மரியம் : இயேசுவின் அவதாரம்.
ராம்சே : சாத்தான்
கண்ணாடி தாத்தா : ஏஞ்சல்.
கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையேயான போராட்டமே நெஞ்சம் மறப்'பதில்'லை திரைப்படம். Title இல் 'பதில்' மட்டும் வேறு நிறத்தில் ஏன்? படத்தில் Title வரும் இடம்.
ஆரம்பத்துல S. J சூர்யா, நந்திதா பெயர்லாம் red lightingல காட்டி இருப்பாங்க. இதுல S. J சூர்யா character சாத்தான் என்றும் நந்திதா, வேலைக்காரர்கள் characters எல்லோரும் சாத்தானின் பிடியில் இருப்பவர்கள் என்றும் எடுத்துப்போம்.
அடுத்து ரெஜினா பெயர் ஜீசஸ் உடனும் மற்றவர்கள் பெயர் ஜீசசை ஆதரிப்பவர்கள் உடனும் வருகிறது. இது தான் மரியம், ஜீசஸ் என்பதுக்கு முதல் குறியீடு.
அடுத்து இயேசுவினை வழிபடுபவர்கள் இயேசுவின் பக்கமும், சாத்தானின் பக்கமும் இருக்கலாம்.
மரியம் அன்பின் மறுவடிவமாக இருக்கிறாள். சம்பளத்தில் முழுத்தொகையையும் Orphanage க்கே கொடுக்கிறாள், யாரையும் குறை சொல்ல வேண்டாம் என்கிறாள், சொர்க்கம் நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது என்கிறாள். கர்த்தர் மேல் காதலாக இருக்கிறாள்.
ராம்சே இவ்வுலகில் சாத்தானாக இருக்கிறார். ராம்சேயின் அறிமுக காட்சியில் ஒரு peculiar effect செய்திருப்பார்கள். எல்லா brand இலும் creams, suits, shoes வைத்திருப்பார்.(எல்லாவற்றையும் அடைய நினைத்தல்). Good morning சொல்லும் போது வெவ்வேறு முறையில் ராம்சேயை விளித்திருப்பார்கள்.(ஏன்?)
மரியம் ராம்சேயின் வீட்டிற்கு முதல் முறை வரும் பொழுது ஒரு சக்தி அவர் உடம்பில் புகுவது போலவும், மூக்கால் இரத்தம் வருவது போலவும் காட்டியிருப்பார்கள். அது சாத்தான் ராம்சே மற்றும் அவர் வீட்டின் negative vibration என எடுத்துக்கொள்ளலாம்.
வேலைக்காரர்கள், ஸ்வேதா, office தொழிலாளர்கள், மாமனார் அனைவரும் நல்லவனாகவே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அனைவருக்கும் நல்லவனாகவே நடிக்கும் சாத்தான். சில காட்சிகளில் வெளியே ஒரு மாதிரியும், மனதுக்குள் வேறு மாதிரியும் நினைத்துக்கொள்வதாக காட்டி இருப்பார்கள்.
முதலாவத்தில் மரியம் 'The Lord's prayer' என்று சொல்லும் பைபிள் வசனங்களை சொல்லி. ஜெபிக்கிறாள். இரண்டாவதில் அலங்கோலமாக கிடக்கும் அறையினை ஒழுங்குபடுத்தி அழகாக்குகிறாள். இயேசுவின் இராச்சியத்தில் இருப்பது போன்ற சொர்க்கத்தை பூமியில்(குழந்தையின் அறை) நிறுவுதல்.
கண்ணாடி தாத்தா : ஏஞ்சல்.
இவ்வுலகில் ஏஞ்சல்கள் நிறைய பேர் இருப்பார்கள். பழத்தை திருடி செல்பவனை கூட கண்டுகொள்ளாமல், எல்லோருக்கும் நல்லது மட்டும் செய்துகொண்டு.
பழம் விக்கிறார், church இல் இருக்கிறார், இரவு நேர சாப்பாட்டுக் கடையில் இருக்கிறார்.
மரியத்துக்கு உதவி செய்கிறார்.
கண்ணாடி தாத்தா மரியத்திடம் அவள் பெயர் என்ன என்று கேட்டு, அவள் முகத்தை தொட்டு தடவி பார்க்கும் பொழுது கடவுளாக உணர்கிறார். கையெடுத்து கும்பிடுகிறார். மரியம் எதுவும் சொல்லாமலே மீனும், சோறும் சாப்பிட கொடுக்கிறார். Bread வாங்கி வருவதாக சொல்லி செல்கிறார்.
ஐந்து இறாத்தல் பாணும், இரண்டு மீன்களையும் வைத்து 5000 பேரின் பசி தீர்த்த கடவுளின் அதிசயம்.
மீண்டும் மரியம் பின்னணியில் இயேசு படம்.
