மின்சார ஊழல் :
கடுமையான மின்வெட்டுக்கு தமிழகத்தை உட்படுத்திச் சென்றுள்ளனர் அடிமை அதிமுக அரசு. அடிக்கடி மின்மிகை மாநிலம் என்பார்களே! அது நமது தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்கிறோம் என்று பொருள் அல்லவாம். தேவைக்கும் அதிகமாக தனியாரிடம் வாங்கிக் கொள்கிறோம் என்றுதான் பொருள். இப்போது
காபந்து அரசு என்பதாலும், அடுத்து திமுகவே ஆட்சிக்கு வரும் என்பதாலும் தனியார்கள் மின்சாரத்தை அளிக்க தயங்குகின்றனராம்! சந்தை விலையை விட அதிக விலை என்பதால் திமுக அரசிடம் பில் வாங்க முடியுமா எனும் அச்சம்தான் காரணமாம்! ஒரு மின் துறை உயர் அதிகாரி இதைவிட அதிர்ச்சியான தகவல்களை சொல்கிறார்.
தற்போது 30% மின் தட்டுப்பாடு இருப்பதால் scheduling முறைப்படி பகுதி வாரியாக 4 மணி நேர மின் வெட்டும், பராமரிப்பு எனும் பெயரில் வாரத்துக்கு ஒருநாள் மின்வெட்டும் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாம். தவிர, 110 KVA டிரான்ஸ்ஃபார்மர்களின் திடீர் பழுதுகள் வழக்கத்தை விட மிக அதிகமாக
உள்ளனவாம். இவை திட்டமிட்ட சதி என்றும் தேர்தல் முடிவு வந்தபிறகு பதவி ஏற்புநாள் முதல் முழுமையான blackout வரும் என்றும் எச்சரிக்கிறார். திமுக ஆட்சி எனில் இதை கட்டாயம் சந்திக்க நேரிடும் என்றும், அதிமுக ஆட்சியே தொடர்ந்தால், வழக்கம் போல தனியார் மின்சாரம், கைமேலே கமிஷன் என்பதும்தான்
திட்டமாம்! இந்தச் சதித் திட்டத்தை ஒருங்கிணைக்கும் ஒரு பெண் உயரதிகாரி முதல் வேறு சிலரின் பெயர் பட்டியலும் கிடைத்துள்ளது. ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பார் கலைஞர். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் கூட, மின் உற்பத்தித் திட்டங்களை நிறைவேற்றாமல் தனியாரிடம் மின்சாரம் வாங்கி கொழுத்த
சதிகாரர்கள் மக்கள் மன்றத்தில் மட்டும் அல்லாமல், நீதிமன்றத்திலும் பதில் சொல்லியே தீரணும். எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் வலிமை தலைவர் தளபதிக்கு உண்டு. இதையும் எதிர்கொள்வார். நிலைமை சீரடையும்வரை தனியாரிடம் மின்சாரம் வாங்க திமுகவும் தயங்கக்கூடாது. மக்கள் பணத்தை முறையாக செலவிட
எண்ணி திமுக கொண்டு வந்த சிக்கன நடவடிக்கைகளும், 2 மணி நேர மின்வெட்டுகளும் நமக்கு கெட்ட பெயரையே தந்தது. நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை இப்படியே செல்வோம். நிர்வாகத்தின் உள்ளுடம்பு அரித்துச் சாவது குறித்து இங்கே யாருக்கும் கவலையில்லை. மேல்பூச்சு மேக்கப்தான் முக்கியம். @ptrmadurai
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு பழைய்ய்ய்ய கிராமம். அந்த ஊர்லே ஒரு நாட்டாமை கிழவன், கடுமையா உழைச்சு ஊரிலேயே முதல் காரை வீடு கட்டுனான். அந்த பெருசுக்கு நாலஞ்சு பிள்ளைங்க பிறந்தது. அது செழிப்பான ஊர் என்பதால் பஞ்சம் பிழைக்க, வியாபாரம் பண்ண அவ்வப்போது வெளியே இருந்து சிலபேர் வந்து தங்குவாங்க. அவங்க எல்லாம்
இவர்களை காரை வீட்டுக்காரங்க என்று அழைத்தார்கள். அந்த நேரத்திலே உலகம் எங்கிலும் ஓலைக் குடிசைதான் என்பதால் காரை வீடு என்பது பெரிய அடையாளம்தான். அரும்பாடுபட்டு வீடு கட்டிய பெருசும் நாளடைவில் மண்டையைப் போட, வளர்ந்து நின்ன பிள்ளைங்க எல்லாம் தனி அடுப்பு வச்சு பிழைக்கப் போனார்கள்.
மூத்த பிள்ளை மட்டும் பெருசோட கைபட்டு, கால்பட்டு வளர்ந்ததாலே பிடிவாதமா அங்கேயே தங்கிருச்சு. பிழைக்கப் போனவர்கள் எல்லாம் தனி மொழி தேடிகிட்டாலும், அந்த மொழியோட வேர்கள் எல்லாம் பழைய காரை வீட்டிலிருந்தே உருவானது. பிரிந்து போனவர்கள் கட்டின வீடுகளுக்குதான் புது பெயர் தேவைப்பட்டது.
தேர்தல் தொடர்பாக இன்னொரு விஷயம் பேசலாமா?
தேர்தல் அலுவலர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள்தான் என்பதால் 65% பெண்கள்தான். நாள் முழுக்க தெரியாத ஊரில் பழகாத மனிதர்களுடன் தங்கி இருந்து பணியாற்ற வேண்டிய சூழல். வெகு சிலருக்கு கணவர் உடன் வந்து வெளியே காத்திருப்பார். மற்றபடி பெரும்பாலும்
தனியேதான் வருவார்கள். இந்த அலுவலர்களின் பயணம், பாதுகாப்பு, உணவு குறித்து மாவட்ட நிர்வாகம் பெரிதாக மெனக்கெடாது. மொத்த அழுத்தத்தையும் சமாளித்தாக வேண்டிய இக்கட்டான பணி இது. பல தேர்தல் அனுபவங்களில் நான் கவனித்தது இவை. பெரும்பாலும் கிராமங்களில் பெண் அலுவலர்கள் வந்து இறங்கியவுடனே ஊர்
அவர்களை தத்தெடுத்துக் கொள்ளும். பல வீடுகளில், இங்கேயே படுத்து தூங்கிட்டு விடிகாலை போம்மா என்பார்கள். வாக்குச்சாவடி அருகில் இருக்கும் வீடுகளின் கழிப்பறை, உடைமாற்றும் அறைகள் இவர்களுக்காக திறந்து விடப்படும். பெரியவர்கள் அத்தனை கரிசனையோடு கவனித்துக் கொள்வார்கள். லோக்கல் அரசியல்வாதி
@SeyalveerarDMK ஆவோம்.
நண்பர்களே! தேர்தல் களமிறங்குவோமா?
இது சாதாரணத் தேர்தல் அல்ல! தமிழர் உரிமை மீட்புப் போர். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையெத்தனை போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது! எத்தனை உயிர்களை பலி தர வேண்டியிருந்தது? எத்தனைப் பெண்களின் கதறல்களைக் கேட்க வேண்டியிருந்தது.
எத்தனை இளைஞர்களின் வேலைகள் வடநாட்டவரிடம் பறி போனது! எத்தனை மிரட்டல்கள், திடீர் தமிழ்ப் பற்றுகள், வேல்யாத்திரை திசைத் திருப்பல்கள், சாதி, மத வெறுப்பு விதைகள், திராவிடப் பெருந்தலைவர்களுக்கு சாதிமுத்திரை இடல், புது கட்சி, நடுநிலை கோஷங்கள்! அத்தனைக்கும் கணக்குத் தீர்க்கும் நேரமிது.
இன்னும் மிகச் சரியாக 30 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது. சமூகவலைதளங்கள் மூலமாகவே நம்மால் பெரிதாக சாதிக்க முடியும்.
உடனடியாக நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் இடுகிறேன். நான் தவறவிட்டதை நீங்கள் இணைத்து விடுங்கள். 1. விலகியிருந்த வாட்ஸ்சப் குழுமங்களில் இருந்து (தற்காலிகமாக)
"மோடியா? இந்த லேடியா?" அறைகூவல் நினைவிருக்கா?
மத்தியில் பாஜக ஆட்சி வரவேண்டும், மோடி பிரதமராக வேண்டும் என விருப்பம் கொண்டவர்கள், அதிலும் குறிப்பாக பிராமணர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் தெரியுமா?
அதிமுகவுக்கு. பாஜகவுக்கு அல்ல! ஏனெனில், தாங்கள் பாஜகவுக்கு போடும் வாக்குகள்
அந்தக் கட்சியை ஜெயிக்க வைக்கப் போதாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதிமுகவுக்கு வாக்களித்தால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும் எனும் அரசியல் தெளிவு அவர்களுக்குண்டு.
அதேபோல அதிமுக - பாஜக அணியை தோற்கடிக்க விரும்புபவர்கள் நேரடியாக திமுக கூட்டணிக்கு வாக்களிப்பது மட்டும்தான்
அறிவார்ந்த செயலாக இருக்கும். அப்போதுதான் உங்கள் வாக்கு உங்களது நோக்கத்தை நிறைவேற்றும். நம்முடைய தேர்தல் முறையில் மூன்றாவது, நான்காவது வருபவர்கள் பெறும் வாக்குகளுக்கு "எண்ணிக்கை மதிப்பு" கிடையாது. தங்களது ஆதர்ச நாயகனான மோடியே வந்து ஓட்டு கேட்டும் கூட தாமரைக்குப் போடாமல்
தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் : 1. 50 ஆண்டுகால பொது வாழ்வு. 2. 6 முறை சட்டமன்ற உறுப்பினர், 2 முறை சென்னைக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் என இத்தனை அதிகாரப் பதவிகளில் இருந்தும் எதிர்கட்சியினரும் குறை சொல்ல முடியாத அரசியல் வாழ்வு.
3. எதிரியே ஆனாலும், உடல்நலிவுற்றிருந்தாலோ, மரணம் அடைந்தாலோ நேரில் சென்று உதவும், ஆறுதல் சொல்லும் மனிதநேயம். 4. தலைவர் கலைஞர் மறைவுக்குப் பிறகு, சனாதன சக்திகளை எதிர்க்கும் பழைய வேகம் திமுகவுக்கு இருக்காது என்றொரு பொதுக் கருத்தை உடைத்து, திமுகவை முன்னிலும் வீரியமான சக்தியாக
உயர்த்திக் காட்டிய அந்தச் துணிச்சல். 4. காஷ்மீரில் நடக்கும் அநீதியாக இருந்தாலும், முதல் கண்டனக்குரல் தமிழ்க் குரல்தான் என மதச்சார்பற்ற சக்திகளுக்கு உயிரூட்டிய அந்த கொள்கைப்பிடிப்பு. 5. பேரிடர் காலத்தில் வாய்ச்சொல் வீரர்கள் எல்லாம் ஒளிந்து கொண்டபோது, துணிந்து தானும் களம் இறங்கி
ரஜினி ரசிகர்களைக் கேவலப்படுத்தி துக்ளக் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அவர்கள் அரசியல் நமக்குத் தெரிந்த ஒன்றுதான். என்றாலும் துக்ளக் விழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளும் ரஜினிக்கு அவர்களைப் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.
எடுத்தவுடனே "நேர்மையாக வரி செலுத்தும்" என டாப் கியர்
போட்டுத் துவங்குவதிலேயே இதன் அபத்தத்தை ரஜினி உணர்ந்து கொண்டிருப்பார். ரஜினி மீதும், அவர் குடும்பத்தின் மீது பல்வேறு வரி ஏய்ப்பு வழக்குகள் நடந்து முடிந்ததையும், நடந்து கொண்டு வருவதையும் ரஜினி அறியமாட்டாரா என்ன? (வாடகை பாக்கி, வரி பாக்கி வழக்குகள் தனி. அவரே ட்வீட் போட்டிருக்காரே).
ஆனால், நான் அறிந்து ரஜினி ரசிகர்கள் மீது இதைப் போல எந்த வரி ஏய்ப்பு வழக்குகளும் இல்லை. அண்மைக் காலங்களில் பாஜகவில் இணைபவர்கள் போல ஆள் கடத்தல், கூலிப்படை கொலைகள், போதை மருந்து கடத்தல் வழக்குகள் எல்லாம் அவர்கள் மீது இல்லை.
எனக்குத் தெரிந்த ரஜினி ரசிகர்கள் முரட்டுக்காளை, போக்கிரி