#Catch22 : அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதே ஒரு சதிவலை. காவிரி முதல் கரோனா வரை பலமுறை மக்கள் பிரச்சனைகளுக்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட சொல்லிய போதெல்லாம் அந்தக் கோரிக்கையை இடது கையால் தள்ளிய எடப்பாடி, ஆட்சி முடிய ஆறே நாட்கள் இருக்கும்போது அவரே முன்வந்து அனைத்துக் கட்சிக்
கூட்டம் கூட்டுகிறார் எனில் அதன் உள்நோக்கத்தை யாரும் அறியலாம். இதில் திமுகவின் முக்கியத்துவம் பிரதான எதிர்கட்சி என்பதால் மட்டுமல்ல! சிலநாட்களில் அது ஆளும்கட்சி என்பதும் கூட! இதுவும் வெளிப்படை. கார்ப்பரேட் மூளைகள் பின்னிய இந்த நுட்பமான வலைப்பின்னலில் திமுகவை பங்கெடுக்க வைக்க
நடைபெற்ற இந்த நாடகத்தில் பங்கெடுக்காமல் திமுக விலகிப் போயிருக்கலாம்! அப்படி போயிருந்தால், இந்திய அளவில் திமுகவை தேசவிரோத சக்தியாகவும், அதன் தலைமையிலான தமிழ்நாட்டை, உயிர் வாழ ஆக்ஸிஜனுக்காக ஏங்கும் பலகோடி இந்திய மக்களின் எதிரியாகவும் ஒரு பிம்பம் வலிமையாகக் கட்டமைக்கப்
பட்டிருக்கும். அடுத்த தேர்வாக, கலந்து கொண்டு அரசின் பரிந்துரையை எதிர்த்திருக்கலாம்! அப்போதும் இதே விளைவே ஏற்பட்டிருக்கும். எனவே, இப்போது இது தேசிய அளவிலான பிரச்சனை என்பதால் திமுக அதில் கலந்து கொள்ள தனது பிரதிநிதியாக ஒரு மக்களவை பிரதிநிதியும் (தூத்துகுடி மக்களவை உறுப்பினர்), ஒரு
மாநிலங்களவை உறுப்பினரையும் அனுப்பியது. அவர்களும், ஆலை திறக்கப்பட்டால் அது ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே என்றும், நான்கு மாதங்களுக்கு மட்டுமே மின்சாரம் என்றும், அதையும் அரசு கண்காணிப்புக் குழு மட்டுமே நடத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர். அரசின் முடிவு என்ன என்பது இன்னும்
தெரியவில்லை. ஆக மொத்தம் ஆலைத் திறப்பின் மொத்த பழியையும் திமுக மீதே போடப்படும் என்பதை அறிந்தும், மக்கள் தேவையைக் கருதி கட்சி இந்த முடிவெடுத்துள்ளது. அரசுடமை ஆக்கி பின்பு உற்பத்தியை தொடங்கி இருந்திருக்கலாம்தான்! அதற்குத் தேவையான காலக்கெடு நீண்டது. இப்போதைய அவசரத்துக்கு ஆனதல்ல.
வைகோ மீது எனக்குள்ள தார்மீகக் கோபத்தை நான் மறைத்ததில்லை. ஆனாலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பில் 25 ஆண்டுகள் போராடிய வைகோவை விட வேறு யாருக்கும் தூத்துக்குடி மக்கள் மீது அதிக உரிமையும், அக்கறையும் இருக்கமுடியாது என்பது எனது நிலைப்பாடு. இந்தச் சூழலில் வைகோவே ஆக்ஸிஜன் தயாரிப்புக்காக
ஆலை திறக்கப்படுவதை ஆதரிக்கும்போது வேறு யாருக்கும் அதை மறுக்கும் தார்மீக உரிமை இருப்பதாக நான் கருதவில்லை.
இதன் விளைவுகள் என்ன? 1. ஆலையை திறந்தது அதிமுகதான் எனினும் அந்தப் பழி திமுகவின் மீதே சுமத்தப்படும். காலங்காலமாக நடக்கும் தமிழ்நாட்டு அரசியலின் விதி. 2. ஆக்ஸிஜன் பற்றாக்குறை
அதிகபட்சம் 4 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும். அதற்குள் ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யுமென நான் கருதவில்லை. ஒரு போட்டோ வேண்டுமானால் வரும். உற்பத்தி நடந்தாலும் பெரிய பயன் இருக்க வாய்ப்பில்லை. அதற்குள் இரண்டாம் அலை அடங்கி விடும்.
3.இன்று காலை வரை திமுகவுடன் நட்பாக இருந்தவர்கள்
இப்போது அதிமுகவை விடுத்து திமுக மீதேறி தாண்டவம் ஆடுவார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சங்கிகள், பாமக போன்றோர்கள் (இவர்களும் இணைந்து எடுத்த முடிவுகளை) திமுகவின் மீது இதை சுமையாக ஏற்றுவார்கள். தூத்துக்குடி மக்களின் திடீர் நண்பர்களாக மாறுவார்கள்
ஆனால், இதெல்லாம் வெறும் அரசியல்.
இதைத் தாண்டி காலம் தலைவர் தளபதிக்கு பெரும் வாய்ப்பை வழங்கவுள்ளது. அடுத்த தமிழக முதல்வராக அவர் பொறுப்பேற்றவுடன் 1. எடப்பாடி பழனிச்சாமி அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட 13 உயிர்களுக்கான நீதிவிசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளை கொடுஞ்சிறையில் அடைப்பதும் 2. இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நாடகம்
முடிந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக இழுத்துப் பூட்டுவது (அல்லது)0 தமிழக அரசே கையகப்படுத்தி அதை மக்கள் சொத்தாக்குவதுதான்.
இந்த வரலாற்றுச் சிறப்பான முடிவுகளை தலைவர் @mkstalin ஆல் மட்டுமே எடுக்க முடியும். அவர்தான் எடுக்கப் போகிறார். சரித்திரத்தில் அதை யாராலும் மாற்ற இயலாது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மின்சார ஊழல் :
கடுமையான மின்வெட்டுக்கு தமிழகத்தை உட்படுத்திச் சென்றுள்ளனர் அடிமை அதிமுக அரசு. அடிக்கடி மின்மிகை மாநிலம் என்பார்களே! அது நமது தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்கிறோம் என்று பொருள் அல்லவாம். தேவைக்கும் அதிகமாக தனியாரிடம் வாங்கிக் கொள்கிறோம் என்றுதான் பொருள். இப்போது
காபந்து அரசு என்பதாலும், அடுத்து திமுகவே ஆட்சிக்கு வரும் என்பதாலும் தனியார்கள் மின்சாரத்தை அளிக்க தயங்குகின்றனராம்! சந்தை விலையை விட அதிக விலை என்பதால் திமுக அரசிடம் பில் வாங்க முடியுமா எனும் அச்சம்தான் காரணமாம்! ஒரு மின் துறை உயர் அதிகாரி இதைவிட அதிர்ச்சியான தகவல்களை சொல்கிறார்.
தற்போது 30% மின் தட்டுப்பாடு இருப்பதால் scheduling முறைப்படி பகுதி வாரியாக 4 மணி நேர மின் வெட்டும், பராமரிப்பு எனும் பெயரில் வாரத்துக்கு ஒருநாள் மின்வெட்டும் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாம். தவிர, 110 KVA டிரான்ஸ்ஃபார்மர்களின் திடீர் பழுதுகள் வழக்கத்தை விட மிக அதிகமாக
ஒரு பழைய்ய்ய்ய கிராமம். அந்த ஊர்லே ஒரு நாட்டாமை கிழவன், கடுமையா உழைச்சு ஊரிலேயே முதல் காரை வீடு கட்டுனான். அந்த பெருசுக்கு நாலஞ்சு பிள்ளைங்க பிறந்தது. அது செழிப்பான ஊர் என்பதால் பஞ்சம் பிழைக்க, வியாபாரம் பண்ண அவ்வப்போது வெளியே இருந்து சிலபேர் வந்து தங்குவாங்க. அவங்க எல்லாம்
இவர்களை காரை வீட்டுக்காரங்க என்று அழைத்தார்கள். அந்த நேரத்திலே உலகம் எங்கிலும் ஓலைக் குடிசைதான் என்பதால் காரை வீடு என்பது பெரிய அடையாளம்தான். அரும்பாடுபட்டு வீடு கட்டிய பெருசும் நாளடைவில் மண்டையைப் போட, வளர்ந்து நின்ன பிள்ளைங்க எல்லாம் தனி அடுப்பு வச்சு பிழைக்கப் போனார்கள்.
மூத்த பிள்ளை மட்டும் பெருசோட கைபட்டு, கால்பட்டு வளர்ந்ததாலே பிடிவாதமா அங்கேயே தங்கிருச்சு. பிழைக்கப் போனவர்கள் எல்லாம் தனி மொழி தேடிகிட்டாலும், அந்த மொழியோட வேர்கள் எல்லாம் பழைய காரை வீட்டிலிருந்தே உருவானது. பிரிந்து போனவர்கள் கட்டின வீடுகளுக்குதான் புது பெயர் தேவைப்பட்டது.
தேர்தல் தொடர்பாக இன்னொரு விஷயம் பேசலாமா?
தேர்தல் அலுவலர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள்தான் என்பதால் 65% பெண்கள்தான். நாள் முழுக்க தெரியாத ஊரில் பழகாத மனிதர்களுடன் தங்கி இருந்து பணியாற்ற வேண்டிய சூழல். வெகு சிலருக்கு கணவர் உடன் வந்து வெளியே காத்திருப்பார். மற்றபடி பெரும்பாலும்
தனியேதான் வருவார்கள். இந்த அலுவலர்களின் பயணம், பாதுகாப்பு, உணவு குறித்து மாவட்ட நிர்வாகம் பெரிதாக மெனக்கெடாது. மொத்த அழுத்தத்தையும் சமாளித்தாக வேண்டிய இக்கட்டான பணி இது. பல தேர்தல் அனுபவங்களில் நான் கவனித்தது இவை. பெரும்பாலும் கிராமங்களில் பெண் அலுவலர்கள் வந்து இறங்கியவுடனே ஊர்
அவர்களை தத்தெடுத்துக் கொள்ளும். பல வீடுகளில், இங்கேயே படுத்து தூங்கிட்டு விடிகாலை போம்மா என்பார்கள். வாக்குச்சாவடி அருகில் இருக்கும் வீடுகளின் கழிப்பறை, உடைமாற்றும் அறைகள் இவர்களுக்காக திறந்து விடப்படும். பெரியவர்கள் அத்தனை கரிசனையோடு கவனித்துக் கொள்வார்கள். லோக்கல் அரசியல்வாதி
@SeyalveerarDMK ஆவோம்.
நண்பர்களே! தேர்தல் களமிறங்குவோமா?
இது சாதாரணத் தேர்தல் அல்ல! தமிழர் உரிமை மீட்புப் போர். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையெத்தனை போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது! எத்தனை உயிர்களை பலி தர வேண்டியிருந்தது? எத்தனைப் பெண்களின் கதறல்களைக் கேட்க வேண்டியிருந்தது.
எத்தனை இளைஞர்களின் வேலைகள் வடநாட்டவரிடம் பறி போனது! எத்தனை மிரட்டல்கள், திடீர் தமிழ்ப் பற்றுகள், வேல்யாத்திரை திசைத் திருப்பல்கள், சாதி, மத வெறுப்பு விதைகள், திராவிடப் பெருந்தலைவர்களுக்கு சாதிமுத்திரை இடல், புது கட்சி, நடுநிலை கோஷங்கள்! அத்தனைக்கும் கணக்குத் தீர்க்கும் நேரமிது.
இன்னும் மிகச் சரியாக 30 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது. சமூகவலைதளங்கள் மூலமாகவே நம்மால் பெரிதாக சாதிக்க முடியும்.
உடனடியாக நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் இடுகிறேன். நான் தவறவிட்டதை நீங்கள் இணைத்து விடுங்கள். 1. விலகியிருந்த வாட்ஸ்சப் குழுமங்களில் இருந்து (தற்காலிகமாக)
"மோடியா? இந்த லேடியா?" அறைகூவல் நினைவிருக்கா?
மத்தியில் பாஜக ஆட்சி வரவேண்டும், மோடி பிரதமராக வேண்டும் என விருப்பம் கொண்டவர்கள், அதிலும் குறிப்பாக பிராமணர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் தெரியுமா?
அதிமுகவுக்கு. பாஜகவுக்கு அல்ல! ஏனெனில், தாங்கள் பாஜகவுக்கு போடும் வாக்குகள்
அந்தக் கட்சியை ஜெயிக்க வைக்கப் போதாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதிமுகவுக்கு வாக்களித்தால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும் எனும் அரசியல் தெளிவு அவர்களுக்குண்டு.
அதேபோல அதிமுக - பாஜக அணியை தோற்கடிக்க விரும்புபவர்கள் நேரடியாக திமுக கூட்டணிக்கு வாக்களிப்பது மட்டும்தான்
அறிவார்ந்த செயலாக இருக்கும். அப்போதுதான் உங்கள் வாக்கு உங்களது நோக்கத்தை நிறைவேற்றும். நம்முடைய தேர்தல் முறையில் மூன்றாவது, நான்காவது வருபவர்கள் பெறும் வாக்குகளுக்கு "எண்ணிக்கை மதிப்பு" கிடையாது. தங்களது ஆதர்ச நாயகனான மோடியே வந்து ஓட்டு கேட்டும் கூட தாமரைக்குப் போடாமல்
தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் : 1. 50 ஆண்டுகால பொது வாழ்வு. 2. 6 முறை சட்டமன்ற உறுப்பினர், 2 முறை சென்னைக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் என இத்தனை அதிகாரப் பதவிகளில் இருந்தும் எதிர்கட்சியினரும் குறை சொல்ல முடியாத அரசியல் வாழ்வு.
3. எதிரியே ஆனாலும், உடல்நலிவுற்றிருந்தாலோ, மரணம் அடைந்தாலோ நேரில் சென்று உதவும், ஆறுதல் சொல்லும் மனிதநேயம். 4. தலைவர் கலைஞர் மறைவுக்குப் பிறகு, சனாதன சக்திகளை எதிர்க்கும் பழைய வேகம் திமுகவுக்கு இருக்காது என்றொரு பொதுக் கருத்தை உடைத்து, திமுகவை முன்னிலும் வீரியமான சக்தியாக
உயர்த்திக் காட்டிய அந்தச் துணிச்சல். 4. காஷ்மீரில் நடக்கும் அநீதியாக இருந்தாலும், முதல் கண்டனக்குரல் தமிழ்க் குரல்தான் என மதச்சார்பற்ற சக்திகளுக்கு உயிரூட்டிய அந்த கொள்கைப்பிடிப்பு. 5. பேரிடர் காலத்தில் வாய்ச்சொல் வீரர்கள் எல்லாம் ஒளிந்து கொண்டபோது, துணிந்து தானும் களம் இறங்கி