@imkayalsai சொன்ன, "நெஞ்சம் மறப்பதில்லை" பற்றிய சொல்லாத கதைகள்.
Part 2.
படைத்தளபதியின் மகனாக பிறக்கும் பரமேசு எகிப்தின் பத்தொன்பதாவது அரச மரபை தோற்றுவிக்கிறான். அரச பரம்பரையை சேராத பரமேசு, ராம்சே என்னும் பெயரில் எகிப்தை ஆள்கிறான். நாட்டை சுற்றி வரும் ராம்சேக்கு எகிப்தியர்களை விட இஸ்ரேலியர்கள் "பணம், அறிவு, பலம்" இல் உயர்ந்து இருப்பதை காண்கிறார்.
இதனால் எகிப்தியர்களுக்கு ஆபத்து நிகழலாம் என்று நினைத்து இஸ்ரேலியர்களை அடிமையாக்குகிறார். காலம் உருண்டோடுகிறது. மன்னனின் சோதிடர்களில் ஒருவன், குறிப்பிட்ட ஒரு நாளில் இஸ்ரேலியர்களை அடிமைத்தளையில் இருந்து மீட்க ஒருவன் பிறப்பான், அவனால் மன்னன் உயிருக்கு ஆபத்து என எதிர்வு கூறுவான்.
மன்னனும் குறிப்பிட்ட நாளில் பிறந்த குழந்தைகள் அனைத்தையும் கொல்ல கட்டளையிடுகிறான். இதனால் பயந்த யோசேபெத் தன் குழந்தையை கூடையில் வைத்து நைல் நதியில் விடுகிறாள். குழந்தையின் அக்கா மரியம் அழுதுகொண்டே மிதந்து செல்லும் குழந்தையை பின்தொடர்கிறாள்.
நதியில் குளித்துக்கொண்டிருக்கும் மன்னனின் மகள் பிந்தியா குழந்தையை கண்டெடுக்கிறாள். குழந்தையின் அழகில் கவரப்பட்டு அதனை தன்னோடு கொண்டு சென்று வளர்க்க நினைக்கிறாள். குழந்தை அழுகிறது, எப்படி அழுகையை நிறுத்துவது என தெரியாது தவிக்கிறாள்.
அவளிடம் செல்லும் மரியம், குழந்தையை வளர்க்க ஒரு செவிலித்தாயை அழைத்து வருவதாக சொல்லி அவள் அம்மாவிடம் செல்கிறாள். அம்மாவையும் தன் தம்பியுடன் சேர்க்கிறாள். குழந்தைக்கு 'மோசஸ்' (நதியில் - எடுக்கப்பட்டவன்) என பிந்தியா பெயர் சூட்டுகிறாள். பல வீர சாகசங்கள் செய்து வளர்கிறான்.
இஸ்ரேலியர்கள் மீது கருணை கொள்கிறான். அவர்களை மீட்டு அழைத்து செல்கிறான். மன்னரும், படைகளும் பின் தொடர்கின்றன. மோசஸ் மக்களுடன் செல்லும் வழியில் ஜோதானிய நதி குறுக்கிடுகிறது. மோசஸ் கடவுளின் பெயரால் அந்த நதியை இரண்டாக பிளந்து பாதை உருவாக்குகிறார். மக்களுடன் மோசஸ் நதியை கடக்கிறார்.
பின் தொடர்ந்து வரும் மன்னனும், படைகளும் நதியினால் பாதை மூடியதும், நீரில் மூழ்கி இறந்து போகின்றனர். இதை அப்பிடியே நெஞ்சம் மறப்பதில்லை கூட ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்க.
படத்தில் இதன் சான்றுகளை சில வசனங்கள் மூலம் குறிப்பிடுகிறேன்.
ராம்சே மன்னன் போலவே இறுதியில் நீரில் மரணம்.
