உத்தரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடே இல்லை என்கிறார் அம்மாநில முதல்வர் யோகி. ஆனால், அங்கு தொடர்ந்து இழப்புகள் அதிகரித்துவருகின்றன. உண்மையில் அந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து பிபிசியின் சமீராத்மஜ் மிஸ்ரா ஒரு அதிர வைக்கும் கட்டுரையை எழுதியிருக்கிறார்.
1. மாநிலம் முழுவதுமே கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் இடம் தேடி அலைகிறார்கள். அல்லது இடம் கிடைக்காமல் உயிரிழக்கிறார்கள். ஆனால், உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடோ மருத்துவமனை படுக்கை வசதிகள் இல்லாத நிலையோ கிடையாது என்கிறார் யோகி. 2. முதல்வரின் கூற்றுக்கு மாறாக,
உத்தர பிரதேசத்தின் பல மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன்,வென்டிலேட்டர், படுக்கை வசதிகள் கிடைக்காமல் பலநோயாளிகள் இறந்து போனதையும் அதற்கு முன்னதாக, நோயாளிகளின் உறவினர்கள் சமூக ஊடகங்கள் மூலம் உதவி கேட்டு அபயக்குரல் விடுத்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது. 3. உத்தர பிரதேசத்தில் முதல்வர்
யோகியின் இம்மாதிரி செயல்பாடுகளை தங்களுக்கு சாதகமான பாதுகாப்பு கேடயமாக அதிகார வர்க்கம் பயன்படுத்தி வருகிறது.முதல்வரின் இணையதள புகார் மின்னஞ்சலுக்கு வரும் புகார்கள் கவனிக்கப்படுவதில்லை. தங்களுக்கு நம்பகமானவர்கள் தெரிவிக்கும் தகவல்களை அப்படியே நம்பி அதை அறிக்கையாக வெளியிடுகிறார்கள்.
4. உத்தரப்பிரதேசத்தில் உள்ள நிலைமையை பார்க்கும்போது ஒட்டுமொத்த அரசு அமைப்பு முறையே இங்கு அழிக்கப்பட்டு விட்டது போல உள்ளது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான யோகேஷ் மிஸ்ரா. 5. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலாற்றாய்வாளர் யோகேஷ் பிரவீண் லக்னெளவில் இறக்க காரணம், அவருக்கு அவசர நேரத்தில்
அவசர ஊர்தி கிடைக்காததுதான் என்று கேபினட் அமைச்சரான பிரஜேஷ் பாதக் எழுதிய கடிதம் விரிவாகவே அரசு அளவில் விவாதிக்கப்பட்டது. ஆக்சிஜன் தட்டுப்பாடு,மருத்துவமனை படுக்கை வசதிகள் பற்றாக்குறை என இந்த குறைபாடுகளை சுட்டிக்காட்டி எம்எல்ஏ,எம்.பி. அமைச்சர்கள் என பலரும் அரசுக்கு எழுதும் கடிதங்கள்
பொதுவெளியிலும் பகிரப்பட்டுள்ளன.ஆனாலும் அதை அறிந்தும் அறியாதவர் போல முதல்வர் யோகி ஆதித்யநாத் தரும் பதில்கள்,அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 6. மூத்த பத்திரிகையாளரான சித்தார்த் கல்ஹான்ஸ், "இந்த மாநிலத்தில் எல்லாமே கிடைக்கிறது என்றால்,பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முக்கிய
பிரமுகர்களே ஏன் மருத்துவ வசதி கோரி சமூகஊடகங்களில் வேண்டுகோள் விடுக்கிறார்கள்,"என கேள்வி எழுப்புகிறார். 7. "தனது செல்வாக்கை பயன்படுத்தி பிரதான ஊடகங்களில் வேண்டுமானால், தனக்கு எதிரான செய்திகள் வராமல் யோகிஆதித்யநாத்தால் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால்,தடையற்ற சமூக ஊடகங்களில் அவரால்
மறைக்கப்படும் பல செய்திகள் பதிவாகி வருகின்றன. அதை அவரால் தடுக்க முடியாது. மக்கள் நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் நம்பிக்கைக்குரிய செய்தி கூறும் ஊடகங்களாக இப்போது அவர்கள் தொலைக்காட்சிகளையும் நாளிதழ்களையும் நம்புவதில்லை. அவர்களின் கையடக்கத்திலேயே உலகம்
இந்தியா ஆக்சிஜனுக்காக தத்தளித்த போது தேவையை விட நான்கு மடங்கு ஆக்சிஜன் எஃகு உருக்காலைகளின் சேமிப்பு தொட்டிகளில் இருந்தது என உச்சநீதி மன்றத்தில் மத்திய எஃகு அமைச்சகம் தகவல்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து
வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.
