சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
நீரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
லண்டன்: வங்கி கடன் மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள பிரபல தொழிலதிபர் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, வைர வியாபாரி நீரவ் மோடி மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தன. இந்த நிலையில், பிரிட்டனுக்கு, அவர் தப்பிச் சென்றார்.
அவரை நாடு கடத்தி, அழைத்து வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பிரிட்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இது உங்கள் இடம்: கருத்துக் கணிப்பு தமிழகத்தில் எடுபடாது!
ஆர்.நாராயணசாமி, பெண்ணாடம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகளில், கட்சி சார்பான நபர்களே கருத்து சொல்கின்றனர்.
கருத்துக் கணிப்பு எடுக்கும் அமைப்பும், ஏதேனும் ஒரு கட்சி சார்பானதாகவே இருக்கிறது. இதனால் தான், தமிழகத்தில் எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் பலிப்பது இல்லை.
பொதுமக்கள் அவ்வளவு எளிதாக, தங்கள் ஓட்டு யாருக்கு என, வெளியில் சொல்ல மாட்டார்கள். குறிப்பாக, கிராமப் புற பெண்களிடம், அவ்வளவு எளிதில், அவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை கண்டுபிடிக்கவே முடியாது.
இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். அந்தவகையில், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். 🇮🇳🙏1
ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது அது பற்றி இப்போது பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில்
🇮🇳🙏2
தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரைக் காணலாம்.
பெண் வடிவத்தில் உள்ள பிள்ளையார் விக்னேஷ்வரி, விநாயகி, கணேஷினி, கணேஷ்வரி எனப் பல பெயர்களில் வணங்கப்படுகிறார்.
🇮🇳🙏3
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே, பழமையான கோவிலில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுந்து ஒளிர்ந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
மடத்துக்குளம் சோழமாதேவியில் குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி கோவில் உள்ளது. இங்கு தினசரி பூஜை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, அதிகாலை தொடங்கி மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன.
இக்கோவிலில், கோவிலில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதுகுறித்து குங்குமவல்லி அம்மன் உடனமர் குலசேகரசாமி அறக்கட்டளையினர் கூறுகையில், ' நேற்று காலை, 6:00 மணி தொடங்கி, 6:40 மணி வரை சூரிய ஒளி சிவலிங்கம் மீது ஒளிர்ந்தது.