தேர்தல் தொடர்பாக இன்னொரு விஷயம் பேசலாமா?
தேர்தல் அலுவலர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள்தான் என்பதால் 65% பெண்கள்தான். நாள் முழுக்க தெரியாத ஊரில் பழகாத மனிதர்களுடன் தங்கி இருந்து பணியாற்ற வேண்டிய சூழல். வெகு சிலருக்கு கணவர் உடன் வந்து வெளியே காத்திருப்பார். மற்றபடி பெரும்பாலும்
தனியேதான் வருவார்கள். இந்த அலுவலர்களின் பயணம், பாதுகாப்பு, உணவு குறித்து மாவட்ட நிர்வாகம் பெரிதாக மெனக்கெடாது. மொத்த அழுத்தத்தையும் சமாளித்தாக வேண்டிய இக்கட்டான பணி இது. பல தேர்தல் அனுபவங்களில் நான் கவனித்தது இவை. பெரும்பாலும் கிராமங்களில் பெண் அலுவலர்கள் வந்து இறங்கியவுடனே ஊர்
அவர்களை தத்தெடுத்துக் கொள்ளும். பல வீடுகளில், இங்கேயே படுத்து தூங்கிட்டு விடிகாலை போம்மா என்பார்கள். வாக்குச்சாவடி அருகில் இருக்கும் வீடுகளின் கழிப்பறை, உடைமாற்றும் அறைகள் இவர்களுக்காக திறந்து விடப்படும். பெரியவர்கள் அத்தனை கரிசனையோடு கவனித்துக் கொள்வார்கள். லோக்கல் அரசியல்வாதி
பெரும்பாலும் மதியம் கட்டிங் போட்டு விடுபவர்கள்தாம். உள்ளே ஒருவருக்கொருவர் கடுமையான சொற்களில் ஏசிக் கொள்பவர்கள்., பல சமயங்களில் அடிதடியும் நடக்கும். ஆனால், தமிழக தேர்தல் பணியில் பெண்களுக்கு இதுவரை ஒரு கண்ணியக் குறைவும் நடந்ததில்லை. பாதுகாப்பும் தேவைப்படுவதில்லை. நம் மக்கள்
இயல்பாகவே பெண்களை, அட்லீஸ்ட் அசலூர் பெண்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்பவர்கள் என்பதற்கு இதுதான் சான்று. ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம்! பொதுவாக நாம இப்படிதான். இப்படியான உறவுகள் சில தேர்தல் முடிந்தவுடனும் தொடர்ந்துள்ளன. ஒரு சில திருமண ஏற்பாடுகளும் கனிந்துள்ளன. வடமாநிலங்களிலும்
இப்படிதான் பாதுகாப்பாக உணர்கின்றனரா என தெரியலை! அரசு பாதுகாப்பு இல்லாமலேயே இரண்டு இரவு, ஒரு பகல் அயலூரில் கடுமையான பணியை செய்ய பாதுகாப்பானச் சூழலை உருவாக்கித் தந்துள்ளது நம் தமிழ்ச் சமூகம். ஒற்றை அசம்பாவிதம் இன்றி பொதுத்தேர்தலை முடிப்பதும் கூட நம் திராவிடப் பண்பாட்டின் சாதனைதான்.
இதையெல்லாம் நியாயமாக நான் சிறுகதைகளாக எழுதணும். அத்தனை அனுபவங்கள்! அவதானிப்புகள் உள்ளன. என்ன செய்வது? சோம்பல் பேர்வழி என்பதால் டிவிட்டரிலேயே கொட்டி விடுகிறேன். எல்லோரும் @narsimp ஆக முடியாதே? 😒🚶🚶
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
@SeyalveerarDMK ஆவோம்.
நண்பர்களே! தேர்தல் களமிறங்குவோமா?
இது சாதாரணத் தேர்தல் அல்ல! தமிழர் உரிமை மீட்புப் போர். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையெத்தனை போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது! எத்தனை உயிர்களை பலி தர வேண்டியிருந்தது? எத்தனைப் பெண்களின் கதறல்களைக் கேட்க வேண்டியிருந்தது.
எத்தனை இளைஞர்களின் வேலைகள் வடநாட்டவரிடம் பறி போனது! எத்தனை மிரட்டல்கள், திடீர் தமிழ்ப் பற்றுகள், வேல்யாத்திரை திசைத் திருப்பல்கள், சாதி, மத வெறுப்பு விதைகள், திராவிடப் பெருந்தலைவர்களுக்கு சாதிமுத்திரை இடல், புது கட்சி, நடுநிலை கோஷங்கள்! அத்தனைக்கும் கணக்குத் தீர்க்கும் நேரமிது.
இன்னும் மிகச் சரியாக 30 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது. சமூகவலைதளங்கள் மூலமாகவே நம்மால் பெரிதாக சாதிக்க முடியும்.
உடனடியாக நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் இடுகிறேன். நான் தவறவிட்டதை நீங்கள் இணைத்து விடுங்கள். 1. விலகியிருந்த வாட்ஸ்சப் குழுமங்களில் இருந்து (தற்காலிகமாக)
"மோடியா? இந்த லேடியா?" அறைகூவல் நினைவிருக்கா?
மத்தியில் பாஜக ஆட்சி வரவேண்டும், மோடி பிரதமராக வேண்டும் என விருப்பம் கொண்டவர்கள், அதிலும் குறிப்பாக பிராமணர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் தெரியுமா?
அதிமுகவுக்கு. பாஜகவுக்கு அல்ல! ஏனெனில், தாங்கள் பாஜகவுக்கு போடும் வாக்குகள்
அந்தக் கட்சியை ஜெயிக்க வைக்கப் போதாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதிமுகவுக்கு வாக்களித்தால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும் எனும் அரசியல் தெளிவு அவர்களுக்குண்டு.
அதேபோல அதிமுக - பாஜக அணியை தோற்கடிக்க விரும்புபவர்கள் நேரடியாக திமுக கூட்டணிக்கு வாக்களிப்பது மட்டும்தான்
அறிவார்ந்த செயலாக இருக்கும். அப்போதுதான் உங்கள் வாக்கு உங்களது நோக்கத்தை நிறைவேற்றும். நம்முடைய தேர்தல் முறையில் மூன்றாவது, நான்காவது வருபவர்கள் பெறும் வாக்குகளுக்கு "எண்ணிக்கை மதிப்பு" கிடையாது. தங்களது ஆதர்ச நாயகனான மோடியே வந்து ஓட்டு கேட்டும் கூட தாமரைக்குப் போடாமல்
தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் : 1. 50 ஆண்டுகால பொது வாழ்வு. 2. 6 முறை சட்டமன்ற உறுப்பினர், 2 முறை சென்னைக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் என இத்தனை அதிகாரப் பதவிகளில் இருந்தும் எதிர்கட்சியினரும் குறை சொல்ல முடியாத அரசியல் வாழ்வு.
3. எதிரியே ஆனாலும், உடல்நலிவுற்றிருந்தாலோ, மரணம் அடைந்தாலோ நேரில் சென்று உதவும், ஆறுதல் சொல்லும் மனிதநேயம். 4. தலைவர் கலைஞர் மறைவுக்குப் பிறகு, சனாதன சக்திகளை எதிர்க்கும் பழைய வேகம் திமுகவுக்கு இருக்காது என்றொரு பொதுக் கருத்தை உடைத்து, திமுகவை முன்னிலும் வீரியமான சக்தியாக
உயர்த்திக் காட்டிய அந்தச் துணிச்சல். 4. காஷ்மீரில் நடக்கும் அநீதியாக இருந்தாலும், முதல் கண்டனக்குரல் தமிழ்க் குரல்தான் என மதச்சார்பற்ற சக்திகளுக்கு உயிரூட்டிய அந்த கொள்கைப்பிடிப்பு. 5. பேரிடர் காலத்தில் வாய்ச்சொல் வீரர்கள் எல்லாம் ஒளிந்து கொண்டபோது, துணிந்து தானும் களம் இறங்கி
ரஜினி ரசிகர்களைக் கேவலப்படுத்தி துக்ளக் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அவர்கள் அரசியல் நமக்குத் தெரிந்த ஒன்றுதான். என்றாலும் துக்ளக் விழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளும் ரஜினிக்கு அவர்களைப் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.
எடுத்தவுடனே "நேர்மையாக வரி செலுத்தும்" என டாப் கியர்
போட்டுத் துவங்குவதிலேயே இதன் அபத்தத்தை ரஜினி உணர்ந்து கொண்டிருப்பார். ரஜினி மீதும், அவர் குடும்பத்தின் மீது பல்வேறு வரி ஏய்ப்பு வழக்குகள் நடந்து முடிந்ததையும், நடந்து கொண்டு வருவதையும் ரஜினி அறியமாட்டாரா என்ன? (வாடகை பாக்கி, வரி பாக்கி வழக்குகள் தனி. அவரே ட்வீட் போட்டிருக்காரே).
ஆனால், நான் அறிந்து ரஜினி ரசிகர்கள் மீது இதைப் போல எந்த வரி ஏய்ப்பு வழக்குகளும் இல்லை. அண்மைக் காலங்களில் பாஜகவில் இணைபவர்கள் போல ஆள் கடத்தல், கூலிப்படை கொலைகள், போதை மருந்து கடத்தல் வழக்குகள் எல்லாம் அவர்கள் மீது இல்லை.
எனக்குத் தெரிந்த ரஜினி ரசிகர்கள் முரட்டுக்காளை, போக்கிரி
பல ஆண்டுகளாக பகிரணும் என நினைத்திருந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்றேன். இதுவும் நண்பர் சொன்னதுதான்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மும்பை ரயில் பயணிகளின் கூட்டத்தைச் சமாளிக்க ஒரு பிரம்மாண்டமான ரயில் நிலையத்தைக் கட்ட முடிவு செய்தனர். அதன் திட்ட அறிக்கை லண்டனில் ஒரு ஆர்க்கிடெக்ட்
அலுவலகத்தில் தயாரானது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகருக்கும் ரயில் நிலைய வடிவமைப்பு அதே அலுவலகத்தில் நடந்தது. இறுதியாக இவை இரண்டு திட்ட அறிக்கையும் நிறைவடைந்த பிறகு வரைபடங்கள் வரிசைப்படி பெரிய தோல் பெட்டிகளில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. கப்பலில் ஏற்றும் முன்பு விலாசம்
ஒட்டும் போது, ஒரு கிளார்க் விலாசத்தைப் பெட்டிகளை மாற்றி ஒட்டி விட்டிருக்கிறார். அப்படியாக ஆஸி செல்ல வேண்டிய பெட்டி மும்பை வந்து சேர, மும்பைக்கான பெட்டி மெல்பர்ன் சென்று அடைந்தது. பொறியாளர்கள் பெட்டியைப் பிரித்தனர். விறுவிறுவென அதன்படி கட்டி முடித்தனர். அப்படி உருவானதுதான் மும்பை