ஆனால் கொடுமை என்ன தெரியுமா?
கடந்த ஒருவாரமாக, அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் உச்சமாக ஆக்சிஜன் தேவைப்பட்ட நேரத்தில் இந்தியாவில் உள்ள sail எஃகு ஆலைகளில் மட்டும் சுமார் 16,500
டன் மருத்துவ திரவு ஆக்சிஜன் சேமிப்பு தொட்டிகளில் சேமிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது என்று எஃகு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகள் அதிகமாக இருந்த 12 மாநிலங்களில் உள்ளவர்களுக்கு தேவைப்பட்ட ஆக்சிஜன் அளவு 4,880 டன், ஆனால் சேமிப்பில் இருந்த கையிருப்பு தேவையை விட
ராகுல் காந்தி இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தி:-
கடந்த மார்ச் 15ஆம்தேதி The Hindu நாளிதழில் ராகுல் காந்தி குறித்த ஒரு கட்டுரையை Rajesh Mahapatraவும் Rohan D'Souzaவும் எழுதியிருந்தனர்.இந்திய அரசியலில் பிரதமர் மோதியின் ஆபத்தான அரசியலுக்கு மாற்று ராகுல் காந்தி மட்டுமே என்பதை
அந்தக் கட்டுரையில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அந்தக் கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது: 1. இந்தியாவில் இருவிதமான குடிசைத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒன்று, ராகுல் காந்திக்கு தொடர்ந்து அறிவுரைகள் கூறுவது. மற்றொன்று, அவரெல்லாம் ஒரு ஆளா என்று ஒதுக்கித் தள்ளுவது.
ஆனால், இந்த இருதரப்பாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று, ராகுல் எப்படி பா.ஜ.கவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்பதைத்தான். 2. மோதியைப் பொறுத்தவரை சீன பாணியிலான அரசியல் சூழலையே விரும்புகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் போல பா.ஜ.க. இந்தியாவை ஆதிக்கம் செலுத்த வேண்டுமென நினைக்கிறார்.
#கடல்_அட்டை (Sea cucumber):-
பார்ப்பதற்கு நீண்ட உருளையான உருவத்துடன் (உருண்டை வடிவ சிற்றினங்களும் உண்டு) காணப்படும் இக்கடலுயிரினம் ஆங்கிலத்தில் sea cucumber என அழைக்கப்படுகிறது. முட்த்தோலி வகையைச் சார்ந்த இவ்வுயிரினம் தமிழில் கடல் அட்டை, கடல் வெள்ளரி (தமிழ்ப்படுத்தப்பட்ட
வார்த்தை என்று நினைக்கிறேன்) என்ற பெயர்களால் சுட்டப்படுகிறது. (வேறு வட்டாரப் பெயர்கள் இருப்பின் நண்பர்கள் தெரிவியுங்கள்)
கடல் தரையில் மிதவை உயிரினங்களையும் மட்கியத் தாவரங்களையும் உண்டு வாழும் இவ்வுயிரினத்தின் உடலானது நெகிழும் தன்மையுள்ள சதைப்பற்றான தோலால் போர்த்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக இவை ஆபத்தற்றவை என்றாலும் ஆபத்துக்கு உள்ளாக்கப்படும்போது(சில உள்ளினங்களில்) ஒரு பிசுபிசுப்பான ஒட்டும் தன்மையுடையத் திரவத்தை வெளியேற்றுகின்றன. இத்திரவம் கண்களில் பட்டால் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தக் கூடியது.
