
1997-ல் வெறும் 50 லட்சம் மட்டுமே முதலீடாக இருந்த சொத்து, 2010-ல் அறிவிக்கப்பட்ட சொத்து 60.53 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. டி.எல்.எப். விவகாரத்தில் சோனியாவின் மருமகன் பெயர் அடிப்பட்ட போது, அது ஒரு தனிநபர், ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது.
ஆனால் அந்த விவகாரம் தொடர்பாக நீதி மன்ற விசாரனையில் வதேராவுக்கு ஆதரவாக அரசு ஒரு அறிக்கையை தாக்கல் செய்து அவரை காப்பற்ற ஹரியான காங்கிரஸ் அரசு முன் வந்துள்ளது.
ரிலையன்ஸ் ஊழல் – முரளி தியோரா பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த முறைகேடுகள் 2006 முதல் 2008 வரையுள்ள காலக் கட்டத்தில் நடந்துள்ளது. சி.ஏ.ஜி.அறிக்கையில் மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகளை வைக்கிறது. முதலாவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்( ஆர்.ஐ.எல்) கெய்ர்ன் நிறுவனங்களுக்கு அரசு,
எண்ணெய் துரப்பண பணியை 3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை இஷ்டம் போல் நீட்டித்துத் தந்த்து. இரண்டாவதாக, எண்ணெய் எடுக்கப்படாத இடங்களுக்கான ஒப்பந்தங்களை தானே எடுத்துக் கொண்டு,