என்ன பங்கு சௌக்கியமா? இந்த வாரம் என்ன சொல்லபோறிங்க பங்கு
இந்த வாரம் kutty story on சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) நண்பா
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டமாகும். பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி அந்த நிதியை பங்குகள், பத்திரங்கள், குறுகிய கால சந்தைப் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதாகும்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்யும் ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இதில் மாதா மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என்ற வழக்கமான கால இடைவெளியில் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்ய முடியும்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது ஈக்விட்டி (பங்குச் சந்தை), பாண்ட் /Debt இவற்றில் மாதாமாதம் சிறு தொகை தொடர்ந்து முதலீடு செய்து வரும் ஒரு திட்டமாகும்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் முதலீடு செய்வது சந்தை ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடைய
ஆபத்தை குறைக்கிறது. சந்தை நேர்மறையானதாக இருக்கும்போது, உங்களுக்கு குறைவான அலகுகள் (NAV) ஒதுக்கப்படுகின்றன, சந்தை வீழ்ச்சியடையும் போது, உங்கள் முதலீட்டின் அதே தொகைக்கு அதிக அலகுகளைப் (NAV) பெறுவீர்கள்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP), நீண்டகால முதலீட்டுக்கு எளிதான சிறந்த வழியாகும்.
நீங்கள் ஒவ்வொரு மாதமும் சில ஆயிரம் ரூபாயை சேமிக்க நல்லத் திட்டம் எது என்றால், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் SIP உங்களுக்கு சிறந்த வழியாகும்.
இது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டம்
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் SIP முதலீட்டாளர்கள் எந்த நேரத்திலும் திட்டத்திலிருந்து இடையிலேயே நிறுத்திக் கொள்ளலாம்.
உங்களால் சிறிய தொகையை நீண்ட காலத்துக்கு தொடர்ச்சியாக முதலீடு செய்ய முடிந்தால் உங்களது ஓய்வுக் காலத்தில் மிகப் பெரிய தொகையை உங்களால் சேமிக்க முடியும்.
உதாரணமாக 10 ஆண்டுகளுக்கு ரூ .5000 முதலீடு செய்தால், ரூ .6 லட்சம் முதலீட்டிற்கு குறைந்தபட்ச 12% வட்டிக்கு எதிராக ரூ .11.5 லட்சம் கிடைக்கும்.
உங்கள் இலக்கையும் தீர்மானித்து, நீங்கள் SIP-யை தொடங்கலாம்.
நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது, அதில் முக்கியமாக Expense Ratio, AUM, Fund Size, compounding etc…
நான் மேலும் ஆராய்ந்து, வரும் வாரங்களில் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்
பல முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன, ஆனால் நான் Groww மற்றும் Cleartax App பயன்படுத்தி நேரடித் திட்டங்களில் (Direct Plans) முதலீடு செய்துள்ளேன். கணக்கை open செய்வது மிகவும் எளிதானது,app download fund select செய்து Pan card and aadhaar card போன்ற ஆவணப்படுத்தப்பட்ட ஆவணத்தை பதிவேற்றவும்
என்ன நண்பா நண்பி எல்லாரும் kutty story படிச்சுட்டு like & quote செஞ்ச மற்றவர்களும் இதைப் பற்றி அறிந்து கொள்வார்கள்.
நண்பர் அஜித் உடன் உங்களை அடுத்த வாரம் இன்னும் நல்ல தலைப்புடன் வருகிறேன். நன்றி. வணக்கம்.
P.S - நான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் அல்ல, எனது கற்றலை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து முதலீடுகளை தேர்ந்தெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யுங்கள்.
சிஷ்ய இந்த வாரமும் டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி விரிவா பார்த்துவிடுவோம்.
டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும் முன் சிறு குறிப்புகள்: தொடர்கிறது!
i. நீங்கள் புகை / மதுப் பழக்கம் இருந்தால் மறைக்காமல் சொல்லுங்கள், மறைத்தாலும் மருத்துவம் சோதனை ல கண்டுபிடுச்சுருவாங்க. அதையும் மீறி சில சமயம் claim பண்ணும்போது உங்கள் claim rejection ஆகா வாய்ப்பு இருக்கு. முக்கியமா
சிஷ்ய இந்த வாரம் நாம டெர்ம் இன்சூரன்ஸ் பத்தி விரிவா பார்க்கப்போறோம்,
சரி குரு fulla படிச்சுருவோம்.
காப்பீடு (INSURANCE) என்பது தனிநபர் (Insurer) மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு (Insurance Company) இடையே உள்ள சட்டபூர்வமான ஒப்பந்தமாகும்.
வாழ்க்கையில், எதிர்பாராத செலவுகள் எப்படி வேண்டுமாலும் வரலாம். நீங்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து இருந்தாலும், இந்த திடீர்
மன்னா
ஏன்னா மங்குனி அமைச்சரே?
இந்த EPF என்று சொல்கிறார்களே, அப்படி என்றல் என்ன மன்னா?
மங்குனி அமைச்சரே, தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் போல கஷ்டமான விடுகதை இல்லை.
EPF பற்றி இந்த வாரம் பார்த்துருவோம் வாங்க.,
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employee Provident Fund Organization) என்பது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசு அமைப்பாகும், இது வேலை செய்யும் நபர்களுக்கான EPF சேவையை நிர்வகித்து நடத்துகிறது.
இந்த திட்டத்தின் கீழ், பணியாளர் தனது