ராமசாமி என்கிற ராம்சே🔥
வேலைகாரர்களை "கண்ணுங்களா, செல்லங்களா" என்பதில் இருந்து, சுற்றி 'குழந்தைகள் இருக்கீங்க'னு கெட்ட வார்த்தை சொல்லாமல் விடுவதில் இருந்தே ராம்சே நெடுங்காலமாக வாழ்கிறான் என்று எடுத்துக்கலாம். இந்த வசனங்கள் இன்னும் வலு சேர்க்கிறது.
எல்லாம் எகிப்திய எழுத்துக்களாக படத்தில அங்கங்கே இருக்கும்.
அடுத்தது ராம்சேயும் நான்கு வேலைகாரர்களையும், சாத்தானும் அவரின் நான்கு Horsemenகளையும் குறிக்கிறது.
அப்புறம் ஒவ்வொரு கலர் லைட்டிங்கும் ஒவ்வொரு மனநிலையை குறிக்குது.
Red : love, lust, sexuality, aggressive
Green : Tranquility, jealous, envy
Blue: Intelligence and responsibility.
Light baby blue : Peace Dark blue : Power, Strong
Yellow : Hope, Mourning
Black : Evil, death, mystery
White : purity, cleanliness
படத்தில் தண்ணீரை Holywater ஆக காட்டி இருக்கிறார்கள்.
மழை
ஞானஸ்தானம்
புனித நீர்
நீர்த்தடாகம் = புனித நீர்
மரியம் tangible ஆக மாறி super natural powers கிடைப்பதும் தண்ணீரில்தான், ராம்சேவை கொல்வதும் தண்ணீரில்தான்.
@ak_prasanna முதல் thread replyல, படத்துல இருக்கும் Biblical reference பற்றி சொல்லி இருந்தார்.
சாத்தான் ஒரு ஆப்பிள் மூலமா ஏவாளை ஆசைப்பிட வைத்து தன் வலைலயில் சிக்க வைப்பார்.
அதனுடைய metaphorதான் மரியம் appointment letterஐ காண்பித்து பேசும் பொழுது, ஆப்பிள் சாப்பிட்டபடி பேசுறது
படத்துல மரியம் இறந்தது Good Friday அன்று, தடாகத்தில் விழுந்து உருவம் பெற்றது மூன்றாம் நாள்.
இது அப்பிடியே இயேசு சிலுவையில் அறைந்து, மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததோட கனெக்ட் ஆகுது.
இது ஒரு படம்னு எதுக்கு இவ்வளவு எழுதணும்னு நிறைய பேர் நினைக்கலாம். தமிழில் வந்த சிறந்த magical realism திரைப்படமாகவே இதை பார்க்கிறேன். Reality & fantasy இரண்டையும் கலந்து இவ்வளவு சிறப்பாக வந்த படங்களில் இதுவும் ஒன்று. முதன் முதலில் தமிழில் பார்த்த magical realism "இரண்டாம் உலகம்"
அதோட படைப்பாளியின் சுதந்திரமே கற்பனை குதிரையை பறக்க விடுறதுதான். உள்ளதை உள்ளபடியே எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. Magical realism வகைகளில் இருக்கும் சிறப்பே அனைத்தும் சாத்தியம் என்பதுதான்.
இதே magical realism வகையில், "குதிரைவால்" என்றொரு படமும் திரைப்பட விழாவில் பார்க்க முடிந்தது. அது திரையில் வெளிவந்ததும் அதை பற்றி விரிவாக பேசலாம். அது இன்னும் மிரட்டலா இருக்கும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மரியம் : இயேசுவின் அவதாரம்.
ராம்சே : சாத்தான்
கண்ணாடி தாத்தா : ஏஞ்சல்.
கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையேயான போராட்டமே நெஞ்சம் மறப்'பதில்'லை திரைப்படம். Title இல் 'பதில்' மட்டும் வேறு நிறத்தில் ஏன்? படத்தில் Title வரும் இடம்.
ஆரம்பத்துல S. J சூர்யா, நந்திதா பெயர்லாம் red lightingல காட்டி இருப்பாங்க. இதுல S. J சூர்யா character சாத்தான் என்றும் நந்திதா, வேலைக்காரர்கள் characters எல்லோரும் சாத்தானின் பிடியில் இருப்பவர்கள் என்றும் எடுத்துப்போம்.
அடுத்து ரெஜினா பெயர் ஜீசஸ் உடனும் மற்றவர்கள் பெயர் ஜீசசை ஆதரிப்பவர்கள் உடனும் வருகிறது. இது தான் மரியம், ஜீசஸ் என்பதுக்கு முதல் குறியீடு.
அடுத்து இயேசுவினை வழிபடுபவர்கள் இயேசுவின் பக்கமும், சாத்தானின் பக்கமும் இருக்கலாம்.
Marketing Genius : A 🔞 awarness thread.
Durex என்றது 'ஆணுறை' தயாரிக்கும் கம்பனி. அவர்களின் சந்தைப்படுத்தல் உத்திகள் புதுமையாகவும், உண்மை நிகழ்வுகளை தொடர்புபடுத்தியும் இருக்கிறது. ஆணுறை : உடலுறவின் மூலம் பரவும் நோய்களையும்,தேவையற்ற கர்பத்தையும் தடுக்கும் சாதனம். கெட்ட வார்தையல்ல.
நீ ஏன் தண்டமா இருக்கன்னு யாராச்சும் கேட்டிருப்பாங்கதானே?
ஆனா நாம விரும்புற மொழிகளை கற்றுக்கொள்ள 'Tandem'னு ஒரு App இருக்கு.ரொம்ப இலகுவான வழி. முதல் செய்ய வேண்டியது, app ஐ download செய்து நமக்குன்னு ஒரு account create பண்ணனும்.
அதுக்கு பிறகு நாம என்ன மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புறமோ, அந்த மொழியை தாய் மொழியா கொண்ட ஒருவரோடு நட்பாகலாம். இரண்டு பேருமே மொழி பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அப்படி எத்தனை பேரொடும் நட்பாக முடியும்.
Texts, Voice notes, Calls என நண்பர்களுக்கு சௌகரியமான முறையில் உரையாடலாம்.
ஒருவர் அனுப்பும் textsஐ correct, comment, translate செய்யலாம்.
தண்டமா நேரத்தை வீணாக்காமல், ஒரு மொழியை கற்றுக்கொள்ள 'Tandem' app இனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
#goofymovies
The Tiger: An Old Hunter's Tale (2015)
IMDb Rating : 7.3/10
கொரியா, ஜப்பானின் ஆதிக்கத்தில் இருக்கும் காலகட்டத்தில் நடைபெறும் கதை.
புலிகளை வேட்டையாடி அதன் தோல்களை சேகரிக்கும் ஜப்பானிய கவர்னர், கொரியாவின் கடைசி புலி வரை வேட்டையாடவேண்டும் என்று முயற்சிக்கிறார்.
தன் மகனுக்கு வேட்டையின் சூட்சுமத்தை விளக்கும் கொரியாவின் வேட்டைக்காரர் Chun Man - duk ஒரு புலியை வேட்டையாடுவதில் ஆரம்பிக்கிறது திரைப்படம்.
சில வருடங்களின் பின்னர் மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஒற்றைகண் புலியை வேட்டையாட முயற்சிக்கிக்கும் பலர் அந்த புலியினால் உயிரிழகின்றனர்.
சில வேட்டைக்காரர்கள் வைக்கும் பொறியில் ஒற்றைகண் புலியின் இரண்டு குட்டிகள் இறந்துவிடுகின்றன. அதன் துணையும் கண்ணியில் சிக்கிக்கொள்கிறது. பின்னர் அதையும் கொன்றுவிடுகின்றனர்.
மலை அரசனை பிடிக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகிறது.