#goofymovies
The Tiger: An Old Hunter's Tale (2015)
IMDb Rating : 7.3/10
கொரியா, ஜப்பானின் ஆதிக்கத்தில் இருக்கும் காலகட்டத்தில் நடைபெறும் கதை.
புலிகளை வேட்டையாடி அதன் தோல்களை சேகரிக்கும் ஜப்பானிய கவர்னர், கொரியாவின் கடைசி புலி வரை வேட்டையாடவேண்டும் என்று முயற்சிக்கிறார்.
தன் மகனுக்கு வேட்டையின் சூட்சுமத்தை விளக்கும் கொரியாவின் வேட்டைக்காரர் Chun Man - duk ஒரு புலியை வேட்டையாடுவதில் ஆரம்பிக்கிறது திரைப்படம்.
சில வருடங்களின் பின்னர் மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஒற்றைகண் புலியை வேட்டையாட முயற்சிக்கிக்கும் பலர் அந்த புலியினால் உயிரிழகின்றனர்.
சில வேட்டைக்காரர்கள் வைக்கும் பொறியில் ஒற்றைகண் புலியின் இரண்டு குட்டிகள் இறந்துவிடுகின்றன. அதன் துணையும் கண்ணியில் சிக்கிக்கொள்கிறது. பின்னர் அதையும் கொன்றுவிடுகின்றனர்.
மலை அரசனை பிடிக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகிறது.
மனைவியின் மரணத்திற்க்கு பிறகு புலி வேட்டைக்கு செல்லாமல் 16 வயது மகனுடன் காட்டுக்குள் வாழும் திறமையான வேட்டைக்காரரான Chun Man - duk இன் உதவியை மலைகளின் அரசனான புலியை பிடிப்பதற்க்கு நாடுகின்றனர். அவர் மறுத்துவிடுகிறார்.
அந்த புலியை கொல்வதனால் கிடைக்கும் பணத்தில் நகரத்தில் நன்றாக வாழலாம் என்று ஆசைப்படும் மகன், வேட்டைக்கு செல்வதற்கு தந்தையுடன் விவாதம் செய்கிறான். அவரும் கோபத்தில் மகனை அடித்து விடுகிறார். பின் மகன் தந்தைக்குத் தெரியாமல் மற்ற வேட்டைக்காரர்களுடன் இணைந்து புலி வேட்டைக்கு செல்கிறான்.
அதன் பின்னர் மகனுக்கு என்ன ஆனது, மலைகளின் அரசன் என்ற புலியை கொன்றார்களா? என்பதுதான் கதை. தந்தை - மகன் பாசப்போராட்டத்தை Chun Man - duk - அவர் மகன் ஊடாகவும், புலி மற்றும் அதன் குட்டி மூலமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
புலி வேட்டை காட்சிகள் எல்லாம் அட்டகாசமாக இருக்கும்.
புலி வேட்டையில் ஆரம்பித்து புலியின் வேட்டையில் நிறைவடைகிறது திரைப்படம்.
#goofybooks
The Tiger: An Old Hunter's Tale (2015)
இந்த படத்தை பார்க்கும் பொழுது எனக்கு ஞாபகம் வந்தது லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய 'கானகன்' நாவல்தான். புலி வேட்டையில் ஆரம்பித்து புலியின் வேட்டையில் நிறைவடையும் நாவல் இது. நாவலின் முதல் பாதிப்பு 2014 இல் வெளியாகியது.
தேர்ந்த வேட்டைக்காரன் ஆன தங்கப்பனுக்கும் அவன் மகன் வாசிக்கும் இடையேயான பாசப்போராட்டங்களும், முரண்பாடுகளுமே இந்த நாவல். காடு வாழ்வினரான பளியர்களின் வாழ்க்கை போராட்டங்களையும் இந்த நாவல் பேசுகிறது. இது சாகித்திய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' விருது பெற்ற நாவல்.
யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாக நாவலில் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. திரைப்படத்திலும் ஒற்றைகண் புலியின் சமயோசிதத்தை பல இடங்களில் காட்டியிருப்பார்கள். படத்துக்கும், நாவலுக்கு பல ஒற்றுமைகள் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு அனுபவம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன் தமிழீழத்திலும் , தமிழ்நாட்டிலும் வாழ்ந்த காலப்பகுதியில் உலகின் பொய்மைகளுக்கும், திமிர் வெறிக்கும், தமிழர் வாழ்வின் கண்ணீருக்கும் போராட்டங்களுக்கும் இடையே நெருப்பினை தழுவி அழுது துடித்து பொங்கி எழுதியவை.
ஒவ்வொரு நறுக்கும் நெருப்பு தெரிக்கிறது, முகத்தில் அறைகிறது, யோசிக்க வைக்கிறது. புத்தகத்தில் இருந்து சில நறுக்குகள், 01. மானம்
#குட்டிக்கதை
நண்பர்களிடையே கல்யாணம் பற்றிய விவாதங்கள் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று ஒருத்தன்
"பிள்ளையாரை விட முருகன் பெரிய ஆளுடா, எப்பிடி ரெண்டு பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கார் பார்த்தியா?" என்றான்.
இவன் ஒருத்தன் நிதர்சனம் புரியாமல் பேசிட்டு இருக்கான். அடேய் பிள்ளையாருக்கு மாம்பழம் வேணும்னு, அம்மா அப்பாதான் உலகம்னு சுத்தி வந்த அம்மா அப்பா கோண்டுடா. ஆனா முருகன் உலகத்தையே சுத்தி வந்த traveller.
மாம்பழம் கிடைக்கல என்றதும் கோவிச்சுக்கிட்டு பழனில தனிக்குடித்தனம் போயிட்டார்.
பிள்ளையாரிட்ட வீடு இருக்கா?
ஆனா முருகனிட்ட "திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர்,பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை"னு ஆறுபடை வீடு இருக்கு. பிள்ளையாரிட்ட இருக்கிற வாகனம் எலிதான். ஆனா முருகனிட்ட இருக்கிறது மயில். நல்ல மயில்age(mileage) கொடுக்கும்.
இன்று பை (Pi/π) தினம். Pi ஐ கூட யாரவது தமிழ்ப்படுத்தி இருக்கக்கூடும். சிறு வயதில்
Pi(π) = 22/7 என்றும், கொஞ்சம் விளக்கமாக ஒரு வட்டத்தின் பரிதிக்கும் விட்டத்துக்கும் இடைப்படட விகிதம் என்றும் கேள்விப்பட்டிருப்போம்.
தெரிந்தோ தெரியாமலோ இந்த pi(π) நமக்கு கடைசி வரை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து இருக்கும். ஆனால் இந்த Pi(π) கணிதத்தின் ஒரு அழகான காதலி. pi(π) இன்றி அமையாது பாதிக்கணிதம்.
கி.மு. 250ல் இருந்தே இந்த விகிதம் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது. ஆனாலும் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் ஆக்கிமிடிஸினால் தெளிவாக வரையறுக்கப்பட்டது. இதனால் ஆக்கிமிடிஸின் மாறிலி என Piக்கு பெயர் வந்தது. ஆக்கிமிடிஸ் முதல் ஆரியப்பட்டா வரை Pi இன் பெறுமானத்தை வரையறுத்துக்கொண்டே வந்துள்ளனர்.
#குட்டிக்கதை
ஒரு தடவை காட்டுல வாக்கிங் போயிட்டு இருந்தேன். யாரோ ஒரு பொண்ணும், அவ புருசனும் காட்டுக்குள்ள இருந்தாங்க. வெள்ளை வெளேர்னு இருந்தாங்க. ஆரிய வந்தேறியாத்தான் இருக்கணும். டக்குன்னு பார்த்ததுமே புரிஞ்சிடிச்சு. என்ன கண்டதும் அந்த பொண்ணு புருசன் கிட்ட 'see மான்'னு சொல்லிச்சு.
உடனே துரத்த தொடங்கிட்டான். கையில AK 74ம் இல்லை. ஒரு பையில ஆமை கறி இருதிச்சு. முப்பாட்டன் முருகனை நினைச்சுட்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம். இங்கதான் நீங்க ஒன்னை புரிஞ்சுகிடனும். புறமுதுகு காட்டி ஓடினான் சீமான்னு யாரும் சொல்ல கூடாதுன்னு reverseலயே ஓடினேன்.
அந்த புருசனுக்கு பொண்டாட்டியும் யாருன்னு தம்பிங்க கிட்ட கேட்டப்போ ராமனும் சீதையும்னு சொன்னாங்க. உடனே ஸ்ரீலங்கால இருக்கிற எங்க பாட்டன் இராவணனுக்கு போனை போட்டேன். அவர் வச்சிருந்த விமானத்துல வந்தாரு. தமிழன் புத்திசாலித்தனத்தை பாருங்க.
1)அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார் 2) மகாபாரதம் – கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள் 3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு 4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் 5) கம்பராமாயணம்– மர்ரே ராஜம் பதிப்பு 6) திருக்குறள் – மூலமும் உரையும்
7) திருஅருட்பா – மூலமும் உரையும் 8) சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு 9) மணிமேகலை – மூலமும் உரையும் 10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள் 11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள் 12) தமிழக வரலாறு – தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்