பார்டிக்கு சென்ற பொழுது நாயொன்று ராம்சேவை கடிக்க வரும். தீய சக்திகளை நாய்களால் உணரமுடியும் என்பதன் ஊடாக ராம்சே ஒரு தீய சக்தி என்று மீண்டும் காட்சிப்படுத்த முயல்கிறார். நாயை கொல்வதற்கு முன்னரும், கொன்றுவிட்டு வரும்போதும் இருக்கும் அந்த transformation. Real & mirror image same.
மரியமை முதலில் ராம்சே பார்க்கிறான். அவளையும் சாத்தானின் பிடியில் கொண்டுவரலாம் என நினைக்கிறான். 3,4 படங்கள் அவன் மனதில் தோன்றும் எண்ணம்.
சாத்தான், அவரின் followers மூலம் மரியத்தை அடைய நினைக்கிறான்.
ராம்சே, மரியத்தை துன்புறுத்தும் பொழுது கோப்படுகிறாள். பின்னர்
ஆதரவற்ற குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, தான் துன்பம் அனுபவித்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வருகிறாள்.
அழுகை vs சந்தோசம்
Sacrifice.
சாத்தான் vs கடவுள்
பிறகு நடக்கப்போவதை முன் கூட்டியே மரியத்துக்கு உணர்த்த கடவுள் முற்பட்டிருப்பார். மரியம், தான் கடவுளின் அவதாரம் என இன்னும் உணராமல் இருப்பார்.
மரியம் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதை காட்டும் பொழுது இடையிடையே இயேசு சிலுவையில் அறையப்பட்ட காட்சியும் வரும்.
மரியம் churchக்கு செல்லும்பொழுது, மறுபடியும் ஏஞ்சல் தாத்தா கையெடுத்து கும்பிடுவார். கடவுளால் church உள் போக முடியும்தானே? (மரியம் பேய் இல்லை என்று புரிந்து கொள்ளலாம்). Church உள்ளே, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்கு பதில் மரியம் தன்னையே அங்கு காண்கிறாள்.
மண்ணில் புதைத்த பிறகு மீண்டு வருவதுதான் உயிர்த்தெழுதல் என்றால், அது இல்லை. ஏன் என்றால் church இல் இருக்கும் பொழுது அக்கா என்று குழந்தை கூப்பிடும்பொழுது ராம்சே வீட்டை காட்டுவார்கள், தனி சிலுவையாக இருந்த மரியத்தின் சிலுவையில் இயேசு அறையப்பட்டிருப்பார். So இன்னும் உயித்தெழவில்லை.
இயேசுவின் உயிர்தெழுதலாக swimming pool இல் விழும்பொழுது நடந்தவற்றையே நான் இதைத்தான் பார்க்கிறேன். அருவம் ஆக இருந்து tangible ஆக மாறுதல். Super powers கிடைத்தல். கடவுளாகவே உணர்தல். மீண்டும் உடலை எரித்த பிறகு கடவுளுடன் ஒன்றாக கலத்தல்.
'கடவுள் அன்னை இல்லாத பிள்ளை' என்ற பாடல் வரியும், பின்னர் மேரி மாதாவுடன் குழந்தை இயேசுவும் காண்பிக்கப்படும். இதன் மூலம் ராம்சே சொல்லும் கடவுள் சாத்தான் என்றாகிறது. கார் rear - view கண்ணாடி வழியே ராம்சேவையும், அவர் முன் வேலைகாரர்களையும் சாத்தானின் குழந்தைகள் என்று காட்டியிருப்பார்.
வேலைகாரர்கள் என்ன செய்ததாக பொய் சொன்னார்களோ, அதே முறையிலேயே கொல்லப்படுவார்கள்.
கடவுளின் அவதாரத்துக்கு தான் கடவுள் என்று தெரியாது. ஆனால் ராம்சேக்கு அவன் சாத்தான்தான் என்பது முன்னரே தெரியும். அது பல காட்சிகளில் சொல்பட்டிருந்தாலும், இந்த காட்சியும், BGM உம் அதை உறுதி செய்கிறது. வெவ்வேறு காலகட்ட ஆயுதங்கள், துன்புறுதலினால் வெளிப்படும் அழுகை ஒலி.
இந்த காட்சியில் நேரடியாகவே கடவுள் × சாத்தான் பற்றிய புரிதலை வசனங்கள் ஊடாகவே அறிய வைக்கிறார். இப்பொழுது இருந்த குழப்பம் எல்லாம் தெளிவாகிறது.
இறுதியில் சாத்தானுக்கும், கடவுளுக்குமான super natural சண்டை காட்சிகள். எப்படி இது முடியும் என்று யோசித்தீர்கள் என்றால், இதுக்கான hint ஒரு பாடல் முழுதும் வைத்திருப்பார். சாத்தானின் supernatural skills அதில் காட்சிப்படுத்தி இருப்பார்.
