இந்தியா- வங்கதேசம் வளர்ச்சி முக்கியம்: பிரதமர் மோடி
டாக்கா: இந்தியாவும் வங்கதேசமும் வளர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
வங்கதேசத்தின் சுதந்திர பொன் விழா இன்று தேசிய தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: முஜிபுர் ரஹ்மானுக்கு, காந்தி அமைதி விருது வழங்கி கவுரவிக்கும் வாய்ப்பு கிடைத்ததை இந்தியர்கள் பெருமையாக கருதுகின்றனர்.
வங்கதேச சகோதர சகோதரிகளுக்கு உறுதுணையாக நின்ற இந்திய ராணுவ வீரர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இன்றைய நிகழ்ச்சியில், வங்கதேச சுதந்திர போரில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்று, வங்கதேச சுதந்திரத்திற்காக போராடியவர்களின் ரத்தமும், இந்திய வீரர்களின் ரத்தமும் ஒன்றாக செல்கிறது. இந்த உறவானது, எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், தூதரக ரீதியில் அழுத்தம் கொடுத்தாலும் உடைந்துவிடாது.
இந்திய வங்கதேசம் இடையிலான உறவு 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, வங்கதேசத்தை சேர்ந்த 50 தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். அவர்கள் இந்தியா வந்து, எங்களின் ஸ்டார்ட் ஆப் உள்ளிட்ட திட்டங்களில் இணையலாம். வங்கதேச இளைஞர்களுக்காக, ஸ்வர்ண ஜெயந்தி நிதியுதவியை அறிவிக்கிறேன்.
இந்த மண்ணின் மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் ஏவிய அட்டூழியம், எங்களை கவலை அடைய செய்தது. இது குறித்த புகைப்படங்கள் எங்களை பல நாட்கள் தூங்க விடவில்லை. வங்கதேச சுதந்திரத்திற்காக நானும் எனது நண்பர்களும், எனக்கு 20 - 22 வயதாக இருக்கும் போது சத்தியகிரக போராட்டம் நடத்தினோம்.
வர்த்தகம், வணிகம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் சம வாய்ப்புகள் உள்ளன. அதுபோல், பயங்கரவாத அச்சுறுத்தலும் இரு நாடுகளுக்கும் உள்ளது. இது போன்ற மனித நேயமற்ற செயல்களுக்கான எண்ணங்களும், திட்டங்களும் இன்னமும் செயல்படுகின்றன. அவற்றை சமாளிக்க நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இரு நாடுகளின் எதிர்காலத்திற்கு, ஜனநாயக சக்தி மற்றும் கொள்கைகள் உள்ளன. இந்த பிராந்தியம் வளர்வதற்கு இந்தியாவும் வங்கதேசமும் வளர்வது முக்கியம்.
இதனை நோக்கி இந்தியா மற்றும் வங்கதேச அரசுகள் நடவடிக்கை எடுக்கிறது. இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பூசியை, வங்கதேச சகோதர, சகோதரிகள்பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திரிணாமுல் தலைவரின் திமிர் பேச்சு : டிரெண்டிங்கில் விளாசல்
கோல்கட்டா : திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஷேக் ஆலம் என்பவர் பேசிய கருத்து, நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அவருக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
தமிழகம், புதுச்சேரி, கேரள, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அந்தந்த மாநில கட்சி தலைவர்களும், தேசிய தலைவர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷேக் ஆலம் என்பவர் கூட்டம் ஒன்றில் பேசும்போது, ‛‛நம் நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களில் 30 சதவீம் ஒன்று சேர்ந்தால் 4 பாகிஸ்தனை உருவாக்க முடியும். மீதமுள்ள 70 சதவீத மக்கள் எங்கு செல்வார்கள்.
ஸ்டாலினின் புது அவதாரம் – மக்களை முட்டாளாக்கும் முயற்சி
கடந்த ஜனவரி மாதம் 29ந் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற ஒரு புதிய பிரச்சாரத்தை திருவண்ணாமலையில் துவக்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசிய பேச்சு மிகப் பெரிய விமர்சனத்தை சந்திக்கிறது. தலைவர் தான் சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் என்று சொன்னார்.
அவரது வழியில் இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான். செய்வதைத்தான் சொல்வான் என்ற உறுதிமொழியை நான் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் இருந்து எடுத்துக் கொண்டேன்.
ஒரு பில்லியனராக ஆக, டாட்டாவுக்கு 50 ஆண்டுகள் பிடித்த்து. ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேராவிற்கு பில்லியனராக மாற வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிடித்தன.
1997-ல் வெறும் 50 லட்சம் மட்டுமே முதலீடாக இருந்த சொத்து, 2010-ல் அறிவிக்கப்பட்ட சொத்து 60.53 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. டி.எல்.எப். விவகாரத்தில் சோனியாவின் மருமகன் பெயர் அடிப்பட்ட போது, அது ஒரு தனிநபர், ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது.
ஆனால் அந்த விவகாரம் தொடர்பாக நீதி மன்ற விசாரனையில் வதேராவுக்கு ஆதரவாக அரசு ஒரு அறிக்கையை தாக்கல் செய்து அவரை காப்பற்ற ஹரியான காங்கிரஸ் அரசு முன் வந்துள்ளது.
ரிலையன்ஸ் ஊழல் – முரளி தியோரா பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த முறைகேடுகள் 2006 முதல் 2008 வரையுள்ள காலக் கட்டத்தில் நடந்துள்ளது. சி.ஏ.ஜி.அறிக்கையில் மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகளை வைக்கிறது. முதலாவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்( ஆர்.ஐ.எல்) கெய்ர்ன் நிறுவனங்களுக்கு அரசு,
எண்ணெய் துரப்பண பணியை 3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை இஷ்டம் போல் நீட்டித்துத் தந்த்து. இரண்டாவதாக, எண்ணெய் எடுக்கப்படாத இடங்களுக்கான ஒப்பந்தங்களை தானே எடுத்துக் கொண்டு,