உடலின் ஒருமுனையில் அமைந்திருக்கும் வாயில் குட்டி மரங்களை ஒத்த
கோவிட் வருவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள 35அரசு மருத்துவமனைகளில் (குறிப்பு;- மாநிலத்தில் அல்ல,அரசு மருத்துமனைகளில் மட்டும்) உள்ள திரவ ஆக்சிஜன் உற்பத்தி திறன் 355கி.லி. கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் இன்னும் அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படும் என்று எண்ணிய தமிழக அரசு
இந்த உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவெடுத்தது. மேலும் 30 அரசு மருத்துவமனைகளில் 431கி.லி திரவ ஆக்சிஜன் உற்பத்தியை நிறுவியது. இதுவும் மீறி தேவைப்பட்டால் இருக்கட்டும் என்று இன்னொரு 100கிலி திறன் கொண்ட உருவாக்க ஆலைகளை அமைக்கிறது. இதைத்தவிர தமிழகம் எங்குமுள்ள ஆக்சிஜன் உருவாக்க ஆலைகளின்
திறனை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.
அப்படியே பாஜக ஆளக்கூடிய மத்திய பிரதேசம் செல்வோம், நான்கு தினங்களுக்கு முன்னர்தான் அந்த மாநில முதல்வர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, அம்மாநிலத்தில் உள்ள 37மாவட்டங்களிலும் ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதாவது தமிழக அரசு 55-60
"இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது", இது பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதி சிவாஜி பேசிய புகழ்பெற்ற வசனம். இது எதுக்கு இப்போது என்று நினைத்தால், படியுங்கள்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக
அமர்விற்கு துறைசார் நிபுண உறுப்பினராக, தமிழக முன்னாள் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை நியமித்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல அறமற்ற செயலும் கூட.
பசுமை தீர்ப்பாயத்தின் நிபுண உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் சூழலியல் துறைகளில், நிறுவனங்களில் பணியாற்றி இருக்கவேண்டும், ஆனால்
கிரிஜாவிற்கு அந்த அனுபவம் கிடையாது. அவருடைய நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் அவர் பசுமை தீர்ப்பாயத்தின் "தென்னக அமர்வுக்கு" நிபுண உறுப்பினராக அமர்த்தப்பட்ட உத்தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இது அறமற்ற செயல்,
"எனக்கு மாதவிடாய் நாட்களே புடிக்காது, 6-7 நாட்களுக்கு என்னால் எதுவும் செய்யமுடியாது, சானிடரி நாப்கின் வாங்கும் அளவிற்கு என்னிடம் வசதி இல்லை, அந்த நாட்களில் பள்ளிக்கு செல்லமுடியாமல் போய்விடும்" என்கிறார் ஒடிசா மாநிலம் கட்டக் மாவட்டத்தை சேர்ந்த 14வயது நிவேதிதா மொஹபத்ரா. இதில்
நிவேதிதா மட்டும் தனித்தல்ல, இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவியர் மாதவிடாயால் பள்ளிக்கு செல்லமுடியாமல் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேசிய "குடும்ப சுகாதார கணக்கெடுப்பில்", ஒடிசாவில் மட்டும் சுமார் 53% பெண்கள் சுகாதாரமற்ற வழிமுறைகளை பின்பற்றி மாதவிடாயை
கையாளுகிறார்கள் என்று தெரியவந்தது .
இந்த அவலநிலையை போக்குவதற்காக கடந்த2018 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ஒடிசா அரசாங்கம் "குஷி" திட்டத்தை துவக்கியது.இந்த திட்டத்தின் படி,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 17லட்சம் மாணவியருக்கு இலவசமாக "சானிடரி நாப்கின்"