சாத்தான் vs கடவுள், இருவரில் கடவுள் வெற்றியடைகிறார். சாத்தான் விலகி செல்வது போல படம் நிறைவடைந்திருக்கும்.
நெஞ்சம் மறப்"பதில்"லை : அந்த பதில் கிடைத்ததா?
படம் பார்த்த வரைக்கும் எனக்கு புரிந்ததை எழுதியிருக்கிறேன்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
@imkayalsai சொன்ன, "நெஞ்சம் மறப்பதில்லை" பற்றிய சொல்லாத கதைகள்.
Part 2.
படைத்தளபதியின் மகனாக பிறக்கும் பரமேசு எகிப்தின் பத்தொன்பதாவது அரச மரபை தோற்றுவிக்கிறான். அரச பரம்பரையை சேராத பரமேசு, ராம்சே என்னும் பெயரில் எகிப்தை ஆள்கிறான். நாட்டை சுற்றி வரும் ராம்சேக்கு எகிப்தியர்களை விட இஸ்ரேலியர்கள் "பணம், அறிவு, பலம்" இல் உயர்ந்து இருப்பதை காண்கிறார்.
இதனால் எகிப்தியர்களுக்கு ஆபத்து நிகழலாம் என்று நினைத்து இஸ்ரேலியர்களை அடிமையாக்குகிறார். காலம் உருண்டோடுகிறது. மன்னனின் சோதிடர்களில் ஒருவன், குறிப்பிட்ட ஒரு நாளில் இஸ்ரேலியர்களை அடிமைத்தளையில் இருந்து மீட்க ஒருவன் பிறப்பான், அவனால் மன்னன் உயிருக்கு ஆபத்து என எதிர்வு கூறுவான்.
Marketing Genius : A 🔞 awarness thread.
Durex என்றது 'ஆணுறை' தயாரிக்கும் கம்பனி. அவர்களின் சந்தைப்படுத்தல் உத்திகள் புதுமையாகவும், உண்மை நிகழ்வுகளை தொடர்புபடுத்தியும் இருக்கிறது. ஆணுறை : உடலுறவின் மூலம் பரவும் நோய்களையும்,தேவையற்ற கர்பத்தையும் தடுக்கும் சாதனம். கெட்ட வார்தையல்ல.
நீ ஏன் தண்டமா இருக்கன்னு யாராச்சும் கேட்டிருப்பாங்கதானே?
ஆனா நாம விரும்புற மொழிகளை கற்றுக்கொள்ள 'Tandem'னு ஒரு App இருக்கு.ரொம்ப இலகுவான வழி. முதல் செய்ய வேண்டியது, app ஐ download செய்து நமக்குன்னு ஒரு account create பண்ணனும்.
அதுக்கு பிறகு நாம என்ன மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புறமோ, அந்த மொழியை தாய் மொழியா கொண்ட ஒருவரோடு நட்பாகலாம். இரண்டு பேருமே மொழி பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அப்படி எத்தனை பேரொடும் நட்பாக முடியும்.
Texts, Voice notes, Calls என நண்பர்களுக்கு சௌகரியமான முறையில் உரையாடலாம்.
ஒருவர் அனுப்பும் textsஐ correct, comment, translate செய்யலாம்.
தண்டமா நேரத்தை வீணாக்காமல், ஒரு மொழியை கற்றுக்கொள்ள 'Tandem' app இனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
#goofymovies
The Tiger: An Old Hunter's Tale (2015)
IMDb Rating : 7.3/10
கொரியா, ஜப்பானின் ஆதிக்கத்தில் இருக்கும் காலகட்டத்தில் நடைபெறும் கதை.
புலிகளை வேட்டையாடி அதன் தோல்களை சேகரிக்கும் ஜப்பானிய கவர்னர், கொரியாவின் கடைசி புலி வரை வேட்டையாடவேண்டும் என்று முயற்சிக்கிறார்.
தன் மகனுக்கு வேட்டையின் சூட்சுமத்தை விளக்கும் கொரியாவின் வேட்டைக்காரர் Chun Man - duk ஒரு புலியை வேட்டையாடுவதில் ஆரம்பிக்கிறது திரைப்படம்.
சில வருடங்களின் பின்னர் மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஒற்றைகண் புலியை வேட்டையாட முயற்சிக்கிக்கும் பலர் அந்த புலியினால் உயிரிழகின்றனர்.
சில வேட்டைக்காரர்கள் வைக்கும் பொறியில் ஒற்றைகண் புலியின் இரண்டு குட்டிகள் இறந்துவிடுகின்றன. அதன் துணையும் கண்ணியில் சிக்கிக்கொள்கிறது. பின்னர் அதையும் கொன்றுவிடுகின்றனர்.
மலை அரசனை பிடிக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகிறது.