மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: மாநில பா.ஜ., வலியுறுத்தல்
மும்பை:''ஊழல் வழக்குகளில், அமைச்சர்கள் சிக்கி பதவியிழந்து வருகின்றனர். இதைவிட, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேறு என்ன காரணம் வேண்டும்,'' என, மஹாராஷ்டிரா பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
புலனாய்வு
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., அடங்கிய கூட்டணி அரசு அமைந்துள்ளது.தேசியவாத காங்.,கைச் சேர்ந்த, மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது, முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், ஊழல் புகார் கூறினார்.
அதைஅடுத்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.இந்த நிலையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள் நிரம்பிய கார் நிறுத்தப்பட்ட வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே கைது செய்யப்பட்டார். அவரிடம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
'நான் இன்ஸ்பெக்டர் பதவியில் தொடருவதற்கு, 2 கோடி ரூபாய் தரும்படி, அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் கேட்டார். 'அந்தப் பணத்தை, கான்ட்ராக்டர்களிடம் இருந்து வசூலிக்கும்படி,
சிவசேனாவைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர், அனில் பராப் கூறினார்' என, சச்சின் வாஸே எழுதியதாக ஒரு கடிதம் வெளியானது.
இது குறித்து, மஹாராஷ்டிர பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளதாவது:ஊழல் வழக்கில், ஒரு அமைச்சர், ராஜினாமா செய்துள்ளார்.
அடுத்து மற்றொரு அமைச்சரும் பதவி விலக வேண்டிய நிலை யில் உள்ளார். 15 நாட்களுக்குள், இரண்டு அமைச்சர்கள், ஊழல் வழக்கில் ராஜினாமா செய்ய உள்ளனர். இதைவிட மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்வதற்கு வேறு என்ன காரணம் வேண்டும். ஆனால், அதை பா.ஜ., வலியுறுத்தாது.
மாநிலத்தில் நடக்கும் விஷயங்களை பார்க்கும் அரசியல் நிபுணர்கள், ஏன் ஜனாதி பதி ஆட்சியை அமல்படுத்தக் கூடாது என்பதை தெரிவிக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணி அரசு
''வாஸேயின் கடிதம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்,'' என, பா.ஜ., வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியுள்ளார்.''சிவசேனா தலைமையிலான மஹா விகாஸ் அகாடி கூட்டணி அரசை கவிழ்க்க, மோசமான அரசியல் நடத்துகின்றனர்.
கைது செய்யப் பட்டு உள்ள, சச்சின் வாஸேயை கட்டாயப்படுத்தி கடிதம் எழுத வைத்துள்ளனர்,'' என, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிரா மாநில அரசு, மஹா வசூல் செய்யும் அரசாக மாறிவிட்டது.
ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிப்பதற்கு, அந்த அரசுக்கு தகுதியில்லை. உடனடியாக, பதவி விலக வேண்டும்.
- பிரகாஷ் ஜாவடேகர், மத்திய அமைச்சர் பா.ஜ.,
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு
சந்தோஷமடைதல் என்று பொருள்.
தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது
சந்தோஷமடையுங்கள் என்று பொருள்
கொள்ளலாம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ
என்ற ஆராய்ச்சியாளர் நீர்ல் நேர்மறை
சொற்களை பிரயோகித்தபொழுது நீரில்
உள்ள மூலக்கூறுகள் ஒரு
முறைமையுடனும் ஒழுங்குடனும்
வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.
அதேசமயம், எதிர்மறை சொற்களை
அந்த நீரில் பயன்படுத்தியபொழுது
அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக
அமைந்ததைகண்டார்.
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச ஆதார விலை: மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டது பஞ்சாப் அரசு
வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டது பஞ்சாப் அரசு.
வேளாண் சந்தையில் விவசாயிகளுக்கு முழுமையான விலை சென்று சேர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இடைத்தரகர்கள் மூலமாக அல்லாமல் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
ஆனால், பஞ்சாப் அரசு இடைத்தரகர்கள் வழியாக விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கும் முறையைத் தொடர அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தது. இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
மே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் கிஷோரின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு
கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் பிரசாந்த் கிஷோர், ‛மேற்கு வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்' என பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இரு கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வரும் சூழலில், திரிணமுல் காங்., கட்சிக்கு தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ‛ஐ-பாக்' நிறுவனம் வகுத்துக் கொடுத்து வருகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில், தலைநகர் சென்னையில், 16.6 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லையாம்.
'சென்னையில் பெரும்பாலும் படித்தோர், விபரம் அறிந்தோர் தான் இருக்கின்றனர்' என, தமிழகத்தின் பிற பகுதி மக்கள் நினைத்துக் கொண்டிருந்தது, தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, கொரோனா நோய் பரவலை காரணம் கூற முடியாது. சென்னைவாசிகள், சமூக இடைவெளியை பின்பற்றித் தான் வாழ்கின்றனரா என்ன?தேர்தல் ஆணையம், சென்னை மீது தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
சிறுபான்மையினர் ஆதரவை கோரும் மம்தா: பிறரை யோசிக்கச் சொல்லும் அமித்ஷா
கோல்கட்டா: “சிறுபான்மையினரின் ஆதரவை மம்தா எதிர்பார்க்கிறார். மற்றவர்களின் ஆதரவை அவர் கோரவில்லை. அவர்கள் தற்போது முடிவெடுப்பார்கள்.” என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மேற்கு வங்க சட்டமன்றத்துக்கான 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு 31 சதவீதத்துக்கு அதிகமான வாக்கு வங்கி முஸ்லிம்களுக்கு உள்ளது. இடது முன்னணி 34 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்ததற்கும், மம்தா 2011-ல் வென்றதுக்கு பின்னணியில் இம்முக்கிய காரணி உண்டு.
இந்த முறையும் அதே போன்று அவர்களின் வாக்குகள் ஆட்சியை தீர்மானிப்பதில் பங்காற்றும். முஸ்லிம் வாக்கு வங்கியில் ஏற்படும் எந்தவொரு பிரிவும் 90 தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
*தல சிறப்பு* முருகனின் சரவணபவ எனும் ஷடாச்சர மந்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் ஆறுபடிகள் ஏறிச் சென்று முருகனை வழிபடுவது சிறப்பு.
🙏🇮🇳1
*பொது தகவல்* கோயில் பிரகாரத்திற்கு தெற்கில் கருணை கணபதியும், வடக்கில் அங்காரகனும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். 🙏🇮🇳2
கோஷ்டத்தில் குரு பகவானும், ஜெயதுர்காவும் தனி சன்னதியில் வீற்றிருக்க ராமர், சீதை, லட்சுமணர், அபிதகுசலாம்பிகை சமேத அருணாச்சலேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். நவகிரகங்களும் தனி சன்னதி கொண்டு அருள்புரிகின்றனர்.